பாரதக் கல்வியும் - வெள்ளையன் கல்வியும்....

Leave a Comment
வெள்ளையர்கள் வரும் முன் இந்த நாட்டில் 
முறையான கல்வித்திட்டம் கிடையாது, 
வெள்ளையன்தான் இந்த நாட்டில் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினான் 
என்று கருதுபவரா நீங்கள்? 

அது உண்மை இல்லை. 
முறையான கல்வி இல்லாத நாட்டில், 
அதுவும் இமயம் முதல் இந்து மஹா சமுத்திரம் வரை 
மிகப் பரந்த ஒரு நாட்டில், 
ஏராளமான ஜனத்தொகையை உடைய ஒரு நாட்டில்,...

நாடு முழுவதும் நேரமையான மக்கள், 
வீட்டைப் பூட்டாமல் விட்டு விட்டு மாதக் கணக்கில் தீர்த்த யாத்திரைகள்,
தொழிலில் ஏமாற்றாமை, நேர்மை, வஞ்சகம் இன்மை,
பொருளில் கலப்படம் இன்மை,
கூட்டுக் குடும்பம்,
உணவை காசுக்கு விற்காமல் தானம் செய்யும் தன்மை,
கல்வியை காசுக்கு விற்காமல் தானம் செய்யும் தன்மை,
பலசாலி பலஹீணனை திருட்டுத் தனமாக ஏமாற்றாத தன்மை,
முறையான கிராமங்கள்,  அவைகளுக்கு நீர் வசதிகள், 
அச்சுறுத்தும் மிருகங்களுக்கு இடையில் காடுகள் சீர்செய்யப்பட்டு 
மிகப் பரந்த விவசாய நிலங்கள், அவைகளுக்கு நீர் வசதிகள், 
தொழிலுக்கு ஏற்ற வசதியுடைய குடியிருப்புக் கட்டமைப்புடன் நகரங்கள், அவைகளுக்கு நீர் வசதிகள், 
சந்தைகள், அவைகளுக்கு நீர் வசதிகள்,
கோவில்கள், அவைகளுக்கு நீர் வசதிகள், 
வியாபார வீதிகள், அவைகளுக்கு நீர் வசதிகள், 
வெளிநாட்டிலிருந்து வரும் வியாபாரிகளுக்கான குடியிருப்புக்கள், அவைகளுக்கு நீர் வசதிகள், 
அவர்களுடன் உரையாட மொழிபெயர்ப்பு வசதிகள், 
வியாபாரத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்ல கப்பல் கட்டும் வசதிகள், 
மாதக் கணக்கில் கடலில் கப்பலில் உணவுக் கட்டமைப்பு வசதிகள், 
நடுக்கடலில் திசையறிந்து செல்லும் அறிவு
நடுக்கடலில் செல்லும் போது பெரு மழை வந்து 
கப்பலில் நீர் சேர்ந்தால் வெளியேற்றும் திறமைகள், 
புயல் வந்தால் காத்துக்கொள்ளும் திறமைகள், 
சுற்றிலும் மலையே இல்லாத தஞ்சையிலும், அதுபோல பல இடங்களிலும், 
கோவில் கட்ட  மலைகளை கொண்டுவரும் திறமைகள், 
மலைகளை தூன்கலாக்கும் திறமைகள், 
மலைகளை சிற்பமாக்கும் திறமைகள், 
மலையைக் குடைந்து மாமல்லபுரம் கோவில் கட்டும் திறமைகள்,
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு 
நுட்பங்களைக் கொண்டுள்ள கர்னாட சங்கீதம், 
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு 
நுட்பங்களைக் கொண்டுள்ள  ஹிந்துஸ்தானி சங்கீதம், 
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு 
நுட்பங்களைக் கொண்டுள்ள பரத நாட்டியம், 
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு நுட்பங்களைக் கொண்டுள்ள ஜோதிடம்,  
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு 
நுட்பங்களைக் கொண்டுள்ள ஆயுர்வேதம், 
ஒருவனின் ஆயுலில் கற்று முடிக்கமுடியாத அளவு 
நுட்பங்களைக் கொண்டுள்ள மொழி இலக்கணம், 
பல துறைகளுடன் நிர்வஹிக்கப்பட்ட அரண்மனைகள்,
உலகில் அன்று தங்க நகை உற்பத்தியில் முதலிடம், 
துணி உற்பத்தியில் முதலிடம்
ஆடை செய்வதில் முதலிடம்,
கட்டிடக் கலைகளில் முதலிடம்
பாலம் கட்டுவதில் முதலிடம்
சாலை அமைப்பில் முதலிடம்
விவசாய முறைகளில் முதலிடம்
வித விதமான சமையலில் முதலிடம்
பிறந்ததிலிருந்து மரணம் வரை ஒருவனின் வாழ்க்கையை 
சடங்குகளால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
காக்கும், சேர்ந்து வாழ உதவும் கட்டமைப்பான குடும்பத்தை 
பண்டிகைகளால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
காக்கும், சார்ந்து வாழ உதவும் கட்டமைப்பான குடியிருக்கும் ஊரை திருவிழாக்களால் மதித்துப் போற்றி பெருமைப்படுத்துவதில் முதலிடம்,
சிறந்த நீதி கொடுக்க, 
குடும்ப உறவுகளின் மூலம் பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அதிலும் முடியாவிட்டால் 
கிராமம் கூடி பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அதிலும் முடியாவிட்டால் 
மன்னரிடம் சென்று பஞ்சாயத்து பேசும் நீதி முறை.
அனாதை இல்லம் என்று தேவைப்படாமலேயே 
எந்த பெற்றோரில்லாத ஒருவனும் அனாதையாக வாழாத நிலை
 முதியோர் இல்லம் என்று தேவைப்படாமலேயே 
எந்த முதியோரும் அனாதையாக வாழாத நிலை
நீதி சொல்லவேண்டிய மன்னனிடமே தவறு நடந்தாலும் யார் வேண்டுமானாலு தட்டிக்கேட்கும் நிலை,....
இன்னும் நமது சிறப்புகள் ஆயிரம் ஆயிரம் , இங்கு எழுதி முடிக்க முடியாது.
நமக்குத் தெரியக்கூடாது என்று வெள்ளையனால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதால் நமக்குத் தெரியாமல் போனவைகள் 
நிச்சயமாக ஆயிரக்கணக்கில். 
இந்த சிறப்புகள் ஒருசில ஆண்டுகள் எதேச்சியாக ஏற்பட்டு பிறகு காணமல் போனதா என்றால் அப்படியும் இல்லை. 
இந்த சிறப்புகள் எல்லாம் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக 
நடைமுறையில் இருந்து வந்துள்ளன. 
இந்த சிறப்புகள் ஒரு ஊர் இரண்டு ஊரிலும் இல்லை. 
இமயம் முதல் ஹிந்துமஹா ஸமுத்திரம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பில் 
கடைபிடிக்கப்பட்டு உள்ளது. 
இந்த சிறப்புகளுக்கான திறமைகள் முறையான கல்வி இல்லாமல் 
எப்படி வர முடியும்?

