1.
2.
குழந்தைகளுக்கு
எதிர்கால லட்சியமாக தொழில் வருமானத்தைக் காட்டுவது தவறு, திறமையான குடும்பத்
தலைவனாக வாழ்வதைத்தான் சொல்லித்தரவேண்டும்.
தொழில்
பணத்தை வாழ்க்கை லட்சியமாகக் காட்டினால், தொழில் பணத்திற்காக குடும்ப வாழ்வை
அடமானம் வைப்பான்.
நல்ல
குடும்பத் தலைவனாவதை லட்சியமாகக் காட்டினால், குடும்ப நல்வாழ்விற்கேற்ப தொழில்
பணத்தை பயன்படுத்துவான்.
குழந்தைகள்
கற்கும் வயது 21 வரை. அனுபவிக்கும் வயது 21 க்குப் பிறகு.
3.
கற்கும் வயதான 21க்குள் விஷயங்களை அனுபவிக்க மனம் சென்றால் கற்பதில் நாட்டமும்
திறமையும் குறையும்.
4.
பெற்றோர்கள் அனுபவிக்கும் வயதில் இருப்பவர்கள். அவர்கள் அனுபவிப்பதை எல்லாம்
குழந்தைகள் அனுபவிக்க வேண்டும் என்று குழந்தைகளும் நினைக்கக் கூடாது, பெற்றோர்களும் நினைக்கக் கூடாது.
5.
21 வயதிற்குள் கொடுக்கும் சௌகர்யங்கள், சுகங்கள் அவனது எதிர்காலத்தில் அவனை
அழிக்கும்.
6.
5 லிருந்து 21 வயதிற்குள் ஏற்கும் சிரமங்கள் அவனது எதிர்காலத்தில் அவனை பாதுகாக்கும்.
7.
குழந்தைகளை 5-13 வயதில் அடிப்பது தவறு இல்லை, ஆனால் திட்டுவது, அவமதிப்பது, நொந்துகொள்வது,...
இவைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
8.
குழந்தைகளின் 5 வயதிற்குப் பிறகு, குழந்தைகளின் நன்மைக்காக என்று பெற்றோர்கள் தங்கள் சுகங்களை
தியாகம் செய்வது நல்லது இல்லை.
9.
நல்ல பள்ளிக்கூடம், நல்ல படிப்பு என்று எதுவும் இல்லை. பெற்றோர்கள் நல்ல புத்தியை
சொல்லிக்கொடுத்தால் போதும். புத்தி சரியாக இருந்தால், நிச்சயம் நல்லபடியாக
வாழுவான்.
10.
நல்ல பள்ளிக்கூடம் என்ற பெயரில் அதிகமாக செலவிடும் பணத்தை சேமிப்பில் போட்டால்
எதிர்காலத்தில் நிச்சயம் குழந்தை கௌரவமாக வாழ அந்த நிதி உதவியாக இருக்கும்.
11.
5 வயதிற்குப் பிறகு தானே சம்பாதிக்கும் வரை, குழந்தைகள் கட்டில், மெத்தையில்
தூங்குவது அவர்களுக்கு நல்லது இல்லை.
12. 5 வயதிற்குப் பிறகு [ தன் சம்பாத்யம் வரை - ] குழந்தைகள் உணவு விஷயத்தில் ருசி விமர்சம் செய்வது, ருசியைப் பொருத்து சாப்பிடுவது இவை நல்லதில்லை. அது கல்வியையும் கற்கும் திறமையையும் குறைக்கும்.
உணவைப் பார்த்து 'இது நல்லா இல்லை' என்று சொன்னால் தைலையில் 'ஒரு குட்டு' வைக்க வேண்டும், 'இது நல்லா இருக்கிறது' என்று சொன்னால் தலையில் 'இரண்டு குட்டு' வைக்க வேண்டும்.
12. 5 வயதிற்குப் பிறகு [ தன் சம்பாத்யம் வரை - ] குழந்தைகள் உணவு விஷயத்தில் ருசி விமர்சம் செய்வது, ருசியைப் பொருத்து சாப்பிடுவது இவை நல்லதில்லை. அது கல்வியையும் கற்கும் திறமையையும் குறைக்கும்.
