கருத்தாய்வு : ‘பணக்கல்வியைப்
போன்றே – பண்புக்கல்வியும் தேவை’
துவக்க உரை:
1.
ஆயிரம் ஆயிரம் தலை
முறைகளாக நல் வாழ்வு வாழ்ந்துள்ளது இந்த பாரத நாடும், இதன் மிகப் பெரிய ஒரு சமுதாயமும்.
ஆயிரம் ஆயிரம் தலை முறைகளாக நல் வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
அன்று
வெள்ளைக்காரன் கொள்ளையடித்துக்கொண்டு போய்கொண்டு இருந்தபோது கூட மக்கள் மன நிம்மதியுடன்,
நல்ல பண்பாட்டுடன், ஒற்றுமையான குடும்ப வாழ்வுடன் ஆனந்தமாக வாழ்ந்துகொண்டு
இருந்தார்கள்.
திருட்டு,...
போன்ற தவறுகளை செய்வதை வெட்கமாக நினைத்த நாடு. ஆனால், இன்று அவை நடைமுறையில்
அங்கீகரிக்கப்பட்டு பாரவாயில்லை என்று மக்களும் சமாதானம் சொல்லிக்கொள்வது பழக்கமாக்கிவிட்டது, சட்டத்திற்கு
திருட்டு,... போன்ற தவறுகளை நடக்கவில்லை என ஆதாரங்கள் கிடைக்காத விதத்தில்
பொய்க்கணக்கு காட்டுவதை அரசு நிர்வாகமும் பழக்கமாக்கிக்கொண்டாகிவிட்டது.
இப்போது சுதந்திரம்
வாங்கி ஒரு நூறு ஆண்டுகள்கூட ஆகவில்லை மக்களின் நிம்மதியான வாழ்க்கை முறை
பறிபோய்விட்டது. பல கேடுகள் வந்துவிட்டன. அதற்குள் எப்படி இந்த அளவிற்கு
கெட்டுப்போய்விட்டது என்பதன் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். இதே நிலை நீடித்தால்,
மக்கள் எப்போதுமே, பயந்தே வாழவேண்டிய நிலை வந்துவிடும் - விரைவில். அந்த வாழ்க்கை
சாபக்கேடான வாழ்க்கை.
நம்மிடம் நிச்சயம்
மிகப் பெரிய தவறு எதுவோ நடந்துகொண்டு இருக்கிறது. அதனை உடனடியாக சரிசெய்துகொள்ளவேண்டும்.
இல்லையென்றால் இந்த நிலை வளர்ந்து மிக மோசமான விளைவுகளைத் தரும். குழந்தைகளையும்
பெற்று அவர்களுக்கு ஒரு கேடுகெட்ட சூழ்நிலையைக் கொடுத்த பழியும் பாவமும் நமக்கு
வரும்.
2.
அது கற்காலம் ,
இது விஞ்ஞான யுகம்... என்பது ஒரு , அறிவாளித்தனமான வாதம் இல்லை, ஏனென்றால், அப்படிப்
பார்த்தால் இன்னும் பத்து லக்ஷம் ஆண்டுகள் கழித்து உள்ள கண்ணோட்டப்படி , இன்று
உள்ள விஞ்ஞானிகளே காட்டுமிராண்டிகள்தான் என்று ஆகிவிடும். அப்படி என்றால் நீங்கள்
மஹாகாட்டுமிராண்டிகள் ஆவீர்கள்.
மேலும் பழங்காலத்திலும் விஞ்ஞானம் இருந்தே உள்ளது. நமது
பழைய நூல்களை படிக்கும்போது நமக்குத் தெரிவது அநேகமாக நம்நாட்டில் அனைவருமே
மிகப்பெரிய அறிவாளிகளாகவே இருந்துள்ளனர். கோடிக்கணக்கான விஞ்ஞானிகளும்
இருந்துள்ளனர். ஒருநாள் இருநாள் இல்லை, ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக.
அதே நேரத்தில்
உலகநாடுகள் எல்லாம் காட்டுமிராண்டிகளாகவே இருந்துள்ளன.
அவைகளை வெள்ளையர்களின்
முறையில் பதிவுசெய்யும் பழக்கம் மட்டுமே நம்மிடம் இல்லாமல் இருந்துள்ளது.
இன்னொரு முக்கிய
விஷயம், சில விஷயங்கள் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாத தேவைகள். உதாரணமாக, பசிக்கு
உணவு, தூக்கம், பாதுகாப்பு, சுய கெளரவம்,... ‘காட்டுமிராண்டிகளின் காலத்தில்
இவைகள் தேவைப்பட்டது. இப்போது நான் விஞ்ஞான யுகத்தில் இருக்கிறேன், எனக்கு இவைகள்
தேவை இல்லை’ என்று மனித வர்கத்தால் சொல்லமுடியாது. இவைகளுக்கு பாதிப்பு வந்தால்
ஒருவனால் வாழ முடியாது. அதனால் இவைகள் உயிருக்கு நிகரான முக்கியத்துவம் உடையவைகள்.
அதனால் இவைகளுக்கு அடிப்படைத் தேவைகள் என்று பெயர். இவைகளுக்கு கேடு வரும் ஒரு
வாழ்க்கை முறையை ஒருவன் எப்போதுமே தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒரு அரசும் நாட்டிற்கு அறிமுகம்
ஆக விடக்கூடாது.
இவைகளை நாம்
சகோதர உணர்வுடன், மனமு வந்து பகிர்ந்துகொள்ள முடியும் சூழ்நிலையைக்
கொண்டுவரவேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்வரை நாம் அப்படித்தான் வாழ்ந்தோம். இப்போது
அவை அழிந்ததற்குக் காரணம், நம்மை ஆட்ச்சிசெய்த தலைவர்கள் பலர் நல்ல விஷயங்களையும்
காட்டுமிராண்டித்தனம் என்று கூறி நிராகரித்து, நாட்டின் செயல்முறையை வடிவமைத்ததுதான்.
இப்போதும் நாம் அவைகளை மீட்க முடியும். அவைகள் முழுவதும் அழியவில்லை.
3.
தன் வீட்டு
சந்ததிக்கோ , நாட்டு வம்சத்திற்கோ லௌகீகம் சௌகர்யங்களை கொடுப்பதே பெற்றோருக்கோ
ஆள்வோருக்கோ லட்சியமாக இருப்பது புத்திசாலித்தனமாக இருக்க முடியாது. ஏனென்றால் , உதாஹரனமாக,
ஒரு நல்ல பாலத்தைக் கட்டி முடிப்பதற்குள், அதற்கு வரிகட்டியவர்கள் இறந்தே
போய்விட்டார்கள். பிறகு பாலத்தில் பயணம் செய்யும் அடுத்த தலைமுறையும்கூட வேறு ஒரு சௌகர்யம் இல்லாமல் சிரமத்தில்தான்
இருக்கிறார்கள்.
வாழ்க்கை
லட்சியம் என்பது விஞ்ஞான சாதனங்களை பயன்படுத்து மட்டுமே கிடையாது. நிம்மதியாக
சந்தோஷமாக வாழ்வதுதான். அதற்கு பொருளாதாரமும் விஞ்ஞானமும் வெறும் சாதனம்தான்.
இன்று வாழும்
தலைமுறை மற்றும் இனி வரும் தலைமுறைகள் வாழும்போதே நிம்மதியாக வாழ முடியுமாறும், மரணத்திற்குள்
பரிபூரண திருப்தி உணர்வை அடையுமாறும், குடும்பத்தையும் நாட்டையும் நடத்தத்
திட்டமிடுவதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். முன்பு ஆயிரம் ஆயிரம் தலை
முறைகளாக முடிந்துதான் உள்ளது. இன்றும் அது முடியும். அது அவசியமானதுதான்.
4.
இப்படித்தான் ‘நம்மைப்
போன்று நம் குழந்தைகளும் நல்வாழ்க்கை வாழ்வார்கள்’ என நமது முன்னோர்கள்
ஆசைக்கனவுகளுடன் குழந்தைகளை , நம்மை வளர்த்தார்கள். அதற்காகத்தான் பல
தியாகங்களையும் செய்தார்கள். மேலும் அவர்களின் ஆசைகள் தவறு இல்லாதவைகளாகவும்,
நமக்கு நன்மைகளை செய்வதாகவும், ஏன், உலகிற்கே நல் வாழ்வை கற்றுத் தருவதாகவும்தான்
இருக்கின்றன. அவைகளை கைவிடவேடிய அவசியம் எதுவுமே இல்லை.
உண்மையில்
அவைகளைப் பற்றி பூரண அறிவு இல்லாததால் அவைகள், குறைபாடு உள்ளவைகள் போன்றும், தேவை
இல்லாதவைகள் போன்றும், இந்தக் காலத்திற்கு ஒத்து வராதவைகள் போன்றும், விஞ்ஞானத்திற்கு
புறம்பானவைகளைப் போன்றும் தோன்றுகிறன. இன்றைய நவீனக் கல்வியைக் கற்றதால், நாமும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் அவைகளை நமது
நாட்டின் சரித்திர ஆராய்ச்சிக்காகக் கற்றோம். அவைகளோ மிகப் பெரிய பொக்கிஷங்களாக
இருக்கின்றன.
முன்னோர்களின் கருத்துக்களை
நாம் கருதத்தேவை இல்லை என்று சொல்லுபவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வது தவறாகிவிடும்.
அந்தக் குழந்தை நல்லபடியாக வாழவேண்டும் என்று நினைப்பதோ, எப்படி இருக்கவேண்டும்
என்று நினைப்பதோ கூட தவறாகிவிடும்.
பள்ளிக்கூடங்கள்
போதனைகளை செய்வதும் தவறாகிவிடும்.
ஆம் அது எல்லாமே
தவறுதான் என்பவர்கள் இங்கு சமூகத்தில் வாழுவதுதான் தவறு என்று ஆகிவிடும்.
5.
இது இந்தக்
காலத்திற்கு பொருந்துமா, முடியுமா,... என்றால் பொருந்தும், முடியும் அதைப் பற்றி
நன்கு ஆராய்ச்சி செய்துள்ளோம், முடியும் என்பதற்கு நிரூபணங்கள் இருக்கின்றன, அதையும்
சுலபமாகவே செய்ய வழிமுறைகளை
அறிந்துள்ளோம்.
6.
குறிப்பாக இந்தக்காலத்து
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதும், குற்றங்களை செய்வதும்
அதிகரித்து வருகிறது.
ஏன், நன்கு
படித்தவன் என்று சான்றிதழைப் பார்த்து முடிவு செய்த அரசாங்கம், வேலையும், நாட்டின்
வரிப்பணத்தில் சம்பளமும் கொடுத்த அரசாங்கம், பிறகு அவன் திருட்டுத்தனமாக குற்றம்
செய்தான் என்று கண்டுபிடித்து தண்டிக்கிறது. அரசாங்கம் அவர்களை குற்றம் சொல்லலாம்.
ஆனால் அவனுக்கு குற்றம் செய்யும் மனம் எப்படி வந்தது. அவர்களின் கல்விப்பருவத்தின்
முழுநேரத்தையும் இந்த அரசின் பள்ளிக்கூடம்தான் பறித்துக்கொண்டது. பள்ளிக்கூடம்தான் பண்புகளையும் சொல்லித்தரவேண்டும்.
அல்லது இதெல்லாம்
பள்ளிக்கூடங்களின் வேலை இல்லை என்றால், அரசும் கல்வித்துறையும் அதனை
அறிவிக்கவேண்டும். பெற்றோர்கள் அவைகளை சொல்லித்தர நேரம் இருப்பதுபோல பாடத்திட்டம்
இருக்கவேண்டும். பெற்றோர்களும் எதையும்
சொல்லித்தர நேரம் தரப்படவில்லை. ஏன் அன்பாக பேசக்கூட நேரம் தரப்படவில்லை. இப்போது
அவனது குற்றத்திற்கு உண்மையில் அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். தண்டனை
ஏற்கவேண்டும்.
ஆனால் அரசு
தப்பிக்கிறது. அனால் அவனுக்கு தண்டனையைத்
தருகிறது. இன்று அவனது குடும்பத்தினர் அவமானங்களை சந்திக்கவேண்டி உள்ளது. இது
உண்மையில் அநியாயம். அது போகட்டும் அரசின் தவறுக்கு நம் குழந்தைகள் ஏன் பலி
ஆகவேண்டுமோ. நமக்கு நம் குழந்தைகளை காப்பதில் பொறுப்பு இல்லையா?
7.
அதே போல இல்லறம்
நடத்தத் தேவையான பண்புகளை கல்விச்சுமையால் வீட்டில் கற்க முடிவதில்லை.
பள்ளிக்கூடமும் சொல்லித்தருவதில்லை. எதையோ படித்தார்கள் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிக்கிறானே
என்று திருமணம் செய்துவைக்கிறோம். அவர்களால் திருமண வாழ்வை நடத்தத் தெரிவதில்லை,
முடிவதில்லை. அதற்கு உள்ள பக்குவங்கள் இல்லை, அவைகளை இனி எப்போது கற்பார்கள்? விவாஹரத்திற்கு
செல்கிறார்கள்.
இனி சொல்லிப்
புரியவைக்கமுடியாது. பண்புக்கல்விகளை கொடுக்கவேண்டிய வயது 21க்குள். அதை விட்டு
விட்டு இப்போது நாம் சொன்னால் அவனுக்கு தன்னை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. கொம்பை
விட்டுவிட்டு வாலை ஏன் பிடிக்கவேண்டும்?
ஆனால் இன்று 30
வயது வரை கொத்தடிமைகளாக வாழ உதவும், வேலைக்காரர்களை உருவாக்கும் கல்விதான்
இருக்கிறது பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும். இது வெள்ளைக்காரர்களால்
அவர்களுக்கு அடிமை வேலைகளை செய்ய வேலையாட்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட
கல்வி.
நாம் நல்லவிதமாக
வாழ்ந்து, நல்ல குடும்பத்தை நடத்தி, நல்ல சந்ததிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கும்
நல்வாழ்வை தருபவர்களாக இருக்கவேண்டும் என்ற உணர்வுடன் திட்டமிடப்படவும் இல்லை,
வடிவமைக்கப்படவும் இல்லை.
அது மட்டுமல்ல
நம்மை கௌரவத்தையும், மானத்தையும் கண்டுகொள்ளாதவர்களாக ஆக்கினால்தான் அவர்களுக்கு
நல்ல அடிமைகளாக இருப்போம் என்றும் அதனையே பெருமையாகவும் நினைப்போம் என்றும், அதனை
செய்ய கல்வித்திட்டத்திற்கு உள்ளேயே பல மனோவியல் ரீதியான சதிகளையும் செய்தான்
வெள்ளையன். நாம் இன்று அவைகளுக்குள் மாட்டிக்கொண்டோம்.
8.
இது ஏன் இந்த
நிலை நம் நாட்டில். நம் சந்ததிகள் வாழ உதவத்தான் அரசாங்கமே தவிர, ‘அவர்கள் ஏதோ ஒரு
சட்டத்தை வைப்பார்கள் அதற்குள் முடிந்தால் வாழவேண்டியதுதான், அல்லது அழியவேண்டியதுதான்’
– என்ற நிலை கிடையாது. இது நம் முன்னோர் நமக்கு ‘நாம் சுகமாக வாழவேண்டும்’ என்று ஆசைக்
கனவுகளுடன் கொடுத்த மண், உறவுகள், வம்சம், வளம், நாடு. நாம் நமது சந்ததிகளின் சரியான வளர்ச்சிபற்றி
அவசியம் சிந்திக்கவேண்டும். நமக்கு உரிமை உள்ளது. இந்த நாடு என்பது நம்
அனைவருக்குமான ஒரு பொதுவான வீடு. இது ஏதோ புறம்போக்கும் அல்ல. நாம் உரிமையற்ற
அடிமைகளும் இல்லை. நியாயமான கருத்தை நமது கருத்தாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக
பிரார்த்திக்க வேண்டும். பிறகு அரசின் செயல்கள் அதற்கு ஏற்ப நிச்சயம் மாறும்.
