குரு + வேதம் = பூரண வாழ்க்கை

Leave a Comment

குரு + வேதம் =   பூரண வாழ்க்கை  

 குரு - வேதம் =   நரக வாழ்க்கை  
 வேதம் - குரு =   துக்க வாழ்க்கை  
- குரு - வேதம் =   மிருக வாழ்க்கை  

குருவால் சொல்லப்படாத வேதமும் பாழும் கிணறு...
வேதத்தை சொல்லாத குருவும் பாழும் கிணறு...
இரண்டும் இல்லாத வாழ்க்கையோ தூக்குக்கயிறு...!

வேதத்தை சொல்லும் குருவை அடைந்தவனே உண்மையில் பணக்காரன்! பாக்கியவானும்கூட!!

ஏன் இப்படி சொல்லப்படுகிறது?

ஏனென்றால், வாழ்க்கை இருப்பதே நூறு ஆண்டுகள். அதில் பல வித உழைப்பு முயற்ச்சிகள், சச்சரவுகள், தூக்கம்,.... என எல்லாம் போக அனுபவிக்கக் கிடைப்பதோ சில மணி நேரங்களே...

அதையும் யார் யாரின் பேச்சையோ கேட்டு ஏமாந்து போனால்...
அது புத்தி சாலித்தனமான வாழ்க்கை ஆகமுடியாது.  

ஏன் அப்படியோ?

ஏனென்றால் ஆயிரம் பேர் பத்தாயிரம் யோஜனைகளை சொல்கிறார்கள். அதற்கும் மேலும் யோசனை சொல்லும் ஒருவரின் கருத்துக்களே நிலை இன்றி மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சொல்பவர்கள் எல்லோரும் சொல்லும்போது எனது கருத்து சரியே என்று சொல்லிவிடுகிறார்கள்.

இது ஏன் குருநாதர் சொன்னது - அதனால் நான் நம்பலாமே?

நீ தடுமாறி குழப்பத்தில் இருப்பதால் அதனை நம்பி ஆகவேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறாய். உன்னைப்போல் ஆயிரம் பேர் அவரிடம் வந்தால், அவரை ஒரு குரு என்று சொல்லிவிடுகிறாய்.

ஆயிரம் பேர் ஒருவரிடம் வந்ததாலேயே, அவர் பேசுவது சரி என்று பொருள் கிடையாது. ஏனெனில் வருபவர்களே, ஏற்கனவே அறியாமையில் இருப்பவர்கள்தான். அவர்களால் அவரின் பேச்சில் தவறு நடப்பதை கண்டுபிடிக்க முடியாது. மற்றவர்களின் பேச்சைக்காட்டிலும் வித்தியாசமாக இருப்பதால், ஒருவேளை, அனைவரும் பாராட்டலாம்.

நம்பத் தகுந்த பேச்சு எதுதானோ?

வேதத்தின் பேச்சு ஒன்றே நம்பத்தகுந்தது. அது இந்த உலகைப் படைத்த இறைவனிடமிருந்து வெளிப்பட்டது. ஒட்டு மொத்த சிருஷ்டியின் விதிகளையும் பேசுவது. அதனால் உனது வாழ்வின் விதி ரகசியத்தையும் பேசுவது.

உண்மையில், வேதத்தை குருமூலமாக கற்று வாழ்பவனே புத்திசாலியாக வாழ்கிறான்.

ஏன் நானே படித்தால் என்ன? 

மனிதனின் மனம் பல கோடி பிறவிகளை கடந்து வந்துள்ளது. அறியாமையினால் தவறுகளை சரி என்றும், சரியானவைகளை தவறும் என்றும் கூட பலவாறு கருதி வாழ்ந்து வந்துள்ளது. அந்தப் பதிவுகள் நிச்சயம் மனதில் இருக்கும். அந்த பதிவுகளைக் கொண்ட மனதின் வழியாக பார்க்கும் பொது, உண்மை திரிக்கப்பட்டே புரிந்துகொள்ளப்படும். வேதத்தை குரு இன்றி தானே படித்து இப்போது குருவாக இருப்பவரும் இப்படி தவறாகவே புரிந்துகொண்டு, தவறாகவே போதிப்பார்!

