நவகிரகங்களால் எற்படும் சிரமங்கள் குறைய விலக!

Leave a Comment
ஞான சம்பந்தர் அருளிய இந்த சுலோகத்தை 
வழிபடும்போதும்  

ஓய்வு நேரங்களிலும் 
பொருள் உணர்ந்து சொன்னால்,  
நவகிரகங்களால் வரும் தொல்லைகள் குறையும், 

சிவன் அருள் காக்கும்! 






வேயுறு தோளி பங்கன்    

           விடம் உண்ட கண்டன்   

                       மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை    

               முடிமேல் அணிந்து என்    

                               உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய்    

              புதன் வியாழன் வெள்ளி    

                                சனி பாம்பிரண்டும் உடனே


ஆசறு நல்ல நல்ல    

           அவை நல்ல நல்ல    

                               அடியார் அவர்க்கு மிகவே








பொருள்: 


வேயுறு தோளி பங்கன்   

வலிமைப் பெற்ற தோளினை உடைய உமையன்னைக்கு,
தன்னில் ஒரு பகுதியைக் கொடுத்து எமைப் பெற்ற ஐயன் ஈசன்

விடம் உண்ட கண்டன்

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி 
வாழ்க்கை எனும் திருப்பாற்கடலைக் கடைந்து ஆராய்ந்த போது 
அமுதம் தோன்றுமுன் 
முதலில் ஆலகால விஷம் தோன்றியது, 
அதனை, உயிர்களைக் காக்கும் பொருட்டு, 
ஐயன் கருணையுடன் பருகவே, 
அன்னை தன் திருக்கரங்களால் தடுத்தார், 
விஷமானது ஐயனின்  திருக்கழுத்தில் தங்கிவிட, 
அதனால், நீலமாய் கருத்த கழுத்தினையுடைய வள்ளல் பெருமான்.



மிகநல்ல வீணை தடவி

மனதிற்கு மிக இதமான வேதம் எனும் ஞான வீணையைத்
தன் எண்ணம் எனும் விரல்களால் மீட்டுவதில் 
நல்ல திறம் பெற்ற ஐயன்




மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து

குறையற்ற மனம் எனும் பிறை சந்திரனையும், 
பெருகி வளம் தரும் குறையற்ற அறிவு எனும் கங்கையையும் 
தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு



என்  உளமே புகுந்த அதனால்

 அவரது நாடகத்தில் எனது பங்கினை செவ்வனே நடத்தவேண்டி
அவரே என் உள்ளத்தில் உயிராய் உள் புகுந்து நிறைந்ததனால்



ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

 நாடகத்தை நடத்த அவரது உத்தரவுகளை நிறைவேற்றும்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி &  ராகு, கேது என்னும் ஏழு கோள்களும், பாம்பின் பகுதிகளான ராகுவும் கேதுவும் கூட



ஆசறு நல்ல நல்ல


ஒரு குற்றமும் இல்லாத நல்லவைகளே!



அவை நல்ல நல்லஅடியார் அவர்க்கு மிகவே

 அவையெல்லாம், ‘ஈசன் நடத்தும் இந்த உலகம் எனும் திருவிளையாடலில் நடிக்கும் நான் வெறும் அடிமையே சேவகனே’ என்ற மன நிலையுடன் தன் கடன் ஆற்றி வாழ்வோருக்கு அடியாருக்கு, தொல்லை தராது விலகும்,
அவை மிக மிக நல்லவையே!  


-----------------------------------------------------------------------------------------------------------


ஏழரை சனி, ராகுதசை, அஷ்டமா சனி, சந்திராஷ்டமம்,.. போன்ற நேரங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளிலிருந்து சுலபமாக பாதிப்பாகாமல் காத்துக்கொள்ள முடியும். 

உங்கள் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் இதனை சொல்லி உதவலாமே.... 




0 comments:

Post a Comment