குடும்பத்தின் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம்

Leave a Comment

பாரத பண்பாட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்
ஞானமில்லா பண்பாடு, அல்லது ஞானமில்லா சடங்குகள்.
பண்பாடு, சடங்குகள் மிக உயர்ந்த நல்வாழ்வை தந்தவைகள், இனியும் தர முடிபவைகள்.
ஆனால் அவைகளைப்  பற்றிய ஞானம் இருந்தால் மட்டுமே அவைகள் பயனைத் தரும் விதத்தில் அவைகளை கையாள முடியும்.
அவைகளைப் பற்றிய ஞானம் இல்லாவிட்டால் சீக்கிரமாக மீட்கவேண்டும், பெற்றுவிடவேண்டும்.
தாமதிக்கும் அளவு அவைகள் அழிவினைத் தரலாம்.
ஏனென்றால்....
ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.
ஒரு கூட்டுக்குடும்பம் இருந்தது. ஒற்றுமையாக வாழ்வது என்று முடிவு செய்து, அனைவரும் சம்மதித்து, கூடிப்பேசி, அதற்கேற்ப வாழ்வை திட்டமிட்டு நடத்தினார்கள்.
குடும்பம் பல்கிப் பெருகியது. குடும்ப உறுபப்பினர்கள் 100பேர் ஆகிவிட்டார்கள். ஆனாலும் தேவையான விட்டுக்கொடுக்கும் குணங்களை வளர்த்துக்கொண்டு, ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.
அவர்கள் அனைவரும் வாழுவதற்கு ஏற்ற ஒரு மிகப்பெரிய மாட மாளிகையை கட்டினார்கள். சகல வசதிகளுடனும் அது இருந்தது. அனைவரையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டது அந்த கற்பக விருக்ஷம் போன்ற வீடு.
வெகு காலத்திற்குப் பின் அந்த மாளிகள் வீட்டு உறுப்பினர்கள் சிதறி வெளியேறினார்கள் சில காரணங்களால். அந்த மாளிகை வீட்டில் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டும்.
அவர்களால் அவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்க முடியவில்லை. அது ஏன், அவ்வப்பொழுது சுற்றிப் பார்க்கக்கூட முடிவதில்லை. அவர்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் பராமரித்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.
பரம்பரை வீடு என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேறவும் மனம் இல்லை.
பலர் சொன்னார்கள், வீட்டின் மற்ற பகுதிகளையும் பார்த்து வைக்க வேண்டுமப்பா அதுதான் நல்லது, ஏதாவது ஒன்றுக்கு பயன்படும்’ என்று சொன்னார்கள்.
எங்களுக்கு ரெண்டு குழந்தைகள்வேறு பிறந்துவிட்டார்கள் அவர்களை பராமரிக்கவே நேரம் போதவில்லையே’ என்று சொல்லி பிசியாக ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
உண்மையை சொன்னால் எதை எல்லாம் வாங்க சம்பாதிக்க ஓடிக்கொண்டு இருந்தார்களோ அதெல்லாம் அந்த வீட்டில் ஏற்கனவே நல்லவிதமாகவே இருக்கிறது. போய் பார்க்காத ஒரு காரணத்தால் கஷ்டப்பட்டு மீண்டும் அவைகளை சம்பாதித்துக்கொண்டு இருந்தார்கள்.
அது மட்டும் இல்லை. பொய் பார்க்காத இடங்களில் புழு பூச்சிகள், வளரத் துவங்கின, விஷப் பூச்சிகள் வாழத்துவங்கின.
ஆனாலும், குடும்பத் தலைவர்கள் மிகவும் பிசியாக இருந்ததால் அவர்களுக்கு இது கண்ணில் படவே இல்லை.
விஷப் பூச்சிகள் பல்கிப் பெருகின. ஒருநாள் இரவு அவைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறங்கும்போது தீண்டித் தீர்த்தன. அந்தோ பரிதாபம் அனைவரும் மாண்டனர்!
ஆனால் அதே மாளிகைக்கு அருகில் சிறிய வீட்டில் குடியிருந்த ஏழை, தான் ஏழை என்றாலும், வேடு சிறியது என்றாலும், அது கொடுக்கும் வசதிகள் குறைவுதான் என்றாலும், சரியாக பராமரித்துப் பயன்படுத்திக்கொண்டு இருந்தான். அந்த வீட்டில் இன்றும் பாதுகாப்பாகவே இருக்கிறான்!
இந்த மாளிகை வீடுதான் பாரதப் பண்பாடு. கூட்டுக்குடும்பம் நம் முன்னோர் வாழ்க்கை முறை., சிறு குடும்பம் நமது வாழ்க்கை, பக்கத்து ஏழை வீடு பிறநாட்டு பண்பாடு...

உண்மைக்கதை: இருந்தும் பயன்படாத நாட்டின் வளம்!

