நம் வீட்டில் திருட
வந்தவன்
தாயைத் திட்ட வைத்த
பட்டப் பெயரை சொல்லி
நம் தாயை அழைப்போமா?
அதில் பெருமிதமும்
கொள்வோமா?
பாரதம் நம் நாடு.
நம் தாய் பாரத மாதா.
நாம் அனைவரும் அவளது
புதல்வர்கள் – பாரதிகள்
.
சதிகளின் மூலம்
நாகரீகமாய் திருடி,
பிரித்தாளும்
சூழ்ச்சிகள் மூலம்
நம் ஒற்றுமையைக்
கெடுத்து,
நம் நாட்டை பல கூறுகளாக்கிப்
போட்டு,
நம் பண்பாட்டை அழித்து,
நம் முன்னோர்களின் மனதை
வாட்டி,
துப்பாக்கிகளுக்கு
இரையாக்கி,
நம் சகோதரிகளை தாலிகளை
இழக்கவைத்து,.....
நம் குழந்தைகளை
அனாதைகளாய் ஆக்கிய
கொள்ளையர் கூட்டம்
நம் தாய்க்கு வைத்த
பட்டப் பெயர் இந்தியா.
நமக்கு வைத்த பட்டப் பெயர்
இந்தியன்.
நமக்கு அவன் கொடுத்த
பெயரில்
பெருமை வந்தால்
நம்மை யார் என்று
சொல்வது.
நமக்கு என்ன ஏற்கனவே
பெயர் இல்லாமல்
இருந்ததா?
‘மெய்ஞானத்தை சுமந்து
செல்பவன்’
என்ற ஆழகான பொருளில்
‘பாரதி’ என்ற பெயர் ஏற்கனவே
இருக்கிறதே!
அது நம் முன்னோர்
பெருமைப்பட்ட பெயர்.
‘என் குழந்தையும்
இப்படித்தான்
வாழப்போகிறான்’ என்று
அவர்களை
பெருமிதத்தில் நம்பிக்கையுடன்
வாழவைத்த பெயர்!
நமக்கு எதில் பெருமை
வேண்டும்?
தாயும் மூடன் கையில்
.....
தாயின் சுதந்திரமோ
மானமற்றவன் கையில்...
நவீனக் குழந்தை
கேட்கிறான்....
‘மானம் என்ன சோறுபோடுமா’
என்று....
சீய்...வெள்ளையனுக்கு
பிறந்தவன்
வேறு என்ன கேட்பான்?
லூஸ்...!
சகோதரர் பாரதிகளுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
சுதந்திரம் காப்போம் !
ஈன்ற தாயின் பெருமிதம் காப்போம் !
விரைவில் பகிருவோம் – விழிப்புணர்வடைவோம்
நம் சந்ததிகள் கூனாமல் குறுகாமல்....
உலக சபையினில் மானத்துடன் நடக்க - வழிகளைத் திறப்போம் !
மீண்டும் அடிமை ஆகாமல் இருக்க - நம் ஓட்டைகளை அடைப்போம்!
0 comments:
Post a Comment