எதேச்சையாக முடியுமா? 
பிரிட்டனில் எதேச்சியாக வந்ததா? 
அமெரிக்காவில் எதேச்சையாக வந்ததா? 
ஜெர்மனில் எதேச்சையாக வந்ததா? 
பிரான்சில் எதேச்சையாக வந்ததா? 
இத்தாலியில் எதேச்சையாக வந்ததா? 
அராபியாவில்எதேச்சையாக வந்ததா? 
ஏன் எங்கும் வரவில்லை?

உலகப் போர்களை தந்தது எந்தக் கல்வி? 
இந்த நாட்டுக் கல்வி கற்றவர்கள் நடத்தினார்களா? 
உலக நாடுகளின் கல்வியைக் கற்றவர்கள் நடத்தினார்களா? 

உலகப் போர்கள் உலகில் செய்த கொடுமைகளை மறக்கும் ஒரு மனித சமுதாயம் மிருகங்களை விட கீழானது. 

எந்தக் கல்வியையும் கற்காத மிருகங்கள் 
தனது உணவுக்கு அன்றி வேறு 
எந்த தொல்லையையும் எந்த உயிருக்கும் செய்யாதவைகள். 
உலகிற்கும் இயற்கைக்கும் எந்த கேட்டினையும் 
இது காலம் வரை செய்யாதவைகள். 

