வேதம் வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க உதவுவது. வயதுகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக வழி நடத்துவது. வயது மாற மாற ஒருவனது விருப்பங்கள், சுக நாட்டங்கள், திறமைகள், .. அனைத்துமே மாறுகின்றன.
அது எப்படி மாறும், மாறிய பிறகு நான் எப்படி இருப்பேன் என்பதை யாராலும் அறிய முடியாது. அது மாயா சக்தியால் மறைக்கப்பட்டது.
அதனால் வாழ்வின் முன் பகுதிகளுக்கு முறையான சரியான , பின் வரும் வயதுகளுக்கு பொருந்தும் விதத்திலும் இப்போது வழிகாட்டுதல் அவசியம்.
ஆனால் உலக விஞ்ஞானிகளும் , அரசியல் தலைவர்களும், தத்துவ மேதைகளும், சிந்தனையாளர்களும், கலைஞர்களும், வியாபாரிகளும், ஊடகத்தார்களும்,... அனைவருமே இளைஞர்களையே இளம் பருவத்தையே மெச்சிக்கொள்கிரார்கள், அவர்களுக்கு உரிய சுக வழிகளையே சிந்திக்கிறார்கள், தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள், கொடுக்கிறார்கள்.
ஆனால், அவற்றை அனுபவித்து, அந்த வயதை தாண்டிய ஒருவன், இவர்களின் பேச்சைக் கேட்டதால், பிறகு முதிர்ந்த வயதுகளில் துயரங்களை அனுபவிக்கும் போது அவர்களுக்கு யாரும் தீர்வுகளை சொல்வதில்லை.
யாரும் திரும்பியும் பார்ப்பதில்லை. அவர்களைப்பற்றி சிந்திக்க ஏற்பாடுகள் இருந்தாலும், அதற்கு ஒதுக்கப்பட்ட சிந்தனைகளின் தரமும் அளவும் மிகவும் குறைவே.
ஆனால் வேதம் மரணம் வரை வாழ்க்கைக்கு தேவையான மிகவும் தரமான சிந்தனைகளை வகைப்படுத்தி பேசுகிறது.
அது பற்றிய மேலும் விவரங்களுக்கு :
https://www.youtube.com/watch?v=wLFOoZeUsLI
அது பற்றிய மேலும் விவரங்களுக்கு :
https://www.youtube.com/watch?v=wLFOoZeUsLI
0 comments:
Post a Comment