ஆதித் தமிழர்களின் தாய்மொழி என்ன தெரியுமா...?

Leave a Comment
இரட்டைத் தாய் மொழியர் நாம்..

உலகில் எங்கும் இல்லாத ஒரு வழக்கம் நம் நாட்டில் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக இருந்து வருகிறது, அதுதான் நமது பண்பாடாகவும் ஏற்கப்பட்டு வந்துள்ளது நமது முன்னோர்களால். 

தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா,

கேரளா, ... போன்ற வார்த்தைகள் - அரசாங்கம் வரிவாங்கி வசதி செய்து தரும் நிர்வாக வசதிக்காக வந்தவைகளே தவிர , அவை நமது பாரம் பர்யத்தைக் காட்டும் பிரிவுகள் அல்ல.  

இந்த நாடு சுதந்திரம் பெற்று நமது அரசு அமைந்த பிறகு சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழி ஆக்குவோம், நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் சம்ஸ்க்ருதத்தைக் கற்றுத்தருவோம்... என்றுதான் காந்திஜீயும் கூறி மக்களைத் திரட்டினார். மக்களும் நம்பினார்கள்.
சுதந்திரம் பெற்ற பிறகு பாராளுமன்றம் அதை நிறைவேற்றும் சமையத்தில், சமஸ்க்ருதத்தை சொல்லித்தரும் சக்தி இப்போது இல்லை, ஆனாலும் உடனடியாக ஒரு நிர்வாக மொழி தேவைப்படுகிறது என்பதால் அவசரமாக ஹிந்தியை தற்காலிகமாக பொது மொழியாக அறிவித்தது.

பிரதேச மொழியினை வைத்து இன உணர்வு பிறந்த கதை:
1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய ஆட்சிப் பகுதிகள் விடுதலை பெற்றன. புதிய மாநிலங்களை அமைப்பது தொடர்பான விவாதங்கள் எழுந்தன.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக்கூடாதுஎன, எஸ். கே. தார் ஆணையம், 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய பரிந்துரையை, 1949 ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் நாள், நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவர் கொண்ட குழு (ஜேவிபி) ஏற்றுக்கொண்டது.
இருந்தாலும் ஜவஹர்லால் நேருவுக்கு வேறு தீர்வுகளைக் கண்டுபிக்க திறமை இல்லாததால் , மொழிவாரி மாநில வரி நிர்வாகத் தீர்வினைக் கொண்டுவந்தார்.  மெல்ல மெல்ல அந்தந்த பகுதியில் இருந்த அரசியல் தலைவர்களும் தமது மொழிப் பகுதி தனி நாடாகி விட்டால் முதலமைச்சராக இருக்கும் நான் பிரதமராக ஆக முடியுமே என்ற நினைப்பினால் மக்களிடம் மொழியை வைத்து இன உணர்வினை வளர்க்கத் துவங்கினர். அதையே தொடர்ந்து பேசப் பேச, கேட்கக் கேட்க, மக்கள் மத்தியில் அதுவே பதியவும் துவங்கிவிட்டது.
மக்களும் இனப்பிரிவாக நினைக்கத் துவங்கிவிட்டனர். 