கற்றவர்கள் இந்த உலகப் போர்களை நடத்தி உள்ளார்கள்.
அப்படி என்றால் அவர்களின் கல்வியே கல்வி இல்லை. 
ஏதோ மனிதனின் அறியாமையில் பிறந்த திமிரின் உளறல்கள். 

பாரதத்தின் சிறப்புகள் எதேச்சையாக வந்தவைகள், 
கல்வியினால் இல்லை என்றால், 
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கடைபிடிக்கப்பட முடியுமா?  

இன்று இந்த அரசுகள் தங்களது முறையான கல்வியால், 
கல்வி கற்றவர்களை எல்லாம் 
நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிவிட்டதா? 

அல்லது பிரிட்டிஷ் அரசு தனது நாட்டில் உள்ள அனைவரையும் நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிவிட்டதா? 

அல்லது உலகில் எந்த அரசு தனது நாட்டில் உள்ள அனைவரையும் நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்கிஉள்ளது இதுவரை? 

எங்கும் முடியாதது, இந்த நாட்டில் 
வெள்ளையன் வருவதற்கு முன் நடந்து உள்ளதே எப்படி?

எந்தக் கட்டமைப்பு இந்த பலனைத் தருமோ அதுதான் கல்வி! 
இந்தக் கல்வியின் இலக்கணமே இன்னமும் உலக நாடுகளால் பார்க்கப்படாமல் இருக்கிறது. 

--------------------------------------------------------

நேர்மையானவர்களாக நல்லவர்களாக ஆக்குவதேல்லாம் 
கல்வித்துறையின் வேலை இல்லை - என்றால் 
வேறு என்னதான் கல்வித்துறையின் வேலை? 

சோற்றுக்காக சம்பாதிக்க வைப்பதா? 
கல்வித்துறை வரும் முன் யாரும் தன் சோற்றுக்கு 
சம்பாதிக்கவே இல்லையா? 
சம்பாதிக்க வைக்க அரசு ஒன்றும் செய்யவே வேண்டியதில்லையே!

அரசின் உதவி இல்லாமலேயே 
ஒவ்வொரு கழுதையும் இந்த உலகில் 
தன் உணவை கண்டு உண்டு வாழுகிறது.  

 அரசின் உதவி இல்லாமலேயே ஒவ்வொரு நரியும், 
சிறுத்தையும், கொக்கும், குயிலும், மீனும், முதலையும்... இந்த உலகில் 
தன் உணவை கண்டு உண்டு வாழுகின்றன.  

பிறந்து, சாப்பிட்டு, சாணிபோட்டு, 
காம வெறி தீர்த்து, குட்டி போட்டு, 
குட்டிகள் வளர்வதைப் பார்த்து சந்தோஷப்பட்டு 
சாகுவது மட்டும்தான் வாழ்க்கை, 
அதை நன்கு செய்ய வைக்கத்தான் கல்வி - என்றால்...
அதை இந்த மனித வாழ்க்கைக் கட்டமைப்பில் செய்வதை விட 
மிருக வாழ்க்கைக் கட்டமைப்பில் இன்னும் சிறப்பாகவே செய்ய முடியும். 
அதற்கு அரசும் தேவை இல்லை, கல்வியும் தேவை இல்லை. 
கல்வி என்றால் என்ன என்பதை புரிய வைப்பது 
இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் அல்ல. 
அது வேறு இடத்தில். 


இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் 
கல்வி என்றால் என்ன என்று பாரதம் அறிந்து இருந்தது. 
கற்க-கற்பிக்க மிகவும் அனுபவமுள்ள கட்டமைப்பினை வைத்திருந்தது
என்பதையும்
உலகில் இன்னமும் கல்வி என்றாலே என்ன என்று தெரியவில்லை 
அதனால், வெள்ளையன் நமக்குக் கொடுத்தது கல்வியே இல்லை 
என்பதையும் காட்டுவதுதான். 
உண்மையில் கல்வி என்றால் என்ன என்று 
இன்னமும் உலக நாடுகளுக்கு தெரிவும் இல்லை, புரியவும் இல்லை. காட்டுமிராண்டிகளாகவே வாழ்கிறார்கள். 
அவர்களது காட்டுமிராண்டிதன வாழ்வை மேலும் நன்றாக செய்ய ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு 
அதற்குப் பெயர் கல்வித்திட்டம் என்கிறார்கள். 
அதையே இந்த நாட்டிலும் அறிமுகம் செய்தார்கள். 
அதைத்தான் நாம் சொல்கிறோம் 
"வெள்ளையன் இந்த நாட்டில் கல்வியை அறிமுகம் செய்தான்" என்று!
இது எந்த அளவுக்கு உண்மையான கல்வியில் உயர்ந்து இருந்த 
நம் மக்களை 
இந்த வெள்ளையனின் திட்டம் முட்டாள்களாக்கி உள்ளது என்பதற்கு 
இந்த பேச்சே நிரூபணம்!
-------------------------------------------------------------------------------------------

மேலும் சில விபரங்களுக்கு இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
குறிப்பாக பெற்றோர்கள் அனைவரும் பார்கவேடிய பதிவு. 
https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c

மதிப்பிற்குரிய அரசு அறியட்டும் தன் எல்லைகளை!

Leave a Comment

இந்த நாட்டின் பண்பாடுகள்
பண்பட்ட மனிதர்களால், சான்றோர்களால்,
நீதிமான்களால் ஏற்படுத்தப்பட்டவைகள்.

தங்கள் சந்ததிகள்
உயர்ந்த மனிதப் பண்புகளையும்
சமூக தற்காப்பு சக்தியையும்  
சுலபமாக கற்க கடைபிடிக்க
அன்புடன் அக்கறையுடன் பாசத்துடன்
ஏற்படுத்திய சாதனங்கள்.
குற்றம் எதுவும் அற்றவைகள்!

இந்தப் பண்பாடுகளால்தான்
இத்துணை ஆயிரம் தலைமுறைகளாக
பாரதம் உலக அரங்கில் ஒரு
சிறந்த நாடாக திகழ்ந்து வருகிறது.
பாதுகாப்பாக வாழ்ந்தும் வருகிறது. 
இன்றும் பாரதத்தின் தனித்தன்மைக்கும்
அழியாத இருப்புக்கும் 
இந்தப் பண்பாடே காரணம்.

இன்றைய புதிய கல்வித்திட்டம்
அவைகளை 
கருத்தில் கொள்வதும், இல்லை,
சொல்லித்தருவதும் இல்லை.
இந்தக் கல்வியை  மட்டுமே
நன்றாகப் படித்து அநீதிபதியாக
பதவிக்கு வந்தால்,
எப்படிப் புரியும் பண்பாட்டின் பெருமை.

இன்றைய கல்வித்திட்டம் 
நமது பண்பாட்டில் இருக்கும்
கல்யாணத்தின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
கருமாதியின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
கோவிலின் பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை
திருவிழாவின்பொருள் என்ன 
என்றும் சொல்லித்தந்தது இல்லை


இந்த நாட்டின் பண்பாடுகள்
விஞ்ஞானப் பூர்வனானவைகள்
இந்த நாட்டுக்கு நன்மை செய்பவைகள்
உலக மனித வாழ்விற்கும் நன்மை செய்பவைகள்
என்று நாம் நிரூபிக்கத் தயார்

அப்படி நிரூபித்துவிட்டால்
இந்த அநீதிபதிகள்
என்ன தண்டனை ஏற்கத்தயார்
என்பதை அறிவிக்கட்டும்.
நான் சொல்கிறேன்.
நான் நிரூபிக்காவிட்டால்
நான் மரணதண்டனை ஏற்கிறேன்!

பாரதத்தின் லட்சியம்
பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை அல்ல
பண்பட்ட மனித வாழ்க்கை.
அதற்கு பணம் ஒரு சாதனமே.
ஆனால் உலக நாடுகளின் லட்சியம்
பண்புகள் அல்ல பணம்.

இந்த நாட்டின் லட்சியத்தை
மாற்றும் பொறுப்பு
அரசுக்கும் இல்லை
அரசு ஊழியர்களுக்கும் இல்லை
அநீதி மன்றத்திற்கும் இல்லை.
இருக்க முடியாது!
இருக்கக் கூடாது!

