மனசில் இருந்தால் போதுமே பக்தி !

Leave a Comment
பக்தி ஒருவருக்குத் தேவையா என்பதனை அவர்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் அதன் பலன் அவருக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவுசெய்ய முடியும். 



ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது, பிரார்த்தனை பலனை தருமா இல்லையா  என்பது .... போன்றவைகள் உண்மைகள். அதனை அவரவர் இஷ்டத்திற்கு  முடிவுசெய்ய முடியாது.

ரிஷி வேத விஞ்ஞானம் - பாடத்திட்டத்தின் பயிற்சிகள் -ஆனது கடவுள் இருப்பதைப் பார்க்க வைக்கிறது, மற்றும் பிரார்த்தனை எப்படி பலனைத்தருகிறது என்ற தொழில் நுட்பத்தையும் கற்றுத்தருகிறது. 

அந்த நுட்பங்களைக் கற்று கடைபித்தவர்கள் அனைவரும் சுலபமாகவே நற்பலனை அடைந்து அனுபவிக்கிறார்கள். 

இதில் பலருக்கு ஒரு கருத்து என்னவென்றால் - பிரார்த்தனை , பூஜை,... எல்லாம் சிரமப்பட்டு செய்யவேண்டியவைகளாக இருக்கின்றன, அதனால் அதை ஏன் செய்யவேண்டும்- என்றும், எனக்கு என்னதேவை என்று அவருக்கே தெரியுமே, பிறகு நான் ஏன் கேட்கவேண்டும்- என்றும், அதெல்லாம் மனசில் இருந்தால் ;போதும் - அவரே புரிந்துகொண்டு கொடுப்பார் - என்றும் கேள்விகள்.

இதில் ஒன்றினைப் புரிந்துகொள்ளவேண்டும். இறைவனை வழிபடாவிட்டால் அவர்ஒன்றும் கோபித்துக் கொள்ளவும் மாட்டார்,தண்டிக்கவும் மாட்டார்,  ஏனென்றால் - அவர் ஒன்றும் மன நோயாளி இல்லை.

 செய்தவேலைக்கு கூலியைக் கொடுக்காமலும் இருக்கமாட்டார், ஏனென்றால் அவர் ஏமாற்றியாவது உயரவேண்டும என விரும்பும் கிறுக்கு முதலாளியும் இல்லை.

பிரார்த்தனை என்பது ஒருசெயல் , அது கட்டாயம் செய்யாப்பட்ட விதம் தன்மைகள், மனப்பான்மைகளுக்கு ஏற்ப பலனைத் தந்துவிடும் - நிச்சயமாக. 

இதில் இருந்த நிறை குறைகள் எனக்கு மட்டுமே தெரியும் , அவருக்குத் தெரியவா போகிறது .... என்பதெல்லாம் கிடையாது. அவருக்கு நிச்சயம் தெரியும். 

ஆனால் இருந்த குறைகளுக்காக அவர் தண்டிக்கப்போவதும் கிடையாது. அதே சமயம், 'குறைகள் இருந்தாலும்சரி - பரவாஇல்லை, முழுப் பலனையும் கொடுப்போமே' என்று கொடுக்கப்போவதும் கிடையாது.

செய்தவைகளுக்கு  ஏற்ப மட்டுமே பலன் வரும். கட்டாயம் வரும்.

அவருக்கே தெரியுமே நான் ஏன் கேட்க வேண்டும் என்றால், அவர் ஏற்கனவே சரியாகத்தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதுபற்றி மனதில் விமர்சன எண்ணம்கூட இல்லை என்றால் பிரார்த்தனை தேவையே இல்லை. அனால் ஏன் வருத்தங்கள் வாட்டி எடுக்கவேண்டும், அதை எல்லோரிடமும் கொட்டித் தீர்வு தேடவேண்டும். மற்றவர்களிடம் தீர்வு தேடுவது சரிதான் என்றால் இறைவனிடமும் தீர்வு தேடுவது சரிதான். 

அதெல்லாம் மனதில் இருந்தால் போதும் - கேட்க வேண்டியது இல்லை என்றால் - அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அவரும் உனக்கு உதவ வேண்டும் என்று மனதில் மட்டும் நினைப்பார், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தமாட்டார். 

இறைவனும் இயற்கை விதிகளை மீற மாட்டார். ஏனெனில் அவைகள் சரியாக நடக்குமாறு , அவைகளை ஏற்படுத்தியதே அவர்தான் . அவைகளை மீர வேண்டிய அவசியம் எதுவும் அவருக்கு இல்லை. 

யார் எதனைக் கேட்கிறானோ அவன் அதனை அடைகிறான். நியதிகளின் படி.
இதுவே அவனது மகிமை.