பண்டிகைகள் நற்பலன் தர - கொண்டாடும்போது கவனிக்க வேண்டிய
விஷயங்கள்:
1. பண்டிகையின் லட்சியம்
தம்மையும், சார்ந்தவர்களையும், சந்ததிகளையும் பண்படுத்துவது, பக்குவப்படுத்துவது. அதனால், பண்டிகை கொடுக்கவேண்டிய மனப்பக்குவங்கள்
தமக்கும் சந்ததிகளுக்கும் உருவாக உதவியாகவும், இடையூறு இன்றியும் இருப்பது.
2. குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் நேரில்
அளவளாவுவது, மகிழ்ந்திருப்பது, ஓய்வெடுப்பது. நேரில் சந்திக்க இயலாதவர்களுடன்
சாதனங்கள் மூலம் அளவளாவுவது.
3. உறவுகள், நண்பர்கள், சார்ந்த உயிரினகள்...
போன்றது அன்றி, உயிரற்ற ஊடகங்களுடன் மகிழ்ந்திருப்பதை கூடியவரை தவிர்ப்பது.
4. குழந்தைகளுக்கு சஹநண்பர்களுடனும்,
உறவினர்களுடனும் மகிழ்ந்திருக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது. ஆபத்து
இல்லாத, முறை தவறாத - குழந்தைகளின் குதூகலங்கள், சேட்டைகளை ரசிப்பது,
அங்கீகரிப்பது, பாராட்டுவது.
5. பண்டிகை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், வீடு கூட்டுதல்,
துடைத்தல், சுவாமி படம் துடைத்தல், அலங்காரம் செய்தல், சமையல் செய்தல்,
பரிமாறுதல், விருந்தோம்பல் காரியங்கள், போன்ற ஏற்பாட்டுப் பணிகளிலும் குழந்தைகளை
ஈடுபடுத்தி உற்சாகமாக செய்யக் கற்றுக்கொடுப்பது.
6. குழந்தைகள்
வேலைகளை செய்வதை ‘அவர்களை கஷ்டப்படுத்துவதாக’ நித்தல் ஆகாது. அது அவர்களை
பண்படுத்துவது. அதனாலேயே ‘பண்’டிகை என்று பெயர் வந்தது.
7. சாதாரண நாட்களில் சற்று அதிக ஒய்வு
கிடைக்கும் நபர்கள், பண்டிகை நாட்களில் சற்று அதிக வேலைகளை எடுத்துக்கொண்டு, சாதாரண
நாட்களில் சற்று குறைவாகவே ஒய்வு கிடைக்கும் நபர்கள் பண்டிகைகளில் சற்று அதிக
ஒய்வு எடுத்துக்கொள்ள உதவும் விதத்தில் தமது நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும்.
8. தம்மை சார்ந்தவர்களில், தம்மைவிட பொருளாதார
வசதிகளில் குறைந்தவர்கள் மனதில் மிகுந்த ஏக்கங்களையோ, தாழ்வு மனப்பான்மைகளையோ,
பொறாமைகளையோ,... தூண்டும் விதங்களில் தமது பேச்சு, நடத்தைகள்.... இல்லாதவாறு
பார்த்துக்கொள்ளவேண்டியது.
9. சார்ந்து வாழும் பெரியவர்களுக்கு போதிய
மரியாதைகளை கொடுத்து, அவர்களுக்கு மன திருப்தியும், பெருமிதமும் வரும் விதங்களில்
தமது பேச்சு, நடத்தைகள்.... இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டியது.
10. பெரியவர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து,
அவர்களைப் பற்றிய பெருமைகளை பேசி மகிழ்வித்து ஆசிபெறுவது மிகுந்த பாக்கியத்தை
தருவது.
11. எப்போதுமே, பெரியவர்களிடம் சில குறைகள்
இருக்கலாம். பல நிறைகளும் இருக்கும். குறைகளுக்காக மனதில் வெறுப்பு வருதல் கூடாத
பழக்கம். எல்லோருக்குமே விதியின்படி சில திறமைகளும், சில இயலாமைகளும் இருப்பது
பொதுவான பிறப்பியலே. அதைனை வைத்து ஒருவரை வேண்டாம் என நினைக்காமல், அந்த குறைகளால்
பாதிக்கப்படாத இடைவெளியுடன், அதேசமயம் அன்புடனும் அக்கறையுடனும் அவர்களுடன்
உறவுகளை பராமரிக்கப் பழகிக்கொள்ள வேண்டியது.
12. பண்டிகைகளுக்கு உரிய தெய்வ வழிபாட்டு குல
வழக்கங்களை சோம்பல் இன்றி கேட்டு கற்பது, கடைபிடிப்பது இளம் தலைமுறைகளுக்கு
கற்றுக்கொடுப்பது,... இவைகள் மிகவும் முக்கியம்.
0 comments:
Post a Comment