காய்ச்சலும் சளியும் பரவலாக உருவாகும் சூழல் இது. நவீன மருந்துகள் இல்லாமல் இச்சூழலைக் கடக்க விரும்புவோருக்கான பதிவு இது.
காய்ச்சலுக்கும் சளிக்கும் எந்த மருந்தும் தேவையில்லை என்பது முதல் செய்தி. ஏன் தேவையில்லை என்பதைச் சற்று கவனமாக அறிந்துகொள்ளுங்கள்.
இப்போது மழை பெய்து நிலம் குளிர்ந்து கிடக்கிறது. மழை நின்று, வெயில் அடித்தாக வேண்டும் என்ற தேவை உருவாகியுள்ளது. ஏன் வெயில் தேவை என்றால், வெப்பம் உருவானால்தான், நிலத்தின் குளிர்ச்சி குறைந்து இயல்பான சூழல் ஏற்படும். மிதமான வெப்பம்தான் இந்த நிலப்பகுதியின் இயல்பான பருவநிலை. மிகையாகக்...