பொதுவாக ஹிந்து ஆன்மீக தளம் இரு பெரும்பிரிவுகளுடன் உள்ளது...
1. கர்மம்
2. ஞானம்
கர்மம் – என்பது இல்லறப் பருவத்தில், 60 வயது வரை இருப்பவர்களுக்காகவும்,
ஞானம் – என்பது இல்லறப் பருவத்தில், 60 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்காகவும்,
என அந்த வயதுக்கேற்ற
உயிர் நாடிகளின் இயக்கம், அதனால் விளையும்
மன நிலைகள்,...
போன்றவற்றுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட வகைப்பாடுகளே இரண்டும்.
60 வயது வரை கர்மம் என்றாலும்கூட, அது ஞானத்தின் அடித்
தளத்திலேயே இருக்கவேண்டும்.
இல்லையென்றால் அது வேறு திசையில் எங்காவது அழைத்துச்
சென்றுவிடும்.
உதாஹரணமாக, இறைவழிபாடுகளால் சுலபமாகவே அடைய முடிய வேண்டிய
லௌகீகம் சாதனைகளை, அதுபற்றிய அறிவு இல்லாததால், ஆன்மீக வாதிகள் என்று தங்களை
பிரகடனப்படுத்தும் சிலர்,...
தன்னம்பிக்கை, விடாமுயற்சி,... போன்றவைகளை போதனை செய்து,
மக்களுக்கு ஊக்க மருந்து கொடுக்கிறார்கள்...
ஆனால் அவைகள் பிறகு உள்ளத் தளர்ச்சியை ஏற்படுத்தி, மன
நோய்களை ஏற்படுத்துபவைகள்.
தன் பலத்தில் நிற்பது பாதுகாப்பானது இல்லை. இறை பலத்தில்
நிற்பதே பாதுகாப்பானது.
அப்படி இறை பலத்தில் நிற்பது எப்படி, அதன் மூலம்
வாழ்க்கையில் உயர்வது எப்படி?
பொருளாதாரத்தில் உயர்வது எப்படி? சாதனைகளை செய்வது எப்படி? புகழ் பெருகும்
வாழ்க்கையை நடத்துவது எப்படி? வாழ்க்கையின் சுகங்களை பூரணமாக அனுபவிப்பது எப்படி?... என்றெல்லாம்
சொல்லித்தர , இன்று குருநாதர்கள் மிகவும் அருகிப்போய் விட்டார்கள்.
அந்தத் தொழில்
நுட்பங்கள் இன்று கிடைக்காமல் போய்விட்டன.
அவைகளை சரியான
முறையில், சுருக்கமாக எளிமையாக தொகுத்து
இல்லறப் பருவத்தில் உள்ள ஆன்மீக அன்பர்களுக்கான பயிற்சியாக வடிவமைத்துள்ளார் அருள் மிகு றிஷிகேஷ்
தபஸ்வி ஐஸ்வர்ய மஹறிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்கள்.
நூலின் பெயர் – ஆதி
அந்தப் பயிற்சி நூல் மிக எளிமையானது. தாமே படித்து புரிந்து
பயிற்சி செய்ய முடியும். தேவைப்பட்டால் தொலை பேசியில் அழைத்து சந்கேகங்களை நிவர்த்தி
செய்துகொள்ள முடியும்.
மென்நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்....
ஆதி
0 comments:
Post a Comment