உண்மையில் ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா சமுத்திரம் வரை இருந்த இந்த நிலப்பரப்பில் இருந்த நம் மக்கள் ஆதியில் வேத வாழ்வியலை , [ அதாவது சனாதன தர்மத்தை , அல்லது வைதீகம் தர்மத்தை, அல்லது ஹிந்து தர்மத்தை  ] கடைபிடித்து வாழ்ந்தார்கள். இந்த மக்கள் பாரத வம்சத்தவர்களாக தங்களையும், பாரத நாடாக தங்கள் வாழும் பகுதியையும் அன்றிலிருந்து இன்றுவரை, வழிபாட்டின் துவக்க சங்கல்பத்தில் கூறி வருகின்றனர். 
அந்த சமயத்தில் உலகில் வேறு எந்த முறையான வாழ்வியல் கட்டமைப்புகளும் இல்லாததால்,  வேறுபடுத்திக் காட்டும் விதத்தில் அதனை, அதாவது பாரதி என்ற வார்த்தையினை பெரும் பயனுக்கு கொண்டுவரும் தேவை இல்லாமல் இருந்தது. 
அந்த சமையத்தில் நாடுமுழுவதும் அனைவரும் சமஸ்க்ருதம் பேசிவந்துள்ளனர். மேலும் தத்தம் பகுதியில் ஒரு பிரதேச மொழியையும் பேசி வந்துள்ளனர். அனைத்து மக்களுக்குமே கல்வி என்றாலே வேதம் படிப்பது என்று மட்டுமே இருந்து வந்துள்ளது. 
வேதம் என்றால் ஞான சாதனம் என்று பொருள் . வேதம் என்பது சமஸ்க்ருத வார்த்தை. வேதம் முழுவதும் நாடு முழுவதும் இருந்த  ரிஷிகளால் தியானத்தில் சமாதி நிலையில் இறைவனிடமிருந்து பெறப்பட்டு கூறப்பட்டன. அவைகளை சீடர்கள் தொரடர்ந்து குறித்து வைத்து கற்று வந்தனர்.  
அன்று சம்ஸ்க்ருதம் நாடு முழுவதும் பொது மொழியாக இருந்ததால் வேதம் சம்ஸ்க்ருதத்திலேயே குறிக்கப்பட்டது. கற்கப்பட்டது. 
கல்வி , அரசு நிர்வாகம், கலைத்துறை, அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல், மருத்துவம், வழிபாட்டு விஞ்ஞானம், ... போன்ற அனைத்துமே சம்ஸ்க்ருதத்திலேயே இருந்து வந்துள்ளது.  எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை, ஆன்மீக ஞானங்களை சம்ஸ்க்ருதத்திலேயே எழுதினார்கள் . நாடு முழுவதும் அனைவரும் கற்க முடியுமே என்பதற்காக.
வெள்ளையனின் கல்விமுறை வரும் முன்புவரை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்புவரை நாட்டில் அனைவருக்குமே சம்ஸ்க்ருதம் தெரிந்தே இருந்தது. அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் பேசி வந்துள்ளனர்.
குடும்பம், தொழில் என்ற தனிப்பட்ட விஷயங்களை அவரவரும் பிரதேச மொழியில் கையாண்டு வந்துள்ளனர். 
ஆக, சம்ஸ்க்ருதமும், பிரதேச மொழியும் நம் மக்கள் அனைவருக்குமே தாய் மொழியாக வந்துள்ளது. 
ஆக சம்ஸ்க்ருதம் தேசீய மொழியாக இருந்துள்ளது.
எல்லா மன்னர்களும் இப்படித்தான் கல்விகற்று வாழ்ந்தார்கள், எல்லா பாமரர்களும் கூட இப்படித்தான் கல்விகற்று வாழ்ந்தார்கள். 
உண்மையில் நாம் அனைவருமே இரட்டைத் தாய்மொழியர்கள். 
உலகில் வேறு எங்குமே இந்த நடைமுறை இருந்ததில்லை. அதனால் இது புரிந்துகொள்ள சற்று சிரமமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை.
உலக நாடுகளில் இந்த முறை இல்லாததற்குக் காரணம் உலகில் எங்குமே இந்த அளவுற்கு நாகரீக வாழ்க்கை இருந்ததில்லை. காட்டுமிராண்டிகளாகவே இருந்துள்ளார்கள். தாங்கள் திருடிக் கொள்ளையடித்து வருவதற்காக உலகப் போர்வரை நடத்தியுள்ளார்கள்.
நாகரீகத்தில் இருந்த சுமேரிய, கிரேக்க எகிப்திய வம்ச மக்களும் இப்போது இல்லை. பாரத வம்சம் மட்டுமே தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. உண்மையில் மற்ற எல்லோருமே காட்டுமிராண்டிகள்தான் இன்றுவரையுமே. கொள்ளையடித்து திருடி வாழ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதற்காக அழகிய உடை உடுத்தவேண்டும், அழகிய மொழிபெசவேண்டும்,.... அவ்வளவுதான் அவர்களது வாதம், அது அவர்களது பழக்கவழக்கமே தவிர அதில் ஒன்றும் நாகரீகம் எதுவும் கிடையாது.  .
அப்படிக் கொள்ளையடிக்க வந்தவர்கள் இங்கு சற்று நீண்டகாலம் ஆட்சி செய்து நம் மனதையும் குழப்பியதால் , நம் நாட்டிலும் சிலர் அதையே நாகரீகம் என்று நினைக்கும் நிலை வந்துள்ளது. 
ஆனால் , இது உலகத்திற்கு நல்லதே இல்லை. யாருக்குமே நல்வாழ்வினைத் தர இயலாது 
அந்நியர்களால் குழப்பப்பட்ட நிலையில் இருப்பவர்களே ஆட்சியாளர்களாகி, அந்தக் கண்ணோட்டத்திலேயே ஆட்சியையும் செய்து, பள்ளி கல்லூரிகளில் போதனையும் செய்து அதைக் கற்றவர்களே  இன்று எல்லாத் துறைகளிலும் இருப்பதால் இந்த நமது பாரம்பர்ய வாழ்க்கையைப் பற்றிய உண்மை அறிவு அரிதாகி  விட்டது.  
புதுமையாகத் தோன்றினாலும் இதுதான் உண்மை. உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு எனது ஒரு நியாயமான பரிந்துரை, எந்த ஞானத்தின்மேல் நமது பண்பாட்டு வாழ்வியல் கட்டப்பட்டதோ அந்த ஞானத்தைக் கற்க முடியும் . அதன் பிறகு பார்த்தால் இதுவும் , இதுபோன்ற பல புதையல்களும் வெளிவரும். அந்த ஞானத்தைக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம். 

