பெருமை மிகு வேதம்....

Leave a Comment
வேதம் அறிமுகம்....

பாரத விஞ்ஞானம் வேதம்
எதனால் உந்தப்பட்டு இந்த மனமானது சுகங்களுக்காக ஏங்குகிறது, பல விஷயங்களைத் தேடிச் செல்கிறது? [கேன இஷிதம் மன: பததி ப்ரேஷிதம்] என்று இந்த நாட்டின் இளைஞர்கள் அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டார்கள். அந்த கேள்விக்கும் பாரத விஞ்ஞானிகள் - ரிஷிகள் தெளிவாக பதிலை கொடுத்து, மனதையும் உலகையும் இயக்கும் பெரும் இயக்குசக்தியைப் பற்றி நிரூபித்துள்ளார்கள் - 20000 தலைமுறைகளுக்கு முன்பே! 
அதை தெளிவாக நிரூபிக்கும் பாரதத்தின் விஞ்ஞான நூல்தான் வேதம்’!

திடீர் அறிவாளிகள்.....
ஆனால், இப்போது திடீரென 2000 ஆண்டுகளாக சிந்திக்கத் துவங்கியவர்கள், பேச எழுத மொழியையே 500ஆண்டுகளுக்கு முன் ‘கண்டுபிடித்தவர்கள்’, மேற்கு நாட்டு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் - அப்படி எல்லாம் இயக்கு சக்திஎன்று எதுவுமே இல்லை, உலகில் எல்லாம் இயற்கையாக நடக்கிறது, இயற்கையும் யதேச்சையாகவே நடக்கிறது, இவைகளை இயக்கும் சக்தி என்று எதுவும் கிடையாதுஎன்று.
உண்மையில் இந்த வாதம் 100% பொய்! ‘யதேச்சையாகத் தோன்றி, யதேச்சையாக சுடத்துவங்கிய நெருப்பு, ஏன் அதேபோல யதேச்சையாக திடீரென்று 'ஜில்'என்று இருக்கவில்லை?’ என்று ஒரு கேள்வியைக்கூட கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு அறிவு இல்லாதபோது, அதற்கு பதிலை தேடும் அறிவோ, பதிலை கூறும் அறிவோ இருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை.
 Image result for solar system

ஆனால், இதுபோன்று ஆயிரக்கணக்கான நுட்பமான கேள்விகள், மனித அறிவினால் பதிலளிக்கப்பட முடியாதவைகள் உலகில் கிடப்பதை, வேதம் காட்டுகிறது. அவைகளுக்கு பதிலையும் வேதம் அளிக்கிறது. அந்த பதில்கள் சரியானவை என்பதையும் வேதம் நிரூபிக்கிறது! யாரையும் அந்த உண்மையை பார்க்கவைக்கிறது! 

ஆனால், முழுமையான அறிவு இல்லாததால், பொய்களைப் போட்டு நிரப்பிய வாதங்களை அறிவியல்என்ற பெயரில் உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் நம்பவைப்பதாலேயே இன்று மனிதனுக்கு மன அழுத்தங்கள் அதிகமாகி, குற்றங்களும், கவலைகளும் அதிகமாகி வருகிறன்றன - உண்மை!
சுகமனம்
அதேசமயம், ‘இயக்கும்-சக்தி’யை பற்றி அறியும் அளவிற்கும், அதனுடன் இணையும் அளவிற்கும் இந்த மனம் நிம்மதி அடைகிறது, சந்தோஷமாக இருக்கிறது, திறமையாக இருக்கிறது, சாதனைகளை செய்கிறது, மற்றவர்களின் சிரமங்களையும் துடைக்கும் திறன்களுடன் இருக்கிறது, சூழ்நிலைகளால் பாதிக்கப்படாததாகவும் ஸுகமனமாக இருக்கிறது!    

சூக்ஷ்ம ஞான நாடி
“நமக்குள் நூற்று ஒரு நாடிகள் ஓடுகின்றன. அவற்றுள் நூறும்... கவலை, தாழ்வுமனம், மன அழுத்தம், பயம்,.. போன்று பல்வேறு நோக்குகளுடன் அமைந்தவைகள். ஒன்று மட்டும் ‘ஞான நாடி’. அது சத்தியத்துடன் [ = இயக்கு சக்தியுடன் ] இணைவது” என்று வேதம் சொல்கிறது.
குண்டலினி....
நமது மூலாதாரத்தில் அளவில்லா ஜீவசக்தியான ‘குண்டலினி’ என்பது இந்த நாடிகளின் வழியே பாய்ந்து சென்று உரிய பலன்களை ஏற்படுத்துகிறது. இந்த குண்டலினயானது, காதில் விழும் வார்த்தைகளுக்கு ஏற்பவே உரிய நாடிகளில் பயணம் செய்யும்.
அதேபோலவே, உரிய வார்த்தைகளால் இந்த ‘ஞானநாடி’ வழியே இயங்கினால், இந்த மனம் அந்த ‘இயக்கு-சக்தி’யை பார்க்கும் திறனை அடைகிறது; பிறகு அந்த ‘இயக்குசக்தி’யுடன் இணைகிறது. அதனால் மனமானது பேரின்பம், பெருமிதம், திருப்தி, நிம்மதி, தன்னம்பிக்கை, தைர்யம், சரியான திறமைகள், வெற்றிகள்,... என்று நல்லவை எல்லாவற்றையும் அடைகிறது. 
இதை செய்விக்க வேதத்தில் ஒரு ‘போதனைத்தொழில் நுட்பம்’ உள்ளது - உலகில் எங்கும் இல்லாதது!
பாரத -   பாரம்பரியக் - கல்வி
இந்த போதனையே பாரதத்தின் கல்விமுறையாக 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதை அறிந்த குருநாதர்கள் ஊருக்கு 10 பேர், 100பேர் என இருந்தனர். மன்னர் முதல் தொழிலாளி வரை 100% அனைவரும் அவர்களிடத்தில் இந்த கல்வியை 20 வயதிற்குள் கற்றுவந்தனர். இதுவே நம் பாரம்பரிய அடிப்படைக் கல்வியாக இருந்தது.
[அதன் பிறகு திருமணம் அதன் பிறகு உயர் கல்வி!] 

