குழந்தையும் தெய்வமும் ஒன்று - என்று கொண்டாடும் பெற்றோர்களும் உறவுகளும்.... சுற்றி சுற்றி....
நமக்குத் தெரியாது எந்த விதத்தில் சிரமங்கள் வரமுடியும் ஒருவர் வாழ்வில் என்று. அதனால் அதில் அதிலிருந்தும் பாதுகாப்பாக வாழ சிறந்த விசேஷக் கட்டமைப்புகளைக் கொடுக்கிறோம். என்றாலும் நாம் கொடுத்ததிலிருந்துதான் சிரமம் வரமுடியும், அதேபோல சிரமத்திலிருந்து வெளியேற நாம் கொடுத்துள்ள சக்திக்கு உட்பட்டுதான் சிரமமும் வரும்,... என்றெல்லாம் சொல்ல முடியாது.
அதனால் எந்த இடத்திலும் உதவும் ஒரு எளிய கட்டமைப்பை நிச்சயமாகக் கொடுக்கவேண்டும்.
அது ஒரு சிறந்த அன்புப் பரிசு, மட்டுமல்ல அவசியமான பரிசும்கூட
அது இறைவனை அறிமுகம் செய்தல்.
ஏனென்றால் , வாழ்க்கையில் வரும் - வராத & வரக்கூடாத - வரவேண்டிய எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லை , அதேபோல் அவைகள் எல்லாம் நம் குழந்தைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வாய்ப்பு இல்லை.
அனால் அவைகள் எல்லாம் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
உண்மையில் குழந்தையே இறைவனின் கட்டுப்பாட்டில் தான்,
அந்த ரஹசியம் பொதுவாக எல்லோருக்கும் புரிவது இல்லை. குழந்தை இல்லாது போகும்போது சுலபமாகப் புரிகிறது.
ஒரு குழந்தை பிறப்பது - குழந்தையின்விருப்பத்தாலும் இல்லை பெற்றோரின் விருப்பத்தாலும் இல்லை.
அது இறைவனின் விருப்பத்தால்தான்.
'அது ஒரு இயற்கையான சம்பவம்' என்பது விஞ்ஞானிகளின் கருத்தும் , அதனைப் படித்த இந்த தலைமுறையின் கருத்தும் - ஆனால் அது தவறுதான் - நிச்சயமாக.
ஏனென்றால் ....
முதலில் நேர்மையாக ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.
இயற்கையால் என்றால், மனிதனும் இயற்கைதான். இயற்கைக்கு அப்பாற்பட்டவன் கிடையாது.
மனிதனிடம் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
குரங்கிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
கோழியிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
மானிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
மயிலிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
மரத்திடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
செடியிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
கொடியிடமும் சொல்கிறோம் - இது உன்னால் இல்லை இயற்கையால் என்று
.....
பிறகு வேறு எதுதானப்பா இயற்கை?
இயற்கையால் இதுவெல்லாம் முடியும் என்றால் , மனிதனும் இயற்கைதான் அவனாலும் எல்லாம் முடியவேண்டும். ஆனால் முடிவதில்லையே!
ஏனென்றால் - 'அண்டத்தில் உள்ளது - பிண்டத்தில்' - என்பதுதானே ஃபார்முலா.
சரியாக சிந்தித்தால் அந்த இயற்கையே இறைவனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது இயங்குகிறது.
அதனால் ....
இறைவனால் பிறந்த குழந்தையை இறைவனிடம் ஒப்படைப்பதே முறை!
'மாதா-பிதா-குரு-தெய்வம் ' -என்றால்....
மாதாவின் பொறுப்பு குழந்தையைக் காத்து பிதாவைக் காட்டவேண்டும்.
மாதா + பிதா இருவரின் பொறுப்பு குழந்தையைக் காத்து குருவைக் காட்டவேண்டும்.
மாதா + பிதா + குரு மூவரின் பொறுப்பு குழந்தையைக் காத்து தெய்வத்தைக் காட்டவேண்டும்.
அதனால் உண்மையில் ஒருவனுக்கு இறைவனே உண்மையான தாய் தந்தை குரு எல்லாம்
அதுவே அவர்களின் அறிவையும் மனதையும்சரியான திசையில் நடத்தமுடியும்.
இந்த அறிவே , இந்த உணர்வே பல இன்னல்களிலிருந்து தன்னை பாதிக்காமல் பாதுக்கொள்ள உதவும்.
குழந்தைகளுக்கு இறைவனை அறிமுகம் செய்வோம், தினசரி வழிபாட்டினைக் கற்றுத்தருவோம். அவ்வாறே வாழ்ந்தும் காட்டுவோம்....
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக நம்மை பாதுகாத்தது இதுதானே!
அது நாம் அவர்களுக்கு தரும் மிகப் பெரிய பாதுகாப்பு , மிகப் பெரிய பரிசு!
மெய்யறிவை மறக்காது இருப்போம் - மெய்யறிவை மறக்காதுதருவோம்!
பொய்யறிவிளிருந்து பாதுகாக்க - பொய்நெறியிலிருந்து பாதுகாக்க!
0 comments:
Post a Comment