இதுவே நம் 'பாரம்பர்ய பாரத'ப்
பண்பாடு - அரசன் முதல் ஆண்டிவரை, ஆண், பெண் யாராய் இருந்தாலும் சரி - 'தான் யார்? தனக்கு ஏன்
இப்படியெல்லாம் நிலையும் அனுபவமும்? இந்த உலகம் என்ன? இந்த உலகம் ஏன் இப்படி
இருக்கிறது? இந்த இரண்டுக்கும் காரணமான இறைவன் - இருந்தால் - அது யார்?
அவர் ஏன் இப்படியெல்லாம் இருக்கிறார்?...' என்பதனை ஒருவன் முதலில் கற்றுத்தீரவேண்டும்.
இவைகளுக்கு சரியான பதில் கட்டாயம் இருக்கிறது; இவைகள்
எதேச்சையும் இல்லை. கற்ற பிறகு அந்த உண்மைகளின் அடிப்படையில் ஞானத்துடன்
வாழ்க்கையை அமைக்கவேண்டும், வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்கவேண்டும், நீதிகளை
பேச வேண்டும்... - என்பது.
அதுவே நன்மையைத் தரும் புத்திசாலித்தனமான
வாழ்க்கை. அதை அறியாமல் வாழ்பவன் இருட்டில் வாழும் ஏமாளியே! அதனால்தான் ‘'கற்க கசடு அற.....'’ என்றார்கள்! ‘'பிக்ஷை
புகினும் கற்கை நன்றே'’ என்றார்கள் - அறிவாளிகள்!
அதனை வேதக் கல்வியால் அடைந்து யாராலும் கற்பனை செய்ய முடியாத + எதனாலும்
அசைக்க முடியாத - அறிவுத் தெளிவை மன பலத்தை, உற்சாகத்தை, நிலையான நிம்மதியை,
அமைதியை ஆனந்தத்தை அடைந்து, அனுபவித்து வாழ்ந்து, அப் பலனை தமது சந்ததிகளும்
அடையவேண்டும் - என கருதி பாரதப் பண்பாட்டையும், பாரத தேசத்தையும், அதனை போதிக்கும்
வம்சத்தையும் நம் முன்னோர்கள்
ஏற்படுத்தினார்கள்.
இன்றைய இளைஞர்களின் வாழ்வில் - அந்த பலனைத் தருவதும்,
இக்காலத்திற்கு ஏற்ப, குறுகிய காலத்தில் போதித்து, வாழ்வில் விளக்கேற்றி வைப்பதுவும்தான் 'ரிஷி வேத விஞ்ஞான'த்தின்
நோக்கம். பலன் நிச்சயம்! அது-
Visit: http://rishivedajnaanayogapeetham.blogspot.in/p/courses.html !
0 comments:
Post a Comment