நினைக்குமளவு நன்மையே. நமது சாஸ்த்ரம்
சொல்வது....
தனது ஸ்வதர்மத்தை ஸ்ரத்தையுடன் மனமுவந்து
செய்பவன் உயருகிறான்.
பஞ்சமஹா யஜ்ஞங்களும் ஸ்வதர்மங்கள்.
அவற்றில், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்கள்
மிகச்சிறந்த ஞான மோக்ஷ சாதனங்கள்
ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஸாத்யமாகக்
கொண்டு வாழ்வதே பொருள் உள்ள நல் வாழ்வைத் தருவது.
அதனால், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்களை
ஒருவன் தனது குடும்பப் பணிகளைப் போன்றும், தான் தனது உணவை உண்பதைப் போன்றும்
ஸ்வதர்மமாகவே, தனது அவசியக் கடமையாகவே, தாழ்த்திப் பார்க்காது, சிரத்தையுடன் ஆற்ற வேண்டும்....
ஸ்ரீ குருவின் ஆசிகள்

ஸ்ரீ குரு மகாராஜ் அவர்களுடன் இன்று 18-7-2018 மாலை 6 மணி மிகவும் முக்கியமான நாளாக நேரமாக அமைந்தது.
நாடி வந்தவர்களுக்கு உதவும் பல்வேறு
விதமான மந்திர தந்திர பூஜை விதிகளை உபதேசம் செய்து அருளினார்.
பலவித நெருக்கடிகளில், குடும்பப்
பிரச்சினைகளில், தொழில் பிரச்சினைகளில், நோய் நொடிகளில், பல வித தகராறுகளில்,
பலவித ஏமாற்றங்களில், பலவித சவால்களில்,.... என்று பலவித சூழ்நிலைத்
தொல்லைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளத் தேவையான, வழி முறைகள்...