பண்டிகையை கொண்டாடுவோம் - ஏன்?

Leave a Comment
பண்டிகையை கொண்டாடுவோம்

பண்படுத்தும் கட்டமைப்பு பண்பாடு.




 



அதில் .........

பண்படுத்தும் நிகழ்ச்சி பண்டிகை.


யாரை? 
அதனை கடைபிடிப்பவனை. 

பண்டிகை என்பது ஏதோ ஒரு வெறும் கடமையோ , வெறும் ஜாலியோ , போழுதுபோக்கோ ,  இல்லை.  ஆனால் கடமை வடிவில் இருந்துகொண்டு ஜாலியாக பொழுதைப் போக்க வைத்து கஷ்ட்டப்படுத்தாமல் பண்படுத்தும் ஒரு நிகழ்வு. 

அது எப்படி அந்த வேலையை செய்கிறது என்பது சாதாரணமாக எல்லா கடைபிடிப்பாலர்களுக்கும் புரிவது இல்லை . ஆனால் அவைகளை ஏற்படுத்திய ரிஷிகளுக்கு புரிந்தே இருக்கிறது.. எப்படி எனில் ...

மொபைல் போனை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது எப்படி இயங்குகிறது என்பது - அதைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் புரிவது இல்லை, தேவையும் இல்லை. 

ஆனாலும் மேக்கானிக்கிற்கு புரிகிறது. 

அதேபோல பண்டிகைகள் பண்படுத்தும் சாதனங்கள். அவைகளை நன்கு கொண்டாடவேண்டும். கொண்டாட ஊக்குவிக்க வேண்டும்.

நம்மை உண்மையில் இந்த பாரதப் பண்பாடே ஓரளவுக்காவது நிம்மதியாக காத்து வருகிறது ~ இவ்வளவுசீர்கேடுகளுக்கு இடையிலும் .

இதுவும் இல்லாத உலக மக்கள் மிகவும் கஷ்டப்படுவது, வெளிநாடுகளில் நீண்டநாள் வாழும் பாரதியர்களால் உணரப்பட்டே வருகிறது. 

பண்பாட்டைக் கடைபிடிப்பதால் வரும் பலன்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எடுத்துக்கொள்ளும் சிரமங்கள் மிகவும் குறைவே

உடனடிப் பலன் ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம். அனால் அது நீண்டநாள் கழித்து நல்வாழ்வை அமைத்துத்தரும் காரணமாக இருப்பதால் அது குறுகிய பார்வை உள்ள சாதாரண மக்களால் அறியப்படுவது இல்லை. 

ஆனாலும்  ஆர்வம் உள்ளவர்கள் அதற்கு உரிய குருநாதர்களை அடைந்து அவைகளைக் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். 

நமக்கு அந்த கற்கும் விஷயத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம், அல்லது வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம், தவறு இல்லை. அனாலும் அவைகளை முறையாக கொண்டாடிக் கடைபிடிப்பதே நல்லது. ஏனெனில் அதுநம் சந்ததிகளுக்கு நல்வாழ்வத் தரும் சாதனம். 

நமக்கும் இந்த நல் வாழ்வை வாழும் வாய்ப்பை இதுநாள் வரை தலைமுறை தலைமுறைகளாக பாதுகாத்து வந்து ஒப்படைத்த சாதனம். அதற்கு ஒரு நன்றி செலுத்தும் பொறுப்பும் நமக்கு உள்ளது. 

ஒருவர்  கேட்கலாம் - எங்க சார் எனக்கு நல்வாழ்க்கை இருக்கு, நானே ரொம்பவும் கஷ்ட்டப்படறேன் - என்று.....

உண்மையில் அவரிடமும், அவரது குடும்பத்திலும் , அவர் சார்ந்திருக்கும் இந்த சமுதாயத்திலும் இந்த பண்டிகைகளைக் கொண்டாடும் பண்பாடு இருந்து இருக்கவில்லை என்றால்...... அவரது இந்தக் கஷ்ட்டம் நிச்சயம் அதிகமாகத்தான் இருந்து இருக்கும். 

ஒரு சிறு குழந்தைக்கு அவர்களது பெற்றோர் கொடுக்கும் அன்றைய உணவோ , கைசெலவுப் பணமோதான் அவர்கள் செய்த உதவியாகத் தெரிகிறது, ஆனால் அவர்கள் கொடுத்து வரும் பல திறமைகளோ , பண்புப் பதிவுகளோ, சேர்க்கும் சேமிப்போ, கொடுக்கும் கல்வியோ, ஏற்படுத்தும் நட்புகளோ ,..... எதுவும் குழந்தையால் புரிந்துகொள்ளப்படுவது இல்லை. 

அதேபோல்  மிகவும் மதிப்பு வாய்ந்த, நன்மை செய்யும் கட்டமைப்புகளைக் கொண்டுள்ள நமது பாரதீய பண்பாட்டில் உள்ள பண்டிகைகள். நம் முன்னோர்களால் அவர்களின் குழந்தைகளுக்கு என்று பார்த்துப் பார்த்து டிசைன் செய்யப்பட்டவைகள், சாச்த்திரத்தின் துணையுடன். அப்படி அன்புடன் அக்கறையுடன் நம் முன்னோர்களால் காத்து வளர்க்கப்பட்ட பண்டிகைகளை முழு மனதுடன் குடும்பத்துடன் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் சந்ததிகளுக்கு மிகுந்த நன்மையை , நல் வாழ்வுக்கான பாதுகாப்பைத் தரமுடியும், - தருவோமே!

குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் இந்த நற்பலன்களை இன்னமும் நன்கு சிறப்பாக ஏற்படுத்தித் தர விரும்புபவர்கள், இவைகளுக்குப் பின்னால் உள்ள மேக்கானிசத்தை அவைகளை அறிந்த வேத ஞானிகள் மூலம் கற்கவேண்டும்





 




அதில் தேடுதல் உள்ளவர்கள் , அதில் மிகவும் சிறந்த பலனை மிகவும் குறுகிய காலத்தில் ஏற்படுத்தித் தரும் 'ரிஷி வேத விஞ்ஞானம்' பாடத்திட்டத்தைக் கற்கலாம். [ http://RishiVedaJnaanaYogaPeetham.blogspot.in/p/courses.html ]





0 comments:

Post a Comment