இந்த நாட்டின் ஆயுர்வேதம் போன்ற மருத்துவமுறைகளை, பழங்காலக் கட்டிடக்கலைகளை, நமது நாட்டு சைவ அசைவ சமையல் முறைகளை, நமது முன்னோர்களின் விஞ்ஞானங்களை,.... போன்றவைகளை எல்லாம் திறமையாக செய்யும் அளவுக்கு அறிவாளிகள் நமது முன்னோர்கள் - என ஏற்கும் புகழும் வெளி நாட்டு மதத்தவர்கள், மதிப்பிற்குரிய சகாயம் போன்ற நல்லவர்கள் அறிவாளிகள்....
‘இந்த
நாட்டு முன்னோர்கள் கடவுளைப்பற்றி பேசுவதிலும்கூட, கடவுளை பார்க்க வைப்பதிலும்கூட,
வழிபடும் முறைகளை கண்டறிவதிலும்கூட அறிவாளிகளாகவே இருந்திருக்கிறார்கள்’ என்று ஏன்
சொல்ல முடிவது இல்லை? அவர்களை தடுப்பது எது. குறைந்தது, ‘இந்நாட்டு முன்னோர்களின்
கூற்றுகள் இந்த விஷயத்தில் சரியாக உள்ளதா’ என்பதை ஆராய்ச்சி செய்வதையும் தடுப்பது
எது? - என்பது ஆராயப்பட வேண்டி உள்ளது.
இருபதாயிரம்
ஆண்டுகளுக்கும் மேல் விஞ்ஞானபூர்வமான வாழ்க்கையும், ஆட்சி முறையையும், மருத்துவமும்,
சமையல் கலை, கட்டிடக்களையும், தத்துவ ஆயாய்ச்சி நூல்களையும், போதிக்க கல்விமுறையும்,...
என்று எல்லாவற்றிலும் உயர்ந்து இருந்த நமது முன்னோர்கள், கடவுள் விஷயத்தில்
மட்டும் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் சிந்திக்கத் துவங்கியவனைவிட, ஐநூறு
ஆண்டுகளுக்கும் முன்னால் பேச ஒரு மொழியை கண்டவனைவிட அறிவில் குறைந்தவனாக இருக்க
முடியும்?
நாம்
ஏமாறாமல் இருக்க - சிந்தித்துதான் ஆக வேண்டும்!
தேசம் காக்க
பகிர்வோமே....