அவசரமாய் ஒரு சுதந்திர தின சிந்தனை....

Leave a Comment
ஆகஸ்டு 15 வருகிறது, கொண்டாடத் தயாராக வேண்டும், 
சீக்கிரமா சொல்லுங்க உங்க ஆப்ஷனை....

மிக முக்கியமான ஒரு விஷயம்.... -

ஒரு 5 நிமிடம் தாருங்கள்....


சுப்பிரமணியுடைய வாழ்வில் நடந்த ஒரு நிஜ சம்பவம்....

அப்போ சுப்புவோட அம்மா மகாலக்ஷ்மி, கர்பமா இருந்தாங்க, நம்ம சுப்பு கருவில்,...

ஒருநாள் அந்த அம்மா பொழுதுபோக்கா நடக்கும்போது ஒரு ரவுடி திருடர்கூட்டம் கடத்திக்கிட்டு போயிட்டாங்க

கொண்டுபோய் வச்சு அவங்க கம்பெனிக்கு எடுபிடியா வேலை வாங்கிகிட்டு கொத்தடிமையா வெச்சு இருந்தாங்க.

அப்போதான் சுப்புவும் பிறந்தார்.....

அப்போ அந்த திருட்டு ரவுடிக்கூட்டம் அந்த அம்மா மகாலக்ஷ்மியை,
“ஏய் மொட்டச்சி இங்க வா, ஏய் மொட்டச்சி அதைக் கொண்டுவா...”
என்று கூப்பிட்டு பிழிவார்கள்....

அப்போதான் சுப்பிரமணி பிறந்தான்...

அப்போ விவரம் தெரியாத சின்ன குழந்தை சுப்பு.....
அந்த அம்மா ரவுடிகளை கெஞ்சினாங்க , “தயவு செய்து என்னை மொட்டச்சின்னு கூப்பிதாதீங்க, குழந்தை மனசு பாதிக்கும்”ன்னு....

அதற்கு ரவுடிகள் , “என்னடி மொட்டச்சி உனக்கு ஒரு குழந்தை கேட்குதா?, உனக்கு எதுக்குடி மொட்டச்சி ஒரு மரியாதை?....” என்று ஷூ காலால் மிதித்தார்கள்.....

இதற்கு இடையில்தான் சுப்பிரமணி பிறந்து வளர்ந்தான்....

அப்புறம் ஒரு நாள் அந்த அம்மா மகாலக்ஷ்மி ரவுடிகளிடமிருந்து தப்பிச்சுட்டாங்க.....

குழந்தையை சுதந்திரமா வளர்த்தாங்க, ஒரு பள்ளிக்கூடத்துலயும் சேர்த்தாங்க,,,,

பையன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் , அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் அவனை பிடிச்சுப்பாங்க....

பையன் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கானே, கொஞ்சம் பேசலாம்ன்னு பேசுவாங்க....

அப்ப எல்லோரும் கேட்பாங்க, “சாமி, உங்க அம்மா யாரு...”ன்னு.

உடனே அந்த சுப்பிரமணி நெஞ்சை நிமிர்த்தி சொல்வாரே பார்க்கலாம்,....

“எங்க அம்மா பேரு மொட்டச்சி, நான் மொட்டச்சியின் புதல்வன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...” என்று.....
கேட்டவர்கள் எல்லோரும் சிரிப்பார்கள், குழந்தை சுப்புவுக்கு தாம் ஏதோ பெரிய சாதனையாக பேசியதற்கு பாராட்டும் விதத்தில் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்துடன் சொல்லுவான்...

“எங்க அம்மா பேரு மொட்டச்சி, நான் மொட்டச்சியின் புதல்வன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...” என்று.....

எல்லோரும் சிரிப்பார்கள், குழந்தை சுப்புவுக்கோ ரொம்பவும் பெருமிதமாக இருக்கும்....

அப்போ அதில் ஒருவன் கேட்டான், “ஏனப்பா உங்க அம்மாவுக்கு ‘மகாலக்ஷ்மி’ன்னு ஏற்கனவே பெயர் இருக்கே, இது ஏன் இந்தப் பெயர்” ... என்று....

அதற்கு சுப்பு பெரிய அறிவாளித்தனம் என நினைத்து பதிலை சொன்னான்...

“அது பழைய கட்டை வண்டி காலப் பெயர் , அதுமட்டும் இல்லை அது ஹிந்து மத வெறியைக் குறிக்கும் பெயர்.....”

