கல்விக் கொலையிலிருந்து- காப்போம் குழந்தைகளை !

Leave a Comment

கல்விக் கொலையிலிருந்து- காப்போம் குழந்தைகளை - 
பண்பாட்டின் குரல்





அறிவு கெடாத மிருகங்கள் 
தகுதி உள்ள உணவையே 
தானும் ஏற்று,
தன் குழந்தைகளுக்கும்  
தகுதி உள்ள உணவையே 
ஏற்கக் கற்றுக் கொடுக்கின்றன.

அறிவு கெடாத மனிதன் 
தகுதி உள்ள கல்வியையே 
தானும் ஏற்று,
தன் குழந்தைகளுக்கும்  
தகுதி உள்ள கல்வியையே 
ஏற்கக் கற்றுக் கொடுக்கிறான்.


வெள்ளையன் கல்வி - மெல்லக் கொல்லும் விஷம்
தகுதி உள்ள இந்தியனுக்கு - தகுதி அற்ற கல்வி

பச்சிளம் வயதினிலே
பண்பைக் கொடுக்கும் வயதினிலே
பணத்தைக் காட்டும் பயிற்சியும்

குடும்ப வாழ்வை அழிப்பதுவும் கல்வி அல்ல - கில்வி...
குடும்ப உறவுகளில் மகிழ நேரம் தராதது...
பண்டிகைகளில் மகிழ நேரம் தராதது...
திருவிழாக்களில் மகிழ நேரம் தராதது...
பரம்பரை பண்புகளின் விஞ்ஞானத்தை தானும் போதிக்காதது...
பெற்றோர் போதிக்க நினைத்தால் அதற்கும் நேரம் கொடுக்காதது...
பணத் திமிரான் பண்புக் குருடன் புகுத்திய கல்வி
வெள்ளையன் கல்வி - மெல்லக் கொல்லும் விஷம்
தகுதி உள்ள இந்தியனுக்கு - தகுதி அற்ற கல்வி

நம் குழந்தைகள் என்ன ப்ராய்லர் கோழிகளா
நான் பணம் தருகிறேன் - நீ மார்க் போடு என்று சொல்ல?

நம் உயிர் குழந்தைகளை மிருகமாக்கும் கல்வியை
நம் உயிர் குழந்தைகளை கல்லாக்கும் கல்வியை

நம் உயிர் குழந்தைகளை வேகவைக்கும் கல்வியை
நம் உயிர் குழந்தைகளை நோகவைக்கும் கல்வியை

நம் உயிர் குழந்தைகளை சாகவைக்கும் கல்வியை
பணம் கொடுத்துப் படிக்க வைக்க - என்ன பாவம் செய்தமோ?

பணத் திமிரான் பண்புக் குருடன் புகுத்திய கல்வி
வெள்ளையன் கல்வி - மெல்லக் கொல்லும் விஷம்
தகுதி உள்ள இந்தியனுக்கு - தகுதி அற்ற கல்வி

மானம் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
தானம் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

கருணை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
கடமை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

அறிவு இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
உறவு இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

அன்பு இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
பண்பு இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

ஒழுக்கம் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
நெருக்கம் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

பக்தி இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
புத்தி இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

பெற்றோர் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
உற்றோர் இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

உண்மை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
தன்மை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

நேர்மை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை
தூய்மை இன்றி வாழ்ந்துகொள்ள விரும்ப வைக்கும் கல்வியை

 காசு கொடுத்து படிப்பதா குழந்தை வாழ்வை அழிப்பதா?
அன்பிருந்தால் அடுக்குமோ பண்பிருந்தால் பிடிக்குமோ?

உணவை அழித்துஓய்வை அழித்துமகிழ்வை அழித்து,
அன்பை அழித்து, பண்பை அழித்து, மனதை அழித்து,
உறவை அழித்து, உணர்வை அழித்து, கருத்தை அழித்து
திணித்து திணித்து திணித்து திணித்து திணித்து திணித்து
கொல்லுவது கல்விக்கூடம்

நல்ல குழந்தைநல்ல உடை,
நல்ல பள்ளிநல்ல மார்க்,
நல்ல வேலைநல்ல சம்பளம்,
நல்ல கல்யாணம்நல்ல வீடு,
நல்ல பேரன்நல்ல பேத்தி, .............
நல்ல்ல்ல்ல்ல்ல்ல தற்கொலை,
அதுவும் குடும்ம்ம்ம்ம்பத்துடன்....

