சமையலுக்கு எண்ணையை எப்படி உபயோகிப்பது?

Leave a Comment


“என்ன முருகு, மூச்சு இறைக்க ஓடிவறே, ஏதாவது, பிரச்சினையா....”

“ஏனண்ணே நீங்க மட்டும் எப்படி ஸ்லிம்மா இருக்கீங்க. நானும் ஓடி ஓடிப் பார்க்கறேன். ஒன்னும் கொறைய மாட்டேங்குதே. நானும் நல்லாவே புட் கண்ட்ரோல் எல்லாம் பண்றேன். சுகரும் குறைய மாட்டேங்குதே.”

சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”

எங்கண்ணேமாசத்துக்கு ஒரு தடவைதான்…”

மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருதுபணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

ஆமாண்ணே.. எப்படிண்ணே..

உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடேஎண்ணெய்னால வரக்கூடியது…?”

என்னாண்ணே சொல்றீங்க…?”

ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

நீ மட்டும் இல்லைடே முருகாஇந்தியாவுல இருக்கிறவங்கள்ள பெரும்பாலும் எல்லோருமே, குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க

ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.

நல்ல விஷயம்தானண்ணேசூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இண்டர்நெட்டில கூட படிச்சிருக்கேண்ணே..

உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்கசூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா

உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க

அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.  அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

என்னாண்ணே.. குழப்பமா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது செவ்வாய் கிரகத்துலேர்ந்து இறக்குமதி பண்றாங்களோ?”

ம்பெட்ரோல் எடுத்த கழிவு குரூட் ஆயிலிலிருந்து…”

ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார்தான்ண்ணே, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

கரெக்ட்டா சொன்ன அறிவு, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க

அண்ணே, தாரிலேருந்து எப்படிண்ணே சூரியகாந்தி என்னை வரும்?

அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, அழகான பாக்கெட் போட்டு, மேல சூரியகாந்தி எண்ணைன்னு அச்சடிச்சா வருது!”

என்ன கொடுமைண்ணே இது!

நீ மட்டும் இல்லப்பா, பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டலும் சரி மிக்சர், முருக்குலேருந்து, வறுவல், போரியல்லேர்ந்து எல்லாம் இதே பெட்ரோலியம் கழிவிலிருந்துதான்,...  



என்ன கொடுமைண்ணே இது!

ஒரு லக்ஷ ரூபாய்க்கு ட்ரெஸ் போட்டுக்கிட்டு, பத்து லக்ஷ ரூபாய்க்கு வீடு கட்டிக்கிட்டு விவரமா வாழற கோடீஸ்வரன் கூட தானும் வயத்துல குப்பையா கொட்டிகிட்டு, குழந்தைகளுக்கும் இந்த விஷத்தைதான் கொடுத்துகிட்டு இருக்காங்க ரொம்ப அன்பா, ரொம்ப அக்கறையா!

என்ன கொடுமைண்ணே இது!  

நடக்குற பெரிய மோசடியிலதான், நாம கவனமா ஆரோக்கிய உணவா சமைக்கிறோம் - சாப்பிட்டுட்டு இருக்கோம் பணத்தைக் கொடுத்து விஷம் வாங்கி ஊத்தி ! .

என்ன கொடுமைண்ணே இது!  

எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகாநீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

இல்லைண்ணே..

பாருஉண்மை புரியும்…”

ஆமாண்ணேஅது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

என்னா தெரியும்…”

ம்பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாருகொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.

 டேய் முருகாசூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடேநீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாமே, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

ஏன் முடியாதுபொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வாஅல்லது உன் ஊரில இருக்கற என்னை மில்லுக்காவது பொய் நீயே அரைச்சுட்டு வா. அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாருஆரோக்கியம் தானா வரும்..

ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.  இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான், அதுக்குமேலே உன் குழந்தைகளுக்கும் விஷத்தையே கொடுத்து உன் சோம்பலால் அழிக்க வேண்டியதுதான்டே...

ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டதுகடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்புஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…”

ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..

டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க  நீயும், நானும் அவங்களுக்கு நேரடியாவோ , மறைமுகமாகவோ வேலை பார்க்கிற வேலைக்காரங்க அவ்ளோதான்… 

கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறதுபோய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…” 

இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே.  எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…”

நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே.  இங்க இயற்கை மாறலமாறினது நீயும், நானும்தான்.  இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. 

இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிகிட்டு இருக்குடே… இதெல்லாம் வெளியில தெரியாது , வெளிப்படையாவும் பேச முடியாதுடே. இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?”

எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…”

முதல்ல.. நீ திருந்து, உன் புள்ளைக்கும் இதையே பழக்கப்படுத்து - அது போதும் ! 

எந்த அயோக்கியனோ, அன்பா குழந்தை பெத்து, அக்கறையா விஷத்தைக் கொடுத்து குடும்பத்தோட அழியட்டும் நமக்கென்ன?  




பெருமைகள் பல நிறைந்த மார்கழி

Leave a Comment
சாத்வீகம் நிரம்பிய  உணர்வுகளையும் மன நிலையையும் அறிவையும் உடலையும் மேம்படுத்திக்கொள்ள வருடந்தோறும் வரும் ஒரு வாய்ப்பு. இந்த
பெருமை நிறைந்த மார்கழி மாதம்!

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி . ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணரே கூறியிருக்கிறார்.

மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

உண்மையில் அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம்.


அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம்.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.
மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள்.

இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம். விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
பூ வைப்பது ஏன் ?
அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.

இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள். அது போலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ,
[ஒவ்வொரு பாசுரமாகப் பாடி] திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம்என்னும் சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான்.


இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த
[மார்கழி மாதத்தில்] இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்.....
அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்.....

மார்கழி மாதம் அதிகாலை எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான்.

அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும்,
ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான்.

சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது,
பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.

இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல சாதனங்கள் சொல்லப்பட்டன.

இந்த ஒரு மாதம் தொடர்ந்து வழிபாடுகளை செய்தால் மாணவர்களுக்கு ஆண்டுமுழுவதுமே படிப்பு சுலபமாக கைகூடும். குடும்பத்தில் வர இருக்கும் சிரமங்கள் வெகுவாகவே குறையும். தொழில் அபிவிருத்தி அடையும். உறவுகளின் பலம்  அதிகமாகும். ஆரோக்கியம் அதிகமாகும்!

யோக முறைகளிலும் பலவிதமான சாதனமாக மார்கழி பயன்படுத்தப்படுகிறது.  நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள். அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில் தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம். எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும்,
தேவையான [ அறிவு, ஞானம் ] இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
[ அதில் ஒன்று தான் கோலம் இடுவதும். ] மார்கழியில் கோலம்போடும் பெண்களுக்கு எமோஷனல் பேலன்ஸ் அதிகமாகிறது. உடல் ஆரோக்யமும்கூட அதிகமாகிறது. குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் புரிந்துகொண்டு மனதில் நிலை நிறுத்தி செய்தால் உங்களுக்கு நிச்சயம் அதிக பலன் கிடைக்கும்.

உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்.

இந்த மாதத்தில் இப்படி ஏராளமான நன்மைகள் சம்பாதிக்கக் குவிந்து கிடக்கின்றன! 

உங்கள் வீட்டில் செல்வம் பெருக சில வாஸ்து குறிப்புகள்...

Leave a Comment
உங்கள் செல்வத்தை பெருக்கிக் கொள்ள இந்த வாஸ்து குறிப்புகளை செய்து பார்க்கவும்.
நீங்கள் குடியிருக்கும் வீட்டின், தலை வாசலுக்கான சில வாஸ்து குறிப்புகள்...

குறிப்பு: 1
வடக்கு வாஸ்து மண்டலத்தில், பிராதன நிறமாக நீலம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சமையலறை மற்றும் கழிவறையில் சிகப்பு நிறத்தை தவிர்க்கவும்.
இவ்விடத்தில் குப்பைத் தொட்டி, துடைப்பம், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்றவைகளை வைக்கக்கூடாது. சமையலறை என்பது தீயை குறிக்கும். இங்கே பொருட்களைத் தவறாக வைத்தால், பணம், வாய்ப்புகள் மற்றும் தொழில் வளம் குறையும்.