“அதனால என்னப்பா... நீ ஹிந்துவா தானே பொறந்த , அப்படி கூப்பிடறது உனது உரிமைதானே கூப்பிடு ....”

“இல்லை அப்படிக் கூப்பிட்டால் அவர்கள் மனசு கஷ்டப்படும், அவர்களுக்கு பிடிக்காது....”

“யாருக்குப் பிடிக்காது....”

“எங்க அம்மாவோட பழைய முதலாளிக்கு....”

“அவங்கல்லாம் இல்லையே செத்துட்டாங்க....”

“ஆனா, அவங்க குழந்தைங்க இருக்காங்களே...”

“அதனால என்ன பா, நீ சொல்லு எங்க அம்மா மகாலக்ஷ்மின்னு...”

“மாட்டேன், மத்தவங்க மனசு கஷ்டப்படும்....”

“உங்க அம்மா மனசு கஷ்டப்படாதா....”

“நாம மற்றவங்களுடைய சந்தோஷத்துக்காக தியாகம் செய்யனும்...”

“அவங்களோட சந்தோஷத்தைப் பற்றி இவ்ளோ கவலைப் படறியே என்ன காரணம்?”

“நன்றி உணர்ச்சி....”

“அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்....”

“அவங்க எங்க குடும்பத்தின் பழைய முதலாளி....”

“அப்பா தங்கம், அவங்க உன் அம்மாகிட்ட இருந்த தங்கத்தை ஆபரணங்களை எல்லாம் கொள்ளை அடிச்சுட்டு ,

ஆயிரம் ரூபாய் வேலை வாங்கி விட்டு 10 ரூபாய் சோற்றினை போட்டவர்கள்,

அதுவும் அடுத்தநாள் வேலை வாங்கவேண்டுமே என்பதற்காகத்தான்...

உங்க அம்மா நல்லா இருக்கனும்ங்கறதுக்காக இல்லையே....”

“இதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது....”

“அது ஏன் இதற்கு மட்டும் தெரியாது....”

“அதை எல்லாம் எனக்கு இன்னமும் சொல்லித்தரலை...”

“சரி , இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ...”

“முடியாது , நீங்க சொன்னா ஒத்துக்கமாட்டேன், கேட்கவும்மாட்டேன்.”

“ஏன். அப்படி?”

“நீங்கல்லாம் விஞ்ஞானம் தெரியாதவர்கள். பழமைக் காட்டு வாசிகள். கற்கால மனிதர்கள். மத வெறியர்கள்.... அதனால்...”

“இப்ப நீ பேசிய இதை எல்லாம் உனக்கு யாரும் சொல்லிக்கொடுத்தார்களா என்ன....”


“ஆமாம்,...”


“யார்சொல்லிக் கொடுத்தார்கள்...”


“எங்கள் ஸ்கூலில....”


“என்னன்னு சொல்லித்தந்தாங்க.....”


“எங்க அம்மா பேரு மொட்டச்சி, நான் மொட்டச்சியின் புதல்வன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... ன்னு,  
“எப்பவும் பெருமையா சொல்லணும்... ன்னு,  
“இதை மாற்றிச் சொல்லுபவர்கள் காட்டுமிராண்டிகள், மத வெறியர்கள்... ன்னு,
"எங்களுக்கு உங்களைப்பற்றி எல்லாத்தையுமே ,  முன்னாடியே சொல்லிக்கொடுத்துட்டாங்க...
“அதனால, இப்ப நீங்க என்னை ஏமாத்த முடியாது....”


“எந்த ஸ்கூல்ல சாமி படிக்கிறீக....”


“நான் இந்திய அரசின் பள்ளியில் மாணவன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்...... “


யார் இந்த சுப்பிரமணின்னு உங்களுக்கே நல்லா தெரியும்...


அடுத்த விஷயத்திற்கு வருவோம்...





“நமது முன்னோர் நம் நாட்டிற்குக் கொடுத்த பெயர் ‘பாரதம்’...”


வெள்ளையன் வைத்த பெயர் இந்தியா....


பாரதம் [ भारतम् / Bhaaratam ] என்றால்...

பாவிற்கான ரதம்  -  பாரதம் 


भा - Bhaa - பா = 

பேரொளி , ஞானம், மெய்ஞானம், மெய்யறிவு, ஒட்டுமொத்த உலகை, சிருஷ்டியைப் பற்றிய வேத ஞானம் பா

[ உதாரணமாக நமக்குத் தெரிந்த வார்த்தை மூலம் புரிந்துகொள்வோமே:

ப்ரபாகரன் = ப்ர + பா + கரன் !

