ஒரு குடும்பம் நன்றாக இருக்க.....

Leave a Comment
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவரை அவருக்குத் தேவையான பணத்தினை எல்லாம் மூட்டை கட்டி, பணத்துடன் அவரை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.பிறகு என்ன? அவருக்கும் நிம்மதி! குடும்பத்திற்கும் நிம்மதி! 

ஒரு கல் இரண்டு மாங்காய்....!



உலகம் நன்றாக இருக்க.....
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் 
என்று நினைப்பவர்களை எல்லாம் 
சேர்க்க வேண்டும். 

அவர்களுக்குத் தேவையான 
பணத்தினை எல்லாம் 
அவரவர்களுக்கும் தேவையான அளவு
தனித் தனியாக மூட்டை கட்டி, 

விண்வெளி ஆராய்ச்சிக்கு 
திரும்பி வராமல் செல்லும் ராக்கட்டில் 
அவர்களுடன்பணத்துடன் ஏற்றி   
அனுப்பிவிட வேண்டும்.   

கவனம்: ஒரு ராக்கட்டில் 
ஒருவருக்கு மேல் இருக்கக் கூடாது. 

அவர்களுக்கும் பணம் கிடைத்தது 
விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஆள் கிடைத்தது!  
நாடும் நிம்மதியாக இருக்கும்! 

ஒரு கல் பல மாங்காய்....!


ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்தது......

பண வளர்ச்சி
முக்கியமாகக் கருதப்படும் அளவு 
மனிதப் பண்புகள் 
முக்கியத்துவத்தை இழக்கிறது.

மனிதப் பண்புகள் 
முக்கியத்துவத்தை இழக்கும் அளவு 
மனிதன் 
மிருகமாகிறான். 

மனிதன் 
மிருகமாகும் அளவு 
குடும்பம் 
சிதைகிறது.


குடும்பம் 
சிதையும் அளவு 
சந்ததிகள் 
நாசமார்கத்தில் செல்கிறார்கள்....

திராவிடன் யார் - ஆரியன் யார் ?

Leave a Comment
ஸம்ஸ்க்ருதத்தை என்றுமே நமது முன்னோர்கள் தமிழுக்கு அன்னிய மொழியாக பார்த்ததே இல்லை.

திருக்குறளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை காண்கிறோம். அவர் ஸம்ஸ்க்ருதத்தை தமிழுக்கு எதிரியாக கருதவில்லை.

ஸம்ஸ்க்ருத வார்த்தை ஒன்றுகூட இல்லாத தமிழ் நூல் என்று எதையுமே காட்ட முடிவதில்லை.

எந்த பழைய காலத்திலும் இருந்த, எல்லா தமிழ் மன்னர்களும் வேதம் படித்தவர்களே, எல்லா தமிழ் புலவர்களும் வேதம் படித்தவர்களே 200 ஆண்டுகள் முன்புவரை - அதாவது வெள்ளையனின் கல்விமுறை வரும் வரை.....

ஸம்ஸ்க்ருதத்தை வெறுப்பது உண்மையில் தமிழ் பண்பாட்டை அழிப்பதுவே - அதனை நாம் நிரூபிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

கவனிக்கவும்: ‘திராவிட’ என்பதே தமிழ் வார்த்தை இல்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தை !

நம்மைப் பிரிக்க தை ஒன்றுதான் புத்தாண்டு துவக்கம் என்பதற்காக நவீன செந்தமிழர்கள் காட்டும் நிரூபணம் இது....

1. சுறவம் - புனர்தை - தை
2. கும்பம் - மகசி - மாசி
3. மீனம் - பல்குணா - பங்குனி
4. மேழம் - சைத்திரம் - சித்திரை
5. விடை - வைசாகி - வைகாசி
6. ஆடவை - மூலன் - ஆனி
7. கடகம் - உத்திராடம் - ஆடி
8. மடங்கல் - அவிட்டம் - ஆவணி
9. கன்னி - புரட்டாதி - புரட்டாசி
10. துலை - அகவதி - ஐப்பசி
11. நளி - கிருத்திகா - கார்த்திகை
12. சிலை - மிருகசீரச - மார்கழி

தமிழ் இலக்கியங்களில் மேழம் முதலாவதாகத்தான் கணக்கு துவங்குகிறது. அதையே தங்கள் வசதிக்கு சுறவம் என்று மாற்றி காட்டி வாதம் செய்வது ஏமாற்றும் தந்திரம்.

