கடுகு எண்ணெய் [ MUSTARD OIL ] - ஆரோக்ய நண்பன் !

Leave a Comment
நாம் பெரும்பாலும் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
  

கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகு எண்ணெயும் கூட கடைகளில் கிடைக்கிறது. ஆனால் ரீபைண்டு எண்ணெய் நல்லது இல்லை.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. பொதுவாக இந்த எண்ணெயை நல்ல சுவையான உணவுகள் சமைக்க பயன்படுத்தினால், நல்ல அருமையான சுவையை பெறலாம்.
கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அதிகம் இருக்கிறது.

கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும்.

அதே சமயம் இதனை உடல் வலி இருக்கும் போது, உடலுக்குத் தடவி மசாஜ் செய்தால், உடல் வலியும் நீங்கும். மேலும் குளிர் காலங்களில் தினமும் காலையில் இந்த எண்ணெயை உடலில் பூசி குளித்து வந்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, மூட்டு வலிகளும் நீங்கும்.
இந்த எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.
கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும் !

அதிலும் வறட்சியான சருமம் மற்றும் கூந்தல் இருந்தால், அதனைப் போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறப்பானதாக இருக்கும்.
குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். 


கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

கடுகு எண்ணெய்யை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் காய்ச்சல் அல்லது சளி இருந்தால், இரவில் படுக்கும் போதே எண்ணெயை தலையில் தடவி படுக்க வேண்டும். இதனால் உடலானது சற்று வெதுவெதுப்புடன் இருக்கும்.

கடுகு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது, எனவே சமையலுக்கு கூட நீங்கள் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்..
கடுகு எண்ணையில் சமைத்த பொருட்கள் சீக்கிரம் கெடுவதும் இல்லை.  
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கடுகு எண்ணெயின் வாசனை சற்று புதுமையாக இருக்கும், எனவே முதலில் வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று கூட பழக்கத்தை துவக்கலாம்.   


ஹிந்து தர்மம் – சிக்கலான கேள்விகளும், தீர்வளிக்கும் பதில்களும்[01]: சுனாமியில் கோயில் ஏன் அழிகிறது?

Leave a Comment
பதில்கள்: 
ஐஸ்வர்ய மகரிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்கள், ரிஷிகுடில்.

கேள்வி: சுனாமி வந்தால், புயல் வீசினால், நிலநடுக்கம் வந்தால்,.... இதுபோல இன்னும் பல இயற்கை சீற்றங்களால் கோவில்களே அழிகின்றனவே! தனது கோவில்களையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா இறைவனால்?  

பதில்: முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். கோவில்கள் எதையும் தனது நன்மைக்காக, தனக்கு குடியிருக்க ஒரு இடம் வேண்டுமே என்று இறைவன் கட்டிக்கொள்ளவில்லை.
வேறு யாரும் இறைவனுக்காக கட்டினாலும்கூட, இறைவனுக்கு அதனால் எதோ நன்மை ஏற்பட்டுள்ளது, என்பதும் கிடையாது; அந்த கோவில் அழிவதால் அந்தக் கடவுளுக்கு ஏதோ நஷ்டம் என்பதும் கிடையாது.
கோவிலை கட்டாவிட்டால் அவருக்கு எதோ கஷ்டம், அவர் வருத்தப்படுவார் என்பதும் கிடையாது. 