ஸ்டாப்.........! கொலைகாரப் பாவிகளே........
இது தற்கொலையே இல்லை.... சதிக் கொலை!
அன்று வெள்ளையன் கல்விமூலம் போட்ட
ஸ்லோ பாய்ஸன் - இன்று வேலை செய்கிறது.

அன்று நடந்த சதியில் நாம் அனைவருமே
விஷம் சாப்பிட வைக்கப்படோம்
இன்று சாகும் நிலையில் நாம் இருக்கிறோம்
இப்போதாவது சிந்திக்க வேண்டாமா?
குழந்தைகளுக்கும் அதையே கொடுக்க வேண்டுமா?
கொலைக்காரனிடம் தத்துக் கொடுக்க -
பிள்ளையை ஏன் பெற வேண்டும்?

பயங்கரவாதிகள் நம் குழந்தைகளின் தாலியை
ஒரு முறை அறுக்கிறார்கள்
வெள்ளையனின் கல்வியோ நம் குழந்தைகளின் தாலியை
தினம் தினம் அறுக்கிறதே
நாமும் படித்ததால் பணத் திமிரனாய் பண்புக் குருடனாய்
பாசக் குருடனாய் ஆகிவிட்டோமோ
நம் பெற்றோர் நம்மை என்ன இப்படியா வளர்த்தார்கள்?

ஆனவத்தை வளர்க்கின்ற கல்வி என்ன கல்வியோ
உணர்வரியா ஜடமாக்கும் கல்வி என்ன கல்வியோ
திமிர் வளர்த்து உறவழிக்கும் கல்வி என்ன கல்வியோ
படித்ததெதும் நடப்பிற்கில்லை கல்வி என்ன கல்வியோ

ஆசையாய் பிள்ளை பெற்று அன்பாய் அதை வளர்த்து
கஷ்டங்களை தாங்கிக் கனவுடன் காத்திருந்து
ஓய்வை இழந்து இன்பம் இழந்து ,
பணத்தை இழந்து, 'போய் வாஎன்று
புன்னகையுடன் நாம் அனுப்பும் இடம்
பள்ளிக்கூடம் அல்லவே - கொலைக் கூடம் ஆயிற்றே!

வெள்ளையன் நம் பாட்டன் காலத்திலே
நம்மை அறிவுக் கொலை செய்து முட்டாளாக்க
அவனுக்கு அடிமை மாடுகளாய்
கண்மூடி வேலைசெய்து காசுக்காகக் காத்திருக்க
மெக்காலே கல்விஎனும் விஷத்தை ஊட்டினான்
நம் பெற்றோர் காலத்தில் வயிற்றை அடைந்து
நம் காலத்தில் இதயத்தை அடைந்து
நம் சந்ததிகளின் காலத்தில் ரத்தத்தை .........

போதும் சோம்பல், வந்த பின் தவிப்பது முட்டாள்தனம்
வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்
குழந்தைகளுக்காகவும் சோம்பலைக் கைவிடாத
கல்நெஞ்சக் கயவரோ நாம்?

உண்மைதான் - கண்முன் தீர்வு இல்லை
ஆனால் தேடினால் கிடைத்தே தீரும்
கிடைத்துதான் தீரவேண்டும்
இது ஏதோ நாட்டுப் பிரச்சனை இல்லை
நம் வீட்டுப் பிரச்சனை,
நம் குழந்தைகளின் வாழ்க்கைப் பிரச்சனை


ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக
ஒற்றுமையாக வாழ்ந்தோம்

வெள்ளையனின் சதிக் கல்வி நம்மைப்
பிரித்ததுபிரித்து வருகிறது துண்டுத் துண்டாய்
ஏன் எதிரிகளாய் கூட....