Leave a Comment
சுப்ரமணி எட்டாம் வகுப்பு படிக்கும்  போது அவரது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

சுப்ரமணி கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

சுப்ரமணி: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

சுப்ரமணி: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

சுப்ரமணி: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் சுப்ரமணி கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் சுப்ரமணி வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மீண்டும் வகுப்பிற்கு சென்றார்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேச்சயாக இதன் விளக்கம் சுப்ரமணிக்கு கிடைத்தது.

அவரது தாத்தா அவரது ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். அவரது ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால்  அச்சகரங்களை மாற்றும் பணி அவரது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி சுப்பிரமணியிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற சுப்பிரமணி எழுத வேண்டும். 

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் சுப்பிரமணியை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்கவும், சக்கரப் பகுதிகள் பிரிந்து செல்லாமல் இருக்கவும் சக்கரத்தில் சுற்றிலும் ஒட்டப்படும் இரும்பால் ஆன பட்டை ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று கேட்டான் சுப்பிரமணி.

அதற்கு தாத்தா பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (=3.142!) என விளக்கினார்.

சுப்பிரமணி சிந்திக்கத் துவங்கினார், ‘இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருக்கு அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார்.....’
சுப்பிரமணி மேலும்  சிலவற்றை தெரிந்துகொள்ள தாத்தாவிடம் சில விளக்கங்களை கேட்டார். அதற்குதாத்தா கூறிய வார்த்தைகள் அவரை மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

‘உனக்கு எதுக்கு சாமி இந்த பொழப்பு, நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....’

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தார்..

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? இவர்களிடம் யாரும் கற்கவில்லை என்றால் அவைகள் எல்லாம் அழிந்துதானே போகும். இதுபோல இதுவரை எவ்வளவு இருந்தனவோ? தற்காலத்தில் அவை என்ன ஆனது??? 

"எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

“உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம், சுய கௌரவத்துடன், மன நிம்மதியுடன், ஆடிப்பாடி, மகிழ்ந்து, உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு கெளரவம் விட்டு, நிம்மதி விட்டு, உறவுகளை விட்டு ஓடுவதன் காரணம் என்ன???.....”

“இந்த நாட்டின் நிலப் பரப்பு மட்டுமே நாடு இல்லை. இந்த நாட்டின் அறிவு, பண்புகள், வாழ்வியல்,.... போன்ற அனைத்தும்தான் நாடு. நிலப்பரப்பினை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவைகள் எல்லாவற்றையும் ஏற்கும் பொது, இந்த நாட்டின் அடையாளமே அழிந்து போகிறதே. இந்த நிலப்பரப்பில் இருக்கும் ஒரு அந்நிய நாடு என்றுதானே சொல்லவேண்டி இருக்கிறது?....' 


அவரது எண்ணங்கள் நியாயமானவைகள். பதில் அளிக்கப்பட வேண்டியவைகள். 

தொல்காப்பியரிடமிருந்து சுவையான செய்திகள்....

Leave a Comment
தொல்காப்பியரின் இயற்பெயர் - ‘திரண தூம அக்னியார்’. தகப்பனார் பெயர் ‘சமத அக்னியார்’. 
[ இருவருடைய பெயருமே சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன! ] 
தொல்காப்பியத்துக்கு முன்பும் கூட தொல்காப்பியர் படித்த இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் இருந்து உள்ளன, அவைகள் இப்போது கிடைக்கப் பெறவில்லை. 
[ திறமையான இலக்கிய, இலக்கண நூல்கள் வரவேண்டும் என்றால் அதற்கு முன்பு அந்த மொழிக்கு நிச்சயமாக நீண்ட வாழ்க்கை இருந்திருக்க வேண்டும்! ] 
தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தொல்காப்பியக் காலம் பணிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நிரூபிக்கிறார். 
[ வெளிநாட்டவர்கள் தொல்காப்பியரின் காலம் கி.மு.எழுநூறு என்றும் மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டுகள் என்றும் கூறுகிறார்கள். இது உள்நோக்கம் உள்ள சதி. நம்மை நமது பண்பாட்டில் உறுதியான பெருமையை அடைய முடியாமல் செய்யவும், அவர்களை விட நாம் நம்மை உயர்வாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான். இதன் பலன் - 1. அவர்கள் நம்மை சுலபமாக மதம் மாற்ற முடியும். 2. நம்மவர்களை அவர்களுக்கு வேலை செய்யும் அடிமை வாழ்க்கையையே விரும்புபவர்களாக பாதுகாக்க முடியும். ]

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முந்தைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார், என்மனார் புலவர்என்பஅறிந்திசினோரேமொழிப யாப்பறி புலவர்”, மொழிப தொன்னெறிப் புலவர் எனவும், பிறவாறும்.  

