அரசு ஊழியர்களும் - அறியாத ரகசியங்களும்!!

Leave a Comment
அப்போது நம் நாட்டிலும், கிழக்கு நாடுகளிலும் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டுகள், அணுகுண்டுகள்... இவையெல்லாம் இருந்தது இல்லை. ஐரோப்பிய நாடுகளில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பலம் வாய்ந்த ரௌடிகள் இந்த ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்க கடல் கடந்து குழுவாக செல்வார்கள். நாடுகளை அடைந்ததும் அங்கே உள்ள மக்களின் முன்னால் பலரை சரமாரியாக சுடுவார்கள். மற்ற மக்கள் இவர்களைப் பார்த்து பயப்படுவார்கள். அவர்களிடம் உள்ள சொத்துக்களை சுலபமாக பிடுங்கிக்கொண்டு கப்பலில் திரும்பி வருவார்கள்.
இப்படி கொள்ளை அடிக்க மிகப்பெரிய ரௌடிக்குழுக்கள் தங்களுக்கு கம்பெனிகள் என்று அடை மொழியுடன் வேறு வேறு பெயர் வைத்துக்கொண்டன. துப்பாக்கி இல்லாத நாடுகளில் சென்று கொள்ளை அடித்துவர ரௌடிஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்தின.
இவர்களை அந்த நாடுகளில் தங்கவைத்து நிரந்தரமாக தொடர்ந்து கொள்ளையடித்து கப்பல்களில் அனுப்பிவைக்கும் வேலைகொடுத்தார்கள். 

இங்கே அரசுப் பணிகளுக்கு அதிக சம்பளம் + சலுகைகள் தரும் பழக்கம் ஏன் வந்தது?

இந்த வெள்ளை ரௌடிகள் தாங்கள் வேலைக்கு சென்று, தங்கி இருக்கும் நாடுகளில் மக்களிடம் கொள்ளை அடித்துவர, அவர்களின் வருமானத்தை பிடுங்கிவர, உள் நாட்டில் இருந்த உழைக்காத அடாவடிகளையும், ரௌடிகளையும் வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள்.
பொதுவாக இந்த வேலைக்கு உள்நாட்டு மக்கள் செல்லமாட்டார்கள். அதனால் அவர்களை கவர்ச்சிகாட்டி இழுக்க உள் நாட்டில் உழைப்பதால் வருவதை விட அதிகமான சம்பளத்தை தருவதாக சொல்லி, தந்து ஊக்கம் கொடுத்தார்கள். இந்த உள்ளூர் அடிமைகளும், வெள்ளை எஜமானர்களுக்கு விசுவாசமாக, உள்ளூர்மக்களிடம் கொடூரமாக பேசி நடந்துகொண்டு கொள்ளை அடித்துக் கொடுப்பார்கள்.
எவ்வளவு திறமையாக செய்தார்களோ அதற்கு ஏற்ப வெள்ளை ரௌடி கம்பெனிகளின் அதிகாரிகளும் அதிக சம்பளம் கொடுத்தார்கள்.
இப்படி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான கம்பெனிகள் இருந்தன. அவர்கள் இப்படி கொள்ளை அடிக்க நாடுகளைப் பிடிக்க போட்டிபோட்டுக்கொண்டு சென்றார்கள். இப்படி கொள்ளையடிப்பதற்காக பங்கு பிடிக்கப்பட்டு, போட்டுக்கொள்ளப்பட்ட பகுதிகளே, காலணிகள் என்றும், அவர்களின் இந்த கொள்ளையடிக்கும் அடாவடித் தனங்களையே 'காலனி-ஆதிக்கம்' என்றும் 'நாகரீகமான' வார்த்தைகளில் வரலாற்றில் படிக்கிறோம்.

[வரலாற்று ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பலரும் இந்தப் பொருள் தெரியாமலேயேதான் பாடம் நடத்துகிறார்கள்!]
இதே போன்று அரபு நாடுகளிலும் கம்பெனிகள் இருந்தன. அவர்கள் பயன்படுத்திய பெயர் மற்றும் தொழில்நுட்ப முறைகள் சற்று வித்தியாசமானது. 

[ ! இவர்களுக்கு இடையில் 'யாருக்கு எந்தநாடு சொந்தம்' - என்பதில் வந்த சண்டைகளே 'உலகப்போர்கள்'! ]
இப்படி இந்த நாட்டில் தங்கி கொள்ளை அடிக்க அடியாட்களை அனுப்பி, இந்த நாட்டை அவர்களுக்கு வருமானம் தரும் காலனியாக பயன்படுத்தியது இங்கிலாந்தின் ஒரு ரௌடிக்கம்பெனி. அந்த கம்பெனி உலகில் பல நாடுகளில் இப்படி தமது தொழிலுக்கு கிளைகள் வைத்து இருந்ததால், இந்த நாட்டுடன் நடந்த வரவு செலவுகளை கவனிக்க இந்த நாட்டின் கிளைக்கு [!] 'கிழைக்கிந்தியக் கம்பெனி' என்று பெயர்வைத்தான்!
தமது நாட்டு ரௌடிகளை இங்கே ‘அதிகாரிகளாக’ தங்க வைத்து, பணிகளை துவக்கினான். இவர்களும் - தமக்கு உள்ளூர் அடிமை ரௌடிகளை வைத்துக்கொண்டு அதிக சம்பளம், அதிக விடுமுறை, போனஸ்கள், சம்பள உயர்வுகள், வேலை செய்யாத விடுமுறை நாட்களிளும் சம்பளம், வயதானபின் வேலையிலிருந்து நின்ற பிறகும் பென்சன்,... போன்ற ‘சலுகைகளை’, அவர்கள் கொள்ளையடித்துவந்து கொடுத்த செல்வத்திலிருந்தே சிறிது பிச்சையாகப் போட்டார்கள். வெளிநாட்டு ரௌடி வேலையாட்கள், இப்படி அடிமை ரௌடிகளை ‘சௌகர்யமாக’ நடத்தினார்கள்.
நம் நாட்டு மன்னர்கள், இந்த ரௌடிகளை துரத்த போராடினார்கள். அதில் தனது அடியாட்களை மட்டுமே பயன்படுத்தி நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாமல் போன ‘கிழக்கிந்தியக் கம்பெனி’ தமது 'இந்தியாவின் கிளை'யை இங்கிலாந்து அரசுக்கு பல ஆயிரம் கோடி டாலருக்கு விலைக்கு விற்றது.


