கடவுள், விதி - விஞ்ஞானபூர்வமான உண்மை !

Leave a Comment
கடவுள், முன்பிறவி,   மறுபிறவி, ஸ்வர்க்கம், நரகம், புண்ணியம்,  பாபம் இவைகளை பராக் விஞ்ஞானிகளான புற அறிவியல் விஞ்ஞானிகளில் [ Extrovert Scientists of Extrovert Science ] பலர் மறுத்து வருகிறார்கள். ஆனாலும் பலர் பல விதமான அறிவுப்பூர்வமான கேள்விகளால் மறுக்க முடியாமல் இருக்கிறார்கள்.
நாமும் கூட இவைகளைப் பற்றி சந்தேகப்பட்டோம். ப்ரத்யக் விஞ்ஞானம் எனும் அஹஅறிவியல் இவற்றை நிரூபிக்க மிகச் சிறந்த திறமையான சாதனங்களுடன் இருக்கிறன்றன. ப்ரத்யக் விஞ்ஞானிகள் [ Introvert Scientists of Introvert Science ] இவற்றின் உண்மைகளை சுலபமாகவே நிரூபிக்கின்றனர். நாமும் கூட அவைகளை பரிசோதித்துவிட்டோம். அவைகள் உண்மையாகவே இருக்கின்றன.

ஆனாலும் ஒரு பரிதாபமான விஷயம், சமூக கட்டமைப்பு சார்ந்த முடிவுகளும், குடும்ப நிர்வாகம் சார்ந்த முடிவுகளும், தனிநபர் வாழ்வியல் சார்ந்த முடிவுகளும் அனைத்தும் அவசரமாக, 'இவைகள் உண்மை இல்லை' என்ற நம்பிக்கைத் தளத்தின் மேல் அமைக்கப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் தவறான முடிவுகளாகிவிடும்.

உண்மை ஒன்றாக இருக்கும்போது, அந்த உண்மைகளை அறிந்தவர்கள் மூலம் கற்காமல், பார்க்காமல், முக்கிய முடிவுகளை எடுப்பது சிறப்பு இல்லை.

இவைகள் உண்மையாக இருப்பதை ஆயிரக்ககணக்கான அறிஞர்களின் மத்தியில் நிரூபித்துவிட்டோம்.

ஆனாலும்கூட, சமூகத்தில் முக்கியமான நிலையில் இருக்கும் பலர், அதிலும் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட இந்த உண்மைகளை பார்க்க முடியாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

பள்ளிக் கல்வி கற்காத ஒருவனுக்கு உலகம் உருண்டை என்று சொன்னால் அவன், 'அதெல்லாம் பொய், உலகம் தட்டைதான், அதுதான் எனது நேரடி அனுபவமாக இருக்கிறதே' என்பான். அதேபோலவே அவர்களும், இந்த உண்மைகளை பற்றிய கல்வியை கற்காததால், ஏராளமானவர்களிடம் 'இவைகள் பொய்' என்று பேசி வருகிறார்கள்.

அதனால் லக்ஷக் கணக்கானவர்களின் வாழ்க்கை மிக மோசமான கஷ்டங்களுடன் அழிந்து வருகின்றன.

சமூகத்தில் முக்கியமான நிலையில் இருப்பவர்கள், எத்தனையோ கல்விகளுக்கு இடையில் பாரதத்தின் பிரத்யக் விஞ்ஞானமான வேதத்தை அதற்கு என்று உரிய பிரத்யக் விஞ்ஞானிகளிடமிருந்து கற்பதே தனி நபர் வாழ்வுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை தரும் என்று தோன்றுகிறது.

பாரதப் பண்பாட்டின் படி ஒருவன் வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லது செய்யாவிட்டாலும் கூட தொல்லைகளை செய்யும் உரிமையை எடுத்துக்கொள்ளக் கூடாது. நாமும் இந்த விதிக்குள் இருப்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

கடவுள், முன்பிறவி,   மறுபிறவி, ஸ்வர்க்கம், நரகம், புண்ணியம்,  பாபம் இவைகள் உண்மை என்பதை - ஏற்க முடியாது என்பவர்களை நேர்மையாக வாதத்திற்கு அழைக்கிறேன் -  

‘தோற்பவர்கள் தமது சொத்துக்களுடன் வென்றவருக்கு முழு அடிமையாக ஆகவேண்டும்' என்ற ஒப்பந்தத்துடன்’!

ஓம் தத் ஸத்.




0 comments:

Post a Comment