குறிப்பு: 2
வடக்கு மண்டலத்தில், மணி பிளாண்ட்டை பச்சை பூந்தொட்டியில் வைத்திடவும் அல்லது தொங்க விட வேண்டும்; பார்ப்பதற்கு பச்சை பசேலென இருக்க வேண்டும். இவை செல்வம் மற்றும், தொழில் ரீதியான வாய்ப்புகளை பெருகச் செய்யும்.

குறிப்பு: 3
வட மேற்கு வாஸ்து மண்டலம் உங்களுக்கு வங்கிகள் மற்றும் தொழில் சார்ந்த நபர்களிடம் இருந்து நிதி ஆதரவை பெற்றுத் தரும்.

குறிப்பு: 4
அழகிய நுழைவு வாயில் சந்தோஷத்தையும். வளமையையும் அளிக்கும். மேலும் சமுதாயத்தில் தனிப்பட்ட நபரின் மதிப்பு மற்றும் பாராட்டுக்களை பெறச் செய்யும். ஒழுங்கற்ற முறையில் இருந்தால் உங்களை பிரச்சனைகள் சூழும்.
உதாரணத்திற்கு, தென் மேற்கு கதவு கடன் மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுத்தும். வடக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் தொழில் ரீதியான வாய்ப்புகளையும், செல்வத்தையும் அளிக்கும். கிழக்கு வாஸ்து நுழைவாயில் என்றால் மன அமைதியை தரும். மேற்கு நுழைவாயில் என்றால் செல்வத்தையும், வளத்தையும் தரும்.

குறிப்பு: 5
சமையலறையை தென் கிழக்கு அல்லது தெற்குத்-தென்-கிழக்கு திசையில் அமைத்திடவும். வெளிர் சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறமே இதன் பிரதான நிறமாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம், வேலை பார்க்கும் மேஜை, வரவேற்பு அறை ஆகியவற்றை வடக்கு பகுதிகளில் வைத்தால். ஆரோக்கியமான பண ஓட்டம் இருக்கும்.

குறிப்பு: 6
மேற்கு திசையில், வெள்ளையும் மஞ்சளும் தான் பிராதன நிறங்களாக இருக்க வேண்டும். பணப்பெட்டகம் வைப்பதற்கு இதுவும் கூட சிறந்த இடமாகும். வட்ட வடிtம் என்பது உலக கூறுகளை குறிப்பதால். அந்த வடிவத்தில் இருக்கும் பொருட்களை இங்கே பயன்படுத்தலாம். மேற்கு தென்-மேற்கு என்பது சேமிப்புகளுக்கான மண்டலமாகும்.
இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை படிப்பதற்கான இடமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் பணத்தையும், செல்வங்களையும் இரும்பு பெட்டியில் வைத்து இங்கே வைத்தால், உங்கள் செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கும்.



சொந்த அறிவை மதிக்கும் பள்ளிகள் வேண்டும்!

Leave a Comment
ஒரு மாணவன் பள்ளிப் புத்தகத்தில் உள்ளதைத் தவிர்த்த சொந்த பதிலைத் தந்தால் என்ன செய்வது என்று இன்னமும் ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை, பள்ளிக்கூடங்களுக்கும் தெரியவில்லை கல்வித்துறைக்கும் தெரியவில்லை, அரசுக்கும் தெரியவில்லை. 

நீதிமன்றத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது - பதில் சரி என்றாலும் சட்டப்படி தவறு - என்று ! 

இது சுதந்திர பாரத தேசத்திற்கு அழகல்ல. நாம் இன்னமும் வெள்ளையனுக்கு அடிமை இல்லை. 

நம்மால் தேவைக்கு ஏற்ப நியாயமான கோரிக்கைகளை ஏற்க முடிய வேண்டும். எல்லா நீதிகளையும் என்றுமே எழுத்தில் கொண்டுவர முடியாது. அதற்கு மன சாட்சியுடன் தர்மத்துடன் சிந்திக்க வாழ பழக்குவதே தீர்வு. 

