को मनुश्यः? का विद्या?
2.
உலகக் கல்வியும் - பாரம்பரிய பாரதக் கல்வியும்
கோ
மனுஷ்யஃ? கா வித்யா?
யார்
மனிதன்? எது கல்வி?
1.
உயிரினங்கள் அனைத்துமே [1]துணை [2]பாதுகாப்பு [3]தூக்கம் [4]உணவு இவற்றை தேடி ஓடுகின்றன. பிறவியிலேயே ஏற்பட்ட இவைகளின் தேவையினால், இவ் விஷயத்தில் ஒப்பிடுகையில் மனிதர்களும் கூட மிருகங்களுடன் சமமே,
2.
உண்மையில் அந்த மூல காரண அறிவை அடையும் வரை மனிதனுக்கு மன நிம்மதி என்பது இருப்பதில்லை. இருக்க முடியாது. அது அவனை துளைத்து எடுக்கும். அதுதான் அவனது மனதின் விசேஷமும் அவனை முழுமை ஆக்குவதும் கூட.
'அந்த உண்மை தேவை' என மனம் ஏங்குவதால், அதற்கு பதில் இல்லாததால் பொறுக்க இயலாமல், துருதுருவென மதயானையைப்போல உலகையே அழித்துவிடுகிறான். இந்த மூல காரணத்தை புரியவைக்கும் திறமை எங்கு இருக்கிறதோ, உண்மையில் அதன் பெயர்தான் கல்வி.
1.
मैतुनाभयनिद्राहारं समीहन्ते जन्तवः
உயிரினங்கள் அனைத்துமே [1]துணை [2]பாதுகாப்பு [3]தூக்கம் [4]உணவு இவற்றை தேடி ஓடுகின்றன. பிறவியிலேயே ஏற்பட்ட இவைகளின் தேவையினால், இவ் விஷயத்தில் ஒப்பிடுகையில் மனிதர்களும் கூட மிருகங்களுடன் சமமே,
ஆனால் யாருடைய அறிவு, எப்போதுமே எல்லா
விஷயங்களிலும், 'அது இருக்க, அது அப்படி இருக்க காரணம் என்ன?' என, 'காரணத்தைப் பற்றிய உண்மை தேவை', 'அதை அறியவேண்டும்', என தேடி ஓடுகிறதோ அவனது பெயரே மனிதன் !
2.
உண்மையில் அந்த மூல காரண அறிவை அடையும் வரை மனிதனுக்கு மன நிம்மதி என்பது இருப்பதில்லை. இருக்க முடியாது. அது அவனை துளைத்து எடுக்கும். அதுதான் அவனது மனதின் விசேஷமும் அவனை முழுமை ஆக்குவதும் கூட.
'அந்த உண்மை தேவை' என மனம் ஏங்குவதால், அதற்கு பதில் இல்லாததால் பொறுக்க இயலாமல், துருதுருவென மதயானையைப்போல உலகையே அழித்துவிடுகிறான். இந்த மூல காரணத்தை புரியவைக்கும் திறமை எங்கு இருக்கிறதோ, உண்மையில் அதன் பெயர்தான் கல்வி.
1.
मैतुनाभयनिद्राहारं समीहन्ते जन्तवः
अपेक्षया नरा अपि समानं तु पशुभिः ।
ईहते सर्वदैव तु कारणं सर्वविशयेषु
कस्य पुद्धिरपेक्षया तस्य नामैव मनुष्यः ॥
மைதுனாபயநித்ராஹாரம்
ஸமீஹந்தே ஜந்தவஃ
அபேக்ஷயா
நரா அபி ஸமானம் து பஶுபிஃ
ஈஹதே
ஸர்வதைவ து காரணம் ஸர்வவிஷயேஷு
கஸ்ய
புத்திரபேக்ஷயா தஸ்ய நாமைவ மனுஷ்யஃ
2.
नास्ति नरस्य मनश्शान्तिः प्राक्कारणविज्ञानात्
तदेव तस्य मनसो विशेषं च परिपूर्णञ्च
।
नश्यति लोकं गजवदशान्तया त्वपेक्षया
कस्या अस्ति बोद्धुं शक्तिस्तस्या नामैव विद्या खलु॥
நாஸ்தி
நரஸ்ய மனஶ்ஶாந்திஃ ப்ராக்காரணவிஜ்ஞானாத்
ததேவ
தஸ்ய மனஸோ விசேஷஞ்ச பரிபூரணஞ்ச
நஶ்யதி
லோகம் கஜவதஶாந்தயா த்வபேக்ஷயா
கஶ்யா
அஸ்தி போத்தும் ஶக்திஸ்தஸ்யா நாமைவ வித்யா கலு
சற்று பிரித்து எழுத.....
1.
1.
