விதி செய்கிறதா? மதி செய்கிறதா?

Leave a Comment
விதி காரின் என்ஜின் என்றால்.... மதி காரின் டிரைவர்....
புத்தி இருப்பவன் இதை புரிந்துகொள்கிறான்! :) 


எப்படி காற்று உஷ்ணம் நீர் நிலம் போன்ற பருவிஷயங்கள் - பருவிதிகளின் படியே இயங்குகின்றனவோ, 

அதே போலவே, அன்பு கோபம், மகிழ்ச்சி, வருத்தம் போன்ற அருவிஷயங்களும் அருவிதிகளின் படியே இயங்குகின்றன. 

இருவித விதிகளும் இணைந்தே வாழ்க்கையில் சுக-துக்க அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. 

விதிகள் எப்போதுமே பொருத்தமான காரணங்கள் இல்லாவிடில், தாமே இஷ்டத்திற்கு இயங்க இயலாதவைகள்

பருவிதிகளை பருவிஞ்ஞானம் விளக்குகிறது - அது நாம் பள்ளி கல்லூரி மீடியாக்களின் மூலம் அறிவது. 

அருவிதிகளை அருவிஞ்ஞானம் விளக்குகிறது - அது நமது குருகுலங்கள், வேதங்களின் மூலம் அறிவது. 

இருக்கும் விதிகளை அறியாது வாழ்பவன் மூடனாக, வெந்து நொந்து அழிகிறான்.

இருக்கும் விதிகளின் இயல்புகளை அறிந்து வாழ்பவன் ஞானியாக ஆனந்தமாக வாழ்கிறான்

உலக நாடுகளில் எந்த நாட்டு விஞ்ஞானியுமே இருவிஞ்ஞானங்கள் இருப்பதையே இதுவரை அறியவில்லை

பாரத நாட்டில் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருவிஞ்ஞானங்களும் போதிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  

அருவிஞ்ஞானத்தை கற்பிக்க, கற்க முறைகளும் பாடத்திட்டங்களும் இருந்தன, இருக்கின்றன. இன்னமும் போதிப்பவர்களும் கற்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

உண்மையில் அவர்களே விவரமாக வாழ்கிறார்கள். மற்றோர்கள் நடைப் பிணங்களாகவே வாழ்கிறார்கள்.

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?
 
விதி காரின் என்ஜின் என்றால்.... மதி காரின் டிரைவர்....
புத்தி இருப்பவன் இதை புரிந்துகொள்கிறான்! :)

-------------



கலைச்சொல் அகராதி: 


விதி = ஏற்படுத்தும் சட்டங்கள், நடத்தும் சட்டங்கள், இயங்கு & இயக்கு நியதிகள், Laws & Orders of administration. 


மதி = தன்னுரி விருப்பங்கள், தன்னுரி செயல் ஸ்வதந்த்ரம்  & தன்னுரி செயல் திறன்கள், தன்னுரி முடிவுத் திறன்கள், free-will, 

புத்தி = அறிவு, பலவித விஷயங்களையும், காரிய - காரண - சம்பந்தங்களையும் பகுத்து அறியும் திறன், intelligence, 

[ கவனம்: மதி புத்தி இரண்டும் வேறுவேறு, சில நேரங்களில் மதி என்ற வார்த்தையானது புத்தி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுவதுண்டு. 


பரு = உரு, புலன்களால் அறிய முடியும் உருவம் உள்ள, ஸ்தூல, Gross, 


அரு = உருவிலி, புலன்களால் அறிய முடியாத, மனதால் அறியப்படும், சூக்ஷ்ம, Subtle, 


தன்னுரி = தனக்கே உரிய, Personal,





முழுமையான ஆத்மஞான, ப்ரம்மஞான, பாடத்திட்ட விவரங்களுக்கு... 





மேலும், பாடத்திட்ட விவரங்களுக்கு... 


ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 = Post Graduation level

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 5 = Under Graduation level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/5.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 4 = Higher Secondary School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/03/4.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 3 = High School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/3.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 2 = Middle School level

http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2018/02/2_15.html

 

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 1 = Primary School level


 

விதி செய்கிறதா? மதி செய்கிறதா?




பெருமை மிகு வேதம்....


 

அரண் நடத்தும் ஆத்ம ஞான விஜ்ஞானம் வகுப்புகள் & விதிகள்



0 comments:

Post a Comment