ஆரியன் திராவிடன் என்று
வட நாட்டான் தென் நாட்டான் என்று
மொழி மாறினால் இனம் மாறியது என்று
மாநில எல்லைகளை எதிரிகளின் எல்லை என்று
ஜாதிப் பெயர்களை பகை அடையாளங்கள் என்று
அரசியல் கட்சி மாறினால் வாழ்க்கை எதிரி என்று
பணத்தை வைத்து மேல்தட்டு கீழ்தட்டு என்று
ஊர்களை வேறு வேறு என்று
வீதிகளை வேறு வேறு என்று
வீடுகளை வேறு வேறு என்று
வீட்டு உறுப்பினர்களையும் இன்று வேறு வேறு என்று
கனவன் வேறு மனைவி வேறு என்று இனி.....
நினைக்க நெஞ்சு வெடிக்கலையோ....
இன்னமும் தூங்கனுமோ?

ஆயிரம் ஆயிரம் தலைமுறையாய்
நம் நாட்டிலும் கல்வி இருந்தது
அது நம்மை நடத்தத் தந்தது
தியாகிகளை மாணிக்கங்களை .....

திருவள்ளுவரை திருமூலரை கம்பரை அகத்தியரை
சானக்கியரை வியாசரை வால்மீகியை வித்யாரன்யரை கட்டபொம்மனை ஜான்சிராணியை
சேர சோழ பாண்டியரை .... என்று

ஆனால் இன்றைய மெக்காலே விஷக்கல்வி தருவதோ
நாட்டு  சொத்தை வீட்டு சொத்தாக்கும் தலைவர்களை ,
தாலி காக்க பிக்ஷை கேட்கும் பெண்ணிடமும்
லஞ்சம் கேட்கும் படு பாவித் திருட்டுத் தலைவர்களை

படிக்காத பட்டிக்காட்டான்அழுக்குத் துணிக்காரன்
தப்பு செய்யக் கூசும் போது
படித்தவன் பெட்டி போட்ட சட்டைக்காரன்
திமிருடன் கருணை இன்றி வெட்கமின்றி
மானமின்றி  கொள்ளையடிக்க தைரியத்தை தந்தது எது?
பரம்பரைப் பண்பாடா - வெள்ளையனின் கில்வியா?

வெள்ளையன் கல்வி உள்ளே போச்சு
மற்றதெல்லாம் வெளியே போச்சு
அன்பு போச்சு அக்கறை போச்சு
அறிவு போச்சு பரிவு போச்சு
கனிவு போச்சு கருணை போச்சு
பன்பு போச்சு பாசம் போச்சு

கௌரவம் போச்சு குணம் போச்சு
ஊரு போச்சு உறவு போச்சு
நட்பு போச்சு நடத்தை போச்சு
சூடு போச்சு சொரணை போச்சு
மானம் போச்சு வெட்கம் போச்சு

நம் குழந்தைகளை பணத்தைத் தவிர எதுவும் தெரியாத
குருட்டு ஹைப்ரைடு கோழிகளாய் ஆக்கி
வெளித்தள்ளுகின்றன - கில்விக் கூடங்கள்!

வெள்ளையனின் ககில்வியைக் பகுடித்தவன் பேசுகிறான்....
அதெல்லாம் பணத்தைக் கொடுக்குமா சார்
இந்தக் காலத்துல அதெல்லாம் வேஸ்ட் சார்

இது யார் கதையோ இல்லை
நாம் பெற்ற குழந்தைகளின் நிலை
நம் பெற்றோர் நம்மை என்ன இப்படியா வளர்த்தார்கள்?

இவனுக்கு ஏன் ஒரு வீடு
இவனுக்கு ஏன் ஒரு கல்யாணம்
இவனுக்கு ஏன் ஒரு வாழ்க்கைத் துணை
இவனுக்கு ஏன் ஒரு குழந்தை
எதுவும் இல்லாதவனுக்கு இதை எல்லாம்
ஏன் கொடுக்கனும் தேடித் தேடி
எல்லோரையும் கொலை செய்யவா?

