குரு + வேதம் = பூரண வாழ்க்கை
குரு - வேதம் = நரக வாழ்க்கை
வேதம் - குரு = துக்க வாழ்க்கை
- குரு - வேதம் = மிருக வாழ்க்கை
குருவால்
சொல்லப்படாத வேதமும் பாழும் கிணறு...
வேதத்தை
சொல்லாத குருவும் பாழும் கிணறு...
இரண்டும்
இல்லாத வாழ்க்கையோ தூக்குக்கயிறு...!
வேதத்தை
சொல்லும் குருவை அடைந்தவனே உண்மையில் பணக்காரன்! பாக்கியவானும்கூட!!
ஏன்
இப்படி சொல்லப்படுகிறது?
ஏனென்றால்,
வாழ்க்கை இருப்பதே நூறு ஆண்டுகள். அதில் பல வித உழைப்பு முயற்ச்சிகள், சச்சரவுகள்,
தூக்கம்,.... என எல்லாம் போக அனுபவிக்கக் கிடைப்பதோ சில மணி நேரங்களே...
அதையும்
யார் யாரின் பேச்சையோ கேட்டு ஏமாந்து போனால்...
அது
புத்தி சாலித்தனமான வாழ்க்கை ஆகமுடியாது.
ஏன்
அப்படியோ?
ஏனென்றால்
ஆயிரம் பேர் பத்தாயிரம் யோஜனைகளை சொல்கிறார்கள். அதற்கும் மேலும் யோசனை சொல்லும்
ஒருவரின் கருத்துக்களே நிலை இன்றி மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும்
சொல்பவர்கள் எல்லோரும் சொல்லும்போது எனது கருத்து சரியே என்று
சொல்லிவிடுகிறார்கள்.
இது
ஏன் குருநாதர் சொன்னது - அதனால் நான் நம்பலாமே?
நீ
தடுமாறி குழப்பத்தில் இருப்பதால் அதனை நம்பி ஆகவேண்டிய சூழ்நிலைக் கைதியாக
இருக்கிறாய். உன்னைப்போல் ஆயிரம் பேர் அவரிடம் வந்தால், அவரை ஒரு குரு என்று
சொல்லிவிடுகிறாய்.
ஆயிரம்
பேர் ஒருவரிடம் வந்ததாலேயே, அவர் பேசுவது சரி என்று பொருள் கிடையாது. ஏனெனில் வருபவர்களே,
ஏற்கனவே அறியாமையில் இருப்பவர்கள்தான். அவர்களால் அவரின் பேச்சில் தவறு நடப்பதை
கண்டுபிடிக்க முடியாது. மற்றவர்களின் பேச்சைக்காட்டிலும் வித்தியாசமாக இருப்பதால்,
ஒருவேளை, அனைவரும் பாராட்டலாம்.
நம்பத்
தகுந்த பேச்சு எதுதானோ?
வேதத்தின்
பேச்சு ஒன்றே நம்பத்தகுந்தது. அது இந்த உலகைப் படைத்த இறைவனிடமிருந்து
வெளிப்பட்டது. ஒட்டு மொத்த சிருஷ்டியின் விதிகளையும் பேசுவது. அதனால் உனது
வாழ்வின் விதி ரகசியத்தையும் பேசுவது.
உண்மையில்,
வேதத்தை குருமூலமாக கற்று வாழ்பவனே புத்திசாலியாக வாழ்கிறான்.
ஏன்
நானே படித்தால் என்ன?
மனிதனின்
மனம் பல கோடி பிறவிகளை கடந்து வந்துள்ளது. அறியாமையினால் தவறுகளை சரி என்றும்,
சரியானவைகளை தவறும் என்றும் கூட பலவாறு கருதி வாழ்ந்து வந்துள்ளது. அந்தப்
பதிவுகள் நிச்சயம் மனதில் இருக்கும். அந்த பதிவுகளைக் கொண்ட மனதின் வழியாக
பார்க்கும் பொது, உண்மை திரிக்கப்பட்டே புரிந்துகொள்ளப்படும். வேதத்தை குரு இன்றி
தானே படித்து இப்போது குருவாக இருப்பவரும் இப்படி தவறாகவே புரிந்துகொண்டு, தவறாகவே
போதிப்பார்!
அதனால்
உண்மையை நேருக்கு நேர் திரிக்கப்படாமல் பார்க்கும், குருவினால் உபதேசிக்கப்பட்ட ஒரு
குருவினாலேயே, சீடன் எங்கே தவற விடுகிறான் என்பதை பார்த்து, இதை போதிக்க முடியும்.
வேதத்தின்
துணை இன்றி உண்மையை நேருக்கு நேர் தானும் பார்க்க முடியாது, இன்னொருவரை பார்க்க
வைக்கவும் முடியாது.
வேதம்
பேசுவது உண்மையைத்தான் என்று நான் எப்படி நம்புவது?
நீ
இறந்த பிறகு ஸ்வர்கத்திற்கு அல்லது நரகத்திற்கு போய், இங்கு வேதம் பேசியதெல்லாம்
உண்மைதான் என்பதை புரிந்துகொள்வாய் - என்று வேதம் பேசவில்லை.
இங்கேயே
இப்பிறவியிலேயே, வாழும்போதே உண்மையை பார்க்கவைக்க தயாராக இருக்கிறது. அதனால்
அதற்குப் பெயர் பிரமாணம்!
அதுவும்
ரிஷிகுடில் தன்னை நாடிவந்தவர்களை ஒரே ஆண்டிலேயே உண்மையை பார்க்கவைத்து வருகிறது!
0 comments:
Post a Comment