ப்ர = சரியான ;

பா = மெய்ஞானத்தினை ;

கரன் = ஏற்படுத்துபவன்;


அதாவது ஒரு திறமையான குரு நாதர் !

இந்த வார்த்தையில் இருப்பது இந்த ‘பா’-தான் ! ]


रतम् - Ratam - ரதம்  =   

அதை சுமந்து செல்வதேதனது வேலை என்று அதற்கெனவே தன்னை அர்ப்பணித்துக் காத்துக் கிடப்பது எதுவோ அது ரதம். 


பாரதம் [ भारतम् / Bhaaratam ] என்றால்...

வாழ்க்கையைப் பற்றியே தெரியாமல் வாழ முயற்சிக்கும், அறியாமையில் கிடக்கும் மனித வர்கத்திற்கு வாழ்க்கையைப் பற்றிய மெய் ஞான ஒளி விளக்கை எடுத்துச் சென்று ஒப்படைப்பதே தனது வேலை என்று, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கிடக்கும் வாழும் நாடு .... என்று பொருள்....

அதாவது 'உலகின் குரு' என்று பொருள்....


அதனால் தான் பெருமையுடன் சொன்னார்கள் நம் முன்னோர்கள் ....
“எங்கள் 'பாரத தேசம்' என்று தோள் தட்டுவோம்....”  என்று....


பாரதி =

அப்படி பாரதம் தந்த பலனைப் பெற்று உண்மையை அறிந்து, அந்த ஞானம் தந்த இன்பத்தில் முழுகித் திளைத்து இருந்துகொண்டு, அந்த ஒளிவிளக்கை எடுத்துச் செல்லும் அதே வேளையை தனது வேலையாக ஏற்று, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கிடப்பவன் வாழ்பவன்..... என்று பொருள்....


நாம் அனைவரும் பாரதிகள் .....  


இது நம் பெயரும் அதன் பொருளும்!    உண்மையும் கூட,....!

ஒருவேளை உண்மை இல்லை என்று யாராவது கூறினால்,....


இனியாவது அப்படி ஆகவேண்டியது உனது லக்ஷ்யமாக இருக்கவேண்டும்... என்பதே அது தரும் பொருள்.....


பாரதம் , பாரதி-க்கு இதுதான் பொருள்...


இப்ப சொல்லுங்க.....

இந்தியா , இந்தியர்-க்கு என்ன பொருள்,....?


இப்ப சொல்லுங்க.....

ஆகஸ்டு 15 வருகிறது கொண்டாட தயாராக.....
சீக்கிரமா சொல்லுங்க உங்க ஆப்ஷனை....

________?________  எனது தாய் நாடு. 

1. இந்தியா ;  2.  பாரதம் ]


நான் _______?_________  என்பதில் பெருமிதம் கொள்கிறேன்! 

3. இந்தியன் ;  4. பாரதி ] 


என்ன பதில் போடப்போறீங்க 1ஆ , 2ஆ ?    3ஆ , 4ஆ ?

                  




ஒரு வரலாற்று ஆய்வு உண்மை-
“ஒரு சமுதாயம் தன்னை பாதுகாத்துக்கொள்ள, உயர்வடைய ஒரு உள்ளாற்றல் வேண்டும்.

அந்த உள்ளாற்றலை தன்மானமும், தன் சிறப்புகளைப் பற்றிய பெருமிதமும், தனக்கு ஒரு முக்கியப் பணி இருக்கிறது என்ற உணர்வும்தான் தர முடியும்.

அது இல்லாத சமுதாயம் உலக சமுதாயங்களின் காலில் புழுவாக மிதிபடும், அடிமை நிலையை அடைந்துவிடும், 

தன்னுடைய சந்ததிகளே தனது எதிரிகளின் பட்டியலில் சேருவார்கள்....

தனது சொந்த நிலப்பரப்பையும் இழக்கவேண்டிவரும்....

ஒருநாள்.... தனது பாரம்பர்ய மரபினை வரலாற்றுச் சுவடுகளாக்கிவிட்டு... அழிந்தும் விடலாம்!”


இதைப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள் இதனை அதிகம் பேருக்கு பகிருவோம்.

வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து பகிருவோம்.

உங்கள் நேரத்தையும் கவனத்தையும் கொடுத்தமைக்கு நன்றிகள்....  :) 

பாரதிக்கு ஜெயம்...



0 comments:

Post a Comment