मैतुन-अभय-निद्रा-आहारं समीहन्ते जन्तवः
अपेक्षया नराः अपि समानं तु पशुभिः।
ईहते सर्वदा एव तु कारणं सर्वविशयेषु
कस्य पुद्धिर् अपेक्षया तस्य नाम एव मनुष्यः ॥
மைதுன-அபய-நித்ரா-ஆஹாரம் ஸமீஹந்தே ஜந்தவஃ
அபேக்ஷயா
நாராஃ அபி ஸமானம் து பஶுபிஃ
ஈஹதே
ஸர்வதா ஏவ து காரணம் ஸர்வ-விஷயேஷு
கஸ்ய
புத்திர் அபேக்ஷயா தஸ்ய நாம ஏவ மனுஷ்யஃ
2.
नास्ति नरस्य मनश् शान्तिः प्राक्कारण-विज्ञानात्
तद् एव तस्य मनसः विशेषं च परिपूरणं च ।
नश्यति लोकं गजवत् अशान्तया तु अपेक्षया
कस्या अस्ति बोद्धुं शक्तिः तस्या नाम एव विद्या खलु।॥
நாஸ்தி
நரஸ்ய மனஸ்-ஶாந்திஃ ப்ராக்-காரண-விஜ்ஞானாத்
தத்
ஏவ தஸ்ய மனஸஃ விசேஷம் ச பரிபூரணம் ச
நஶ்யதி
லோகம் கஜவத் அஶாந்தயா து அபேக்ஷயா
கஶ்யாஃ
அஸ்தி போத்தும் ஶக்திஃ தஸ்யாஃ நாம ஏவ வித்யா கலு
வார்த்தைகளுக்கு பொருள்....
1.
1.
मैतुन - மைதுன - துணை
अभय - அபய - பாதுகாப்பு
निद्रा - நித்ரா - தூக்கம்
अभय - அபய - பாதுகாப்பு
निद्रा - நித்ரா - தூக்கம்
आहारम् - ஆஹாரம் - உணவு இவற்றை
समीहन्ते - ஸமீஹந்தே -
தேடி ஓடுகின்றன
जन्तवः - ஜந்தவஃ - உயிரினங்கள்
अपेक्षया - அபேக்ஷயா - தேவையினால்
नराः अपि - நரா அபி - மனிதர்களும் கூட
समानं - ஸமானம் - சமமே
तु पशुभिः - து பஶுபிஃ - இவ் விஷயத்தில் மிருகங்களுடன்
[1]துணை [2]பாதுகாப்பு [3]தூக்கம் [4]உணவு இவற்றை தேடி ஓடுகின்றன உயிரினங்கள், [ பிறவியிலேயே அவைகளின் ] தேவையினால், மனிதர்களும் கூட சமமே, இவ் விஷயத்தில் மிருகங்களுடன்
[ ஒப்பிடுகையில் ]
ईहते ஈஹதே - தேடி ஓடுகிறதோ
सर्वदा एव ஸர்வதா ஏவ - எப்போதுமே
तु - து - ஆனால்
कारणं - காரணம் -
மூல காரணத்தை
सर्वविशयेषु - ஸர்வ-விஷயேஷு - எல்லா
விஷயங்களிலும்
कस्य - கஸ்ய - யாருடைய
पुद्धिर् - புத்திர் - அறிவு
अपेक्षया - அபேக்ஷயா - தேவையினால்
तस्य - தஸ்ய - அவனது
नाम एव - நாம ஏவ - பெயரே
मनुष्यः - மனுஷ்யஃ - மனிதன்
ஆனால் யாருடைய அறிவு, எப்போதுமே எல்லா
விஷயங்களிலும், அதன் மூல காரணத்தை [ பற்றிய உண்மையை ] தேவை தேவை [ அறியவேண்டும் ] என தேடி ஓடுகிறதோ அவனது பெயரே மனிதன்
2.
नास्ति - நாஸ்தி - இல்லை
नरस्य - நரஸ்ய - மனிதனுக்கு
मनश्-शान्तिः - மனஸ்-ஶாந்திஃ - மன நிம்மதி என்பது
प्राक्कारण-विज्ञानात् -
ப்ராக்-காரண-விஜ்ஞானாத் - மூல காரண அறிவை அடையும் வரை
तद् एव - தத் ஏவ - அதுதான்
तस्य - தஸ்ய - அவனது
मनसः - மனஸஃ - மனதின்
विशेषं च - விசேஷம் ச - விசேஷமும்
परिपूरणं च - பரிபூரணம் ச - முழுமை ஆக்குவதும் கூட
[ அந்த ] மூல காரண அறிவை அடையும் வரை மனிதனுக்கு மன நிம்மதி
என்பது இல்லை. அதுதான் அவனது மனதின் விசேஷமும் அவனை முழுமை ஆக்குவதும் கூட.