அரசும், நிர்வாகமும்,
அரசியல்வாதிகளும்
இந்த நாட்டின் பண்பாட்டை
பாதுகாப்பது கடமை.
குற்றம் சொல்லி அழிப்பது
நீதி இல்லை.    

இது கடமை இல்லை என்று சொன்னால்
பரவாயில்லை
சாலை போடுவது, மின்விளக்கு போடுவது...
என்று நிர்வாகத்துடன் நிறுத்திக்கொள்வது நீதி.

இந்த நாட்டின் பண்பாட்டை
விரும்பாதவர்கள்,
தாராளமாக உலகில் வாழலாம் -
அவர்களது நடத்தைகள்
விரும்பப்படும் நாட்டில்!

மதிப்பிற்குரிய அரசு
அறியட்டுமே தன்
எல்லைகளை!  

அஹிம்சை எது - ஹிம்சை எது ?

Leave a Comment

அஹிம்சை எது, ஹிம்சை எது 
என்று பாரதிக்கு  புத்திசொல்ல 
உலகிற்குத்  தகுதியில்லை.

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக
மனிதப் பண்புகளையும், 
உயிர்ப் பண்புகளையும்,
இயற்கைப் பண்புகளையும், 
இறைவனின் பண்புகளையும்,
ஆராய்ந்து பார்த்தவர்கள், 
கல்வியாகத் தந்தவர்கள்,
கல்வியாகக் கற்றவர்கள்,
வாழ்ந்து பார்த்தவர்கள்,
ஞானம் மிகு  பாரதிகள்!

பாம்பும் தெய்வம் என்று கண்டுபிடித்து
பால் வைத்து வழிபட்டவனை,
வேப்பமரமும் தெய்வம் என்று கண்டுபிடித்து
வணங்கி வழிபட்டவனை,
உலக மனிதர்களை சுரண்ட
உலகப்போர்களை நடத்திய உலகம்
குறை சொல்லத் தகுதியில்லை!

அஹிம்சை ஹிம்சைகளின்
எல்லைகளை அறிந்தவர்கள் பாரதிகள்
எங்கே, எது, எவ்வளவு, எப்படி, ஏன்,...
என்பது பாரதிக்குத் தெரியும்! 

‘தான் வாழ மற்ற மனிதர்களை 
அழித்தால்தான் முடியும்,
நிரூபணம் இன்றி அழிப்பது 
தவறு இல்லை, திறமை’
என்ற கொள்கை உடையவன்
'உயிர்களின் பாதுகாப்பு' என்ற 
போலிக் கருணையை எங்களுக்கு 
சொல்லித்தரத் தேவை இல்லை.  

யாம் அறிவோம் பாரதிகள்,
உலகில் யாரையும் விட நன்றாக
காருண்யம் எது என்று !

அன்புடன் அழைக்கிறோம் 
உங்களையும் உலகமே...
கற்க வாரீர்  ஆணவத்தை விட்டு விட்டு....


[ ஜல்லிக்கட்டினை உயிரின சித்திரவதை என்ற PeTAவின் வழக்கிற்கு பதில்... ]

மொழிப் பெயரின் சிறப்பு!

Leave a Comment

உங்கள் வீட்டில் செல்வம் பெருக சில வாஸ்து குறிப்புகள்...

Leave a Comment
செல்வம் பெருகி வாழ  இந்த வாஸ்து குறிப்புகளை செய்து பார்க்கவும்.
வீட்டின் தலை வாசலுக்கான சில வாஸ்து குறிப்புகள்...

  
குறிப்பு: 1
வடக்கு வாஸ்து மண்டலத்தில், பிராதன நிறமாக நீலம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சமையலறை மற்றும் கழிவறையில் சிகப்பு நிறத்தை தவிர்க்கவும்.
இவ்விடத்தில் குப்பைத் தொட்டி, துடைப்பம், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை வைக்கக்கூடாது. சமையலறை என்பது தீயை குறிக்கும். இங்கே பொருட்களைத் தவறாக வைத்தால், பணம், வாய்ப்புகள் மற்றும் தொழில் வளம் குறையும்.