அதனால் தமிழன் , மலையாளி , போன்ற வார்த்தைகள் இன்றைய அரசியல்வாதிகளால் புகுத்தப்பட்டவைகள்.

நமது மன்னர்களோ, தொல்காப்பியரோ, திருவள்ளுவரோ, கம்பரோ, யாருமே பயன்படுத்தாத வார்த்தை இது.

இவர்கள் அனைவருமே தினசரி வழிபாட்டில் பாரத வம்சத்தவர்கள் ஆனா தான் என்று கூறியே சங்கல்பம் செய்து வந்துள்ளனர்.

இருந்தாலும் நமக்கு இது போன்ற நிரூபங்கள் தேவை இல்லை. இந்த ஞானத்தை அடைந்தால் இது உண்மையாக இருப்பதை ஆயிரம் மடங்கு தெளிவாகவே பார்க்க முடியும் .

ஆக ஆதித் தமிழரின் தாய்மொழி இரண்டு -
ஒன்று சம்ஸ்க்ருதம் , இரண்டு தமிழ்.

அதேபோலவே , ஆதி மலையாளியின் தாய்மொழி இரண்டு -
ஒன்று சம்ஸ்க்ருதம் , இரண்டு மலையாளம்.

அதேபோலவே நாட்டில் எல்லோருக்குமே தாய்மொழி இரண்டு -
ஒன்று சம்ஸ்க்ருதம் , இரண்டு பிரதேச மொழி.

உண்மையில் நாம் அனைவரும் இரட்டைத் தாய் மொழியினர் - என்பதில் பெருமிதம் கொள்வோம்!
இரண்டு தாய் - இன்னும் அதிக பாதுகாப்புக்கு !

0 comments:

Post a Comment