நவராத்ரிப் பாடல்
[ஆசிரியர்: ஶ்ரீ ஐஶ்வர்ய
மஹறிஷி யோகீந்த்ர பாரதி]
பாடல் பலன்:
நவராத்திரி தினங்களில்
இந்தப் பாடலை பாடினால் செல்வமும் சுகமும் பெருகும், அறிவும் கல்வியும் பெருகும்,
வீரமும் திறமையும் பெருகும்.
துர்கை மகிழ்ந்து அருளுவாள்.
முப்பெரும் தேவியர்களின் அருளும் பொழியும்.
தேவர்களெல்லாம் ஆனந்தமாக
நன்மைகளை அள்ளித் தருவார்கள்.
சிறுவர்களுக்கு சொல்லித்
தந்தால், பித்ருக்களின் ஆத்மா மகிழும். குடும்பத்தில் அதிர்ஷ்டங்கள் அதிகமாகும்.
திங்கள்கிழமைதோறும் பாடினால்,
இந்தப் பலன்கள் பல மடங்குகள் பெருகும்.
1. நூறு ஆயிரம் தலைமுறை முன்னோர்
ஆராய்ந்தே அவர் சொன்னார் உண்மை
2. உண்மை என்றும் நன்மை செய்யும் பாடே நாவே கேளே காதே
3. கடவுள் ப்ரம்மம் ஆதியில் இருப்பே பேரோய்வினிலே அமைதியில் அறிவே
4. ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்
5. யாரும் இல்லை விலங்குகள் இல்லை மரம் செடி இல்லை பறவைகள் இல்லை
6. பூமியும் இல்லை கோள்களும் இல்லை சந்திரன் இல்லை சூரியன் இல்லை
7. விண்மீன் இல்லை விண்வெளி இல்லை கற்பனை இல்லை ஆசைகள் இல்லை
8.
எல்லை இல்லை தொல்லை இல்லை ஆனந்தம் பரம் ஆனந்தமே
9.
சுகமாய் சும்மாக் கிடந்த கடவுளின் அறிவில் துருதுரு சுறுசுறு படபட
10.
படம் படமாகக் கற்பனைக் கோட்டை விதவிதமாகச் சுருள் சுருளாக
11. பஹு ஸ்யாம் நான் பலவாய் ஆவேன் என்னைப் பார்ப்பேன் பலப் பல வடிவில்
12.
என்னுடை அறிவே பராசக்தியே அதனால் முடியும் செய்தே பார்ப்பேன்
13.
விதவித விதவித விதவித விதமாய் பலப்பல பலப்பல பலப்பலவாகி
14. மெய் மறந்து சுகத்தில் மிதப்பேன் என்றே அறிவில் தோன்றியதே
15.
எண்ணம் ஆளும் இறைவனவர் கற்பனை உலகின் பரமேசன்
16. அவரது வல்லமை அவருள் கிடந்த எதையும் செய்யும் பெரும்சக்தி
17.
அவளது குணத்தை அளப்பது அறிவது கடினம் தானே துர்கை அவள்
18. பராசக்தி மாயாசக்தி ஶ்ரீ என பலப் பெயர் அவள் புகழே
19.
எண்ணத் தூண்டும் ஞான சக்தி விரும்பத் தூண்டும் இச்சா சக்தி
20.
அடையத் தூண்டும் கிரியா சக்தி வேஷம் மூன்றை அடைந்தனளே
21.
மூன்று சக்தியும் பின்னிப் பின்னி ஜும்ஜூம் ஜும்ஜூம் ஜும்ஜூம்
ஜூமென
22.
சுரு சுரு சுருவென பட பட படவென மூன்றின் வேலை கிடுகிடு கிடுவென
23.
சிந்தனை ஆசை செயல் எனவாகி அறிவில் சலசலக் கற்பனை அலைகள்
24.
ஆஹா ஹாஹா ஆஹாஹா ஆஹா ஹாஹா ஆஹாஹா
25.
எண்ணக் கனவில் விரிந்தது வெளியே எதற்கும் இடமளி விண்ணாய் உள்ளே
26.
ஜும்ஜும் ஜும்ஜும் ஜும்ஜும் ஜூம் ஜும்ஜும் ஜும்ஜும் ஜும்ஜும் ஜூம்
27.
எண்ணம் அசைய அசைய விண்ணில் அசைவுகள் தோன்றி காற்றாய் போச்சே
28.
விசுவிசு விசுவிசு விசுவிசு வீசு
விசுவிசு விசுவிசு விசுவிசு
வீசு
29.
காற்றும் வீசி வீசி உரசி வெப்பம் தோன்றி நெருப்பாய் ஆச்சே
30.