அது இல்லாத பக்ஷத்தில் எழுதப்பட்ட சட்டங்களுடன் மட்டுமே வாழவேண்டிய நிலை நீடித்தால், அது ஒரு அடிமை சமுதாயத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சுதந்திரம் இருந்தாலும் கூட அந்த சமுதாயம் அடிமை வாழ்வையே விரும்புவதாக இருக்கும். 

பாரதம் போன்ற , அறிவிலும் நீதிகளிலும் மிக உன்னத நிலையில் வாழ்ந்த ஒரு நாட்டிற்கு இது அழகல்ல. 

 ஒரு மாணவனால் தேர்வுத்தாளில் எழுதப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குள்ள இந்த பதிலை ஆராயவேண்டும்.....



கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்உயிரிழந்தார்..?

பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?

பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காககட்டப்படுகிறது..?

பதில்;- அவைகள் கீழே விழாமல்இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கியகாரணம் என்ன..?

பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்..எவ்வாறு ஏற்படுகிறது..?

பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி..எப்போது பிறந்தார்..?

பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதா..?

பதில்;- இல்லை.. திருமணங்கள்செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்கட்டினார்..?

பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6பேருக்கு எப்படி சரியாகபிரித்து கொடுப்பது..?

பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!


மாணவனைப் பொருத்தவரை இந்த பதில் சரியாக இருப்பதாகவே நினைக்கிறான். அவனிடம் அதற்க்கான அறிவிப்பூர்வமான, அவன் மனம் சரியென்று சொல்லும் காரணங்கள் அவனிடம் இருக்கின்றன. 

நாம் எதிர்பார்க்கும் பதிலைத்தான் ஒரு மாணவன் சொல்ல வேண்டும் என்று நினைக்க முடியாது. அவனது பதிலில் தவறு இல்லாத பக்ஷத்தில் அது அங்கீகரிக்கப்படவேண்டும். அறிவாளித்தனமாக இருக்கும் பக்ஷத்தில் அது பாராட்டப்படவேண்டும். 

ஆனால் , இந்த பதிலை ஒரு மாணவன் எழுதினால் அவன் முட்டை மதிப்பெண் வழங்கப்படுகிறான். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் குற்றவாளியாக ஆக்கப்படுகிறான். அவமதிக்கப்படுகிறான். 

ஆனால் இவர்கள் வளர்ந்தால் நாளை எதிர் பாராமல் வரும் சிரமங்களில் நல்ல தீர்வுகளைக் கண்பிடிக்கும் நிர்வாகிகளும் , தலைவர்களும் என்ற நிலைகளை அடைவார்கள். அதுதான் நாட்டுக்கும் தேவை. இவர்களால் உலகிற்கே நன்மைகளை செய்ய முடியும். இவர்களது சிறகுகள் வெட்டப்படக்கூடாது. 

ஏனெறால், ஒரு பெரிய நாடு , அல்லது உலக மனித சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதுபோலவே இருக்கவேண்டும் - என்று அவசியம் எதுவும் இல்லை. 

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி மாணவனை ஊக்குவிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வேண்டும், பள்ளிக்கூடங்கள் வேண்டும், கல்வித் துறை வேண்டும், பெற்றோர்கள் வேண்டும், சமுதாயம் வேண்டும்.  

இந்த மாணவனின் மனம் காயமாகாமல் ஊக்குவிக்கத் தெரிந்த நீதி வேண்டும், சட்டம் வேண்டும், நீதிபதிகள் வேண்டும், நீதிமன்றம் வேண்டும். 

அவர்களால்தான் ஒரு சுதந்திர பாரதத்தை உண்மையில் அமைக்க முடியும். 

அப்படி ஒரு அரசாங்கத்தை நிர்வாகத்தைக் கொண்டுவர முடியுமா - என்றால் கொண்டுவர முடியவேண்டும். அதை நோக்கிமட்டுமே நாட்டுப் பற்று உள்ளவர்கள் பயணம் செய்ய வேண்டும்!


டீசன்டான ஒரு மாடர்ன் குழந்தை வேண்டும்....

