நீங்களே ஜாதகம் பார்க்க - செயலிகள்

Leave a Comment
ஜோதிடம் - ஜாதகம் பார்க்க உதவும், நாம் பயன்படுத்தி வரும் சில நல்ல கைப்பேசி செயலிகளை [ Mobie Appகளை ]  அறிமுகம் செய்ய விரும்புகிறோம்....  





Kundli App இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பேசுகிறது - இன்றைய தேதி வரை. கணக்கு விபரங்களை நன்றாக கொடுக்கிறது. 

https://play.google.com/store/apps/details?id=com.vedicrishiastro.kundli


Divya Chakshu - திவ்ய சக்ஷு [ = சூக்ஷ்மக் கண் ] என்ற ஒரு செயலி நிறைய கணக்கீடுகளை தருகிறது. குறுக்கே வரும் விளம்பரத் தொல்லைகள் சற்று அதிகம். 


திருமணப் பொருத்தம் - அடிப்படைத் தகவல்களை பார்க்க, தமிழில் ஒரு சுலபமான செயலி: 

https://goo.gl/qhFhYs 

அஸ்ட்ரோ விசன் நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி. இலவசத்தில் அடிப்படைத் தகவல்கள் கிடைக்கின்றன. 
மேலும் விளக்கங்களுக்கு செயலியை விலைக்கு வாங்க வேண்டி உள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.astrovision.horoscope 


கம்ப்யூட்டரில் பயன்படுத்த சிறந்த செயலி, 'ஜகன்னாத ஹோரா'. இதில் கணக்கீடுகள் மிக நன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. செயலி பலன்களை சொல்லுவதில்லை. 
https://www.vedicastrologer.org/jh/#download 

இல்லற ஆன்மீக வழிகாட்டி....

Leave a Comment

பொதுவாக ஹிந்து ஆன்மீக தளம் இரு பெரும்பிரிவுகளுடன் உள்ளது...

1. கர்மம்
2. ஞானம் 


கர்மம் – என்பது இல்லறப் பருவத்தில், 60 வயது வரை இருப்பவர்களுக்காகவும்,
ஞானம் – என்பது இல்லறப் பருவத்தில், 60 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்காகவும்,

என அந்த வயதுக்கேற்ற     உயிர் நாடிகளின் இயக்கம், அதனால் விளையும்  மன நிலைகள்,...

போன்றவற்றுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட  வகைப்பாடுகளே இரண்டும்.

60 வயது வரை கர்மம் என்றாலும்கூட, அது ஞானத்தின் அடித் தளத்திலேயே இருக்கவேண்டும்.
இல்லையென்றால் அது வேறு திசையில் எங்காவது அழைத்துச் சென்றுவிடும்.

உதாஹரணமாக, இறைவழிபாடுகளால் சுலபமாகவே அடைய முடிய வேண்டிய லௌகீகம் சாதனைகளை, அதுபற்றிய அறிவு இல்லாததால், ஆன்மீக வாதிகள் என்று தங்களை பிரகடனப்படுத்தும் சிலர்,...

தன்னம்பிக்கை, விடாமுயற்சி,... போன்றவைகளை போதனை செய்து, மக்களுக்கு ஊக்க மருந்து கொடுக்கிறார்கள்...
ஆனால் அவைகள் பிறகு உள்ளத் தளர்ச்சியை ஏற்படுத்தி, மன நோய்களை ஏற்படுத்துபவைகள்.

தன் பலத்தில் நிற்பது பாதுகாப்பானது இல்லை. இறை பலத்தில் நிற்பதே பாதுகாப்பானது.

அப்படி இறை பலத்தில் நிற்பது எப்படி, அதன் மூலம் வாழ்க்கையில்  உயர்வது எப்படி? பொருளாதாரத்தில் உயர்வது எப்படி? சாதனைகளை செய்வது எப்படி? புகழ் பெருகும் வாழ்க்கையை நடத்துவது எப்படி? வாழ்க்கையின் சுகங்களை  பூரணமாக அனுபவிப்பது எப்படி?... என்றெல்லாம் சொல்லித்தர , இன்று குருநாதர்கள் மிகவும் அருகிப்போய் விட்டார்கள்.

அந்தத் தொழில்  நுட்பங்கள் இன்று கிடைக்காமல் போய்விட்டன.

அவைகளை  சரியான முறையில், சுருக்கமாக எளிமையாக தொகுத்து
இல்லறப் பருவத்தில் உள்ள ஆன்மீக அன்பர்களுக்கான  பயிற்சியாக வடிவமைத்துள்ளார் அருள் மிகு றிஷிகேஷ் தபஸ்வி ஐஸ்வர்ய மஹறிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்கள்.

நூலின் பெயர் – ஆதி

அந்தப் பயிற்சி நூல் மிக எளிமையானது. தாமே படித்து புரிந்து பயிற்சி செய்ய முடியும். தேவைப்பட்டால் தொலை பேசியில் அழைத்து சந்கேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

மென்நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்....
ஆதி

ஆன்மீக உலகில் அதிசயத் திருப்பம்...

Leave a Comment
கடந்த ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்க்கைக் காலத்தில், உடைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கிடந்த ஹிந்து ஆன்மீக தத்துவங்கள்...

இப்போது றிஷிகேஷ் தபஸ்வி ஐஸ்வர்ய மஹறிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்களின் தவத்தில் மீட்கப்பட்டு வருகின்றன.




அவைகளை, சாதாரணமாக யாருக்கும் புரியும் விதத்தில் உபதேசங்களை கொடுத்தும், பயிற்சி தீக்ஷைகளைக் கொடுத்தும் வருகிறார்.

தன்னிடம் நேரில் வர இயலாதவர்களுக்கும், றிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,... என்றெல்லாம் சென்று தங்கி ஞானிகளிடம் கற்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு,

இல்லறப் பருவத்திலேயே அவற்றைப் பற்றிய ஒரு நல் அறிமுக உபதேஷங்களாவது கிடைக்கவேண்டுமே, என்ற எண்ணத்தால், மிகச் சிறந்த ஆன்மீக நூலை எழுதியுள்ளார்.

நூல் பெயர் – ‘ராஜி: பகவத்கீதை 108 ரத்னமாலை‘ அவை, மென்நூல் எனப்படும் பி.டி.எஃப். பிரதியாகவே கிடைக்கின்றன.


 


நூலின் அடக்க விலை ரூ 500 என்றாலும், அது இலவசமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆன்மீக ஆர்வலர்கள் அவற்றைப் பயன்படுத்தி  உங்கள் பயிற்சிகளில் மிகப் பெரிய உயர்வுகளையும், சாதனைகளையும் அடைய முடியும்.

மென்நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்....


https://drive.google.com/open?id=12H5UITaEviyrx3brPM0a14qc8XugOd3Q  


அப்படி அங்கிருந்து பெற முடியாவிட்டால் தொடர்புகொள்க:

மெயில் முகாவரி: YOGEENDRA3@GMAIL.COM
தொலைபேசி: 9042600600  /  
வாட்ஸ்ஆப்: 942800800


 வீடியோ உதவிகளுக்கு: 

https://www.youtube.com/playlist…