தந்தை மந்திரம்

Leave a Comment
பெற்றோர் ஆசி

குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம்

குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.

தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.


ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ



இதை மூன்றரை வயது வரை சொல்லவேண்டும். முடிந்தவரை இடைவிடாது தினசரி சொல்வது நல்லது. 


குழந்தை பேசத்துவங்கிவிட்டால் தந்தை ஒவ்வொரு வரியாக சொல்ல, குழந்தை இப்படி திருப்பிச் சொல்லவேண்டும்.




ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்

ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
 தேவைப்பட்டால் திருப்பிச்சொல்ல தாயார் உதவி செய்யலாம்.



பதிமூன்று வயதிற்கு பிறகு வழிபாட்டு சமயத்திலேயே தானே இப்படி சொல்லிக்கொள்ள வேண்டியது.




ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ

 
இது கால யந்திரத் தந்திர மந்திர பலம் பொருத்தப்பட்டது. சொல்லும் அளவு நல்ல பலன்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டு, குருதக்ஷிணை அளித்து, பிறகு பயன்படுத்துவம், சொல்வதும் முழுமையான நல்ல பலனைத் தரும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்ற விரும்புவோர் அணுகவும்:
9042800800 



நன்மை பகிர்வது – புண்ணியம் காக்கும்.
அரண் குருகுலம் 9042800800  

குழந்தை வளர்ப்புக் கலை: பெற்றோருக்கு ஒரு சொல் - 3

Leave a Comment

மகாபாரதத்தில், ஒரு இடத்தில் ஸ்ரீ ஹனுமன் வருகிறார்.
 

அப்போது பீமனுக்கு மிகுந்த அன்புடன் அக்கறையுடன் பாசத்துடன் ஒரு உபதேசம் கொடுக்கிறார். அனைவருக்குமே அது மிக முக்கியமான அடிப்படையான அறிவுரை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசியமாக, அதில் வரும் இந்த மூன்று சுலோகங்களையும் சொல்லித்தந்து மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் பல இடங்களில் இதன் பொருள் உண்மையாக இருப்பதை, அடிக்கடி நினைவுபடுத்தி காட்டியும் சொல்லித்தர வேண்டும்.
இது அவர்களை என்றும் பாதுகாக்கும்.

ஸ்ரீ ஹனுமன் உவாச்ச
1
பலி - ஹோம - நமஸ்காரைர்   மந்த்ரைஸ்ச பரதர்ஷப
தைவதானி ப்ரஸாதம் ஹி       பக்த்யா குர்வந்தி பாரத
2
மா தாத ஸாஹஸம் கார்ஷீஃ    ஸ்வதர்மம் பரிபாலய
ஸ்வதர்மஸ்தஃ பரம்தர்மம்       புத்யஸ்வ கமயஸ்வ ச
3
ந ஹி தர்மம் அவிஜ்ஞாய       புத்தான் அனுபஸேவ்ய ச
தர்மார்தோ வேதிதும் க்யோ    ப்ருஹஸ்பதிர் ஸமைரபி

1
Bali – homa – namaskaarair manthraishcha bharathrshabha
Dhaivathaani prasaadham hi bhakthyaa kurvandhi bhaaratha
2
Maa thaatha saahasam kaarsheeH svadharmam paripaalaya
SvadharmasthhaH parmdharmam budhhyasva gamayasva cha
3
na hi dhharmam avijnaaya budhdhaan anupasevya cha
dhharmaartho vedhithum shakyau bruhaspathi – samairapi.

பொருளுரை:

1
பலி – ஹோம – நமஸ்காரைர் மந்த்ரைஸ்ச பரதர்ஷப
தைவதானி ப்ரஸாதம் ஹி          பக்த்யா குர்வந்தி பாரத
இந்த உலகை நிர்வாகம் செய்யும் தெய்வ சக்திகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
நைவேத்யம், வழிபாடு, நமஸ்காரம், மந்திரம், இவைகளின் துணையால், செயலாலும், பேச்சாலும், எண்ணத்தாலும், மனிதர்கள் தெய்வங்களை பக்தியுடன் மகிழ்விக்கிறார்கள்.
அதற்கு கைமாறாக தெய்வங்களும் அவர்களை மகிழ்விக்கின்றனர்.
2
மா தாத சாஹஸம் கார்ஷீஃ        ஸ்வதர்மம் பரிபாலய
ஸ்வதர்மஸ்தஃ பரம்தர்மம்          புத்யஸ்வ கமயஸ்வ ச
அன்புச் செல்லமே, அதனால், முரட்டுத்தனமாக செயல்படாதே. ஸ்வதர்மம் எனப்படும் விதி கொடுத்த உனது குடும்ப, குல, கடமைகளை பூர்த்தி செய்து வாழ்வாயாக. விதி கொடுத்த உன் கடமைகளை சரியாக செய்யும்பொது மட்டுமே, மதியால் நீ உண்மையான உயர்ந்த நிலைகளை அறியவோ, அடையவோ முடியும். 
3
 ந ஹி தர்மம் அவிஜ்ஞாய          புத்தான் அனுபசேவ்ய ச
தர்மார்தோ வேதிதும் ஷக்யோ     ப்ருஹஸ்பதிர் ஸமைரபி

உன்னுடைய கடமைபற்றிய அறிவை அறியாமலும், பூர்திசெய்து அதன் பலனைப் பார்க்காமலும், இதில் அறிவு உள்ளோரிடம் பணிந்து சேவை செய்து கற்காமலும், புண்ணியம் தரும் வாழ்க்கை முறையையோ, உண்மையான சுகம் தரும் வாழ்க்கை முறையையோ அறிய முடியவே முடியாது, ப்ருஹஸ்பதிக்கு சமமான அறிவு உள்ளவர்களாலும்கூட.  


முற்றும். சுபம்.

நல்லதை பகிர்வோம். புண்ணியம் கோடி.
அரண் குருகுலம். 9042800800, 9042500500.