குடும்பத்தின் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம்

Leave a Comment

பாரத பண்பாட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்
ஞானமில்லா பண்பாடு, அல்லது ஞானமில்லா சடங்குகள்.
பண்பாடு, சடங்குகள் மிக உயர்ந்த நல்வாழ்வை தந்தவைகள், இனியும் தர முடிபவைகள்.
ஆனால் அவைகளைப்  பற்றிய ஞானம் இருந்தால் மட்டுமே அவைகள் பயனைத் தரும் விதத்தில் அவைகளை கையாள முடியும்.
அவைகளைப் பற்றிய ஞானம் இல்லாவிட்டால் சீக்கிரமாக மீட்கவேண்டும், பெற்றுவிடவேண்டும்.
தாமதிக்கும் அளவு அவைகள் அழிவினைத் தரலாம்.
ஏனென்றால்....
ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
ஒரு கூட்டுக்குடும்பம் இருந்தது. ஒற்றுமையாக வாழ்வது என்று முடிவு செய்து, அனைவரும் சம்மதித்து, கூடிப்பேசி, அதற்கேற்ப வாழ்வை திட்டமிட்டு நடத்தினார்கள்.
குடும்பம் பல்கிப் பெருகியது. குடும்ப உறுபப்பினர்கள் 100பேர் ஆகிவிட்டார்கள். ஆனாலும் தேவையான விட்டுக்கொடுக்கும் குணங்களை வளர்த்துக்கொண்டு, ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.
அவர்கள் அனைவரும் வாழுவதற்கு ஏற்ற ஒரு மிகப்பெரிய மாட மாளிகையை கட்டினார்கள். சகல வசதிகளுடனும் அது இருந்தது. அனைவரையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டது அந்த கற்பக விருக்ஷம் போன்ற வீடு.
வெகு காலத்திற்குப் பின் அந்த மாளிகள் வீட்டு உறுப்பினர்கள் சிதறி வெளியேறினார்கள் சில காரணங்களால். அந்த மாளிகை வீட்டில் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டும்.
அவர்களால் அவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியவில்லை. அது ஏன், அவ்வப்பொழுது சுற்றிப் பார்க்கக்கூட முடிவதில்லை. அவர்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் பராமரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.
பரம்பரை வீடு என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேறவும் மனம் இல்லை.
பலர் சொன்னார்கள், வீட்டின் மற்ற பகுதிகளையும் பார்த்து வைக்க வேண்டுமப்பா அதுதான் நல்லது, ஏதாவது ஒன்றுக்கு பயன்படும்’ என்று சொன்னார்கள்.
எங்களுக்கு ரெண்டு குழந்தைகள்வேறு பிறந்துவிட்டார்கள் அவர்களை பராமரிக்கவே நேரம் போதவில்லையே’ என்று சொல்லி பிசியாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
உண்மையை சொன்னால் எதை எல்லாம் வாங்க சம்பாதிக்க ஓடிக்கொண்டு இருந்தார்களோ அதெல்லாம் அந்த வீட்டில் ஏற்கனவே நல்லவிதமாகவே இருக்கிறது. போய் பார்க்காத ஒரு காரணத்தால் கஷ்டப்பட்டு மீண்டும் அவைகளை சம்பாதித்துக்கொண்டு இருந்தார்கள்.
அது மட்டும் இல்லை. பொய் பார்க்காத இடங்களில் புழு பூச்சிகள், வளரத் துவங்கின, விஷப் பூச்சிகள் வாழத்துவங்கின.
ஆனாலும், குடும்பத் தலைவர்கள் மிகவும் பிசியாக இருந்ததால் அவர்களுக்கு இது கண்ணில் படவே இல்லை.
விஷப் பூச்சிகள் பல்கிப் பெருகின. ஒருநாள் இரவு அவைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறங்கும்போது தீண்டித் தீர்த்தன. அந்தோ பரிதாபம் அனைவரும் மாண்டனர்!
ஆனால் அதே மாளிகைக்கு அருகில் சிறிய வீட்டில் குடியிருந்த ஏழை, தான் ஏழை என்றாலும், வேடு சிறியது என்றாலும், அது கொடுக்கும் வசதிகள் குறைவுதான் என்றாலும், சரியாக பராமரித்துப் பயன்படுத்திக்கொண்டு இருந்தான். அந்த வீட்டில் இன்றும் பாதுகாப்பாகவே இருக்கிறான்!
இந்த மாளிகை வீடுதான் பாரதப் பண்பாடு. கூட்டுக்குடும்பம் நம் முன்னோர் வாழ்க்கை முறை., சிறு குடும்பம் நமது வாழ்க்கை, பக்கத்து ஏழை வீடு பிறநாட்டு பண்பாடு...

0 comments:

Post a Comment