மதிப்பிற்குரிய அரசு அறியட்டும் தன் எல்லைகளை!

Leave a Comment

இந்த நாட்டின் பண்பாடுகள்
பண்பட்ட மனிதர்களால், சான்றோர்களால்,
நீதிமான்களால் ஏற்படுத்தப்பட்டவைகள்.

தங்கள் சந்ததிகள்
உயர்ந்த மனிதப் பண்புகளையும்
சமூக தற்காப்பு சக்தியையும்  
சுலபமாக கற்க கடைபிடிக்க
அன்புடன் அக்கறையுடன் பாசத்துடன்
ஏற்படுத்திய சாதனங்கள்.
குற்றம் எதுவும் அற்றவைகள்!

இந்தப் பண்பாடுகளால்தான்
இத்துணை ஆயிரம் தலைமுறைகளாக
பாரதம் உலக அரங்கில் ஒரு
சிறந்த நாடாக திகழ்ந்து வருகிறது.
பாதுகாப்பாக வாழ்ந்தும் வருகிறது. 
இன்றும் பாரதத்தின் தனித்தன்மைக்கும்
அழியாத இருப்புக்கும் 
இந்தப் பண்பாடே காரணம்.

இன்றைய புதிய கல்வித்திட்டம்
அவைகளை 
கருத்தில் கொள்வதும், இல்லை,
சொல்லித்தருவதும் இல்லை.
இந்தக் கல்வியை  மட்டுமே
நன்றாகப் படித்து அநீதிபதியாக
பதவிக்கு வந்தால்,
எப்படிப் புரியும் பண்பாட்டின் பெருமை.

இன்றைய கல்வித்திட்டம் 
நமது பண்பாட்டில் இருக்கும்
கல்யாணத்தின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
கருமாதியின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
கோவிலின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
திருவிழாவின்பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை


இந்த நாட்டின் பண்பாடுகள்
விஞ்ஞானப் பூர்வனானவைகள்
இந்த நாட்டுக்கு நன்மை செய்பவைகள்
உலக மனித வாழ்விற்கும் நன்மை செய்பவைகள்
என்று நாம் நிரூபிக்கத் தயார்

அப்படி நிரூபித்துவிட்டால்
இந்த அநீதிபதிகள்
என்ன தண்டனை ஏற்கத்தயார்
என்பதை அறிவிக்கட்டும்.
நான் சொல்கிறேன்.
நான் நிரூபிக்காவிட்டால்
நான் மரணதண்டனை ஏற்கிறேன்!

பாரதத்தின் லட்சியம்
பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை அல்ல
பண்பட்ட மனித வாழ்க்கை.
அதற்கு பணம் ஒரு சாதனமே.
ஆனால் உலக நாடுகளின் லட்சியம்
பண்புகள் அல்ல பணம்.

இந்த நாட்டின் லட்சியத்தை
மாற்றும் பொறுப்பு
அரசுக்கும் இல்லை
அரசு ஊழியர்களுக்கும் இல்லை
அநீதி மன்றத்திற்கும் இல்லை.
இருக்க முடியாது!
இருக்கக் கூடாது!

அரசும், நிர்வாகமும்,
அரசியல்வாதிகளும்
இந்த நாட்டின் பண்பாட்டை
பாதுகாப்பது கடமை.
குற்றம் சொல்லி அழிப்பது
நீதி இல்லை.    

இது கடமை இல்லை என்று சொன்னால்
பரவாயில்லை
சாலை போடுவது, மின்விளக்கு போடுவது...
என்று நிர்வாகத்துடன் நிறுத்திக்கொள்வது நீதி.

இந்த நாட்டின் பண்பாட்டை
விரும்பாதவர்கள்,
தாராளமாக உலகில் வாழலாம் -
அவர்களது நடத்தைகள்
விரும்பப்படும் நாட்டில்!

மதிப்பிற்குரிய அரசு
அறியட்டுமே தன்
எல்லைகளை!  

0 comments:

Post a Comment