விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் - அரண் - அறிமுகம்!

Leave a Comment
அரண் - உங்களை அன்புடன் அழைக்கிறது - வெளிச்சத்திற்கு!

மனக் கவலைகளுக்கு இப்போதே முற்றுப்புள்ளி. ஆனந்த வாழ்வுக்கு இப்போதே துவக்கம்.

வெளிச்சத்தில் சமைப்பவனைப்போல - ஞானத்துடன் வாழ்பவன்.

இருட்டில் சமைப்பவனைப்போல - ஞானமின்றி வாழ்பவன்.

யாருடைய சமையல் சுவையாக இருக்கும்?

ஞானம் இருக்கிறதா இல்லையா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிகிறதா இல்லையா....?


நீ ஏன் இந்த நிறைகளும், குறைகளும் உள்ள - இந்தக் குடும்பத்தில், இந்த உறவுகளுடன், இந்த காலத்தில், இந்த விதியுடன் பிறந்தாய்... காரணம் தெரியுமா?

உனது மனதிற்கு சில திறமைகள் இருக்கின்றன, சில இயலாமைகள் இருக்கின்றன, ஏன் தெரியுமா?

உனது உடலுக்கு சில நிறைகள் இருக்கின்றன, சில குறைகள் இருக்கின்றன, ஏன் தெரியுமா?

பலருக்கு வரும் ஆசைகள் உனக்கு வருவதில்லை, உனக்கு வரும் ஆசைகளும் அனைவருக்குமே வருவதில்லை, ஏன் தெரியுமா?

நீ விரும்பிய பல விஷயங்கள் வாழ்க்கையில் வரவில்லை, நீ விரும்பாத பல விஷயங்கள் வாழ்க்கையில் வருகின்றன, ஏன் தெரியுமா?

உன் மனதை சந்தோஷப்படுத்தும் விஷயங்கள் சில நேரங்களில் வருகின்றன, உன் மனதை வாட்டியெடுக்கும் விஷயங்கள் சில நேரங்களில் வருகின்றன, ஏன் தெரியுமா?

இந்தவிதத்தில் ஒருவருக்கு திருமண வாழ்வு அமைய காரணம் என்ன? இந்தவிதத்தில் ஒருவருக்கு குழந்தைகள் அமைய காரணம் என்ன? இந்தவிதத்தில் ஒருவருக்கு தொழில் வாழ்க்கை அமைய காரணம் என்ன? தெரியுமா?


பல நேரங்களில் நீ திட்டமிட்டது ஒன்று, நடந்தது வேறு ஒன்று, கிடைத்த பலன் வேறு ஒன்று,... இது ஏன் இப்படி நடக்கிறது தெரியுமா?


நீ பிறந்ததும், தினசரி தூங்கி எழுவதும், தினசரி தூங்கப் போவதும், மரணம் அடையப்போவதும் நடக்கின்றன, ஆனால் உனது கட்டுப்பாட்டில் இல்லை, ஏன் தெரியுமா?


உன்னுடைய குறைகளும் இயலாமைகளும் தோல்விகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும் அவமானங்களும்....  உனக்கு நல்லது செய்வதற்காகவே இருக்கின்றன. அவைகள் உனக்கு என்ன செய்கின்றன தெரியுமா?


உன்னை சார்ந்தவர்களின் குறைகளும் இயலாமைகளும் தோல்விகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும் அவமானங்களும்....  உனக்கு நல்லது செய்வதற்காகவே இருக்கின்றன, வருகின்றன. அவைகள் உனக்கு என்ன செய்கின்றன தெரியுமா?


உண்மையில் உனக்கு கேடு செய்யும் ஒரு விஷயமும் உலகில் இல்லை! வரவும் முடியாது! ஏன் என்று தெரியுமா?


இந்த உலகில் உனக்கு நிகழ்கால பயமோ, எதிர்கால பயமோ துளியும் தேவையே இல்லை. உன்னை உண்மையில் யாரும் ஏமாற்றவே முடியாது, ஏன் தெரியுமா?


