மஹா தீபம் பூஜ்யர் ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதிகளுக்கு அஞ்சலிகள்...

Leave a Comment
உலகெங்கும் வேத ஞான விளக்கேற்றிய
மஹா தீபம் பூஜ்யர்  ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதிகள்
மஹா நிம்மதியுடன் பேரானந்தத்துடன்
இன்று கரைகிறார் இறைவனுடனே....

எங்கள் கண்களில் துளி நீரையும்
பார்க்க இயலாத கருணை உள்ளமே...
எப்படி இன்று எங்கள் கண்கள் குளமாக
விட்டுச் செல்கிறீர்...

கருணைத்தாய் உங்களை விட்டுப் பிரிந்தாளோ...
அவள் இன்றி உங்களுக்கு வாழப் பிடிக்கலையோ...






















ஆம்...

கருணைத்தாய் அவரது கரங்களில் வாழ்ந்தாள்
வந்தோருக்கெல்லாம் ஆசிகளை வழங்கி
இன்சொல்லும் நற்பலனுமாய் அள்ளி வழங்கி
இதயம் பூரணம் ஆகச்செய்து அனுப்பிவந்தாள்...
அகமகிழ்ந்து திருப்தி அடைந்து விட்டாளோ...
இன்று திரும்பிச் செல்கிறாள்.....


வேத மாதா அவரது நாவினில் வாழ்ந்தாள்....
ஒரு கேள்விக்கு  பதிலின்றி குழம்பிக்கிடந்த
உலக அறிவு ஜீவிகளை எல்லாம் மயக்கித்
திரு நடனம் புரிந்தாள் சொல் விளகேற்றி வந்தாள்...
அகமகிழ்ந்து திருப்தி அடைந்து விட்டாளோ...
இன்று திரும்பிச் செல்கிறாள்.....

அன்புத்தாய் அவரது கண்களில் வாழ்ந்தாள்....
கதியின்றி வந்தோரை எல்லாம் அவரது
கண்களின் வழியே பெருகிப் பாய்ந்து
புன்னகைப் பூக்களை அரும்ப வைத்தாள்....
அகமகிழ்ந்து திருப்தி அடைந்து விட்டாளோ...
இன்று திரும்பிச் செல்கிறாள்.....

தக்ஷிணாமூர்த்தி அவரது இதயத்துள் வாழ்ந்தார்....
வேதகுரு ஆயிரத்தை உருவாக்க விரும்பி
திருவடிக்கு வந்தோரை எல்லாம் ஞான
குருவாக்கும் வித்தைகளை செய்துவந்தார்...
அகமகிழ்ந்து திருப்தி அடைந்து விட்டாரோ...
இன்று திரும்பிச் செல்கிறார்.....

உலகின் மூலை முடுக்கினில் எல்லாம்
வேத ஞான விளக்கினை ஏற்றிய
தயானந்தரால் தனது புதல்வனால்
பெருமையில் திளைத்தாள் பாரதத் தாயும்...
உலகிற்கு இனி இல்லை துயரம் என்றும்
இருக்கிறான் என்மகன் ஒருவனே போதும் என்று...

அவளுக்கு இன்று ஒரு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் ஏது உலகங்களிலே...
ஓ தெய்வங்களே உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய
வாழ்விடம் உங்களுக்கு தருபவள் அவளே...
அதற்கொரு புண்ணிய பூமியைப் பண்ணவே
ஈன்றாள் அவளும் தயானந்தரை...

அவளது கண்களில் கண்ணீர் இன்று...
அழகே அல்ல தெய்வங்களே உமக்கு...
வாடுகின்றன அவளது கனவுப் பூக்களெல்லாம்
தருவீர் புதல்வனை மீண்டும் தாயிடம்....







0 comments:

Post a Comment