சகாயம் அவர்களுக்கு அன்பான அழைப்பு....

Leave a Comment
மதிப்பிற்குறிய சகாயம் அவர்களுக்கும் , அவர்பற்றி சிந்திப்பவர்களுக்கும் ஒரு சொல்....



17 முறை கொள்ளையடித்துச் சென்ற கஜினிபோன்ற திருடர்களுக்கும்  சோறு போட்டு வழியனுப்பியவர்கள் நமது முன்னோர்கள்.


நமது நாட்டின் மரபுப்படி, பண்பாட்டின்படி நமது பணத்தை கொள்ளையடிப்பவன் - நமது துரோகி இல்லை.


நமது பாரதப் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காதவனும், அழிப்பவனுமே துரோகி.


இந்த நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காத அரசியல் தூய்மை என்ற பெயரில் பேசுபவர்கள் நாளை நமது மக்களை பிரிட்டிஷ் போன்ற அந்நிய கலாச்சாரத்திற்கு மாற்றலாம், அல்லது அதற்கு உடந்தையாக இருக்கலாம்.


அது இந்த நாட்டின் உயிர் நாடியையே அழிக்கும்.


நாம் இந்த விஷயத்திலிருந்து ஊழல், போன்ற  பிரச்சினைகளால் பயந்து  தீர்வுதேடி குழப்பத்தில் இருப்பதால் நமது இந்த இயலா நிலையைப் பயன்படுத்தி இதில் நடக்கும் சதி, அல்லது நஷ்டம் நமக்கு சுலபமாக தெரியாமல் போகலாம்....


கவனமாக இருக்கவும்.


இந்த நாட்டின் நதிகளை, மலைகளை, விவசாயத்தை, வளங்களை, பாரம்பரிய மருத்துவத்தை, உணவு & சமையல் கலைகளை,... மதிக்கும் சகாயம் போன்றவர்கள் ,....


ஏன் ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக நமது நாட்டு கல்வியாளர்களும் அறிஞர்களும் ஏற்படுத்தி, மக்கள் கடைபிடித்துவரும் பாரதப் பண்பாட்டை மதிக்க போற்ற ஏற்க முடியாது.


இந்த நாட்டின் அறிவுப்பூர்வமான வழிபாட்டு முறையை ஏன் ஏற்க முடியாது?


இங்கு என்ன இல்லை கடவுளை வழிபட, கடவுளை காண, கடவுளை அடைய, கடவுளாக ஆக.....


தனது வெளிநாட்டு மதத்தினை விட்டு விட்டு சகாயம் அவர்கள் நமது முன்னோர்களின் அறிவில் நம்பிக்கை வைத்து, பெருமிதத்துடன்,  நாட்டுப்பற்றுடன் வெளிவரவேண்டும். பிறகு இந்த நாட்டுக்கு சேவைசெய்யவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.


இந்த நாடு என்றும் பணத்தை பாதுகாக்க அலைந்த நாடு கிடையாது.


பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தே எல்லா பெற்றோர்களும் தியாகம் செய்து தங்கள் குழந்தைகளை பண்பாட்டுடன் வளர்த்தார்கள், எல்லா தலைவர்களும் தியாகம் செய்தார்கள்.


பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று அவர்கள் சொன்னது இந்த நாட்டின் பண்பாட்டுக் கல்வியை இந்த நாட்டின் வேதங்களைத்தான்.... “ரெயின் ரெயின் கோ அவே...”வை இல்லை! பைபிளையும் இல்லை....


இவைகளுக்கெல்லாம் நியாயமான அறிவுப்பூர்வமான காரணங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் நிரூபிக்கத் தயார். மதிப்பிற்குரிய சகாயம் அவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் அவைகளை கற்க அன்புடன் அழைக்கிறேன்.


பண்பாட்டை கடைபிடிக்க முடியாததால், சமய வாழ்வை வாழ முடியாததால்தான் முதல் பாரத சுதந்திரப் போரே நடந்தது. வெள்ளையன் கொள்ளையடித்து சென்றதால் இல்லை....


பண்பாடு இல்லாத பணக்கார நாடாக நாம் இருக்க நம் முன்னோர் விரும்பியது இல்லை, அதற்காக நமது முன்னோர்கள் தியாகங்களை செய்யவும் இல்லை! 

இதை ஏற்காமல் அவர்களின் தியாகத்தில் வாழ்வது துரோகம் என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள்....



0 comments:

Post a Comment