திகுதிகு திகுதிகு திகுதிகு தீதீ திகுதிகு திகுதிகு திகுதிகு தீதீ
31.
நெருப்பு எரிந்து எரிந்து உருகி ஓடித் திரவம் நீராய் போச்சே
32.
சலசல சல்சல் சலசல சல்சல் சலசல சல்சல் சலசல சல்சல்
33.
நீரும் ஓடி ஓடிக் களைத்தே
இருகி உரைந்து நிலமாய்
ஆச்சே
34.
கிண்கிண் டிண்டிண் டம்டம் டும் கிண்கிண் டிண்டிண் டம்டம் டும்
35.
வின்னும் காற்றும் நெருப்பும் நீரும் நிலமும் பூதம் ஐந்தும் கலந்து
36.
விதவித விதவித விதவித விதமாய் பலப்பல பலப்பல பலப்பல பலவாய்
37.
ஐந்தும் ஓய்வில் லாமல் பின்னி விதவிதமாகப் பின்னிப் பின்னி
38.
அறிவில் எண்ணம் எடுத்த வேஷம் கோடிக் கோடிக் கோடிக் கோடி
39.
சுற்றும் உலகம் கிடுகிடு கிடுகிடு வியக்கும் உயிர்கள் அடடட அடடட
40.
விழிக்கும் உயிர்கள் ஓ ஆஆ ரசிக்கும் உயிர்கள் ஆ ஹாஹா
41.
வெளியில் சூரியன் சந்திரன் விண்மீன் மயக்கும் வெளியில் பளப்பள பளப்பள
42.
இடித்த இடியோ சுளீர் சுளீர் அடித்த மழையோ சடசட சட
43.
மின்னிய மின்னல் பளீர் பளீர் முழிக்கும் விழியோ திருதிரு திரு
44.
புவியில் மலைகள் ஆறுகள் ஏறிகள் நாடு காடு கடல் எரிமலைகள்
45.
மீன்கள் முதலை பாம்புகள் பள்ளி புழுக்கள் பூச்சி வண்டுகள் நண்டு
46.
யானை குதிரை சிங்கம் புலிகள் நாய்கள் பூனை எலிகள் கிருமி
47.
கோடிக் கோடிக் கோடிக் கோடி சூழ வந்தான் மனிதன் தேடி
48.
அவனுக்குள் அரு உடலாய் உளமாய் பராசக்தியின் விதியே ஆச்சே
49.
சிந்தி சிந்தி செய்செய் செய் முந்தி முந்தி முடிமுடி முடி
50.
அருவுக்குள்ளே உணர்வாய்
உயிராய் பரமேஶ்வரனின் மதியே ஆச்சே
51.
விரும்பு விரும்பு இன்னும் இன்னும் அனுபவி அனுபவி சுவை சுவையே
52.
ஜீவனில் இப்படி விதிமதி ஆகி அங்கும் செய்தார் சேட்டை
மீண்டும்
53.
பஹு ஸ்யாம் நான் பலவாய் ஆவேன் இப்படி ஆவேன் அப்படி ஆவேன்
54.
கிசுகிசு கிசுகிசு கிசுகிசு கிசுகிசு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு
55.
விதவிதமாகப் பலப்பல வழிகளில்
நாடித் தேடி ஓடி அடைந்தே
56.
மெய் மறந்து சுகத்தில் மிதப்பேன் என்றே அறிவில் தோன்றியதே
57.
ஓஹோ ஓஹோ ஓஹோஹோ ஆஹா ஆஹா ஆஹாஹா
58.
எண்ணம் ஆளும் ஜீவன் இவரே கற்பனை உலகின் மன்னன் இவரே
59.
இரவில் சும்மா கிடந்த அறிவில் பகலில் துருதுரு சுறுசுறு படபட
60. திபுதிபு திபுவென புதுப்புது புதுவென
ஒடியொடி ஒடியென பிடிப்பிடி பிடியென
61.
படம் படமாகக் கற்பனைக் கோட்டை விதவிதமாகச் சுருள் சுருளாக
62.
ஓடுஓடு ஓடுஓடு ஏறுஏறு முன்னேறு
அதைச்செய் இதைச்செய் வெட்டி
முறியே
63. இதைப்பிடி இதைவிடு அதைப்பிடி அதைவிடு
கதைவிடு கற்பனை கோட்டையைக் கட்டு
64. ஏக்கம் ஆசை சேர்ந்து சேர்ந்தே தீர்த்திடப் புதுப் புதுப் பிறவிகளே
65.
புல்லாய் பூண்டாய் செடியாய்
மரமாய் நின்றே தின்றே மகிழ்ந்தானே
66.
