பண்டிகைகளை கொண்டாடும்போது கவனிக்க வேண்டியவைகள்......

Leave a Comment


 

நாம் பண்டிகைகளை கொண்டாடும்போது இவைகளும் கவனிக்கப்பட  வேண்டியவைகள்......

சந்தோஷம் முக்கியம் , அதேசமயம் அந்த நாள் இறை வழிபாட்டை முக்கியமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

பண்டிகைக்கு  என்று உள்ள உணவுப் பதார்த்தத்தங்களுக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும். வீட்டில் பெரியவர்கள் அந்த உணவுவகைகளை பாராட்டிப் பேசவேண்டும். ருசித்து ரசித்து சாப்பிடவேண்டும். அதை குழந்தைகள் பார்க்கவேண்டும் . அப்போதுதான் குழந்தைகளுக்கு உணவில் பிரியமும் முக்கியத்துவமும் வரும்.

முடிந்தவரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருக்க முயற்ச்சிக்க வேண்டும்.

அந்த சங்கமத்தில் இன்னும் இன்னும் இளையவர்களுக்கு இன்னும் இன்னும் முக்கியத்துவம் இருக்கவேண்டும். அவர்களின் சந்தோஷத்திற்கு ஏற்ப பெரியவர்கள் அன்று தனது வாழ்க்கையை மாற்றி திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

எந்திர சாதனங்கள்அல்லது மீடியாக்களுடன் நேரம் செலவு செய்வதை விட மனித உறவில் அதிகமாக நேரம் செலவாகவேண்டும். அதிகம் அரட்டை, பாட்டு, பேச்சு , நடை , விளையாட்டு,..... போன்று நேரம் செலவு செய்தலே நல்லது.

பண்டிகை நாட்களில் சச்சரவுப் பேச்சுக்களை எடுக்கக் கூடாது. கோபப்படக் கூடாது.

போதை வஸ்துக்களை பயன்படுத்தாமல் இருந்து குழந்தைகளுக்கு  பெரியவர்கள் முழுமையாக கிடைக்கவேண்டும். 

சுவாமி படங்களை அலங்காரம் செய்தல், பூஜைப் பாத்திரங்களை சுத்தம் செய்தல், பலகாரம் தயாரித்தல், விருந்தினரை உபசரித்தல், உணவு பரிமாறுதல், தானம் செய்தல், ..  போன்ற பூஜை, பண்டிகைக்கு உதவியான வேளைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் நன்கு செய்ய நேரமும் ஊக்கமும் தரவேண்டும். அவர்களுக்கு அதை செய்ததில் பெருமிதம் வரவைக்க வேண்டும், அதனால் கார்யங்கள் தாமதமானாலும் பரவாயில்லை. அது அவர்களை பண்படுத்தி நல்வழியில் பாதுகாக்கிறது.

இளையவைகள்  அன்று பெரியவர்களிடம்  சென்று நமஸ்காரம் செய்யவும் ஆசீர்வாதம் பெறவும் பழக்கப்படுத்த வேண்டும்.


குழந்தைகளின் கையில் காசுகொடுத்து அவர்களை கோவில் சென்றுவரவும் அவர்களையே உண்டியலில் பணம் போடவும் , அர்ச்சகர் தட்டில் பணம் வைக்கவும், பிக்ஷுக்களுக்கு தானம் செய்யவும், நண்பர்களுக்கு உதவவும்,.... என்று செய்ய பழக்கப்படுத்த வேண்டும்.அது அவர்களுக்கு பெருமித உணர்வை ஏற்ப்படுத்தும், தன் நம்பிக்கையை ஏற்ப்படுத்தும். வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் நிலையில் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்ப்படுத்தும், ..... மேலும் சிறந்த புண்ணியங்களை கொடுக்கும், புண்ணியங்களை சம்பாதிக்கப் பழக்கப்படுத்தும்.


பெரியவர்கள் தங்களுக்கு தனி நிகழ்சிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் , இளையவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பதே நல்லது - முடிந்தவரை. இனிய பண்டிகைகள் மூலம் இனிய பண்புகள். இனிய பண்புகள் மூலம் இனிய வாழ்க்கை. இனிய வாழ்க்கை மூலம் இனிய குடும்பம். இனிய குடும்பத்தின் மூலம் இனிய சந்ததிகள்....

மரத்தின்  பலனைப் பெற்றவன் - மரத்திற்கு நீர் ஊற்ற வேண்டுமே. பண்டிகைகளால் வளர்ந்தோம் நன்கு - பண்டிகைகளைப் பாதுகாப்போமே.

வாழ்வோம் பெருவாழ்வு - வாழ்வோம்  சிறப்புடன் !




 


[குடும்பக் கலையில் , குழந்தை வளர்ப்புக்கலையில் , தம்பதிகளின் அன்புக்கலையில் - வேதப் பார்வையுடன் ஒரு மலர்ச்சியும் - புரட்சியும் - அனுபவமும் அடைய -  ரிஷி வேத விஞ்ஞானம் . விபரங்களுக்கு - http://rishivedajnaanayogapeetham.blogspot.in/p/courses.html ]


0 comments:

Post a Comment