எத்தனை வயதில் திருமணம் நல்லது?

Leave a Comment
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய மனோவியல் உண்மைகள். 

உங்கள் அன்புக்குழந்தைகளை வளர்க்கும்போது....
மிக முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை

  

20, 40, 60 வயதுகள் மிகப்பெரிய அளவில் மனிதனின் மனதைப் புரட்டிப்போடும் - ‘ஆளே மாறிப் போயிட்டான்’ - என்று சொல்லும் அளவுக்கு.

இதை குற்றம் சொல்லாமல், ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்க சிந்தித்துப் பழக வேண்டும். ஏனெனில் நாமே அப்படித்தான், யாருமே அப்படித்தான். விதிவிலக்கு உண்டு - சில மன நோயாளிகள் மாத்ரம்.

நாமோ நமது குழந்தைகளோ யாருமே கோடி வருடங்கள் வாழப்போவது இல்லை. வாழப்போவது சில ஆண்டுகளே. அதிலும் அனுபவிக்க சாதகமான வயது 20லிருந்து 40வரையே.

அதையும் படிக்கணும், சம்பாதிக்கணும், சொந்த வீடு கட்டனும், வண்டி வாஹனம் வாங்கணும்,.... அப்புறம்தான் கல்யாணம்னு - தள்ளி வைப்பது சிறப்பு இல்லை.



20-25க்குள் ஒரு அசட்டு தைரியம் இருக்கும் - காதல் வாழ்வின் சுகத்தை அனுபவிக்க அது தேவை. அந்த சிறு பிராயத்திலேயே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் வாழ்க்கையை பயம் இன்றி சுகமாக வாழ முடியும். அவர்களது குழந்தையை மன அழுத்தங்கள் இன்றி வளர்க்கவும் அந்த மன நிலை தேவைப்படுகிறது.

40க்கு மேல் கணக்குப் பார்க்கும் வயது. நான், எனது என்ற எண்ணம் மேலோங்கும். எதற்கெடுத்தாலும் புத்தி சொல்லும் வயது. கூட இருப்பவர்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். சுக நாட்டம் குறையும். சேமிப்பு நாட்டம் பெருகும்.

பிள்ளைகளின் 40வயதுக்குள், பேரக் குழந்தைகள், அதாவது பிள்ளைகளின் பிள்ளைகள் 13வயதை தாண்டிவிடுவது நல்லது. இல்லை என்றால் பேரக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது அவர்களின் வாழ்வில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

இந்தக் கணக்கு தெரியாமல் பல பெற்றோர்கள் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம், சொந்த வண்டி, வீடு,.... பிறகு கல்யாணம் என்று ஊக்குவிக்கிறார்கள். அந்த குழந்தைகள் வளர்ந்து அதை எல்லாம் சாதித்து கல்யாணம் செய்யும்பொது வயது 35, 40, 45,… ஆகிவிடுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை விரக்தியாகவும், சுகம் இன்றியும், வெளியில் சொல்ல இயலாத மனப் புழுக்கங்களுடனும் செல்கிறது.

சில குடும்பங்களில் வெளிப்படையாக சண்டைகள் பெரியதாகிறது. சில இடங்களில் விவாஹரத்து வரை செல்கிறது. சில இடங்களில் தற்கொலை வரை செல்கிறது.

'பொருளாதார வெற்றி'க்கு 'சுக வாழ்வை' பலியாக்க வேண்டாமே. ஏனென்றால் எத்தனை கோடி சொத்து இருந்தாலும் நம் குழந்தைகள் கோடி ஆண்டுகள் இருந்து அனுபவிக்கப்போவது இல்லையே.

கொஞ்சம் கருணையுடன் சிந்திக்கலாமே.  

உங்கள் அன்புகுரியவற்கும் பகிருங்கள்
அவர்தம் நலனுக்கும் உதவுங்கள்

நன்றி.

0 comments:

Post a Comment