எறும்பாய் வண்டாய் தேளாய்
பாம்பாய் கடித்துக் குதறி மகிழ்ந்தானே
67.
ஓனாய் சிறுத்தை சிங்கம் புலியாய் பிடித்துத் தின்றே மகிழ்ந்தானே
68.
நீர்நாய் திமிங்கிலம் முதலை மீனாய் நீரில் கிடந்தே மகிழ்ந்தானே
69.
நண்டு
தவளை மண்புழுவாய் சேற்றில் குளித்து மகிழ்ந்தானே
70.
புறா கொக்கு நாரை பருந்தாய்
உயரப் பறந்து மகிழ்ந்தானே
71.
காகம் கழுகு பூனை நாயாய் பிணத்தை தின்றே மகிழ்ந்தானே
72.
அணிலாய் குரங்காய் மரங்களிலே ஏறிக் குதித்து மகிழ்ந்தானே
73.
வண்ணப் பூச்சி தேனீயாய் பூவைச் சுற்றி மகிழ்ந்தானே
74.
விதவிதமாக மகிழ்ந்தாலும் ஆசை தீரா ஏக்கத்தால்
75.
பிறந்தான் மனிதன் உருத்தில் குரங்கு மனதுடன் வந்தானே
76.
துருதுரு சுருசுரு
துருதுரு சுருசுரு புருபுரு கிறுகிறு புருபுரு கிறுகிறு
77.
பணக்காரனாக ஏழையாக திருடணாக காவலனாக
78.
நல்லவனாகக் கெட்டவனாக நோயாளியாக பலவானாக
79.
புகழுடையோனாய் கேவலனாய் அறிவாளியாய் முட்டாளாய்
80.
ஆஆணாகப் பெண்ணாக ஊஊனமாக நன்றாக
81.
விதவித மானுடப் பிறவிகள்
சுற்றி விதவித அனுபவம் அனுபவித்தானே
82.
சுகம்தரும் செயலால் புண்ணியம் வருமே துயர்தரும் செயலால் பாபம் வருமே
83. செய்தவன் கணக்கில் அவைகள் இருக்கும்
ஏக்கம் ஆசைகள் கணக்கில்
சேரும்
84.
சேரச் சேரக் கணக்கின்படியே பிறவிகள் சுழலும் புல்லாய்
பூண்டாய்
85. புண்ணியப் பாபக் கணக்கின் வழியே விதவிதப் பிறவிகள் மீண்டும்
மீண்டும்
86.
ஆஹா சுகமே ஆஹாஹா பொய்யில் நடிப்பில் சுகம் சுகமே
87.
அச்சச்சோ வலி அச்சச்சோ வலியில் நோயில் துயர் துயரே
88.
சுற்றிப் பிறவிகள் கோடி சுற்றி அலுப்பில் ஒருநாள் ஓய்ந்தானே
89. ஏன் நான் பிறந்தேன் எங்கிருந்தோ எனக்கேன் வலிகள் விதியாலே
90.
ஞானக் கேள்வி பிறந்ததுவே பதிலைத் தேடித் திரிந்தானே
91.
கண்ணில் நீராய் வாழ்வை வெறுத்து குருவைத் தேடி அலைந்தானே
92. அவரும் சொன்னார் அன்புடன் நோக்கி வந்தவழியை மறவாதே சிக்கலில் நீயும் சிக்காதே
93.
இச்சா கிரியா ஞான சக்தியின் ஜிகுஜிகு ஜிகுஜிகு லீலை இதுவே
94.
இச்சா சக்தி அலைமகள் ஆவாள் கிரியா சக்தி மலைமகள் ஆவாள்
95.
ஞான சக்தி கலைமகள் ஆவாள் பராசக்தியின் வேஷம் மூன்றும்
96.
அவர்கள் மூலம் தேவர்கள் உலகின் வாழ்வின் நடத்துனர்கள்
97. அவர்களைப் பிடித்தால் புண்ணியம் பெருகும் அவர்களை விட்டால் பாபம் பெருகும்
98.
வருவழி உணர்ந்து அவர்களை வழிபடு ஓடும் துயரம் சுகமே என்றும்
99.முன்னோர் நூல்களின் சொல்லும் இதுவே ஆயிரம் தலைமுறை அனுபவம் இதுவே
100. எந்தன் வழியும் இதுதானப்பா நீயும் வழிபடு
சுகம்தானப்பா
101. ஶாந்திஶ் ஶாந்திஶ் ஶாந்திஃ என்றார் குருவும் பரிவுடன் அன்புடனே
102. நேர்மை மிகுந்த குரு நூலை படிப்படி பிடிப்பிடி உடன் உடனே
_________________ J _________________