குறிப்பு: 2
வடக்கு மண்டலத்தில், மணி பிளாண்ட்டை பச்சை பூந்தொட்டியில் வைத்திடவும் அல்லது தொங்க விட வேண்டும்; பார்ப்பதற்கு பச்சை பசேலென இருக்க வேண்டும். இவை செல்வம் மற்றும், தொழில் ரீதியான வாய்ப்புகளை பெருகச் செய்யும்.

குறிப்பு: 3
வட மேற்கு வாஸ்து மண்டலம் உங்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் இருந்து நிதி ஆதரவை பெற்றுத் தரும்.

குறிப்பு: 4
அழகிய நுழைவு வாயில் சந்தோஷத்தையும். வளமையையும் அளிக்கும். மேலும் சமுதாயத்தில் தனிப்பட்ட நபரின் மதிப்பு மற்றும் பாராட்டுக்களை பெறச் செய்யும். ஒழுங்கற்ற முறையில் இருந்தால் உங்களை பிரச்சனைகள் சூழும்.
உதாரணத்திற்கு, தென் மேற்கு கதவு கடன் மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் தொழில் ரீதியான வாய்ப்புகளையும், செல்வத்தையும் அளிக்கும். கிழக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் மன அமைதியை தரும். மேற்கு நுழைவாயில் என்றால் செல்வத்தையும், வளத்தையும் தரும்.

குறிப்பு: 5
சமையலறையை தென் கிழக்கு அல்லது தெற்குத்-தென்-கிழக்கு திசையில் அமைத்திடவும். வெளிர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறமே இதன் பிரதான நிறமாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம், வேலை பார்க்கும் மேஜை, வரவேற்பு அறை ஆகியவற்றை வடக்கு பகுதிகளில் வைத்தால். ஆரோக்கியமான பண ஓட்டம் இருக்கும்.

குறிப்பு: 6  
மேற்கு திசையில், வெள்ளையும் மஞ்சளும் தான் பிராதன நிறங்களாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம் வைப்பதற்கு இதுவும் கூட சிறந்த இடமாகும். வட்ட வடிtம் என்பது உலக கூறுகளை குறிப்பதால். அந்த வடிவத்தில் இருக்கும் பொருட்களை இங்கே பயன்படுத்தலாம். மேற்கு தென்-மேற்கு என்பது சேமிப்புகளுக்கான மண்டலமாகும்.
இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை படிப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் பணத்தையும், செல்வங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து இங்கே வைத்தால், உங்கள் செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

செய்து பாருங்கள் - சுகமாக வாழுங்கள் !



ரிஷி குடில் காலரி படங்கள்

Leave a Comment










பொங்கல் கொண்டாட - சுவையான செய்திகள்... :)

Leave a Comment
பொங்கல் என்று கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை 
எப்படி கொண்டாடுவது....



புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள்  பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி கொள்ளவும். 


தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொருவரும் தம் வீட்டுப் பொங்கல் படையலானது சூரியன் உதிக்கும் போதே முதல் நல்விருந்தாக அமைய வேண்டும் என்ற உணர்வுடன் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்யவும். 

எல்லோரும் அதிகாலையில் குளித்து (தலை முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து, அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடவேண்டும். சிமெண்டினால் ஆன முற்றம்  என்றால் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடவும்.


சூரிய பகவானை வரவேற்க வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டிவைக்கவும். 


புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை தலைப் பொங்கல் என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.


துக்க நிகழ்வுகள் நிகழ்ந்த குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக்கொள்ளவும்.


வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது. 


வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, வாய்ப்புகள் மற்றும்  சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு வாசலை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடவேண்டும். 


நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிக்கவும்.  கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அவற்றில் கயிறு கட்டி  தோரணம், மாவிலை தொங்க விட்டு, கோலமிட்டு அலங்காரம் செய்யவும்.

புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்பு கட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்தவும்.

பிறகு நல்ல நேரம் பார்த்து, வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும்.

பொங்கல் பானைக்கு அருகில் குத்துவிளக்கு ஏற்றவும்.

