புறஅறிவியல் ஆபத்துகள்....

Leave a Comment
அஹத்துள் எப்போதும் ஒளிரும் இந்த ‘நான்’ என்பவனையே அறிய இயலாத அஹ அறிவியல் தெரியாத புற அறிவியல் விஞ்ஞானியால் இந்த உலகில் எதை உருப்படியாக அறிய முடியும்? அவர்கள் ஆபத்தினைத் தரும் குழந்தைத் தனமான அறிவு உள்ளவர்களே! நாம் நிரூபிக்கத் தயார்! 

அவர்களின் முடிவுகள் மொபைல் போனைத் தரும் முதலில் , கூடவே உலகப்போர்கள் முதல் குடும்பப் போர்கள் வரை, ஒருவனுக்கும் தீர்க்க இயலாத மனப் போராட்டங்கள் வரை பலப் பல பிரச்சினைகளை நிச்சயம் தரும். அவர்களையே நம்பிச்செல்லும் சமுதாயமும் குடும்பங்களும் தனி நபர்களும் அழிவையே அடைய முடியும்!



ஏனென்றால் அஹமும் புறமும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவைகள். ஒன்றை ஒன்று பாதிப்பவைகள். 'அஹம்' புறத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது, 'புறம்' அஹத்தில் பதிவுகளை ஏற்படுத்துகிறது.

அதனால்தான் நமது முன்னோர்கள் இந்த சிக்கல் இருப்பதால், இரண்டிலுமே தமது சந்ததிகள் அறிவாளிகளாக இருந்து நல் வாழ்க்கையை பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்று பாசத்துடன் அஹநானூறு புறநானூறு என்று இரண்டு அறிவியல் நூல்களையுமே எழுதினர்.

புறஅறிவியல் வளருமளவு அஹஅறிவியலும் வளரவேண்டும். இல்லையேல் அழிவைத்தரும். புறஅறிவியல் சாதிக்க உதவும் கைகளைப் போல. அஹஅறிவியல் உண்மையைக் காட்டும் கண்களைப் போல. 

புற அறிவியலில் மட்டுமே வளர்ந்தவர்கள் குற்றம் பல செய்து கொண்டு, சட்டங்களாலும் மக்களாலும் அவர்களது குற்றங்களை கண்டுபிக்கமுடியாதபடி ஆடம்பர மொழி, உடை, வாகனம், தொழில்நுட்பம்,... போர்வைக்குள் பாராட்டுக்களை பெற்று வாழும் நுட்பத் திருடர்களாக இருக்கிறார்கள். 

ஏனென்றால், அவர்களைப் பொருத்தவரை குற்றங்கள் செய்யாமல் வாழ்வதற்கான காரனங்கள் ஒன்றுமே இல்லை - மனிதன் எழுதிய சட்டங்களைத் தவிர. மனிதன் எழுதிய சட்டங்களின்படி நிரூபிக்கப்பட்டால்தான் குற்றம். நிரூபிக்கமுடியாதபடி குற்றம் செய்ய முடியும் என்றால் செய்யலாமே - என்கிறான். செய்யாமல் இருக்க வேறு காரணம் எதுவும் அவனிடம் இல்லை. அவனைப் பொருத்தவரை அப்படி திறமையாக குற்றங்களை செய்யத்தெரியாதவன் அறிவு அற்றவன்,   குற்றம் செய்யாமல் நல்லவனாக நேர்மையாக வாழ்பவன் ஏமாளி! இவன்தான் அஹஅறிவியல் இல்லாத புறஅறிவியல் நிபுணன்! 

இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்புகளுக்கும் வருகிறார்கள். அதனால் சமூகத்தில் எல்லோரும் திருடர்களாக வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால் திருட்டு இன்று எழுத்துப் பூர்வமாக இல்லாமல், நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டதாக ஆகிவருகிறது.

'என்ன செய்வது, காலம் மாறிவிட்டது, இனி இதை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது, நாமும் மாறிக்கொண்டு வாழ்ந்துகொள்ளவேண்டியதுதான், பழப் பஞ்சாங்கம் இனி உதவாது,...' போன்ற வாதங்களையும் இந்த நுட்பத் திருடர்களே ஏற்படுத்தி சமூகத்திற்குள் நுழைத்து மக்களை நம்பவைத்தும் வருகிறன்றனர்.

இந்த நுட்பத் திருடர்களே பலர் விஞ்ஞானிகளாகவும், விஞ்ஞானி என்ற போர்வையிலோ, அரசியல் தலைவர்கள்,என்ற போர்வையிலோ, தத்துவ மேதைகள் என்ற போர்வையிலோ, சமூக வழிகாட்டிகள் என்ற போர்வையிலோ,... இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் திருடர்களாக வாழுகிண்டனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை, சில நேரங்களில் தெரிந்தாலும் ஒத்துக்கொள்வது இல்லை. இன்னும் சிலர் தங்களைத் தவிர அனைவரும் திருடர்கள் என பேசும் பேசும் ஆற்றலுடன் இருக்கிறார்கள். அல்லது நேர்மையான விஞ்ஞானிகள் பலர் இது போன்ற நுட்பத் திருடர்களுடைய வலைக்குள் சிக்கிக் கிடக்கின்றனர்.

