பகவத்
கீதை கற்க மிகவும் இனிமையானது,
பகவத்
கீதை அறிவுக்கு விருந்து,
பகவத்
கீதை மனதிற்கு இதமானது,
பகவத்
கீதை வாழ்வில் பயன் தருவது,
பகவத்
கீதை எங்கும் எப்போதும் கைகொடுப்பது!
பகவத்
கீதை கற்றவரைக் காப்பது!
பகவத்
கீதை உன் பிறவிக்குக் காரணமான தெய்வத்தின் குரல்!
அதனைப்
புரிந்துகொள்ளவேண்டிய விதத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி
ச l
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா ll 1.32
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா ll 1.32
அர்ஜுன உவாச்ச – அர்ஜூனர் கேட்டார் [ - ஸ்ரீ கிருஷ்ணரிடம் ]
ந
காங்க்ஷே - நான் விரும்பவில்லை
விஜயம்
- [ இப்படி ஒரு ] வெற்றியை
க்ருஷ்ண
- ஓ கிருஷ்ணா.
ந
ச ராஜ்யம் - ராஜ்யத்தையும்கூட [ நான் விரும்பவில்லை ]
ஸுகாநி
ச – [ இன்பங்களையும்
கூட [ நான் விரும்பவில்லை ]
கிம் நோ - நமக்கு என்ன [ பிரயோஜனம் ] ?
ராஜ்யேந
- இந்த ராஜ்ஜியத்தாலோ
கோவிந்த
– ஓ கோவிந்தனே
கிம்
போகைர் - இந்த உலக போகங்களால் [ லௌகீகம் சுகங்களால் ]
ஜீவிதேந
வா – வாழ்வதாலும் சரி [ நமக்கு என்னதான் பிரயோஜனம் ] ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓ
கிருஷ்ணா.
[ இப்படி ஒரு ] வெற்றியை நான்
விரும்பவில்லை, ராஜ்யத்தையும் [ இன்பங்களையும் கூட [ நான் விரும்பவில்லை ]. ஓ
கோவிந்தனே
இந்த ராஜ்ஜியத்தாலோ இந்த உலக
போகங்களால் [ லௌகீகம் சுகங்களால் ] அல்லது வாழ்வதாலும் சரி [நமக்கு என்னதான் பிரயோஜனம் ] ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது
வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து வாழும் ஒருவன் ......
ஒரு
நல்ல அறிவாளியாக இருந்தால்
தனது
கருத்துக்கள் கொள்கைகளை எப்போதுமே தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யத்தயாராக
இருக்கும் நேர்மையானவனாக இருந்தால்
அவனுக்கும்
மனம் விட்டுப் பேச ஒரு தகுதிஉள்ள நம்பகமான இடம் கிடைத்தால்
அப்போது
வெளிப்படும் வார்த்தைகள் இவைகள்.
இந்த
அனுபவம் மனசாட்சி உள்ள யாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம்
வருவதுதான்.
ஆனால்
, எல்லோருக்குமே, இதை மனம் விட்டுக் கேட்க ஒரு தகுதி உள்ள நபர் கிடைப்பதில்லை.
அர்ஜுனனருக்குக்
கிடைத்த இந்த வாய்ப்பு அப்படிப்பட்ட எல்லோருக்குமே கிடைத்த வாய்ப்பாகிவிட்டது –
ஸ்ரீ
வியாஸாச்சாரியாரின் கருணையினால்.
பயணம்
செய்யும் ஒருவன் எத்தனையோ கேள்விகளை தள்ளிவைக்கலாம். ஆனால், நான் போகும் பேருந்து
நான் போகவேண்டிய ஊருக்குதான் செல்கிறதா ? இதில் நான் பயணம் செய்வது சரியா? – என்ற சந்தேகம் வந்துவிட்டால், அதனைத் தள்ளிவைக்க
முடியாது. \
‘அப்படி
ஒரு சந்தேகமெல்லாம் வரவேகூடாது’ என்றும் சொல்லமுடியாது.
அர்ஜுனருக்கு
இப்படி ஒரு சந்தேகம் வந்துள்ளது, அவரது, நேர்மையை, அறிவுக்கூர்மையை, மனப்
பக்குவத்தை, தனது சரியான நல் வாழ்க்கையில் இருக்கும் அக்கறையை,.... காட்டுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதில்
இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்தக் கேள்வியை அர்ஜூனர் கேட்கிறார்
என்றால், அவருக்கு இதற்கு பதில் தெரியாது என்பது கிடையாது.
இதே
கேள்வியை அவரிடம் வேறு யாராவது கேட்டிருந்தால், அவரும் நிச்சயமாக ஒரு நல்ல பதிலைக்
கூறியிருப்பார்!