தொல்காப்பியத்திற்குப் 'பனம்பாரனார்' என்பவரால் இயற்றப்பெற்ற சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது. தொல்காப்பியனார், பனம்பாரனார், அதங்கோட்டாசிரியர் முதலிய மாணவர் பன்னிருவர் அகத்தியனாரிடம் தமிழ் பயின்றனர் என்பது, நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் செய்தியாகும். எனவே, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார். தொல்காப்பியனாருடன் பயின்றவர் என்பது அறிதற்குரியன அப்பாயிரத்தில் உள்ள... 
[ ‘அகத்தியர்’ என்ற வார்த்தைக்கான பொருள் கோள் வரையினை அறியவேண்டும் முதலில்.  அகத்தின் இயல்பினர் அகத்தியர் ஆவர் அல்லது அகத்தை இயம்புபவர் அகத்தியர் ஆவர். இரண்டு விளக்கங்களிலுமே அகத்தின் மற்றும் அகத்தை இரண்டு வார்த்தைகளுமே அகம் என்பதன் பிற உரு வார்த்தைகள் ஆகும். அகம் என்பது சம்ஸ்க்ருத பதம் ஆகும்! அதன் பொருள் நான், அல்லது ஆத்மா அல்லது சுயரூபம் என்று பொருளாகும். ] 
 
தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து 
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல் 
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” 
என்னும் நூற்பாவால் அறியலாம். 
[ நான்கு மறைகள் என்றால் நான்கு வேதங்கள். தொல்காப்பியரும் அவருக்கு முன் இருந்தவருகளும் நான்கு வேதங்களையும் கற்று இருந்தார்கள். அன்று இருந்த பாண்டிய மன்னரும் வாதங்களைக் கற்றவர்களை சபையில் முக்கிய பதவியில் வைத்து இருந்துள்ளார். அப்படி என்றால் தோல்கப்பியருக்கு முன்பும் வேதம் இருந்து உள்ளது என்பதும் மன்னன் முதல் அறிஞர்கள் யாருமே மக்களும் வேதத்தையோ சமஸ்கிருதத்தையோ தேவையில்லாதது என்று புறக்கணித்து வாழவில்லை என்பதும் தெரிகிறது. அதற்குமேல் அப்படிப்பட்டவர்கள் தமிழுக்கு சேவை செய்தவரை தமிழ் பேசும் மக்கள் நன்னெறியிலே வாழ முடிந்துள்ளது என்பதும் தெரிகிறது. ]
[ அன்றிலிருந்துஇன்று வரை வழக்கத்தில் இருக்கும் முதல் தமிழ் சங்கம் என்ற சொற்றொடரில் ‘சங்கம்’ என்பது சம்ஸ்க்ருத வார்த்தையே. யாரும் தமிழில் சமஸ்க்ருதத்தை பயன்படுத்துவதை அன்று தவறாக நினைக்கவில்லை. சமஸ்க்ருதத்தை அந்நிய மொழியாகவும் நினைக்கவில்லை. சிவன், முருகன், அகஸ்தியர்,... போன்ற வார்த்தைகளும் சம்ஸ்க்ருத வார்த்தைகளே. அன்றே இந்த தெய்வங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதும் இதன் மூலம் அறியப்படுகிறது.  வேதத்தையும்கூட வழிபாடுகளையும்கூட அன்று தமிழ் பேசிய மக்கள் அன்னியமாகவோ வாழ்க்கைக்கு தேவை இல்லாதது என்றோ, வேதம் இல்லாமல் ஒரு பொருள் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து விட முடியும் என்றோ யாருமே நினைத்ததுகூட இல்லை. அதற்கு இன்றுவரை நிரூபணங்கள் எதுவுமே இல்லை. ]



உணமைதான் மனிதனின் மூளை மனதினை உற்பத்தி செய்கிறது என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். அது வெறும் நம்பிக்கையே.

மனம்தான் வாழுகிறது. அது தனது விருப்பத்திற்கு ஏற்ப உடலையும் மூளையையும் ஏற்படுத்துகிறது. 

கருத்தரிக்கும் முன்பே உண்மையில் நான் இப்படித்தான் வாழப்போகிறேன் என்ற உணர்வுடன் முடிவுடன் மனம் இருக்கிறான்.

அவனது விருப்பப்படியே முதல் கருவின் டி.என்.ஏ. அமைகிறது. பிறகு அதற்கு ஏற்ப மூளை உருவாகிறது.
தொல்காப்பியத்தில் ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், முன்னைய நூலாசிரியர் பலரைத் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். 
அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம், அதன் வழிநூல் என்பதூஉம் பெற்றாம்” 
என்பது, தொல்காப்பியத்துப் பேராசிரியர் உரையில் காணப்படுகின்றது.
தொல்காப்பியனாருக்கு முன், புலவர் பலர் இருந்து அவர்கள் தமிழ் இலக்கண நூல்களைச் செய்துள்ளனர் என்பது அறியப்படுகின்றது.

தொல்காப்பியனார், தாம் இயற்றிய தொல்காப்பியத்தினை, நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தனது பேரவையில், நான்கு மறைகளையும் முற்ற உணர்ந்த அதங்கோட்டாசிரியரின் முன்னிலையில், அரங்கேற்றினார் என்பது புலப்படுகிறது. எனவே, தொல்காப்பியனாரை ஆதரித்து இந்நூலினைச் செய்வித்தவன், நிலந்தரு திருவிற் பாண்டிய வேந்தன் என்பதை,
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றியல்
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
என்னும் நூற்பாவால் அறியலாம்.