பதில்கள்:
ஐஸ்வர்ய மகரிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்கள், ரிஷிகுடில்.
கேள்வி: சுனாமி வந்தால், புயல் வீசினால், நிலநடுக்கம் வந்தால்,.... இதுபோல இன்னும் பல இயற்கை சீற்றங்களால் கோவில்களே அழிகின்றனவே! தனது கோவில்களையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா இறைவனால்?
கேள்வி: சுனாமி வந்தால், புயல் வீசினால், நிலநடுக்கம் வந்தால்,.... இதுபோல இன்னும் பல இயற்கை சீற்றங்களால் கோவில்களே அழிகின்றனவே! தனது கோவில்களையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா இறைவனால்?
பதில்: முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.
கோவில்கள் எதையும் தனது நன்மைக்காக, தனக்கு குடியிருக்க ஒரு இடம் வேண்டுமே என்று இறைவன்
கட்டிக்கொள்ளவில்லை.
வேறு யாரும் இறைவனுக்காக கட்டினாலும்கூட, இறைவனுக்கு
அதனால் எதோ நன்மை ஏற்பட்டுள்ளது, என்பதும் கிடையாது; அந்த கோவில் அழிவதால் அந்தக்
கடவுளுக்கு ஏதோ நஷ்டம் என்பதும் கிடையாது.
கோவிலை கட்டாவிட்டால் அவருக்கு எதோ கஷ்டம்,
அவர் வருத்தப்படுவார் என்பதும் கிடையாது.
கேள்வி: பிறகு ஏன் கோவில் கட்டுகிறார்கள்?
பதில்: மக்கள் தமது நன்மைகளுக்காக பல கட்டமைப்புகளை
ஏற்படுத்துகிறார்கள். வீடு, தோட்டம், கடை,.... போன்று. அவர்களில் சிலர், எல்லாம்
இருந்தும் தான் அவைகளை அனுபவிக்க இயலாமல் ஆக்க முடியக்கூடிய பலமாக, விதி அல்லது
தெய்வம் என்று, தனக்கு மீறிய சக்தி இருப்பதை உணர்ந்து, அந்த சக்தியின் உதவியை
பெரும் வழிமுறைகளையும் அறிந்து, அதற்கு உதவக்கூடிய கோவில்களை தமது நன்மைக்காகவே
கட்டிக்கொண்டார்கள். அவ்வாறே அந்த இடத்தை பயன்படுத்தி நன்மைகளையும்கூட
அடைகிறார்கள்.
என்றாலும், இறைவன் அவரவரின் முன் ஜன்ம கர்ம
பலன்களுக்கு படி அளப்பதற்காக – அவரவரின் புண்ணிய பாபக் கணக்கின்படி, அவர்களின்
இந்த உதவி செய்யும் கட்டமைப்புகளை சிறப்பு பெற வைப்பதையோ, அழிய வைப்பதையோ
செய்கிறார் – அதில் கோவிலும் விதிவிலக்காகாது!
அவை அழிவதால் தனக்கு ஏதோ நஷ்டமாகவோ,
கௌரவக்குறைவாகவோ நினைத்தால்தான் அவர் அதனைத் தடுக்கவேண்டும். அப்படி எந்த உணர்வும்
அவருக்கு இல்லையே. அதனால் அவருக்கு கோவில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற நிலை இல்லை.
கர்ம பலன்களை படி அளக்க அவர் செய்யும்
வேளைகளில் கோவில்களுக்கு அவர் விதிவிலக்கு கொடுப்பது இல்லை.
கேள்வி: கோவில்களில் கடவுள் வாழ்கிறாரா இல்லையா?
பதில்: ஈரேழு பதினான்கு லோகங்களிலும் அவர் வாழாத
இடம் என்று எதுவுமே இல்லை. கோவில் அழிவதால் அவருக்கு இடம் இல்லாத சிரமம் என்று
எதுவும் கிடையாது.
எல்லாவற்றையும், எல்லோரையும் உண்டாக்குவதும்
அவர்தான், அழிப்பதும் அவர்தான்.
கேள்வி: அப்படி என்றால் கோவில்கள் ஏன்?
பதில்: கோவில்களை இறைவனின் அருளை பெறக்கூடிய ஒரு
துவாரமாக [ counter
], மக்கள், தமக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு வேத பூர்வ விஞ்ஞானபூர்வ தொழில்நுட்பக்
கட்டமைப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------
தங்களுக்கு இதுபோல பதில் தேவைப்படும் சிக்கலான
கேள்விகள் இருந்தால் எழுதவும்: yogeendra3@gmail.com
0 comments:
Post a Comment