ஜனனத்திலிருந்து மரணம் வரை உனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனேவே முடிவாகி விட்டது, அதன்படிதான் வாழ்க்கை நடக்கும். அதனை எதனாலும் மாற்றவே முடியாது, தெரியுமா? மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. ஏன் தெரியுமா?


நீ முன்னேற முயற்சிகளை செய்யவேண்டிய அவசியம் இல்லை தெரியுமா? நீ உன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தெரியுமா?


உன்னால் செய்ய முடியாததை, நீ செய்யத் தேவையில்லாததை, விதி உன்னிடம் எதிர்பார்ப்பது இல்லை தெரியுமா? 

உன்னுடைய எல்லா ஆசைகளும் கட்டாயம் பிறகு பூர்த்தி செய்யப்படும், நீ அதற்காக கவலைப்படவே வேண்டாம்! எப்போது தெரியுமா? எப்படித் தெரியுமா? ஏன் தெரியுமா?


இதெல்லாம் இப்படி என்றால், நீ செய்வதற்கு என்று என்னதான் இருக்கிறது, தெரியுமா? உன்னால் எதை செய்ய முடியும், எதை செய்ய முடியாது, ஏன் அப்படி, காரணம் தெரியுமா?


உன்னுடைய எந்த முடிவு உனக்கு உண்மையில் ஏதாவது உதவியை செய்யும் தெரியுமா?


உன் மரணத்திற்கு பிறகு உனக்கு பயணம் உண்டா? எதை வைத்து அது முடிவாகும்? யார் அப்படி முடிவு செய்வது?


ஏன் இப்படியெல்லாம் உலகமும் உன் பயணமும் நடக்கிறது, தெரியுமா?


இதெல்லாம் இப்போது இப்படி, இதனால் வருகிறது, இருக்கிறது, நடக்கிறது... என்பது தெரிந்திருந்தால், இங்கே, இந்த இடத்தில் எதை செய்வது நல்லது என்று கண்டுபிடிக்க முடியும். அது தெரியாதவன் என்ன செய்வான் தெரியுமா?


இதெல்லாம் தெரிந்தவன், டிரைவிங் தெரிந்தவன் கிடைத்தகாரை ஓட்டிப் பயன்படுத்தி அனுபவிப்பதைப் போல.


இதெல்லாம் தெரியாமல் வாழும் வாழ்க்கை, டிரைவிங் தெரியாதவன் காரில் உட்கார்ந்துகொண்டு தடவித்தடவிப் பார்த்து அனுபவிப்பதைப் போல.


டிரைவிங்பற்றித் தெரியாதவன் காரை ஓட்டினால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஆகும் தெரியுமா? காரில் குடும்பத்தையும் உட்காரவைத்துக்கொண்டு ஓட்டினால் என்ன ஆகும் தெரியுமா?


வாழ்க்கையைப்பற்றித் தெரியாதவன் வாழ்க்கையை நடத்தினால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன ஆகும் தெரியுமா?


கல்யாணமும் செய்துகொண்டு குழந்தையையும் பெற்றுக்கொண்டு அவர்களுடன் வாழ்க்கையை நடத்தினால் என்ன ஆகும் தெரியுமா?


இதற்கெல்லாம் காரணமான பதில்களை ‘அரண்’ வைத்திருக்கிறது. உங்களுக்கும் சொல்லித்தரத் தயாராக இருக்கிறது.


ஆனால் இதற்குப் பிறகும், இதெல்லாம் தேவையில்லை, எனக்கு நேரம் இல்லை,... என்பவன்...

முழுவதும் ஏமாளியே. உலகில் பெரியகூட்டம் இதைத் தெரியாமல் வாழ்வதால் தனக்கும் தேவையில்லை - என்று நினைப்பது, கிடைத்த வாழ்க்கையை பாழாக்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை.


கற்க வாய்ப்பு இருப்பதை கேள்விப்பட்டதே மிகப்பெரிய புண்ணியத்தால். அதைப் பயன்படுத்திக்கொண்டு அவைகளை அறிபவன், கற்பவனே புத்திசாலி. 


