பணக்கல்வி, பள்ளிக்கல்வி
இரண்டுமே வேண்டும்.
பள்ளிக்கூடங்கள்
பணக்கல்வியை மட்டுமே தருகின்றன.
நற்பண்புகளை
அவைகள்... நம்புவதும் இல்லை,
கடைபிடிப்பதும் இல்லை.
எந்த ஒழுக்கமும் இல்லாத ஒருவர்,
தன் குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கையையும்
சீரழிக்கும் ஒருவர்...
'நல்லாசிரியர்' விருது வாங்கமுடியும்!
கல்வித்துறை அதிகாரியாக இருக்க முடியும்!
பாடப் புத்தகத்தையும் எழுத முடியும்!
பள்ளிகல்லூரிகளைப் பொருத்தவரை
நம்மிடம் நற் பண்புகள்
இல்லை என்றாலும் கவலை இல்லை.
இருந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை!
'நற்பண்புகள் அவசியம்' என்று
பரீக்ஷையில் எழுதத் தெரிந்து இருந்தால் போதும்.
நம்குழந்தைகள் குடும்ப வாழ்வில்
வாழ்ந்தாலும் அழிந்தாலும்
அவர்களுக்கு கவலையும் இல்லை.
ஆனால் கம்பெனிகளுக்கும்
முதலாளிகளுக்கும் நல்ல திறமையான
அடிமையாக இருக்கவேண்டும்.
பள்ளிகல்லூரிகள்
குழந்தைக்குக் கொடுப்பது மார்க்,
அவர்களுக்கு வேண்டியது நம் பணம்,
அவ்வளவுதான்.
ஆனால், நமக்குத் தேவை
நம் குழந்தைகளின் நல்ல குடும்ப வாழ்க்கை.
ஒருவனின் நற்குனத்திற்கு
பள்ளியில் மார்க் இல்லை,
கல்லூரியில் மார்க் இல்லை,
அரசிடம் மார்க் இல்லை,
கம்பெனிகளில் மார்க் இல்லை,
ஏன்,...
உச்ச நீதி மன்றத்திடமும் மார்க் இல்லை!
குழந்தை நல்ல மார்க் வாங்குவான்!
நல்ல சம்பளம் வாங்குவான்!
ஆனால்,
நற்குணம் இல்லை என்றால்
அவன் அமைக்கும் குடும்பம் உருப்படாது!
உண்மையில் அவனும் உருப்பட மாட்டான்!
ஆக,
அரசின் அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டு
சந்ததிகளுக்கு நல்வாழ்வை
நிச்சயம் தரமுடியாது!!
பணக்கல்வியைக் கொடுக்க
எவ்வளவு சிரமங்களை ஏற்கிறோமோ,
அறிவும் விவரமும் உள்ள பெற்றோர்கள் என்றால்...
அதே அளவுக்கு பண்புக்கல்வியையும் கொடுக்க
சிரமங்களை ஏற்கத் தயாராகவேண்டும் -
உண்மையில்
குழந்தைகளின் முழுமையானநல்வாழ்வில்
நாட்டம் இருப்பதால்.
0 comments:
Post a Comment