அதனால் உண்மையை நேருக்கு நேர் திரிக்கப்படாமல் பார்க்கும், குருவினால் உபதேசிக்கப்பட்ட ஒரு குருவினாலேயே, சீடன் எங்கே தவற விடுகிறான் என்பதை பார்த்து,  இதை போதிக்க முடியும்.

வேதத்தின் துணை இன்றி உண்மையை நேருக்கு நேர் தானும் பார்க்க முடியாது, இன்னொருவரை பார்க்க வைக்கவும் முடியாது.

வேதம் பேசுவது உண்மையைத்தான் என்று நான் எப்படி நம்புவது?
நீ இறந்த பிறகு ஸ்வர்கத்திற்கு அல்லது நரகத்திற்கு போய், இங்கு வேதம் பேசியதெல்லாம் உண்மைதான் என்பதை புரிந்துகொள்வாய் - என்று வேதம் பேசவில்லை.

இங்கேயே இப்பிறவியிலேயே, வாழும்போதே உண்மையை பார்க்கவைக்க தயாராக இருக்கிறது. அதனால் அதற்குப் பெயர் பிரமாணம்!

அதுவும் ரிஷிகுடில் தன்னை நாடிவந்தவர்களை ஒரே ஆண்டிலேயே உண்மையை பார்க்கவைத்து வருகிறது!

சிதம்பரம் - ரகசியமே !

Leave a Comment
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த ஹிந்து  எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..?

பாரதி என்றால் யார் என தெரிகிறதா..? 
திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.. 

வாழ்க பாரதம் ..வெல்க... பாரதியின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விஷயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

நமது முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களும் அதனிலேயே அடங்கும்.

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,,,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே தெரிந்துவைத்து இருக்கிறது ! J


ஏழை என்றாலும் இனிய மனிதன்

Leave a Comment

பணக்காரனாக இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக் இல்லாமல் இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கொடுத்துவைத்தவன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள் உடன் வாழ்பவர்கள்....

பட்டதாரியாக இருக்கலாம்
பணக்காரனாக இருக்கலாம்
மனிதத் தன்மைகள் இல்லாதவனே
பரிதாபமானவன்....
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ விரும்பமாட்டார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழ முடியாது ஓடிவிடுவார்கள்...
ஏனென்றால்....
அவனுடன் மனிதர்கள் யாரும் வாழுவதை விட
மரணமடைவதே மேலாக இருக்கும்......

அவனுடன் கம்ப்யூடர் வாழமுடியும்
அவனுடன் டி.வி. வாழமுடியும்
அவனுடன் வாழிங் மெஷின் வாழமுடியும்
அவனுடன் கிரைண்டர் வாழமுடியும்
அவனுடன் துடப்பகட்டை வாழமுடியும்
அவனுடன் ப்ரிட்ஜிறேடர் வாழமுடியும்
அவனுடன் குக்கர் வாழமுடியும்
ஆனால் ஒரு குக் கூட வாழமுடியாது....

மாடர்ன் டிரஸ் அவனைத் தழுவும் , ஆனால்
மனைவி தழுவ விரும்பாள்...
டை கட்டிப்பிடிக்கும், ஆனால்
குழந்தை பிடிக்க விரும்பாள்
பெல்ட் அவனை சுற்றும், ஆனால்
சுற்றம் அவனை சுற்றாது...

எங்கும் தனி மரமாய்
வெறித்த கண்களுடன்
வாடும் மனதுடன்
சொலைகளில்லா சுடுகாடாய் வாழ்க்கை
பாவம் அவன் பரிதாபத்துக்கு உரியவனே!























ஏழை என்றாலும்                           
இனிய மனிதன்                                       

பணக்காரனாக                                        
இல்லாமல் இருக்கலாம்
பட்டதாரியாக்
இல்லாமல் இருக்கலாம்
மனிதத் தன்மைகளுடன் இருப்பவனே
கவர்ச்சியான மனிதன்....
ஏனென்றால்...
அவனுடன் வாழ்வதை பாக்கியமாக
நினைக்கிறார்கள்
உடன் வாழ்பவர்கள்....