नश्यति - நஶ்யதி - அழித்துவிடுகிறான்
लोकं - லோகம் - உலகை
गजवत् - கஜவத் - மதயானையைப்போல
अशान्तया - அஶாந்தயா - துருதுருவென
तु - து
अपेक्षया - அபேக்ஷயா - தேவையினால்
कस्याः अस्ति - கஶ்யாஃ அஸ்தி - எங்கு இருக்கிறதோ
बोद्धुं - போத்தும் - [ இந்த மூல காரணத்தை ]
புரியவைக்கும்
शक्तिः - ஶக்திஃ - திறமை
तस्या नाम एव - தஸ்யாஃ நாம
ஏவ - அதன் பெயர்தான்
विद्या - வித்யா - கல்வி
खलु - கலு -
உண்மையில்
உண்மையில் தேவை தேவை
என துருதுருவென மதயானையைப்போல உலகையே அழித்துவிடுகிறான். [ இந்த மூல காரணத்தை ] புரியவைக்கும் திறமை எங்கு இருக்கிறதோ, உண்மையில் அதன் பெயர்தான் கல்வி.
------------------------------------------------------------------------------
உலகக் கல்வியும் - பாரம்பரிய பாரதக் கல்வியும்
உலகக் கல்வியானது பணம் சம்பாதிக்க வைப்பதை மட்டுமே கொள்கையாகக்
கொண்டது.
அந்தப் பணத்தின் துணையுடன் ஒருவன் [1]துணை [2]பாதுகாப்பு [3]தூக்கம் [4]உணவு - இவைகளை
மட்டுமே பெற முடியும்.
இவ்வளவு கல்வியின் பயன் இந்த நான்கும்தான் என்றால், மிருகங்கள்
எந்தக் கல்வியுமே இல்லாமலேயே இந்த நான்கையும் அடைகின்றன! இந்த நான்கிற்காக இவ்வளவு
பெரிய ஆர்ப்பாட்டம் தேவையே இல்லை!
ஒருவேளை இந்த நான்கிலும் மனிதன் மிருகங்கள் அனுபவிப்பதை விட விலை
மதிப்பானவைகளை அனுபவிக்கிறானே என்றால், எவ்வளவு விலை அதிகமாக, ஆடம்பரமாக
இருந்தாலும் கடைசியில் அவை தரும் அனுபவப் பலன் எல்லாமே ஒன்றுதான்.
வேண்டுமானால் அவைகளை அனுபவிப்பவனை ஒரு 'நல்ல மிருகம்' என்றோ, அல்லது
'நல்ல்ல்லல்ல்ல மிருகம்' என்றோ சொல்லலாம்.
ஒருவேளை இந்த உலகக் கல்வியானது சில 'பராக்'விஞ்ஞானிகள்
[ புற அறிவியல் விஞ்ஞானிகள் ] போன்றவர்களையும் உண்டு பண்ணலாம். அவர்களின் 'பராக்'விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும்
இந்த நான்கையும் சிறப்பாக கொடுக்கவே இருக்கின்றனவே தவிர வேறு பலன் இல்லை. அந்த கண்டுபிடிப்புகளை அனுபவிப்பவர்களை
வேண்டுமானால் 'சிறந்த மிருகங்கள்' என்று கூறலாம்.
பராக் விஞ்ஞான [ புற அறிவியல் ] கண்டுபிடிப்புகள் எல்லாமே இந்த உலகம் ‘எப்படி’
இயங்குகிறது என்று மட்டுமே கூறி உள்ளனவே தவிர, ‘ஏன்’ அப்படி இயங்குகின்றன என்ற ‘காரணத்தை
ஆராயும்’ கேள்விக்கு பதில் எதையும் கூறியதே இல்லை. பராக்-விஞ்ஞானத்தால் என்றுமே கூறவும் முடியாது.
மேலும், 'காரணம்' தெரியாத மனிதன் மிருகத்தை விட கேவலமான அழிக்கும் குணங்களுடனேயே
இருக்கிறான்.
உலகிலேயே பாரதத்தின் பிரத்யக்-விஞ்ஞானம் [ அஹ அறிவியல் ] மட்டுமே உலகின் இருப்பு மற்றும் நடப்பு விஷயங்களில் ‘ஏன்’ என்ற
கேள்விக்கு பதிலைக் கூறுகிறது, நிரூபிக்கிறது. அதாவது இந்த உலகம் ஏன் வந்தது, ஏன் இப்படி இருக்கிறது என்று கூறகிறது. பதில் உண்மையாக இருப்பதை பார்க்கவும்
வைக்கிறது.
அதனால் அது மட்டுமே 'மனித'னுக்குத் தேவையான ‘கல்வி’, அல்லது மனிதனுக்கான 'அடிப்படைக் கல்வி' என்ற
தரத்தில் இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment