இன்பச்செல்வன் துன்பச்செல்வன் ஆனகதை....

Leave a Comment

குழந்தைகளுக்கு நல்வாழ்வு தர விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய சிறிய கதை....

 
தலைமுறை தலைமுறையாக சொத்து சேர்த்து மிகுந்த வளமாக வாழ்ந்து வந்த குடும்பம் அவசரத்திற்கு ஒருமுறை ஒரு மகன் செல்லமாக வாழ்ந்த இளம் காளை இன்பச்செல்வனுக்கு எழுதிக்கொடுக்கும் நிலை வந்தது.
அவனது வளத்தினை அறிந்து, இயலாமைகளை கண்டறிந்து திறமையாக நாகரீக நயவஞ்சகர் கூட்டங்கள் அவனை வளைத்தது சுற்றிச்சுற்றி, சூதாட்டக்காரர்கள், காமினிகள், விலை நேரப் பெண்கள், போதைப்பொருள் வியாபாரிகள், ஆடம்பரப் பொருள் ஏஜண்டுகள்,... என்று. சுற்றத்தார்கள் சொன்னார்கள், ‘வேண்டாம் இவைகளெல்லாம், கவனம் வேண்டும்’ என்று... ‘மதி கெட்டவர்களே செல்லுங்கள் விலகி’ என்றான் இளங்காளை இன்பச் செல்வன்...
செல்வனுக்கு கிடைத்த சுகம் ஏராளம் ஏராளம். கேட்டால் கேட்டது கிடைக்கும்! நினைத்தால் நினைத்தது நடக்கும்! உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அகமும் புறமும் சுகம், சுகம், சுகம்,..... உடனடி சுகம். திணறவைக்கும் சுகம்! செல்வனின் செல்வம் கைமாறத் துவங்கியது கொள்ளையர் கூட்டத்திக்கு!
இன்பச்செல்வனுக்கு யாராலும் எதையும் புரியவைக்க முடியவில்லை. அவன் யார்பேசவும் வாய்ப்பும் கொடுப்பதில்லை. சுறுசுறுப்பாய் சுற்றினான் சுக வலைக்குள் சுற்றிச் சுற்றி. அறிவுரை என்றுமட்டும் யார் எதை சொன்னாலும் அவமதித்து அனுப்புவான்.
“எனது சுக வாழ்க்கை உங்களுக்கு பிடிக்கவில்லை, உங்களுக்குதான் அனுபவிக்கத் தெரியவில்லை, என்னையும் ஏன் உங்களைப்போல மூடனாக ஆக்கப் பார்க்கிறீர்கள்..... விவரம் இல்லாமல் எனது முன்னோர்கள் வாழ்ந்துவிட்டார்கள், உங்களைப் போல் மூடர்களாய். நான் இனி ஏமாறமாட்டேன்” என்றான்.
“செல்வத்தின் பயன் சுகம்தானே? உங்கள் பேச்சை என்னிடம் காட்டவேண்டாம். நீங்களே வாழுங்கள் நல்மூடராக மூடர்களே.. நான் இப்போது விவரமாக வாழுகிறேன். என்னை தொல்லை செய்யாதீர்கள் காட்டுமிராண்டிகளே - என்று பேசி துரத்திடுவான் யார் சென்றாலும் எடுத்துச் சொல்ல.
மாதங்கள் நகர்ந்தன. ஆண்டு ஒன்றும் சென்றது. செலவனின் செல்வம் தீர்ந்தது. ஒட்டியிருந்த அட்டைப்பூச்சிகள் வேறு இடம் தேடி விட்டுச்சென்றன.
செல்வன் தனிமரம் ஆனான்.  மது வாங்க பணம் இல்லை சட்டைப் பையில். கெட்டுப் பொய் நோய் பிடித்த உடலுக்கு மருந்து வாங்கவும் வசதி இல்லை. வாட்டும் பசிக்கு எளிய சோறு வாங்கக்கூட காசு இல்லை. கவலைகளை பகிர்ந்துகொள்ள ஒரு உறவும் உடன் இல்லை.
இனி சம்பாதிக்கலாம் என்றால் எந்தவேலையும் செய்து பழக்கம் இல்லை. சம்பாதித்து பழக்கம் இல்லை. தெரிந்த ஒரே வேலை - செலவு செய்வது. அதற்கு எங்கும் வேலையும் இல்லை. அதற்கு சம்பளமும் இல்லை. 
வாடினான் செல்வன். இத்துணை நாள் உடன் இருந்த கூட்டத்திடம் உதவிகேட்கலாமே என திரும்பிப்பார்த்தான். யாரையும் காணோம்.
எங்கே என்று எட்டிப்பார்த்தான்... அட்டைப்பூச்சிகள் ஒட்டிக்கொண்டு இருந்தன வேறு ஒரு இளங்காளை இன்பச்செல்வனை!
இவனது நல்வாழ்வில் நாட்டம் இல்லாத, பணமே நாட்டம் என்று இருந்த நாகரீக நயவஞ்சகர் கூட்டங்களையே கதி என்று இருந்தான் இன்பச்செல்வன், இன்று துன்பச்செல்வன் ஆகிவிட்டான்.
இனி இவனை மதிப்பதற்கும் ஆள் இல்லை, ஏமாற்ற வரவும் ஆள் இல்லை. நோய் பிடித்த உடல்,  வற்றிய தோல், வாடிய முகம், குழிவுழுந்த கண்கள், எச்சில் வடியும் உதடுகள், அழுக்கு உடைகள், பிய்ந்த செருப்புகள், கிழிந்து தொங்கும் நாறும் சட்டைகள், பசிகிறது பசிக்கிறது என்று சொல்லத் தெரியாமல் உள்ளுக்குள் அழும் வாடிய வயிறு... எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று நினைத்துப் பார்க்கவும் தெம்பு இல்லாத மரத்துப்போன மனம்,.... தலையை வெடிக்கும் உச்சி வெயிலில் கால்கடுக்க நடந்து அலைந்து ‘ஐயா சாமி ஏதாவது தருமம் செய்யுங்கோ’ என்று கெஞ்சிக் கெஞ்சி பிச்சை கேட்டு தெருத் தெருவாய் நடக்கின்றான். இவனது முன்னாள் பெயர் இன்பச்செல்வன், இந்நாள் பெயரும் அதுதான்! ஆனால் அது யாருக்கும் தெரியாது.
பரம்பரை செல்வம் எப்படியோ பாரதத்தின் பண்பாடும் ஒரு பரம்பரை செல்வமே! பண்பாடு என்றால் ஏதோ விபூதி, நாமம், தாலிக்கயிறு,... என்பது இல்லை. அது ஒரு விஞ்ஞானப் பூர்வமாக பாதுகாக்கும் வாழ்க்கை முறை. ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக விதவிதமான இன்னல்களை சந்தித்து, தீர்வுகளை கண்டறிந்து சேர்த்துச் சொன்ன அனுபவக் கட்டிடம், செல்வக் களஞ்சியம்!
அதில் பிறந்து சுகமாய் வளர்ந்த இளங்காளை இந்தியச்செல்வனிடம், விடுதலைக்குப் பிறகு. அவசர அவசரமாக நாடு எனும் சொத்து கொடுக்கப்பட்டது.
பிறகு என்ன நடந்தது....
இன்பச் செல்வனின் கதையை ‘காப்பி’ செய்து இங்கே ‘பேஸ்ட்’ செய்யவும்!

நமது பண்பாடு மிகப் பெரிய வளம். உலகையே காக்கும், சந்தோஷமாக வாழவைக்கும் திறமையை உடையது. ஒரு நிமிஷத்தில்  சொல்லிப் புரிய வைக்க முடியாதது. ஆனால் நிச்சயமாக நன்மை செய்வது. உலகில் வேறு எந்த கட்டமைப்பு தரும் பாதுகாப்பு நிம்மதி சந்தோஷத்தை விட குறைந்தது நூறு மடங்காவது பாதுகாப்பு நிம்மதி சந்தோஷத்தைத் தரும்.
குழந்தைகளை பெற்று செல்லப் பிள்ளைகளாக வளர்த்து, சம்பாதிக்க வழிசொல்லி, சொத்து கொடுத்து சென்றால் போதாது. இந்த பாதுகாக்கும் பண்பாட்டையும் சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் வெளியில் காத்துக்கொண்டு இருக்கின்றன வர்த்தகக் கம்பெனிகள் - அவனுக்கு சுகம் தருகிறேன் என்று சொல்லி - அவனை உறிஞ்சித் தள்ள.
இதிலிருந்து பாதுகாப்பை கற்றுக்கொடுப்பதுதான் குழந்தைகளுக்கு செய்யும் முக்கியமான உதவி.
இதை பள்ளிக்கூடங்கள் கற்றுத் தராது. வித விதமான அட்டைப்பூச்சிகளிடம் சிக்க வைப்பதே கல்விநிறுவனங்களின் லட்சியமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்களான நாமே சரியாக கற்போம் - குழந்தைகளுக்கும் நிச்சயமாய் கற்பிப்போம்! அதுவே அறிவுப்பூர்வமான - சரியான பெற்றோரியல்!  



வாழ்க்கை லட்சியம்...

Leave a Comment

கொடுக்கப்பட்டுள்ள ‘ஒரு கட்டமைப்பு’ என்ன பலனைத் தர முடியும் என்பதை  அதன் உரிமையாளரின் விருப்பங்களோ, திறமைகளோ, முயற்சிகளோ அல்லது விஞ்ஞானிகளின் திறமைகளோ முடிவுசெய்வதில்லை. ஆனால்...
‘அந்த கட்டமைப்பே’ முடிவுசெய்கிறது. உதாரணமாக...
டி.வி. மற்றும் ஃபேன் - இவற்றில் எது படத்தைக் காட்டவேண்டும், எது காற்றைத் தரவேண்டும் என்றோ, அல்லது அவை மாவு அரைக்க வேண்டுமா, துணி துவைக்கவேண்டுமா,.... என்றோ அதன் உரிமையாளர் முடிவு செய்யமுடியாது.  
அதேபோல்தான் ஒருவனின் வாழ்க்கைக் கட்டமைப்பும்கூட... அதன் உரிமையாளனுக்கு என்ன பலனைத் தர முடியும்- என்பதை அந்த  வாழ்க்கைக் கட்டமைப்பே முடிவு செய்கிறது. அதன் உரிமையாளர் முடிவு செய்ய முடியாது!
ஒருவனின் வாழ்க்கைக் கட்டமைப்பு அவனது இப்பிறவி வாழ்க்கையில் என்ன பலனைக்கொடுக்க முடியும் என்பதை அவனது ஜாதகம் ஏற்கனவே சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதை மட்டுமே ஒருவனால் அடைய முடிந்துள்ளது, அது விஞ்ஞானியானாலும் சரி, உலக மஹா பணக்காரன் ஆனாலும் சரி, நல்லவன் ஆனாலும் சரி, கெட்டவன் ஆனாலும் சரி, யாராய் ஆனாலும் சரி,...
ஒருவனது விதி அனுமதிக்காததை யாருமே அடைந்ததும் இல்லை; ஒருவனது விதி கொடுக்க வைத்திருப்பதிடம் இருந்து  யாருமே பெறாமல் தப்பித்ததும் இல்லை....

உண்மையை சொன்னால், சுருங்கச் சொன்னால்.... 'அவரவரும் தனது வாழ்க்கை லட்சியத்தை முடிவு செய்யவேண்டும்' என்பது அறிவுப்பூர்வமான சிந்தனா முறை இல்லை. ஏனெனில் வாழ்க்கை தனது லட்சியத்தை முடிவு செய்துகொண்டுதான் பயணத்தை துவக்கி உள்ளது. அதை நோக்கிதான் சென்றுகொண்டு இருக்கிறது. அதனை மாற்ற முடியாது. அதனை அறிவதுதான் அறிவுப்பூர்வமான வாழ்வியல்! அறிவுப்பூர்வமான சிந்தனா முறை!
 
வெளிநாட்டுக்காரர்கள் கண்டுபிடிக்காததால் இதெல்லாம் உண்மை இல்லை என்பது இல்லை.
இது விஞ்ஞானபூர்வமான உண்மை ! நம் நாட்டு விஞ்ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நிரூபித்து உள்ளார்கள்.
இதை நாமும் நிரூபித்துள்ளோம்.
உலகில் யாருக்கும் நிரூபிக்க தயாராகவே இருக்கிறோம்!

                - பிரத்யக் விஞ்ஞானி ஸ்ரீ ஐஸ்வர்ய மஹரிஷி           ரிஷிகுடில், கோவை- 90 42 500 500, 90 42 600 600, 90 42 800 800 

 

உலகில் சிறந்த நமது பாரம்பரிய கல்வி!

Leave a Comment
நமது பாரம்பரிய கல்விமுறை மிகவும் ஆழமானது, பரந்தது, கற்றவனுக்கு மிகச்சிறந்த பயனைத் தருவது, கற்றவர் மூலம் சமூகத்திற்கும் மிகச்சிறந்த பயனைத் தருவது.

இந்தக் கல்வி நூல்கள் அனைத்தையுமே கற்கவேண்டும் என்பது இல்லை, தனக்குக் விருப்பமான, கற்க வாய்ப்பு அமையும் ஏதாவது ஒன்றை, அல்லது சிலவற்றைக் கற்றாலே போதும். அந்த நூலைக் கற்றவனை அவைகள் உலகில் எதற்கும் அஞ்சாத சிங்கமாக்கிக் காட்டிவிடும். நிச்சயமாக அவனுக்கு ஆனந்த வாழ்வை அளிக்கும். நிச்சயமாக அவன்மூலம் சமூகத்திற்கு கேடு அற்ற நன்மைகளை ஏற்படுத்தும். 



இந்தக் கல்விமுறைகள்தான் நம் நாட்டில் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக இருந்துவந்தது. இதன் துணையுடன்தான் நமது பரத தேசம் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து , மிகச்சிறந்த சாதனைகளை செய்து காட்டியுள்ளது. பாரதம் அன்று செய்த சாதனைகளில், அனுபவித்த வாழ்க்கை சுகங்களில் ஒட்டுமொத்த உலகமும் இன்றுவரை சேர்ந்து இத்துணை அறிவியல் வசதிகளுடனும் கூட 1%ஐ கூட சாதிக்கவும் இல்லை, அனுபவிக்கவும் இல்லை என்பதுதான் உண்மை.

வெளிநாடுகளிலிருந்து இங்கு கொள்ளையடிக்க வந்தவர்கள் நிரந்தரமாக இங்கிருந்து கொல்லையடித்துக்கொண்டே இருக்க வேறு வேறு யோசனைகளை செய்து பார்த்தார்கள். அதில் ஒன்று, கல்வி முறையை மாற்றி நம்மை அவர்களுக்கு சேவைசெய்யும் அடிமைகளாக மனதில் நுழைந்து மாற்றுவதற்கு ஏற்ப புதிய கல்வி முறையை ஏற்படுத்துவது.

அதனை பிரிட்டிஷ் செய்து பார்த்தது. அவர்களது கணக்குப்படி, பாரதத்தில் இந்தக் கல்வி தொடர்ந்து இருந்தால் சுமார் 2000ஆவது ஆண்டில் அனைவரும் அவர்களை உயர்த்திப் பார்த்து, தமது நாட்டை தாழ்வாகப் பார்த்து, சுயதொழில்களை கேவலமாகப் பார்த்து, அந்நியர்களை சார்ந்து வாழ்வதில் பெருமை உடையவர்களாகி, பிறருக்கு செவைசெய்வதில், குறிப்பாக அந்நிய நாடுகளுக்கு பணிசெய்வதை பெருமையாக நினைப்பவர்கள் ஆகவேண்டும் - என்பது அவர்கள் இலக்கு.

அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறவேண்டி வரும் என்று நினைக்காத போது செய்த கல்வித்திட்டம். நல்லவேளை அவர்கள் இரண்டாம் உலகப்போரில் தோல்வி அடைந்ததாலும், நேதாஜீ சுபாஷ் சந்திரபோஸின் பலமான போராட்டத்தாலும் இந்த நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி ஆகவேண்டும் என்ற நெருக்கடி வரவே வெளியேறினார்கள்.

இல்லையேல், இதுவரை நாம் கற்ற கல்விமுறையினால் பிரிட்டிஷார்கள் நம் நாட்டிலிருந்து மிகச்சிறந்த அறுவடையை பார்த்திருப்பார்கள். நம் மக்கள் அவர்களுக்கு சேவை செயவதை பெரிய பாக்கியமாக நினைத்து முட்டாள்களாக இன்றும் வாழ வேண்டிய நிலை வந்திருக்கும்.

இன்று நம்மிடம், நமது பாரம்பரிய கல்விமுறை இல்லை என்றாலும், மீண்டும் அவைகளை புணரமைப்பதுதான் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது. ஏன், உலகிற்கே நாம் செய்யும் ஒரு சிறந்த கொடை. அதை செய்யவேண்டியது நமது கடமையும்கூட.

உலக மனித சமுதாயங்களெல்லாம் உலகத்தைப்பற்றிய வாழ்வைப் பற்றிய உண்மை தெரியாமல், தம்மையும் பிறரையும் அழித்து வாழும்போது, தம்மையும் சார்ந்தோரையும், உலகையும் கூட சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் எப்படி சந்தோஷமாக ஆனந்தமாக வைத்துக்கொள்வது என்பதை சொல்லித்தரும் நமது கல்வி உலகிற்கே அவசியமானதே.

அதை கற்று, பலன் பெற்று, பாதுகாத்து உலகிற்கு கொடுக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நமது ஆழமான & பரந்து விரிந்து கிடக்கும், அனுபவ ரத்தினங்கள் குவிந்து கிடக்கும் - நமது கல்வியைப் பற்றிய ஒரு சிறந்த பார்வை, ஒரு சுருக்கமான அறிமுகம் இந்த தளத்தில் உங்களுக்கு கிடைக்கிறது.  

வாழ்க்கையில் அதையாவது நாம் ஒரு முறை படித்து வைக்கவேண்டும். சந்ததிகளுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவேண்டும்.


http://hinduonline.co/HinduReligion/AllAboutHinduism2.html 



Visit: 
இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கும் குற்றங்கள்.

-----------------------------------------------------
tags: education, research on education, is there mistakes in education, mistakes prove the education is in wrong way, indian education, education in tamilnadu, students, schools,
 

புறஅறிவியல் ஆபத்துகள்....

Leave a Comment
அஹத்துள் எப்போதும் ஒளிரும் இந்த ‘நான்’ என்பவனையே அறிய இயலாத அஹ அறிவியல் தெரியாத புற அறிவியல் விஞ்ஞானியால் இந்த உலகில் எதை உருப்படியாக அறிய முடியும்? அவர்கள் ஆபத்தினைத் தரும் குழந்தைத் தனமான அறிவு உள்ளவர்களே! நாம் நிரூபிக்கத் தயார்! 

அவர்களின் முடிவுகள் மொபைல் போனைத் தரும் முதலில் , கூடவே உலகப்போர்கள் முதல் குடும்பப் போர்கள் வரை, ஒருவனுக்கும் தீர்க்க இயலாத மனப் போராட்டங்கள் வரை பலப் பல பிரச்சினைகளை நிச்சயம் தரும். அவர்களையே நம்பிச்செல்லும் சமுதாயமும் குடும்பங்களும் தனி நபர்களும் அழிவையே அடைய முடியும்!



ஏனென்றால் அஹமும் புறமும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவைகள். ஒன்றை ஒன்று பாதிப்பவைகள். 'அஹம்' புறத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது, 'புறம்' அஹத்தில் பதிவுகளை ஏற்படுத்துகிறது.

அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த சிக்கல் இருப்பதால், இரண்டிலுமே தமது சந்ததிகள் அறிவாளிகளாக இருந்து நல் வாழ்க்கையை பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்று பாசத்துடன் அஹநானூறு புறநானூறு என்று இரண்டு அறிவியல் நூல்களையுமே எழுதினர்.

புறஅறிவியல் வளருமளவு அஹஅறிவியலும் வளரவேண்டும். இல்லையேல் அழிவைத்தரும். புறஅறிவியல் சாதிக்க உதவும் கைகளைப் போல. அஹஅறிவியல் உண்மையைக் காட்டும் கண்களைப் போல. 

புற அறிவியலில் மட்டுமே வளர்ந்தவர்கள் குற்றம் பல செய்து கொண்டு, சட்டங்களாலும் மக்களாலும் அவர்களது குற்றங்களை கண்டுபிக்கமுடியாதபடி ஆடம்பர மொழி, உடை, வாகனம், தொழில்நுட்பம்,... போர்வைக்குள் பாராட்டுக்களை பெற்று வாழும் நுட்பத் திருடர்களாக இருக்கிறார்கள். 

ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை குற்றங்கள் செய்யாமல் வாழ்வதற்கான காரனங்கள் ஒன்றுமே இல்லை - மனிதன் எழுதிய சட்டங்களைத் தவிர. மனிதன் எழுதிய சட்டங்களின்படி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றம். நிரூபிக்கமுடியாதபடி குற்றம் செய்ய முடியும் என்றால் செய்யலாமே - என்கிறான். செய்யாமல் இருக்க வேறு காரணம் எதுவும் அவனிடம் இல்லை. அவனைப் பொருத்தவரை அப்படி திறமையாக குற்றங்களை செய்யத்தெரியாதவன் அறிவு அற்றவன்,   குற்றம் செய்யாமல் நல்லவனாக நேர்மையாக வாழ்பவன் ஏமாளி! இவன்தான் அஹஅறிவியல் இல்லாத புறஅறிவியல் நிபுணன்! 

இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்புகளுக்கும் வருகிறார்கள். அதனால் சமூகத்தில் எல்லோரும் திருடர்களாக வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் திருட்டு இன்று எழுத்துப் பூர்வமாக இல்லாமல், நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆகிவருகிறது.

'என்ன செய்வது, காலம் மாறிவிட்டது, இனி இதை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது, நாமும் மாறிக்கொண்டு வாழ்ந்துகொள்ளவேண்டியதுதான், பழப் பஞ்சாங்கம் இனி உதவாது,...' போன்ற வாதங்களையும் இந்த நுட்பத் திருடர்களே ஏற்படுத்தி சமூகத்திற்குள் நுழைத்து மக்களை நம்பவைத்தும் வருகிறன்றனர்.

இந்த நுட்பத் திருடர்களே பலர் விஞ்ஞானிகளாகவும், விஞ்ஞானி என்ற போர்வையிலோ, அரசியல் தலைவர்கள்,என்ற போர்வையிலோ, தத்துவ மேதைகள் என்ற போர்வையிலோ, சமூக வழிகாட்டிகள் என்ற போர்வையிலோ,... இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் திருடர்களாக வாழுகிண்டனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை, சில நேரங்களில் தெரிந்தாலும் ஒத்துக்கொள்வது இல்லை. இன்னும் சிலர் தங்களைத் தவிர அனைவரும் திருடர்கள் என பேசும் பேசும் ஆற்றலுடன் இருக்கிறார்கள். அல்லது நேர்மையான விஞ்ஞானிகள் பலர் இது போன்ற நுட்பத் திருடர்களுடைய வலைக்குள் சிக்கிக் கிடக்கின்றனர்.

இதை உலகால் கண்டுபிடிக்க முடியாத படி இந்த நுட்பத் திருடர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு உண்மை - காலம் மாறவில்லை - ஏனென்றால் அது மாற முடியாதது, நெருப்பு எப்படி மாற முடியுமா? அப்படித்தான்.   நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் முடிவுசெய்ய முடியும். நேர்மையானவர்களாக நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது. அறிவாளிகளாகவும் வல்லவர்களாகவும் இருக்கவேண்டும்.

இந்தத் தகுதிகளை காலம், கேடுகள், கெட்டவர்கள், பஞ்சம், இயற்கை சீற்றங்கள்,.... போன்ற எந்த சக்திகளையும் மீறி, நிச்சயமாகக் கொடுத்து நல்வாழவைத் தர பாரதத்தின் வேத விஞ்ஞானம் தயாராகவே தேவையான திறமைகளுடன் இருக்கிறது.