Leave a Comment


“நாங்க கல்யாணம் செய்துகொண்டு 15வருஷமாச்சு, எங்களுக்கு குழந்தையே இல்லை, இதுவரை 100டாக்டரிடம் போய்விட்டோம், 100 ஜோதிடர்கிட்ட போயிட்டோம் , 1000கோயிலுக்குப் போயிட்டோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு குருஜீ, வாழ்க்கையே ரொம்பவும் வெறுமையா இருக்கு. யாராவது குழந்தை என்ன படிக்கிறான்னு கேட்டா என்ன சொல்றதுன்னே தெரியலை. உலகத்துல யார் யாருக்கோ குழந்தை இருக்கு . எனக்கு ஏன் இல்லைன்னு நெனைச்சா அழுகையா வருது குருஜீ. எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் . நீங்கதான் ஒரு நல்ல தீர்வா சொல்லணும்!”



குருஜீ சொன்னார்.
“முதல்ல நீங்க உடம்பை , ஆரோக்யமா வச்சுக்கணும் அப்பதான் குழந்தையும் பிறக்கும். அந்தக்குழந்தையும் ஆரோக்யமா இருக்கும்”
சரிங்க குருஜீ, நீங்க என்ன சொன்னாலும் கேட்போம்.
“தினசரி ஏதாவது ஒரு பழம் சாப்பிடனும்.”
ஓஹோ
தினசரி ராத்திரி 11மணிக்குள்ள தூங்க போகணும். தினசரி எட்டு மணிநேரமாவது தூங்கனும்.
நேரமே பத்தாதுங்க குருஜீ, வேலை அதிகமா இருக்கு.
“புலிக்க வெச்ச மாவு உடம்புக்கு ரொம்பவும் கெடுதல். மாதம் ஒருநாள் தான் இட்லி தோசை சாப்பிடலாம்.”
அப்படின்னா காலையிலும் ராத்திரியும் என்னதான் குருஜீ சாப்பிடறது
கம்பு, கேஷ்வரகு, வரகு, திணை,... போன்ற தானியங்களில் செய்யப் பழகிக்கொண்டு செய்யணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“குக்கரில் சமைக்கக் கூடாது. பாத்திரத்தில் சோறாக்கி கஞ்சியை வடித்துவிட்டுதான் சாப்பிடனும். தினசரி அரிசிக் கஞ்சி ஸ்டார்ச் உடம்புக்கு நல்லதில்லை.”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
“பருப்பு, காய், சாம்பார், குழம்பு,.. இதையும் குக்கரில் சமைக்கும்பொது அதிக அழுத்தம் வெப்பத்தில் சத்தெல்லாம் அழிந்துவிடும். உணவு வெறும் சக்கையாகிவிடும். அதனால் இதையும் குக்கரில் சமைக்கக் கூடாது. பாத்திரத்தில்தான் சமைக்கணும்,”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மைதா உடம்புக்கு ரொம்பவும் கெடுதல். அது ஆரோக்கியத்தியே அழிச்சிடும். உடனடியா மைதா சாப்பிடறதை விடனும்.
குருஜீ நாங்க மைதாவை சாப்பிடறதே இல்லையே
மைதான்னா மைதாவில செஞ்ச பிஸ்கட், புரோட்டா, ப்ரட், ஸ்வீட், ..... எல்லாம்தான்.”
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ரீபைண்ட் செய்யப்படாத எண்ணையில் தான் சமையல் செய்யனும். ரீபைண்ட் எண்ணை ஆரோக்கியத்துக்கே எதிரி. அதில தானிய என்னைக்கு பதிலா பெட்ரோலியம் கழிவு மினரல் என்னைதான் இருக்கு. அது ரொம்பவும் கெடுதல்.
அப்படியா, ரீபைண்ட் என்னை மட்டும்தானுங்க குருஜீ மார்க்கட்டில கிடைக்குது.
எங்காவது ஒரு கடையில செக்கு என்னை, அல்லது மில் என்னைன்னு சொல்லி விப்பாங்க. கண்டுபிடிக்கணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
ருசிக்காக புளியை ரொம்பவும் சாப்பிடக்கூடாது. அதிகபக்ஷம் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ஒரு புளியங்கொட்டை விதை அளவிற்கு சாப்பிடலாம்.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
உணவுப் பொருளை ப்ரிட்ஜில வச்சுட்டா அதனுடைய கெமிகல் அமைப்பு மாறிடுது. அது முக்கால்வாசியும் விஷமா ஆயிடுது. அதனால வீட்டுல பிரிட்ஜே கூடாது.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
மிக்சர் மாதிரி என்னைப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அதுக்குன்னு இருக்குற பண்டிகை நாட்களிலோ, மாதம் ஒரு நாளோ மட்டும் சாப்பிடலாம்.

ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. அப்பறங்க குகுஜீ.
சின்ன சின்ன உடல் கஷ்டத்துக்கெல்லாம் உடனே ஆங்கில டாக்டர் ஆங்கில மருந்துன்னு சாப்பிடகூடாது. ஆங்கில மருந்து நோய் வலியை குறைத்துக் காட்டி உள் உறுப்புக்களை அழித்துவிடும். பாரம்பரிய தீர்வுகளை கையாளனும். கொஞ்சம் வலிகளையும் தாங்கிப் பழகனும்.
தினசரி ரெண்டு முறை வீட்டில சாமி அறையில விளக்கேத்தி வெச்சு இறை வழிபாடு பண்ணனும். ‘இறைவா நீ கொடுத்த் உலகம். நீ கொடுத்த் வாழ்க்கை. இதனை சிரமம் இல்லாமல் , உடல் மனக் கஷ்டங்கள் இல்லாமல் நடத்தி உன்னையே பத்திரமாய் வந்துசேர நீதான் அருள் செய்யணும்’ன்னு மனப்பூர்வமா பிரார்த்திக்கணும்.
ஓ, அப்படியா. ரொம்ப கஷ்டமாச்சே. குகுஜீ நாங்க குழந்தை வேணும்ன்னு யோசனை கேட்டா நீங்க என்னென்னமோ சொல்றீங்க.
அப்பா, முதலில நாம ஆரோக்யமா வாழனும். அப்போது குழந்தை பிறந்தா அந்தக் குழந்தையும் ஆரோக்யமா இருக்கும். அதேபோல அந்தக் குழந்தைக்கும்  ஆரோக்ய உணவைக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தையும் ஆரோக்யமாக வளரும். அதேபோல அந்தக் குழந்தைக்கும் ஆரோக்ய உணவை தயாரிக்கக்  கற்றுக்கொடுத்தால் அவன் வளர்ந்து அவனது குழந்தைக்கும் சொல்லித்தர முடியும். இல்லைன்னா எல்லாம் நோயாளி பரம்பரையாவே ஆயிடுமே.”

குருஜீ, இதெல்லாம் அந்தக் காலத்துல முடியும். இந்தக் காலம் மாறிப் போச்சு. இப்போ இதெல்லாம் முடியாதுங்க குருஜீ, கொஞ்சம் காலத்தையும் புரிஞ்சி அனுசரிச்சு போங்க, சொல்லுங்க.

அப்பா அந்தக் காலத்துல வாயல சாப்பிட்டாங்க, கீழால வெளிக்கி போனாங்க. இந்தக் காலத்திலையும் அப்படிதானே எல்லோருமே செய்யறாங்க . அப்பறம் என்ன அந்தக் காலம் இந்தக் காலம். உண்மையிலேயே மாறித்தான் போச்சுன்னா இதிலும் மாத்தி செய்யேன்.
அந்தக் காலத்தில சேற்றில் விளைஞ்ச தானியத்தையும், காய்கறியையும் சாப்பிட்டாங்க. இந்தக் காலத்துல நீ வேணும்னா கம்ப்யூட்டர் சிப்ஸை வாங்கி சாப்பிடேன்.