வாழை இலை போட்டு, இடது ஓரமாக தாழி நிறைய பச்சை நெல் வைக்கவும். இலையில் பச்சரிசியை கொட்டிப் பரப்பவும். அதன் மேல் பூசணிக் காயின் ஒரு துண்டு, அவரை, சீனி அவரை, பிடி கிழங்கு, சிறு கிழங்கு, கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், வள்ளிக் கிழங்கு, இவற்றில் முடிந்தவரை கிடைத்தவைகளை வைக்கவும். பக்கத்தில் வெல்லமும் பச்சரியும் கலந்த காப்பரிசி சிறிது வைக்கவும். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு, ஒரு பாத்திரத்தில் பால்  ஆகியவற்றையும் வைக்கவும்.

இரண்டு கரும்புகளை சாய்த்து வைக்கவும். [ ஒற்றையாக வைப்பது நல்லதில்லை. ] அவை மன்மதனும் ரதிதேவியும், அதுபோல குடும்பத்தை நடத்தும் இனிமையான தலைவனும் தலைவியும்.  இருவரின் வாழ்வும் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்வு தருவதாக இனிமையாக அமையட்டும் என்று குறிப்பது.

பொங்கல் அடுப்புக்காக செய்த விசேஷ கற்களிலோ அல்லது மூன்று கற்கள் வைத்தோ [ அல்லது மண் அடுப்பிலோ ] புதிய பானையை வைக்கவும் [ மண் பானையே சிறப்பு ]. புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள்இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கவும்.  அடுப்பினில் விறகுகளை வைக்கவும்.

இந்த அமைப்புக்கு அருகில் திரு விளக்கினை ஏற்றவும். விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  அகர்பத்தி காட்டவும்.

தேங்காய் உடைத்து, உடைத்த தேங்காயிலிருந்து தேங்காய் குடுமியை நீக்கவும். தேங்காய் மூடிகளை இலையில் அல்லது அருகாமையில் வைக்கவும்.

விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  ஆரத்தி காட்டவும்.   


[ இப்படி பொங்கல் பொங்கும் முன் சூரிய பகவானுக்கு வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும். ]


குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி, சாணத்தினால், அல்லது மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்), நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின்,  அடுப்பில் உள்ள பானையில்  பாலும், நீரும் விட்டு, அடுப்பில் நெருப்பு மூட்டி,  பொங்க வைக்கவும். 


பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடவும். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக, ஆரவாரம் செய்து, மணி ஓசை எழுப்பி,  புது அரிசியை வீட்டுத் தலைவர், தலைவி, பிள்ளைகள் என அங்கு இருப்போர் அனைவரும், ஒவ்வொருவராக இரு கைகளினாலும் அரிசியை அள்ளி எடுத்து மூன்று முறை ( பிரதட்சிணமாக -- வலஞ்சுழியாக ) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் அடுப்படியை தொட்டு வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். .


காத்திருந்து அரிசி வெந்து பொங்கல் தயாரானதும் இறக்கிவிட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்யவும்.

பிறகு சக்கரைப் பொங்கலுக்கு பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்யவும்.

பிறகு, தேவைக்கு ஏற்ப சாம்பாரும் (காய் கறியும்) தயாரிக்கவும்.


பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பதும் வழக்கம். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி வீட்டின் எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் (தோஷங்கள் நீங்கும்). 



பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் வைத்து, அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைக்கவும். பலகாரங்களை (வடை, மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் வைக்கவும். 


படையல் படைக்கும் போது (சூரியனுக்கு) வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி, அல்லது பஜனை பாடி சூரியனை வணங்கவும்.

ஆரத்தி காட்டும்போது இதனை சொல்லி மற்றவர்கள் திரும்பச் சொல்லவும்...


          சூரிய வந்தனம்

சூரியன் நீயே தந்தையர் தந்தை
சூரியன் நீயே உலகின் தந்தை
சூரியன் நீயென் வாழ்வைத் தந்தாய்
சூரியன் நீயென் உயிராய் நின்றாய்

நீ தந்தவற்றை உனக்கே தந்தேன்
நன்றிகள் அனைத்தையும் உனக்கே சொன்னேன்
அறம் பொருள் இன்பம் வீடனைத்தையும்
அடையும் திறன்களை அளித்திடுவாயே!

