தனி நபரும் உறவுகளும் கடமைகளும்...

Leave a Comment

ஒருவன் மற்றவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் இருந்தால் அந்தக் கடமைகளை தானே கண்டுபிடிக்கவேண்டும், மனமுவந்து மகிழ்ச்சியுடன் பூர்த்தி செய்யவேண்டும்.  அதுவே நாகரீகம். மற்றவர்கள் கேட்டு அதனை செய்வது நாகரீகம் அல்ல. 


அதேபோல, நாம் மற்றவருக்கு செய்யவேண்டிய கடமை என்று இருப்பவைகளை - மற்றவர்கள் கெஞ்சிக்கேட்டு அல்லது போராடிக்கேட்டு பிறகு செய்வது மிகக் கீழான செயல். 

அதேபோல, மற்றவர்கள் தனக்கு செய்யவேண்டிய கடமைகள் இருந்தால் அவர்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் செய்தால் மட்டுமே ஏற்கவேண்டும். அதுவே நாகரீகம். அவர்களிடம் அதனை கேட்டுப் பெறுவது நாகரீகமான நிலை இல்லை. 

அதேபோல அவர்களிடம் கெஞ்சிக்கேட்டு அல்லது போராடிக்கேட்டு பெறுவது மிகக் கீழான நிலை. 

0 comments:

Post a Comment