அதை விலைக்கு வாங்கிய அரசு, அதே 'தொழிலை' அரசாங்கத்தின் பெயரில் செய்தது. இந்த நாட்டில் இருந்த அடிமை ரௌடிகளும், இங்கிலாந்து அரசின் அரசு ஊழியர்கள் என்று ‘கௌரவப் பதவி’யை அடைந்தார்கள். ஆனாலும் தொழில் என்னவோ 'அதே'தான்.
பிறகும் வெள்ளைக் கொள்ளையர்களை துறத்த பலர் போராடினார்கள். வெள்ளையர்களும் நமது உள்ளூர் ரௌடிகளையே அதாவது 'இங்கிலாந்து அரசின்' இந்திய ஊழியர்களையே வைத்துக்கொண்டு அடித்து உதைத்து, கொலைசெய்து, கொடுமைசெய்து,... போராடியவர்களை அடக்கியது. இறுதியில் 'வெளிநாட்டு ரௌடிகளிடமிருந்து மட்டும்' விடுதலை அடைந்தோம்.   
விடுதலைக்குப் பிறகு அமைந்த புதிய அரசானது செயல்படத் துவங்கியதும், மேற்படி அவர்களுக்கு சேவை செய்துவந்த உள்ளூர் ரௌடிகளை அதாவது ‘பழைய இங்கிலாந்து அரசு ஊழியர்களை’யே, அதே ஒப்பந்தங்களின் அடிப்படியிலேயே வைத்துக்கொண்டது....
எந்த பரிசீலனையோ, சட்ட திருத்தமோ, விவாதமோ, புதிய யுக்திக்கான சிந்தனைகளோ,.... எதுவுமே இன்றி!
வெள்ளை ரௌடிகளுக்கு சேவை செய்த அதே நபர்கள், இப்போது விடுதலை அடைந்த புதிய பாரத அரசுக்கு சேவை செய்யத்துவங்கினார்கள். அவர்களும் அதே பழைய ‘பிஸ்தா’ மனப்பான்மைகளுடனே புதிய அரசுக்கு ‘சேவை’செய்யத் துவங்கினார்கள்.
இதுதான் நடந்த வரலாறு.
இதுதான், இன்றும்கூட அரசு ஊழியர்கள், வருகின்ற மக்களை நாய்போல் நடத்தும் மனப்பான்மைக்குக் காரணம். 'தங்களை ஏதோ பெரிய பிஸ்தாக்களைப் போல நினைத்துக்கொண்டும், வரிகட்டுகிற, வந்துள்ள மக்களை ஏதோ அடிமைகளைப்போல நினைத்துக்கொண்டும் நடத்துவது ஏன்?' என்று பலருக்கும் புரியாமல் இருந்திருக்கும். இதுதான் காரணம். 

[ ! எல்லா அரசு ஊழியர்களும் இப்படி இல்லை. சிலர் விதி விலக்காக 'மனிதத்-தன்மையுடன்' நடந்துகொள்கிறார்கள். ஆனாலும், 'இந்த அதிக சலுகைகள் எனக்கு வேண்டாம் எல்லா மக்களும் சம்பாதிப்பதைப் போலவே எனக்கும் ஊதியம் இருந்தால் போதும்' என்று சொல்பவர்களை நான் இதுவரை பார்கவில்லை. அப்படியும் யாராவது சிறந்த நல்லவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு நன்றிகள். ] 
அதே போல 'அரசு ஊழியர்களுக்கு மட்டும், ஏராளமான சம்பளமும், விடுமுறை எடுத்து செய்யாத வேலைக்கும் சம்பளமும், பணியிலிருந்து நின்ற பிறகும் செய்யாத வேலைக்கும் சம்பளமும்,... போன்று பல ஏராளமான சலுகைகளும் - ஏன் வந்தது?' - என்று மனதில் கேள்வி இருக்கும், யாருக்கும் பதில் தெரியாது. இதுதான் உண்மையான பதில்! 
இதையெல்லாம் இன்று அரசு ஊழியர்களாக இருக்கும் ‘தனிநபர்களை’ குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ' ‘நல்ல-தலையுடன்’ வேலைக்கு சேர்ந்தவர்களின் தலையானது, ஏன் விரைவில் ‘கெட்ட-தலையாக’ மாறுகிறது?' என்பதற்கு - அன்று கொள்ளையடிக்க, அடிமை ரௌடிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 'சௌகர்ய' சட்ட அமைப்பே காரணம் - என்பதை மட்டுமே இங்கு ஆய்வு செய்கிறோம்.
அதனால், 'அந்த சட்டங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படவேண்டும்' - என்று தோன்றுகிறது!