மேலும் கவனிக்கவும் இதில் கும்பம், மீனம், கடகம் , கன்னி, சிலை இவைகள் தமிழ் வார்த்தைகளே இல்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தைகள்!

கிழமைகளில் புதன், சனி இவைகளும் சம்ஸ்க்ருத வார்த்தைகளே! இவைகளுக்கு தமிழ் வார்த்தைகளே இல்லை.

என்ன புரிகிறது. நமது முன்னோர்கள் என்றுமே சமஸ்க்ருதத்தை தமிழுக்கு அந்நிய மொழியாக பார்த்ததே இல்லை.

'ஆரியர்கள் என்றால் பிராம்மணர்கள் அல்லது பார்ப்பனர்கள் எனப்படுபவர்கள் தான் என்பதும், அவர்கள் தமிழர் அல்லாதவர்கள்' என்பதும் வெள்ளையர்களால் கட்டப்பட்ட கதை மாத்திரமே.

அவர்களின் கதைப்படி 'ஆரியர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்திற்குள் வந்தார்கள்'

ஆனால் 5000 ஆண்டு, 10000 ஆண்டு பழமையான தமிழ் நூல்கள் ஆரியர்கள் வழிபாட்டுக் கடமைகளை செய்ததை பேசுகிறது.

ஆரியர் என்ற பிராமணர் அல்லாதவர்கள் திராவிடர்கள் என்றால் வட பாரத மாநிலங்களில்  - பிராமணர்  அல்லாதவர்கள் எல்லோருமே திராவிடர்கள் என்றுதானே இருக்க வேண்டும்!

அப்படி இல்லையே... 

உண்மையில்...

ஆரியர் - என்றால் பண்பட்டவர் என்று பொருள்

திராவிடர் - என்றால் தென்புலத்தார் என்று பொருள்

உத்திரத்தார் - என்றால் வடபுலத்தார் என்று பொருள்


நன்றி:
தமிழன் என்றால் பாரதியே - ஆராய்ச்சி முடிவு !

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2015/11/blog-post_25.html

கவனம் : நடுநிலைகள் இரண்டுவிதம் !

Leave a Comment
உண்மையில் நடுநிலை வகிப்பது என்பது கவர்ச்சியான ஒரு நிலை. உலகில் யாரையுமே அது கவரும்.

நடுநிலையாக இருப்பவர்களை சிந்திப்பவர்களை, பேசுபவர்களை, நடத்துபவர்களை,... சீக்கிரமே உலகம் மதிக்கும் பாராட்டும்.

அதனால் அவர்களை யாருமே நம்பிவிடுவார்கள்.

ஆனால் கவனம்.....

நடுநிலைகள் இரண்டுவிதமாக இருக்கின்றன...!

1. வேண்டியவர் வேண்டாதவர் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது.
2. நியாயம் அநியாயம் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது.

இவை இரண்டையுமே மனிதன் வேறு வேறு நேரங்களில் வேறு வேறு என ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கிறான்.

பொதுவாகவே....
நேர்மை குணம் இருக்கும் அளவு ஒருவன் 1ஆவதை தேர்ந்தெடுக்கிறான்.
திருட்டு குணம் இருக்கும் அளவு ஒருவன் 2ஆவதை தேர்ந்தெடுக்கிறான்.


மற்றவர்களிடமிருந்து ஏமாறாமல் பாதுகாத்துக்கொள்ளவும், தனது வளர்ச்சிப் பாதையை ஆராயவும் இது ஒரு தேவையான அளவுகோல்!  

புத்தாண்டைக் கொண்டாடும்போது…

Leave a Comment
புத்தாண்டைக் கொண்டாடும்போது கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்:
 
குளித்துவிட்டு முடிந்த வரை புதிய உடை அல்லது மனதிற்கு பிடித்த தூய உடை உடுத்தவும். பிறகு சூரிய வந்தனம் செய்யவும்.

சூரிய வந்தனம் எப்படி செய்வது?
பூஜைக்கு உரிய பித்தளை சொம்பில், அல்லது உள்ளங்கையில் குழிவு ஏற்படுத்திக்கொண்டு, தண்ணீரை பிடித்துக்கொள்ளவும். சூரியன் கண்ணில் படும் இடத்திற்கு வந்து, [ அப்படி வாய்ப்பு இல்லை என்றால் வசதியான இருக்குமிடத்திலிருந்து, ] கிழக்கு நோக்கி நின்று இந்த சுலோகத்தை சொல்லி நீரை அவரை நோக்கி, அதாவது கிழக்கு நோக்கி, அவருக்கு அற்பணம் செய்யும் பாவனையுடன் பூமியில் விடவும்.  கடைசி சில துளி நீரை தலையில் தெளித்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான்.
 