இதையெல்லாம்
சொல்வதாலேயே நமது சந்தோஷத்தை ஆன்மீகவாதிகள், அடக்கப்பார்க்கிறார்கள் – என்று
நினைக்கத் தேவையே இல்லை. உதாரணமாக – ஒரு பெற்றோர் குழந்தைகள் சந்தோஷமாக
இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். அதேசமயம் அவர்கள் எதை செய்து சந்தோஷப்பட்டாலும்
பெற்றோர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? குழந்தை இப்போது சந்தோஷப்பட்டாலும் பிறகு
வருந்தும் நிலைகள் வரமுடியும் என்றால் தடுக்கிறார்களே. அதேபோல அக்கறையினால் வரும்
பேச்சுக்கள் தான் இவைகள்.
9.
இப்போது
சுதந்திரம் வாங்கி நூறாம் ஆண்டு ஆவதற்குள்ளேயே இவ்வளவு நாசம் என்றால் , இனி வரும் காலங்களில்
நிலைமை என்னவாகும்? நம் சந்ததிகளின் அழிவிற்கு நம் சோம்பல் காரணமாக ஆகவேண்டாம். இது
ஏதோ நமக்கு அந்நியமான பிரச்சினை இல்லை. எந்த சந்ததிகளுக்காக நாம் கஷ்டப் படுகிறோமோ,
அவர்களின் நல்வாழ்வு பற்றிய பிரச்சினை.
10.
நமது பாரம்பரிய
குருகுலங்களில் தங்கி வேதக் கல்விகளை கற்கும் பாக்கியத்தை இறைவன் நமக்கு அருளினான்.
அங்கு இவைகளுக்கான தீர்வுகள் குவிந்து கிடப்பதைப் பார்த்தோம். கற்றோம். எந்தக்
கண்ணோட்டத்தில் வேதங்கள் பேசுகின்றனவோ, நம் முன்னோர்கள் பேசினார்களோ அதனை கற்பித்தும்
பார்த்தோம். பல ஆயிரம் பேர் கற்றார்கள். அனைவருமே மிகவும் வரவேற்றார்கள். 99% பேர்
இல்லை, 100% பேரும் வரவேற்றார்கள்.
ஏன் கடவுளை
நம்பாத நாஸ்திகர்கள்கூட கற்றார்கள். அவர்களும் வரவேற்றார்கள்.
11.
அந்த போதனைகளின்
மூலம் வேதம் சொல்லவரும் கண்ணோட்டம் என்ன? அது நம் முன் வைக்கும் வாதம் என்ன?...
என்பதை மட்டும் உங்கள் முன் வைக்கிறோம். அது பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய
விரும்புகிறோம்.
உங்கள் கருத்துக்களையும்
வைத்துக்கொண்டு ஒரு சிறந்த தீர்வுக்காக மிகவும் பலமான ஒரு தவத்தினை துவக்க
இருக்கிறோம். இறை அருளால் அது சிறந்த பலனைத் தரவேண்டும் என்று
பிரார்த்திக்கின்றோம். உங்களது ஒத்துழைப்புகளையும் தரவேண்டுகிறோம். நன்றி.
முடிவு உரை:
இந்தக்
கண்ணோட்டங்களைக் கேட்டிருப்பீர்கள். மறுபடி எங்கள் சேவகர்கள் வரும்போது அவர்களுடன்
பேட்டிக்கு ஒத்துழைப்பு தர விடுகிறோம். நன்றி.
0 comments:
Post a Comment