என்று சொல்லி வழிபட்ட பின் சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்து எழவும்.

சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்.

பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்கவும். முடிந்தால் காகம் முதலில் சாப்பிடும் வரை காத்திருக்கவும். பிறகு குழந்தைகள் அல்லது இருப்பவர்களில் இளையவர்களுக்கு சர்க்கரைப்பொங்கல் கொடுக்கவும்.


பிறகு சூரியனுக்கு படைத்த (படையல்) பொங்கலை குடும்பத்தில் அனைவரும், வந்துள்ள அன்பர் நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழவும்.  


உறவினர்கள், நண்பர்களில் துக்க நிகழ்வுகள் அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்கள் செய்யாது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விக்கவும்.

முதலில் குடும்பத் தலைவனும் தலைவியும் கரும்பினை துண்டுகளாக வெட்டி மற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.


இந்த நல்ல நாளில் சச்சரவுக்கான, விவாதத்துக்கான பேச்சுக்கள் வருமாயின் தவிர்க்கவும். 


இந்தப் பொங்கல் தினம் சங்கராந்தி என்ற பெயரிலும், மகர சங்கராந்தி என்ற பெயரிலும் பாரத நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பூமி சுற்றும் விதத்தில், இனி சூரியனை மகர ராசியில் பார்க்க முடியும். இனி இரவு குறைந்து பகல் அதிகரிக்கத் துவங்கும். அதனால், இந்த நாளைக் கொண்டாடினால் வாழ்வில் இருளும் அறியாமையும் குறைந்து ஒளியும் ஞானமும் அதிகரிக்கும்.  J

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] வட பகுதியில் அமைவதால்  உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] தென் பகுதியில் அமைவதால்  தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது.



இதில் தை மாதம் முதலாம் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். 

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.

சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது என வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்ந்து காட்டுகிறது.

இந்த கால கட்டத்தில் சூரியனை இயக்கும் ஆதித்ய தேவன் உள்ளம் குளிர்ந்து அருள் பொழிபவராக இருப்பதால், எல்லா சுபகாரியங்களையும் இப்போது, இந்த தை மாதத்தில் துவக்கிக்கொள்ளுகிறார்கள்.  


“மாட்டுப் பொங்கல்



பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் பட்டிப் பொங்கல் / மாட்டுப் பொங்கல்தினமாக உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கும் இயற்கைக்கும் நன்றி உணர்வை நினைவுக்குக் கொண்டுவரும் நாள்.


அதற்கு அடையாளமாக பசுவுக்கும், மாட்டுக்கும், கால்நடைகளுக்கும், அலங்காரம் செய்து கொண்டாடும் வழக்கம். 




அன்றைய தினம் மாடு வளர்ப்போர் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து;  பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கல்;  மனசு பெருக - பால் பானை பொங்க; நோயும் பிணியும் - தெருவோடு போக  என்று கோஷமிட்டு, மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கவும். மாட்டை இறைவனின் அருளாக  மதித்து அதற்கு பொங்கலை படையல் படைத்து,  உண்ணக் கொடுக்கவும்.

மாடு உண்ட எச்சில் தண்ணீரை மாட்டுத் தொழுவத்தில் தெளிக்கவும்.


பிறகு அனைவருடனும் சேர்ந்து உண்டு மகிழவும்.


மாடு வளர்க்காதோர், மாடு வளர்ப்போரின் வீட்டுக்கு சென்று சேர்ந்து கொண்டாடி, மாட்டுக்காக தானங்களை செய்து வருவது சிறப்பு.

மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு போன்ற பலவித விளையாட்டுக்களை நடத்தி இளம் தலைமுறைக்கு பலவித திறமைகளையும், ஊக்கத்தையும், மற்றவர்களுடன் அறிமுகம், பழகும் திறமைகள்,...  போன்றவைகளை கொடுத்து, கூச்சம் நீக்கி, ஒற்றுமையாக வாழ பழக்கப்படுத்துவதும் - பெரியோர் கடமைகள்.


பொங்கலோ பொங்கல் !!!!

 நாமும் செய்வோம் - நண்பருக்கும் சொல்லுவோம்!