கேள்வி: பிறகு ஏன் கோவில் கட்டுகிறார்கள்?
பதில்: மக்கள் தமது நன்மைகளுக்காக பல கட்டமைப்புகளை ஏற்படுத்துகிறார்கள். வீடு, தோட்டம், கடை,.... போன்று. அவர்களில் சிலர், எல்லாம் இருந்தும் தான் அவைகளை அனுபவிக்க இயலாமல் ஆக்க முடியக்கூடிய பலமாக, விதி அல்லது தெய்வம் என்று, தனக்கு மீறிய சக்தி இருப்பதை உணர்ந்து, அந்த சக்தியின் உதவியை பெரும் வழிமுறைகளையும் அறிந்து, அதற்கு உதவக்கூடிய கோவில்களை தமது நன்மைக்காகவே கட்டிக்கொண்டார்கள். அவ்வாறே அந்த இடத்தை பயன்படுத்தி நன்மைகளையும்கூட அடைகிறார்கள்.
என்றாலும், இறைவன் அவரவரின் முன் ஜன்ம கர்ம பலன்களுக்கு படி அளப்பதற்காக – அவரவரின் புண்ணிய பாபக் கணக்கின்படி, அவர்களின் இந்த உதவி செய்யும் கட்டமைப்புகளை சிறப்பு பெற வைப்பதையோ, அழிய வைப்பதையோ செய்கிறார் – அதில் கோவிலும் விதிவிலக்காகாது!
அவை அழிவதால் தனக்கு ஏதோ நஷ்டமாகவோ, கௌரவக்குறைவாகவோ நினைத்தால்தான் அவர் அதனைத் தடுக்கவேண்டும். அப்படி எந்த உணர்வும் அவருக்கு இல்லையே. அதனால் அவருக்கு கோவில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற நிலை இல்லை.
கர்ம பலன்களை படி அளக்க அவர் செய்யும் வேளைகளில் கோவில்களுக்கு அவர் விதிவிலக்கு கொடுப்பது இல்லை.


கேள்வி: கோவில்களில் கடவுள் வாழ்கிறாரா இல்லையா?
பதில்: ஈரேழு பதினான்கு லோகங்களிலும் அவர் வாழாத இடம் என்று எதுவுமே இல்லை. கோவில் அழிவதால் அவருக்கு இடம் இல்லாத சிரமம் என்று எதுவும் கிடையாது.
எல்லாவற்றையும், எல்லோரையும் உண்டாக்குவதும் அவர்தான், அழிப்பதும் அவர்தான். 

கேள்வி: அப்படி என்றால் கோவில்கள் ஏன்?
பதில்: கோவில்களை இறைவனின் அருளை பெறக்கூடிய ஒரு துவாரமாக [ counter ], மக்கள், தமக்காக ஏற்படுத்திக்கொண்ட ஒரு வேத பூர்வ விஞ்ஞானபூர்வ தொழில்நுட்பக் கட்டமைப்பு.


---------------------------------------------------------------------------------------------------------------



தங்களுக்கு இதுபோல பதில் தேவைப்படும் சிக்கலான கேள்விகள் இருந்தால் எழுதவும்: yogeendra3@gmail.com

குழந்தை வளர்ப்பு விதிகள்: விவரமான பெற்றோர்கள்

Leave a Comment
விவரமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள்....

“என் குழந்தையை நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவெல்லாம் இந்த ஆசிரியர்கள் ஆக்க வேண்டாம், ஆனால் நல்லா சம்பாதிக்கிரவனா ஆக்கினா போதும்.

ஆனால், அந்த ஆசிரியர் நல்ல ஒழுக்கம் உள்ள நபரா இருக்கணும், அதேசமயம் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கணும்....”

இந்தப் பெற்றோர்கள் உண்மையில் முட்டாள் பெற்றோர்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.....

ஏனெனில், இந்த ஆசிரியர்களின் பெற்றோர்களும் 
“என் குழந்தையை நல்ல ஒழுக்கம் உள்ளவனாகவெல்லாம் இந்த ஆசிரியர்கள் ஆக்க வேண்டாம், ஆனால் நல்லா சம்பாதிக்கிரவனா ஆக்கினா போதும்." 
என்ற இதே கருத்துடன்தான் தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி ஆசிரியராக்கி உள்ளார்கள் என்று,...

பாவம் ! தங்களை விவரம் என நினைக்கும் - முட்டாள் பெற்றோர்கள்....