இதையெல்லாம் நம்ப முடியவில்லையே, இந்தக்காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமா என்று நம்பமுடியவில்லையே,... என்று தோன்றலாம். உண்மை. இந்தக்காலத்திலும் இதெல்லாம் நடக்கிறது, வருகிறார்கள், கற்கிறார்கள், ஆனந்தமாக வாழ்கிறார்கள். இதை விட்டுவிட்டு ஏமாறாதீர்கள். நீங்களும் கற்று பலனை அடையுங்கள்.


பல சிரமங்களைப் பார்த்து தள்ளிவைக்காதீர்கள். உடனே கற்றுக்கொள்ளுங்கள், பிழைத்துக்கொள்ளுங்கள்! வாழ்க்கையை பயமின்றி, வருத்தங்கள் இன்றி, கவலைகள் இன்றி, போட்டிபோடவேண்டிய அவசியம் இன்றி, உங்களை நிரூபிக்கவேண்டிய அவசியம் இன்றி, முன்னேறவேண்டிய அவசியம் இன்றி, காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இன்றி, சுமைகளை இறக்கிவிட்டு வாழ்வைக் கொண்டாடுங்கள்.


100% மன அழுத்தங்கள் இன்றி, 100% ஆனந்தமாக வாழ உலகில் ஒரே வழி.


இது எப்படி அந்தப் பலனைத் தரும்? 

ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அதை பார்த்தால் இயங்குவது தெரிகிறது.

அந்தத் தொழிற்சாலையை இயக்க, நிர்வாகி தன்னிடத்தில்  ஊழியர்களை வரவைத்து கூட்டம் போட்டு இயக்குகிறார்.

அந்த நிர்வாகியையோ முதலாளியானவர் தனது வீட்டுக்கு வரவைத்து தனது விருப்பப்படி இயக்குகிறார்.

தொழிற்சாலையைப் போல - நாம் பார்க்கும் இந்த ‘இயங்கு உலகம்’.

ஊழியர்கூட்டத்தைப் போல - நாம் பார்க்க இயலாத ‘இயக்கு உலகம்’.

முதலாளியைப் போல - நாம் பார்க்க இயலாத கடவுள்.

உலக விஞ்ஞானிகள் தொழிற்சாலையைப் போல இருக்கும் இந்த ‘இயங்கும் உலகை’மட்டுமே பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டு, உலகைப்பற்றி ‘கண்டுபிடித்துவிட்டேன்’ என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

இதை இப்படி இயங்க வைக்கும் ‘இயக்கு உலகை’யும், 'காரணக் கடவுளை'யும் அவர்கள் பார்க்காமலேயே, ‘அப்படியெல்லாம் எதுவுமே இல்லை’ என்கிறார்கள். அவர்கள் ‘கண்ணிருந்தும் குருடர்களே’.

அவர்களை வழிகாட்டியாகப் பிடித்துக்கொண்டு செல்பவன் நிச்சயம் வாழ்வை இழக்கிறான். கவலைகளின் பிடியில், மன அழுத்தங்களின் பிடிகளில் சிக்கிக்கொண்டு மீள முடியாது, வேறு வழிகளைத் தேடுகிறான். உண்மையில்....

வேறு வழிகள் இல்லை! ஆனால்....

இந்தக் கல்வி நிச்சயம் காத்து, பாதுகாப்பாக, ஆனந்தமாக வாழவைக்கும்!

இது பாரதத்தின் தனிச்சிறப்புவாய்ந்த ‘மூவிஞ்ஞானம்’. இதுவே பாரதத்தின் பாரம்பர்யக் கல்வி. பல்லாயிரம் தலைமுறைகளாக நமது முன்னோர் கற்று பயனடைந்தக் கல்வி.


சிறிய முயற்சி போடுங்கள். பெரிய நன்மைகளை அடையுங்கள்! உங்களுக்காக உங்கள் முன்னோர் விட்டுச்சென்றுள்ள பரிசுகளை சுகங்களை இழந்துவிடாதீர்கள்!


அரண் - நடத்து ஆத்ம ஞானக் கல்வி விபரங்களுக்கு....

வகுப்பு விதிகள்:
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/blog-post_14.html

நிலை1ன் பாடத்திட்டம்:
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/1.html

நிலை2ன் பாடத்திட்டம்: 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html



0 comments:

Post a Comment