சுலோகம்: சூரிய வந்தனம்
சூரியன் நீயே தந்தையர் தந்தை       
        சூரியன் நீயே உலகின் தந்தை
சூரியன் நீயென் வாழ்வைத் தந்தாய் 
        சூரியன் நீயென் உயிராய் நின்றாய்

நீ தந்தவற்றை உனக்கே தந்தேன்
        நன்றிகள் அனைத்தையும் உனக்கே சொன்னேன்
அறம் பொருள் இன்பம் வீடனைத்தையும்
        அடையும் திறன்களை அளித்திடுவாயே!  

பிறகு,
வீட்டில் இருக்கும் பெரியோர்களிடம் நமஸ்காரம் செய்து பாத பூஜை செய்து கொள்ளவும்.

பாத பூஜை செய்ய தெரியாத, அல்லது வாய்ப்பில்லாத பக்ஷத்தில் சில பூக்களை பாதங்களில் போட்டு நமஸ்கரித்து ஆசி பெறவும்.

ஆசி பெறுவோர் சொல்லவேண்டிய சுலோகம்: மூத்தோர்கு நமஸ்காரம்
 [மூத்தோரின் ஆசிகள் என்றும் நன்மைசெய்ய , நன்மைகள் வளர காக்க.. ]

ஈஶ நீயேதான் மூத்தோரின் அறிவாக
                அவர்தம் எண்ணம்-சொல்-செயல்களில் பலமாக
அவர்தம் நல் நெறி ரூபத்திலும் எனக்கு
                ஐஶ்வர்யம் ஶுபம் அடைக்கலம் ஆஶியுமே
 

ஆசி தருவோர் சொல்லவேண்டிய சுலோகம்: இளையோர்க்கு ஆசிகள்
 [ இளையோர்க்கு செய்யும் ஆசிகள் நல்வாழ்வைத் தந்து அவர்களைப் பாதுகாக்க ]

ஈஶ நீயேதான் இளையோரின் அறிவாக
                அவர்தம் எண்ணம்-சொல்-செயல்களில் பலமாக
எங்கள் நல் நெறி ரூபத்திலும் அவர்க்கு
                ஐஶ்வர்யம் ஶுபம் அடைக்கலம் ஆஶியுமே  


அதன் பிறகு வீட்டு வழிபடும், ஆலய வழிபாடும் செய்யவும்.

அன்றைய நாள் அதிக ஓய்வில் இருக்கவும், வழிபாட்டில் நேரம் செலவிடவும் முயற்சிக்கவும்.
அவசியம் குடும்பத்துடன் ஒரு இனிப்பு பதார்த்தம் சாப்பிடுவது நல்லது.
வீட்டிலேயே செய்வது இன்னமும் சிறப்பு. அன்பர்கள், நண்பர்களுக்கும் விநியோகம் செய்வது நல்லது.
சக்திக்கு ஏற்ப தேவைப்படுவோருக்கு ஏதாவது தானம் செய்வது நல்லது.
குறிப்பாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் அன்பர் நண்பர்களின் குழந்தைகளுக்கு பிரசாதம் விநியோகித்து, தன தானம் செய்து, இனிப்பு அளித்து, உணவு அளித்து,  சந்தோஷப்படுத்துவதும் நல்லது.
சர்ச்சைக்குள்ள விஷயங்களை அன்று பேசாமல் ஒத்தி வைப்பது நல்லது தொழிலிலும் சரி முக்கியமாக வீட்டிலும் சரி.
குழந்தைகளை அன்று அடிப்பதை கண்டிப்பதை தவிர்க்கவும். பெரியோர்களிடம் கோபப்படுவதையும் தவிர்க்கவும். தம்பதிகள் மனஸ்தாபம் தரும் விஷயங்களை தவிர்க்கவும். 

வாய்ப்பு இருந்தால், அருகில் உள்ள வேத பாடசாலை குருநாதர்களை சந்தித்து, அர்ச்சகர்கள் புரோகிதர்களை சந்தித்து, சாது சன்யாசிகளை சந்தித்து ஆசி பெறுவது நல்லது. அப்படி ஆசி பெரும் பக்ஷத்தில் இயன்ற தக்ஷிணை அளிப்பது மிகவும் நல்லது. 