குருஜீ, நீங்க இன்னும் மாடர்னா ஆகலை . இன்னும் காட்டுமிராண்டிகளின் உகத்திலேயே இருக்கீங்க. நீங்கல்லாம் என்னைக்குத்தான் திருந்துவீன்களோ.
“அறிவுகெட்ட பிசாசுகளே, உங்களுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு. நல்லவேளை உங்களுக்கு குழந்தை பிறக்கலை. பொறந்திருந்தா அவனை நோயாளியாக்கி சித்திரவதை பண்ணி கொலையே பண்ணியிருப்பீங்க. உங்க கிட்ட ஒரு ஜீவன் மனுஷனா பொறந்து கஷ்டப் படறதுக்கு ஒரு நாய்க்கு பொறந்து ஆரோக்கியமா இருந்துட்டு போகலாம். சோம்பேறிப் பசங்களா. தன்னை ஆரோக்கியமா வெச்சுக்க முயற்சி செய்ய முடியாத குத்துக் கல்லுகளுக்கு குழந்தை ஒரு கேடா? என்னத்தடா நீங்கல்லாம் காலேஜில போயி படிச்சிங்க. குப்பையை. அந்தப் பசங்களும் உங்க வாழ்க்கையில மண்ணை வாரிப் போட்டுட்டாங்க.
நீங்க பதிலுக்கு மண்ணை வாரிப்போட ஒரு குழந்தைவேற கேட்குது உனக்கு. படுபாவிப் பசங்களா.
இப்படி சோம்பேறியா ஆக்கறதுக்காடா உங்க அப்பனும் ஆத்தாவும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி லக்ஷ லக்ஷமா செலவு செஞ்சி படிக்க வெச்சாங்க. படிச்சவன்கர பேர்ல வம்சத்தோட ஆரோக்கியத்தியே அழிக்கிரீங்களே. நீங்கல்லாம் நல்லாருப்பீங்களா டா லூசுப் பசங்களா....”

குருஜீ முதலில நாகரீகத்தை கத்துகீங்க. அது தான் நாட்டுக்கு நல்லது.

நாகரீகம்னா என்னப்பா முதல்ல அத சொல்லு?

நாகரீகம்னா - அழகா டீசண்டா ட்ரஸ் பண்ணனும், ஷூ போடணும் , டை கட்டனும், அழகா டீசண்டா பேசணும். அழகா டீசண்டா வண்டி வெச்சுக்கணும். அழகா டீசண்டா வீடு வெச்சுக்கனும்.

அது சரி , அப்போ உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாம்....
அதைத் தவிர உடம்பு மனசுல்லாம் எவ்ளோ வேன்ம்னாலும் குப்பையா இருக்கலாம் , நோய் பிடிச்சு இருக்கலாம் . ஏன்னா அதுதான் வெளியில தெரியாதே. அசிங்கம் ஏதும் வெளியில தெரியாம இருக்கலாம். தப்பில்ல. உள்ள இருக்குற உடம்பும் மனசும் எவ்வளவு குப்பையா இருந்தாலும் தப்பில்ல. ஏன்னா அதான் வெளியில தெரியாதே. இதுக்கு பேருதான் நாகரீகம் . அதனாலதான் நம்ம நாட்டு நீதி மன்றம் கூட பாருங்க நிரூபிக்க முடியிற மாதிரி குற்றம் செஞ்சாதான் குற்றம்ங்குது. நிரூபிக்க முடியாத மாதிரி செஞ்சா குற்றம் இல்லைங்குது. இதையெல்லாம் நீங்க என்னைக்குதான் புரிஞ்சிக்குவீங்களோ.
உங்களை பார்க்க வந்தது முதலில் எங்க தப்புன்னு சொல்லிக்கொண்டே, தனது டையை டீசன்ட்டாக சரிசெய்துகொண்டு, டீசண்டாக ஷூவைப் போட்டுக்கொண்டு, டீசன்ட்டான காரில் ஏறிக்கொண்டு, டீசன்ட்டான ரோட்டில் டிரைவ் செய்தார்கள் டீசன்டான டாக்டரைப் பார்க்க....
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டீஈஈஸன்ட்டான கபில்!














கதை: நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

Leave a Comment
நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

கெட்டவர்கள்‬ ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?


போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இக் கதை. 



*சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். 

அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.


வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும்  பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்துகொண்டன. 


அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான். அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.


இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது. கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். 


சிரித்துக்கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான். போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். 


வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத  செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். 


இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி. இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். 


உடல்ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. 


உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொருமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். 


இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன், மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும். வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு
புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.


நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.


தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான். ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

முற்பிறவி மறு பிறவிகள் உண்மையே. இந்த வினைப் பயன்கள் எல்லாம் மற்ற பிறவிகளில்தான் பலனைத் தரும்!