சோம்பலை விட்டு நாம் கற்கத் தயாராக இருக்கவேண்டும். ஏனென்றால் - ‘நல்லவைகளை ஏற்க சோம்பல் காட்டாதவனை அடைய நல்லவைகளும் சோம்பல் காட்டுவதில்லை.’ அதேபோலவே ‘கெட்டவைகளை ஏற்க சோம்பல் காட்டாதவனை அடைய கெட்டவைகளும் சோம்பல் காட்டுவதில்லை.’

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக பல்வேறு மாறுபாடுகள், சோதனைகள்,... என்று பலவற்றுக்கும் இடையில் பலனை ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக பலனைக் கொடுத்துக்கொண்டு இருந்த ஒரு விஞ்ஞானம் அதன் அடிப்படையில் வந்த தீர்வுகள், 'இந்தக் காலத்தில் பயன்படாது' என்பது நிச்சயமாக ஒரு குருட்டு பிடிவாதமாக மட்டுமே இருக்க முடியும் என்று அறிஞர்களுக்கு தோன்றுகிறது. 

அந்த விஞ்ஞானத்தின் உதவியுடன், ஞானத்துடன், பார்வையுடன்,... இந்தக் காலத்து சூழ்நிலைகளுக்கும் சரி, இனி வரும் எந்தக் காலத்தின் சூழ்நிலைகளுக்கும் சரி நன்மைதரும் சுகமான தீர்வுகளை வருவிக்க முடியும். அதை நாம் நிரூபிக்கத் தயார்.

பிறந்து ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கற்ற கல்வியாளர்களாலும், வாழ்ந்து பார்த்து நிரூபித்த சான்றோர்களாலும், போற்றி பாதுகாத்து வளர்க்கப்பட்ட இந்த அஹஅறிவியல் பிறந்த மண்ணில் கைவிடப்படுவதும், மறக்கப்படுவதும், அலட்சியப்படுத்தப்படுவதும், அவமதிக்கப்படுவதும், அறிவுப்பூர்வமான செயலாக இருக்க வாய்ப்பில்லை.

இது இந்த நாட்டுக்கு மட்டும் என்றே இல்லை. நாம் இதன் துணையால் நல்வாழ்க்கையை வாழ முடியும், உறுதியாக வாழ்ந்துகாட்டும்போது, உலகமும் இதனை விரும்பும். விரும்பித்தான் தீர வேண்டும். உலகிற்கும் இது ஒன்றுதான் தீர்வு என்பதால். இந்த உலகமும் பாதுகாத்து வந்த இந்த நாட்டையும் போற்றி உதவி பாதுகாக்கும், நன்றிகாட்டும் - பலம் மிக உயர்ந்தது + மிக முக்கியமானது என்பதால்!

அதனால் இது பாரதம் உலகிற்கு செய்ய வேண்டிய கடமை. உலக நோய்க்கு மருந்து இருக்கும்போது அதனை காப்பாற்றாமல் கொடுக்காமல் இருப்பதும் மனிதப் பண்புகளுக்கு அழகாக இருக்க முடியாது.

அதனால் இந்த நாட்டின் அறிவாளிகளையும் , உலக மானுட வர்கத்தின் நலன் விரும்புவோர்களையும் , சேவை உள்ளம் கொண்ட செயல் வீரம் மிக்க இளைஞர்களையும் அழைக்கிறேன்.

அஹஅறிவியலை சுருக்கமாகத் தர நாம் தயார். குறுகிய காலத்தில் முதலில் சோதனையாக கற்றுப் பாருங்கள். பலனை நிச்சயம் தருவதனையும் சொல்லப்பட்ட கண்ணோட்டங்கள் உண்மையாக இருப்பதையும் நீங்கள் பார்த்தால், அதில் மேலும் ஈடுபட்டு உலக சேவை செய்ய முடியும்.  


அஹஅறிவியல் வேதம் என்னதான் பேசுகிறதோ? 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/02/blog-post.html 

'அஹஅறிவியல்' வேதம் என்னதான் பேசுகிறதோ?

Leave a Comment