 
அன்று மாலையும் வீட்டில் வழிபாடு செய்து பெரியவர்களின் ஆசி பெறுவது நல்லது.   


சித்திரை 1 புத்தாண்டு பிறப்பின் சிறப்பு என்னவோ?

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/04/1.html

சித்திரை 1 புத்தாண்டு பிறப்பின் சிறப்பு என்னவோ?

Leave a Comment
இந்த தினத்தை ஏன் புத்தாண்டின் துவக்கமாகக் கொண்டாடுகிறோம்?
சூரியன் தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறான்

உண்மையில் சூரியன் சுற்றுவதே இல்லையே பூமிதானே சுற்றுகிறது?
ஆகட்டும், பூமி தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறது என்றும் கொள்ளலாம்.

அங்கு உண்மையில் பூமி சுற்றுகிறதா சூரியன் சுற்றுகிறதா என்பதே கேள்வி இல்லை. நாம் பார்க்கும் காட்சி என்ன என்பதை வைத்து ‘தோற்ற குண அறிவியல்’ விஞ்ஞானப்படி ஜோதிடமானது பலன்களைக் கூறகிறது, அவ்வளவுதான்.

அதன்படி, சூரியன் எனும் கிரகம் ‘ஆத்ம காரக வல்லமை’ எனும் குணம். அதாவது ஒவ்வொரு தனிநபரின் தனித்தன்மைகள் என்ன என்பதை, நிறை குறைகள் என்ன என்பதை, திறமை இயலாமைகள் என்ன என்பதை அவரவர் ஜாதகத்தில் இருக்கும் சூரியன் தெரிவிக்கிறான்.

அந்த சூரியன் அவரவரின் ஜாதகத்திலும் கொண்ட இடம் சென்ற இடம் இவைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறான்.

எது எந்த பலனாக இருந்தாலும், சூரியன் இந்த சித்திரை 1ஆம் நாள் ஆகாசத்தில் ‘மேஷம்’ என்ற எல்லைக்குள் செல்கிறான். மொத்தம் 360டிகிரியில் மேஷத்தின் எல்லை 30டிகிரி. இந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியை ஒரு ராசி என்கிறோம். இந்த ராசில் எல்லைக்குள் சூரியன் ஒருமாத காலம் பயணம் செய்கிறார்.

இப்படி மொத்தம் உள்ள 12 ராசிகளில், ஒவ்வொரு ராசிவழியாகவும் எந்த கிரகமும் பயணம் செய்யும்போது சில விசேஷ குணங்களை அடைகிறது, அதனால் அதற்கு ஏற்ற பலன்களை ஜாதகருக்கும் ஏற்படுத்துகிறது.

அவ்வாறே சூரியனும்.

மேஷ ராசி [ Aries ] என்பது சூரியனுக்கு மிகுந்த சௌகர்யத்தையும் வல்லமையையும் கொடுக்கும் ராசி. இங்கு பயணம் செய்யும் சமயத்தில் சூரியன் பலம் பெறுகிறான், அல்லது சந்தோஷமாக இருக்கிறான். அதாவது இந்த ஜீவனின் ஆத்மா மிகுந்த பலம் பெறுகிறான். இந்த நேரத்தில் இந்த ஜீவன் தனது மனதை எப்படிப்பட்ட விருப்பங்களால் நிறைக்கிறானோ, அல்லது பிரார்த்தனைகளால் நிறைக்கிறானோ, அவைகள் பலம் பெறுகின்றன.

விதியினால் வரும் சௌகர்யங்களை அதிகரிக்கவோ, சிரமங்களை குறைக்கவோ இந்த தின விருப்பங்கள், அல்லது பிரார்த்தனைகளுக்கு உண்டு.

அதனால் இந்த தினத்தை கொண்டாடுவதும், இந்த புத்தாண்டு தினத்தில் வழிபாடு செய்வதும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அப்படி என்றால் விருப்பப்பட்டால் போதுமே, ஏன் வழிபாடு செய்யவேண்டும்?
தவறே இல்லை. ஆனாலும், சாதாரண விருப்பங்களைக் காட்டிலும் பிரார்த்தையில் வைக்கப்படும் விருப்பங்கள் பலமானவைகலாக உருவெடுக்கின்றன. அதற்கு மேலும் அவைகள் தெய்வ சக்திகளால் ஆசீர்வதிக்கப்டுகின்றன. அதனால் பலனும் அதிகம்.


புத்தாண்டைக் கொண்டாடும்போது… 

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/04/blog-post_13.html