இதை உலகால் கண்டுபிடிக்க முடியாத படி இந்த நுட்பத் திருடர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு உண்மை - காலம் மாறவில்லை - ஏனென்றால் அது மாற முடியாதது, நெருப்பு எப்படி மாற முடியுமா? அப்படித்தான்.   நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நாம் முடிவுசெய்ய முடியும். நேர்மையானவர்களாக நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது. அறிவாளிகளாகவும் வல்லவர்களாகவும் இருக்கவேண்டும்.

இந்தத் தகுதிகளை காலம், கேடுகள், கெட்டவர்கள், பஞ்சம், இயற்கை சீற்றங்கள்,.... போன்ற எந்த சக்திகளையும் மீறி, நிச்சயமாகக் கொடுத்து நல்வாழவைத் தர பாரதத்தின் வேத விஞ்ஞானம் தயாராகவே தேவையான திறமைகளுடன் இருக்கிறது.

சோம்பலை விட்டு நாம் கற்கத் தயாராக இருக்கவேண்டும். ஏனென்றால் - ‘நல்லவைகளை ஏற்க சோம்பல் காட்டாதவனை அடைய நல்லவைகளும் சோம்பல் காட்டுவதில்லை.’ அதேபோலவே ‘கெட்டவைகளை ஏற்க சோம்பல் காட்டாதவனை அடைய கெட்டவைகளும் சோம்பல் காட்டுவதில்லை.’

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக பல்வேறு மாறுபாடுகள், சோதனைகள்,... என்று பலவற்றுக்கும் இடையில் பலனை ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக பலனைக் கொடுத்துக்கொண்டு இருந்த ஒரு விஞ்ஞானம் அதன் அடிப்படையில் வந்த தீர்வுகள், 'இந்தக் காலத்தில் பயன்படாது' என்பது நிச்சயமாக ஒரு குருட்டு பிடிவாதமாக மட்டுமே இருக்க முடியும் என்று அறிஞர்களுக்கு தோன்றுகிறது. 

அந்த விஞ்ஞானத்தின் உதவியுடன், ஞானத்துடன், பார்வையுடன்,... இந்தக் காலத்து சூழ்நிலைகளுக்கும் சரி, இனி வரும் எந்தக் காலத்தின் சூழ்நிலைகளுக்கும் சரி நன்மைதரும் சுகமான தீர்வுகளை வருவிக்க முடியும். அதை நாம் நிரூபிக்கத் தயார்.

பிறந்து ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக கற்ற கல்வியாளர்களாலும், வாழ்ந்து பார்த்து நிரூபித்த சான்றோர்களாலும், போற்றி பாதுகாத்து வளர்க்கப்பட்ட இந்த அஹஅறிவியல் பிறந்த மண்ணில் கைவிடப்படுவதும், மறக்கப்படுவதும், அலட்சியப்படுத்தப்படுவதும், அவமதிக்கப்படுவதும், அறிவுப்பூர்வமான செயலாக இருக்க வாய்ப்பில்லை.

இது இந்த நாட்டுக்கு மட்டும் என்றே இல்லை. நாம் இதன் துணையால் நல்வாழ்க்கையை வாழ முடியும், உறுதியாக வாழ்ந்துகாட்டும்போது, உலகமும் இதனை விரும்பும். விரும்பித்தான் தீர வேண்டும். உலகிற்கும் இது ஒன்றுதான் தீர்வு என்பதால். இந்த உலகமும் பாதுகாத்து வந்த இந்த நாட்டையும் போற்றி உதவி பாதுகாக்கும், நன்றிகாட்டும் - பலம் மிக உயர்ந்தது + மிக முக்கியமானது என்பதால்!

அதனால் இது பாரதம் உலகிற்கு செய்ய வேண்டிய கடமை. உலக நோய்க்கு மருந்து இருக்கும்போது அதனை காப்பாற்றாமல் கொடுக்காமல் இருப்பதும் மனிதப் பண்புகளுக்கு அழகாக இருக்க முடியாது.

அதனால் இந்த நாட்டின் அறிவாளிகளையும் , உலக மானுட வர்கத்தின் நலன் விரும்புவோர்களையும் , சேவை உள்ளம் கொண்ட செயல் வீரம் மிக்க இளைஞர்களையும் அழைக்கிறேன்.

அஹஅறிவியலை சுருக்கமாகத் தர நாம் தயார். குறுகிய காலத்தில் முதலில் சோதனையாக கற்றுப் பாருங்கள். பலனை நிச்சயம் தருவதனையும் சொல்லப்பட்ட கண்ணோட்டங்கள் உண்மையாக இருப்பதையும் நீங்கள் பார்த்தால், அதில் மேலும் ஈடுபட்டு உலக சேவை செய்ய முடியும்.  


அஹஅறிவியல் வேதம் என்னதான் பேசுகிறதோ? 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/02/blog-post.html 

0 comments:

Post a Comment