நாம் கொடுக்கும் கல்வியின் தரம்!

Leave a Comment

பள்ளிக்கூடமே செல்லாத, படிக்காத கழுதைகளோ நாய்களோ, உலகில் எந்த உயிரினமோ,...
தோல்விகளுக்காக, கஷ்டங்களுக்காக,...
தற்கொலை செய்துகொள்வதில்லை,...


ஆனால்
11ஆண்டுகள் 'பாஸ்' செய்த ஒரு அறிவாளி, 'இவனுக்கு அறிவு இருக்கிறது' என அரசின் சான்றிதழ் பெற்றவன்,
12ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தான் - என்ற ஒரே காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்கிறான்!

அப்படி என்றால்
12ஆண்டுகள் நாம் கொடுத்த
கல்வியின் தரம் என்னவோ!
11ஆண்டுகளாக ‘இவனுக்கு, படிக்காதவர்களை விட, மிருகங்களைவிட அதிகமான அறிவும், திறமையும் இருக்கிறது’ என்று அரசு கொடுத்த சான்றிதழின் தரம் என்னவோ?

இந்த ‘தரமான’ சான்றிதழுக்காக, தமது தூக்கத்தை, சுகங்களை, பணத்தை,.... எல்லாவறையும் அடமானம் வைத்து, ஏன், குழந்தைகளின் நிம்மதியையும் அடமானம் வைத்து, கஷ்டங்களை தாங்கிய பெற்றோர்களின் ‘அறிவின்’ தரம் என்னவோ....

அறிவு உள்ளவர்கள் - சிந்திக்கவேண்டி உள்ளது....

பிறகு வருத்தப்படும் பெற்றோரும் அறிவாளியாக இருக்க முடியாது....


பிறகு வருத்தத்தைத் தரும் கல்வித்துறையும் அறிவுள்ளதாக இருக்க முடியாது....
என்று தோன்றுகிறது. உங்கள் கருத்து என்னவோ....





 



-----------------------------------------------------
tags: education, research on education, is there mistakes in education, mistakes prove the education is in wrong way, indian education, education in tamilnadu, students, schools, 

0 comments:

Post a Comment