Image result for students study think vedas


இந்த கல்வியினால்தான், நம் முன்னோர்கள் மிக உயர்ந்த சாதனைகளை செய்தார்கள், மிக நிம்மதியாகவும் வாழ்ந்தார்கள், வீடே, ஊரே, நாடே ஒற்றுமையாக வாழ முடிந்தது. வீட்டுக்கு பூட்டே இல்லாமல் பல ஆயிரம் தலைமுறைகள் வாழ முடிந்தது!

பிரிட்டிஷாரின் சதி...
இந்தக் கல்வியினால் நாம் அன்று உலகிலேயே மிகவும் முன்னேறி இருப்பதை பார்த்த பிரிட்டிஷ்காரர்கள் நம்மை அவர்களுக்கு நிரந்தர அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காக, ‘வெள்ளையர்கள்தான் பெரிய அறிவாளிகள், நமது முன்னோர்கள் மூட நம்பிக்கைகளுடன் வாழ்ந்த கற்கால மனிதர்கள்‘ என்று நம்மையே சொல்ல வைப்பதற்காக ‘மெக்காலே’ என்ற அதிகாரி மூலம்  அதற்கு ஏற்ற ஒரு ‘சதிப் பாடத்திட்ட’த்தை 1837ல் வடிவமைத்து, அதைப் படித்தவர்களுக்கு வேலை, சம்பளம், போனஸ், பென்ஷன்,.. என அறிவித்து, நமது பாரம்பரிய குருநாதர்களை சுட்டுக்கொன்று நம் கல்வி முறையை தடுத்து அழித்தார்கள்.
[ ஆனால் உண்மையில் அவர்கள்தான் இன்றுவரை காட்டுமிரானடி மூடர்களாகவே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்று முறையான சமையல், நல்ல சாப்பாடு குடும்பம்,... என்றுகூட எதுவுமே கிடையாது! ஏன், தினசரி குளிக்கும் பழக்கமே கிடையாது - ஆண்டில் ஒருசில முறைகளே குளிப்பார்கள்! ]
Image result for indian education founder mecauly
நமது துர்பாக்கியம் - நாடு விடுதலை அடைந்தும் அவன் வைத்த அதே கல்வியே தொடர்கிறது. அதனால்தான் அதை படிக்குமளவு ஒருவனுக்கு - தன்னை பெற்றோரை குடும்பத்தை மதிக்கத் தெரியாது + முடியாது! கம்பெனிக்கு நல்ல்ல்ல அடிமையாக இருக்கவே தெரியும் + முடியும்! 

சுக யோகம்...
அதனால் நமது பாரம்பரியமான நுண்கல்வி மிகவும் அருகிவிட்டது. அதை அறிந்தவர்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள். இதை அழிய விடக்கூடாது; இது உலகிற்கே மிகவும் அவசியமான பொக்கிஷம்!

இந்த நுண்கல்வி அந்த ஒரு சூக்ஷ்ம ஞான நாடி வழியே குண்டலினி சக்தியை இயக்குகிறது. இதில் ஆசிரியருக்கே வேலை. மாணவனுக்கு வேலை எதுவுமே கிடையாது. அமர்ந்து நுண்போதனையை கேட்கவேண்டியது மட்டுமே வேலை, குண்டலினி அந்த நாடி வழியே முன்னேறத் துவங்கும், உடன் மெல்ல மெல்ல சுகத்தை ஏற்படுத்தத் துவங்கும். முடிவில் மிகப்பெரிய பேரானந்த ஸுகத்தை ஏற்படுத்தும்.
‘பொய்யா விளக்கு, நான்மறை, பொதுமறை,’ என பல பெயர்களில் இந்த வேதம் அழைக்கப்படுகிறது. 

__________________________________________________

இந்த விஞ்ஞானத்தைமந்திர விளக்கு’ என குறுகிய கால வேத கல்வியாக, மிகவும் சுலபமாக இந்தக்காலத்தில் வாழும் அனைவருக்கும் புரியும் விதத்தில் கட்டமைத்து நடத்தி வருகிறார். 12 ஆண்டு அடிப்படைக் கல்வியை  கல்வியை சுருக்கமாக 80 மணி நேரத்திலும், அடுத்து 24 ஆண்டுகால உயர் கல்வியை  160 மணி நேரத்திலும் கற்கும் விதத்தில் ஐஸ்வர்ய மகரிஷி ஸத்குருஸ்ரீ அவர்கள் இந்த ‘மந்திர விளக்கு’ பாடத்திட்டத்தைக் கட்டமைத் துள்ளார்.
காசி, அயோத்யா, மதுரா, இமயமலைகளில் வேதம் கற்றவர். நமது பாரம் பரிய விஞ்ஞான வாழ்வியல் உண்மைகளை கண்டுபிடிப்பதில் உலகில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர். பிரத்யக் விஞ்ஞானி.

குறிப்பு:
இந்த வேதக் கல்வியை கற்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டுகிறோம் -
8825131416, 9042500500




மேலும், வேதவிஞ்ஞான பாடத்திட்ட விவரங்களுக்கு... 



ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்