அர்ஜூனர்,
உண்மையில் வேதங்களைக் குருகுலத்தில் கற்றவர், அதற்க்கும் மேல் மன்னர்களுக்கே
தேவையான பல சாஸ்த்திரங்களையும், சாஸ்த்திர பூர்வமாக பல கலைகளையும், ராஜ
நீதிகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் ஏற்கனவே கற்றவரே.
ஏற்கனவே
ஆட்சியில் இருக்கும்போதும், மற்றும் பல நேரங்களிலும், தனது மிகச் சிறந்த மனப்பக்குவத்தைக்
காட்டியுள்ளார்.
பிறகு
என் இந்தக் கேள்வியைக் கேட்டார்? பதில் தெரியாததால் கிடையாது.
இதில்
ஒரு சிறந்த அறிவாளித்தனம் இருக்கிறது. அது...
எப்போதுமே
தன்னைக் காட்டிலும் சிறந்த அறிஞர்கள்
இருக்கும்போது, ....
எனக்கே
இதற்கெல்லாம் பதில் நன்றாகத் தெரியும் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல்,
தனது
சிறிய சந்தேகத்திற்கும் தன்னிடமே பதில் இருந்தால்கூட,
பெரியவர்களின்
கோணத்தில் இதற்கு என்ன பதில் என்று கேட்டுத் தெரிந்துகொள்வது.
இன்னொரு
மனோவியல் ரீதியான உண்மையும் இருக்கிறது...
பல
நெருக்கடிகளில் ஒரு தீர்வு நமக்கே தெரிந்திருந்தாலும்கூட, அதை மற்றவர்களுக்கு
சொல்லி ஏற்க, கடைபிடிக்க வைக்க திறமை இருந்தாலும்கூட,
தனக்கு
கடைப் பிடிப்பதில் மனதில் பல இயலாமைகள் குறுக்கே வரமுடியும் – சில சந்தர்பங்களில்.
அந்த
நேரத்தில் , அவருக்கே , வேறு ஒருவர், அவருக்கு தெரிந்த அதே பதிலை செல்லும்போது ,
குழப்பம் தீருகிறது, செயல்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
அதனால்
ஒருவன் தெரிந்த விஷயம் என்றாலும்கூட , தகுதி உள்ளவர்களிடம் இருந்து மீண்டும்
மீண்டும் கேட்டாலோ , கற்றலோ மிகுந்த நன்மையை செய்வது!
இந்த
இரு காரணங்களாலும் நமது பண்பாட்டில் இந்த நடைமுறை எங்குமே என்றுமே இருந்துள்ளதை
நமது நூல்களில் நாம் காண முடியும்.
இந்தப்
பக்குவத்தை கடைபிடிப்பவன் வாழ்வில் உண்மையான உயர்வினை அடைவான்.
மிகுந்த
அறிவினைப் பெற்று, சிறந்த கல்விகளைக் கற்று, சாதனைகள் பல புரிந்து, நாடு முழுவதும்
தனது திறமைகளுக்கு நிகரற்றவன் எனப் புகழ் பெற்றிருந்து, அதற்குமேல் உலகப் புகழும்
பெற்றிருந்த அர்ஜுனரே இந்தக் கேள்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து
கேட்டுள்ளார்,......
அதுவும்
, வாழ்வில் மிகுந்த நெருக்கடியான , வேறு எதையும் நினைக்கக்கூட நேரம் இல்லை, என்று
சொல்லப்படும் போர்க்கால நேரத்தில், .....
இந்தக்
கேள்வி மிக முக்கியமான கேள்வி,
எனது
பயணத்தில் தவறு நடந்துவிட்டால் அது நியாயம் கிடையாது , இது ஒரு அடிப்படைக் கேள்வி,
இதற்கு பதில் கிடைக்காமல் நான் எதையுமே செய்ய விரும்பவில்லை, ஏனெனில் என்னிடம் ஒரு
தவறு நடந்து, அது என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பிறகு ஒருநாள் வருத்தப்படவைக்கும்
நிலை வரக்கூடாது,..... என்று மன சாட்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து, கேள்வியைக்
கேட்கிறார்.
அது
அவருக்கு மிகுந்த நன்மையையும், செயலூக்கத்தையும் தந்தது. அதுமட்டுமல்ல,....
அவரது,
நியாயமான செயல்பாட்டால், அவருக்கு கிடைத்த பதில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல கோடிபேருக்கு
வாழ்க்கையில் விளகேற்றி நன்மையை செய்துள்ளது!
நியாயங்களை
தைரியமாக கடிபிடித்தால் இப்படித்தானே, .....
அப்போது
கஷ்டமாக இருந்தாலும், பிறகு அது மிகப்பெரிய நன்மையை செய்துவிடுகிறது!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவைத்தவர்கள் உங்களுக்கு
முக்கியமானவர்களுக்கும் சொல்லலாமே!
0 comments:
Post a Comment