உணவைப் பார்த்து 'இது நல்லா இல்லை' என்று சொன்னால் தைலையில் 'ஒரு குட்டு' வைக்க வேண்டும், 'இது நல்லா இருக்கிறது' என்று சொன்னால் தலையில் 'இரண்டு குட்டு' வைக்க வேண்டும்.
13.
அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்த சுகங்களை ஒருவன் தனது உழைப்பில் மட்டுமே
அடையவேண்டும். பெற்றோரின் உழைப்பால் வந்ததில் சுகம் அனுபவிப்பது பாபத்தைத் தரும், நிம்மதியை
அழிக்கும். ஆனால், தாத்தா பாட்டியின் கொடைகள் கேடு செய்யாது.
14.
ஆண் குழந்தைகள் 21 - 23 வயதிற்குள், பெண் குழந்தைகள் 18 - 21 வயதிற்குள் வாழ்க்கைத்
துணையை அடைவதற்கும், தன் காலில் நிற்பதற்கும் ஏற்பவே அவர்களுக்கு கல்வி போன்றவைகளைக் கொடுக்க
வேண்டும். எளிமையான வாழ்க்கையாக இருந்தாலும் பறவையில்லை.
15.
உயர் கல்விகளை ஒருவன் குடும்பத்தை நடத்திக்கொண்டு, தனது வருமானத்தில் படிப்பதுதான்
அவனுக்கு நன்மையையும், கௌரவ வாழ்வையும் தரும்.
16.
5 வயதிற்குப் பிறகு குழந்தைகளை பெற்றோர்கள், பணியாட்கள் வாகனங்களில் அழைத்துப்
போய் பள்ளியில் விடுவது நல்லது இல்லை - பணக்காரர் வீட்டுக் குழந்தைகள் ஆனாலும் சரி.
குழதைகள் தாமே சைக்கிளில், பஸ்ஸில்,... அல்லது ஸ்கூல் வேன், ஆட்டோ,... என்றும்
செல்லலாம்.
17.
குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? அடித்து வளர்ப்பது நல்லதே - 5லிருந்து 13வயது
வரை. அடிப்பவர் கோபத்தில் தடுமாறி இருக்கக் கூடாது. குழந்தைகளை திட்டுவது,
நொந்துகொள்வது, சலித்துக்கொள்வது, வெறுத்துப் பேசுவது, அவமதித்துப் பேசுவது,....
நல்லதில்லை. கண்டிப்புடன் பேசலாம், கற்றுத் தரலாம். 13வயதுக்குப் பிறகு
21வயதுவரை கண்டிக்கலாம்
என்றாலும், அடிப்பது பாதுகாப்பு இல்லை. தப்பிக்க வேறு வழிகளை மனம் தேடும்.
முடிவுகள் விரும்பத் தகாததாகவும் இருக்கலாம். அதனால். 13வயது வரை மனம் வேறு வழிகளை
தேடாது. வேறு எதனையும் யாரையும் குறையும் சொல்லாது. பொதுவாக மனம் அந்த வயது வரை இருக்கும்
சூழ்நிலைகளை அப்படியே அங்கீகரிக்கும். அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும், வடிவமைக்கும்.
நல்லது
எது கேட்டது எது என்பதை இந்த வயதில் சுலபமாக கற்றுக் கொடுக்கலாம். கேட்காவிட்டால் -
அடித்தால், வலி தாங்க இயலாமையினால், மனமானது தன்னை மாற்றிக்கொள்ளும். தன்னை திருத்தி வடிவமைக்க சிறந்த வயது 13 - 21.
எதற்கெடுத்தாலும்
அடிப்பதும் நல்லதில்லை. அடிக்காமலேயே வளர்ப்பதும் நல்லதில்லை. சரியான காரணம்
இல்லாமல், குழந்தையின் பக்கம் போதிய தவறு இல்லாத விஷயத்தில் அடிப்பதும்
நல்லதில்லை. ஏன் இந்த அடியை அனுபவிக்கிறேன் என்று குழந்தைக்கு புரியாமலும்
அடிப்பது பயனில்லை, நல்லதும் இல்லை.