Worship_Higher_Meditation
உருவ வழிபாடு
என்பது ஆன்மீகத்தில் கீழான நிலை என்றும்,
தியானம் செய்வதே உயர்நிலை என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் அது அப்படி
இல்லை.
60
வயதுக்கு மேற்பட்டோர், வீட்டில் வாழாமல், காட்டில் வாழ்பவர், துறவு ஏற்றவர்,...
இது போன்றோருக்கு உருவ வழிபாடு இல்லாத, தியானப் பயிற்சிகள் சரியே. ஆனால், அதற்கு
முன் உள்ள இல்லற வாழ்வில் உருவ வழிபாடே சிறந்தது, பாதுகாப்பானதும்கூட.
இல்லற
வாழ்வில் இருந்து மிக உயர்ந்த நிலைகளை அடைந்த - நாயன்மார்கள், ஆழ்வார்கள்,
சித்தர்கள், முனிவர்கள்,... அனைவரும் உருவ வழிபாட்டின் துணையுடனே அடைந்தனர்.
உருவ
வழிபாடு ஏன் சிறியதாக பார்க்கப்படுகிறது?
உருவ
வழிபாட்டின் முதல் போதனையை கொடுப்பது பெற்றோர்கள். பெற்றோர்கள் சொல்லித்தரும்போது
எப்படி வழிபடவேண்டும், ஏன் வழிபடவேண்டும்,... என்பதில் மிகவும் குறைவாகவே விளக்கம்
கொடுத்து வழிபட சொல்லித் தருகின்றனர்.
ஆனால்,
வயது வளர வளர, இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதற்குப் பிறகு உண்மையில், உருவ
வழிபாட்டை செய்யும் பொது உள்ள பல சூக்ஷ்ம தொழில் நுட்பங்களை குருநாதர்
சொல்லித்தரவும், விளக்கவும்வேண்டும். ஆனால் யாரும் குருநாதரிடம் செல்வதில்லை. இன்று
குருநாதர் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் உருவ வழிபாட்டைப் பற்றிய தொழில்
நுட்பமும் தெரியாது.
அது மிகவும் ரகசியமானது. அதனை
யாருமே தானாக ஊகம் செய்து கண்டுபிடிக்கவும் முடியாது. அதனாலேயே, ஊகம் செய்து
புத்தகம் எழுதியவர்களின் நூல்களைப் படித்தும் அறிய முடியாது.
உருவ
வழிபாட்டின் அடிப்படையே வேதக் கருத்திலிருந்து பிறக்கிறது. அதனால் வேதக் கல்வி
இல்லாத ஒருவரால், அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அதனை கண்டுபிடிக்க
முடியாது.
சிறுவர்களிலிருந்து,
பெரிய ரிஷிகள் வரை யார் உருவவழிபாடு செய்யும்போதும் வெளியிலிருந்து பார்க்கும்போது
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், அவரது அறிவில், மனதில் நடக்கும் காரியம்
மாறுகிறது. அது குருநாதரின் போதனைக்கு ஏற்ப நடப்பது. அது அவருக்கு மட்டுமே
தெரியும்.
அது உண்மையில் தியானம். மிகவும் பலமான தியானம். மிகவும் உயர்நிலையில்
நடக்கும் தியானம். மனதை மிகவும் பக்குவப்படுத்தும் தியானம். அறிவை விசாலமாக்கும் தியானம். நினைவாற்றலை பெருக்கும் தியானம். வாழ்வை வளமாக்கும் தியானம். மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் தியானம். பிரார்த்தனைகளின்
பலன்களையெல்லாம் அள்ளித்தரும் தியானம். தெய்வங்களின் அருளை இழுத்து வரும் தியானம். அருட்பேராற்றலை பொங்கி எழவைக்கும் தியானம். தோல்வி
அடையாத தியானம். சிரமம் இல்லாத தியானம். மனதிற்கு இதமான தியானம். உணர்சிகளுக்கு
சுகம் தரும் தியானம். அப்போதே பலன்தரும் தியானம்.
இதற்குத்
தேவை ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்களே. அதனால் இதனை சிறியதாகப் பார்க்காமல்,
கற்க பயிற்சி செய்ய வேண்டும்.
இது நாள்
முழுவதும் மனதை அழுத்தங்கள் வராமல், அமைதியாக சுகமாக நிம்மதியாக வைத்துக்கொள்ளும்.
விரும்பியவைகளையும் அள்ளித்தரும்.
எப்போது
பலன் கிடைக்கும்?
செய்யத்
துவங்கி சில நாட்களில், மிகச் சிறிய பலனைப் பார்க்கலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச்
செல்ல மிகப் பெரிய பலன்கள் வருவதைப் பார்க்கலாம். இந்த உருவ வழிபாடு ஒரு கற்பக
விருக்ஷமாக இருந்து தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் முக்கியமான இடங்களிலெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவதைப் பார்க்கலாம்.
இந்த
சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கே, இதற்கு அடுத்த உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள்
சுலபமாக கைகூடுகின்றது. இது இல்லாமல், உருவங்கள் இல்லாத, அருவ தியானங்களை
செய்யும்போது களைப்பும், பலன் இன்மையும் அனுபவங்களாக ஆகிவிடுகின்றன.
வயதும் அனுபவங்களும் கூடும்போது ஒருவேளை, 'இனி பிறவியே வேண்டாம்' என்று விரும்பினாலும் 'மோக்ஷத்தை'யும் கொடுக்கவல்லது - இந்த வழிபாட்டு தியானம்.
அதனால்
முறையாக 'உருவ வழிபாடு' செய்யும் முறையைக் கற்போம். வாழ்வின் சுகங்களை சுலபமாக அடைவோம். மனதை அமைதியாக சுகமாக
பாதுகாப்போம்.
தினசரி
செய்யும் வழிபாட்டுப் பயிற்சியை - சுலபமாக கற்கும் விதத்திலும் , பயிற்சி செய்யும் விதத்திலும் சத்குருஸ்ரீ
ஐஸ்வர்ய மகரிஷி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.
வழிபாட்டின்
உள் பொருள் மற்றும் தொழில்நுட்பங்களையும் சொல்லித்தருகிறார், அவரவரின்
ஆர்வத்திற்கு ஏற்ப.
வாரம்
ஒருநாள் மூன்று மணிநேரம் வீதம் எட்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
விருபுவோருக்கு தீக்ஷை அளிக்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு:
8825131416, 9042500500 -க்கு அழைக்கவும். அல்லது-
yogeendra3@gmail.com -இல் எழுதவும்.
8825131416, 9042500500 -க்கு அழைக்கவும். அல்லது-
yogeendra3@gmail.com -இல் எழுதவும்.