திருதராஷ்ட்ரனின் நைப்பாசை செய்ததென்ன தெரியாதா
குழந்தை கையில் கத்தி கொடுத்தால் என்னவாகும் தெரியாதா

நினைவில் இருக்கட்டும்.....
வெள்ளையன் கல்வி - மெல்லக் கொல்லும் விஷம்
தகுதி உள்ள இந்தியனுக்கு - தகுதி அற்ற கல்வி

உண்மையான கல்வி உள்ளவர்கள் சிந்திக்கத்தான் வேண்டும்
உண்மையான செல்வம் உள்ளவர்கள் சிந்திக்கத்தான் வேண்டும்
உண்மையான வீர்ம் உள்ளவர்கள் சிந்திக்கத்தான் வேண்டும்

சேரத்தான் வேண்டும் செயல்படத்தான் வேண்டும்
தீர்வுகாணத்தான் வேண்டும்

நமக்குப் பிடித்தாலும் சரிபிடிக்காவிட்டாலும் சரி
நேரம் இருந்தாலும் சரிஇல்லாவிட்டாலும் சரி

குழந்தைகளை பெற்றோம்பாதுகாப்போம் முட்டாள்களிடமிருந்து
அது நம் கடமைஉரிமைகடவுள் தந்த பாக்கியம்...

தங்கப் புதையல் இருக்கும் போது பிச்சை எடுக்கச் செல்கிறோம்
குழந்தையும் பிச்சை எடுத்தால் பெருமையாக நினைக்கிறோம்

புதையலைத் திறந்தவனை பழமைவாதி என்கிறோம்
சதி விஷம் வைத்தவனை என் முதலாளி வெள்ளைத் துரை’  
என்று சொல்லத் துடிக்க்க்க்க்க்க்கிறோம்

போதும் இந்த விஷ மயக்கம் - புதையல்களைப் பிரித்திடுவோம்
தாய்ப் புலியாய் எழுந்திடுவோம் - குழந்தைகளை காத்திடுவோம்!


பண்பிருந்து பணம் இருந்தால் அருமையான சாதனம்.
பண்பின்றி பணம் இருந்தால் நிச்சயமாய் வேதனம்.

பணக்கல்வி நிச்சயம் வேண்டும்
கிடைத்த வாழ்வை அனுபவிக்க
பண்புக்கல்வி நிச்சயம் வேண்டும்
நல்வாழ்வை நடத்துதற்கும்
உற்றோறை மற்றோரை வாழ்த்திடவும் வாழவிடவும்.

இரண்டாம் பலனைப் பெற மானுடத்தன்மை வேண்டுமப்பா
முதலாம் பலனைப் பெற மிருகமாய் இருத்தல் போதுமப்பா!

துரியோதணின் கெட்ட மனம் செய்ததென்ன தெரியாதா
குழந்தை கையில் கத்தி கிடைத்தால் என்னவாகும் தெரியாதா

வந்த பின் தவிப்பது முட்டாள்தனம்
வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்

உண்மைதான் - கண்முன் தீர்வு இல்லை
ஆனால் தேடினால் கிடைத்தே தீரும்
கிடைத்துதான் தீரவேண்டும்
இது ஏதோ நாட்டுப் பிரச்சனை இல்லை
நம் வீட்டுப் பிரச்சனை,
நம் குழந்தைகளின் வாழ்க்கைப் பிரச்சனை

நினைவில் இருக்கட்டும்.....
வெள்ளையன் கல்வி - மெல்லக் கொல்லும் விஷம்
தகுதி உள்ள இந்தியனுக்கு - தகுதி அற்ற கல்வி !


இது பற்றி மேலும், சிந்திக்க விரும்புபவர்கள்
சந்திக்க விரும்புபவர்கள்
பண்பாட்டு நலன் விரும்பிகள், நாட்டு நலன் விரும்பிகள்

அழைக்கவும்
ரிஷிகளின் பாதையில்....
'ஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி' ‘வேதாந்த சாஸ்த்ரி’ ‘ஸ்ரீ குருயோகீந்திர பாரதி


rishikudil@gmail.com


                   https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c






























0 comments:

Post a Comment