பள்ளித் தேர்வுக்கு முன் அனைவரும் சமம்…

Leave a Comment

பள்ளித் தேர்வின் முன் அனைவரும் சமமே

ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு உதவி செய்து பள்ளிக்கு வரலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு தொல்லை செய்தும் பள்ளிக்கு வரலாம்....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு புகழைத் தருபவனாகவும் இருக்கலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு அவமானத்தை தருபவனாகவும் இருக்கலாம்.....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒரு மாணவன் பெற்றோர்கள்ஆன 'தந்தையும் தாயும் முன்னறி தெய்வம்' என்றும் கருதி நடத்தலாம்
இன்னொரு மாணவன் பெற்றோரை கேவலமாக நடத்தி கொடுமை செய்பவனாகவும் இருக்கலாம்.....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஒருவன் நற் குணத்துடன் வாழ்க்கைத் துணையையும், பெற்ற குழந்தைகளையும், உறவுகளையும், உழைப்பால் காக்கலாம்....
ஒருவன் குடியாலும், இன்னும் பல கெட்ட பழக்கங்களாலும் கட்டிய துணையையும் குடும்பத்தையும் அழிப்பவனாகவும் இருக்கலாம்....
பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே...
பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது...
பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது....

ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை இவைகளை பற்றிக் கவலை இல்லை.
பெற்றோரும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை ஒருவன் நல்லவனாக இருந்து அவனுக்கு மதிப்பெண் அல்லது மார்க் குறைந்தால் அவன் தகுதி இல்லாதவன்தான், நல்லவன் என்பது தேவை இல்லாத தகுதி,...
அதேபோல ஒருவன் கெட்டவனாக இருந்து மதிப்பெண் அல்லது மார்க் அதிகமாக இருந்தால் அவன் தகுதி உள்ளவன்தான், கெட்டவன் என்பதெல்லாம் ஒரு குறை இல்லை.....
பெற்றோர்களும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளித் தேர்வைப் பொருத்தவரை ஹைட்ரோக்ளோரிக் ஆசிட், ஹைபிஸ்கஸ் ரோசா சைனான்சிஸ், அவுரங்க சீப் ஆண்ட வருடம், ராபர்ட் கிளைவ் என்ன செய்தார்,... இவைகளை சரியாக பதில் எழுதினால் போதும் அவன் யாராக இருந்தாலும் நல்ல மாணவன் என்று சான்றிதழ் அளிக்கப்படுவான்....
பெற்றோர்களும் இது போதும் என்று இருக்க முடியுமா? பள்ளிகளைப் பொருத்தவரை அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏனென்றால் பள்ளிக்கூடங்களின் நோக்கம் கம்பெனிகளுக்கு நல்ல வேலைக்காரனாக ஒருவனை ஆக்குவதுதான். பள்ளிக்கூடங்கள் தருவது பணக்கல்வி, மட்டுமே.

பள்ளிக்கூடங்களின் நோக்கம் நல்ல மகனாக, நல்ல மகளாக, நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல தந்தையாக, நல்ல தாயாக, நல்ல உறவாக, நல்ல நண்பனாக, நல்ல மனிதனாக ஆக்குவது கிடையாது....   

பள்ளியில் பண்புகள் போதிக்கப்படுகின்றனவே என்றால், கடைபிடிக்க வைக்கப்படும்போதுதான் பண்புக்கல்வி நிறைவடைகிறது.
பண்பைப் பற்றி படித்து எழுதியதால் இல்லை.
உடல் பயிற்சி விளையாட்டு சான்றிதழ்கள் செய்யாமல், அதைப் பற்றி எழுதியவனுக்கு தரப்படுவதில்லையே!
மேலும் இந்த படித்து எழுதும் பண்புக்கல்விக்கும் அறிவியல் கணிதத்திற்கு உள்ள மரியாதையும் அளிக்கப்படுவது இல்லையே...
இப்படிப்பட்ட பள்ளிக் கல்வியை நம்பி பெற்றோர்கள் வாழ்க்கையை, நிம்மதியை அடமானம் வைத்து இவ்வளவு செலவு செய்வதும், அதனை மலை போல நம்பி குழந்தைகளை கொடுமை செய்து படிக்க வைப்பதும் அறிவாளிகளுக்கு ஏன் என்று புரியவில்லை.....
நல்ல  குணங்கள் வளர, நல்ல மனிதனாக ஆக்க,... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்கவேண்டும், குடும்பத்தின் உறவுகளுடன் சேர்ந்து பழக வேண்டும், விளையாட வேண்டும், மனிதர்களை புரிந்துகொள்ள பழக்கப்படுத்த வேண்டும், மற்றவர்களின் நிறை குறைகளை கவனிக்கப் பழக்கப்படுத்த வேண்டும், அவைகளுக்கு இடையில் வாழப் பழகவைக்க வேண்டும், நல்ல குணங்களைக் காட்டி பெருமைப்படுத்த வேண்டும், கெட்ட குணங்கள் குடும்பத்தை எப்படி தொல்லை செய்கிறது என்பதைக் காட்டவேண்டும், சிரமம் வந்தால் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வதை பழக்கப்படுத்த வேண்டும், பல கல்யாணக் காட்சிகளை பார்க்க வைக்க வேண்டும், பல துக்க வீட்டுக் காட்சிகளையும் பார்க்க வைக்கவேண்டும், உறவுகளின் வீட்டுப் பிரச்சினைகளை ஆராய்ந்து பேசிப் பழக வேண்டும், பெற்றோர்களின், தாத்தாப் பாட்டிகளின்,... சிறுவயதுக் கதைகளை பேசவேண்டும்,... இவைகளும் கல்விதான் ! ஒருவன் வளர்ந்த பிறகு இவைதான் குடும்பவாழ்க்கையை நடத்த கைகுடுக்கும்.
இந்தக் கல்விமுறைதான் நம் நாட்டில் முன்பு இருந்தது. நம்மை திறமையும் சுய கௌரவமும் அற்றவர்களாக ஆக்கி, அவர்களுக்கு நிரந்தரமான அடிமைகளாக ஆக்கி, நிரந்தரமாக இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்வதற்காக, அவர்களுக்கு வேலைக்காரர்களாக நம் குழந்தைகளை ஆக்க வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்விமுறையே இது.

இதற்கு முன் நம் நாட்டில் இரண்டும் இணைந்த நல்ல கல்வி முறை உண்மையில் இருந்தது. அது உலகில் உயர்ந்தது, நம் முன்னோர்கள் அதைத்தான் கற்று நல்வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏன், உலகம் முழுவதிலும் இருந்து கூட வந்து கற்றார்கள்.
அந்தக் கல்வி வெள்ளையர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இன்றும் அதை மீட்க முடியும், நடை முறைக்கு சாத்தியமே. இந்தக் காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படக்கூடியதே!
அது நடக்கலாம், என்றோ! ஆனால் இன்று பெற்றோர்கள் அப்படிப்பட்ட ஆசிரியர்களாக இருக்கத் தேவையானவைகளை கற்கவேண்டும். அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்வது சிறப்பில்லை. அதற்கு ஏற்பவே வாழ்க்கையை திட்டமிடவேண்டும்.  ஏனென்றால் அது குழந்தைகளுக்கு முக்கியமானது.
நினைவில் வையுங்கள், மனோவியல் ரீதியாகவே இந்த பண்புக்கல்வியை கல்வியை கற்க முடியும் வயது 21வரைதான், அப்போது கற்றுத் தராமல் அதற்குப் பிறகு அவைகளை அவனிடம் எதிர்பார்த்தால் அது அவனுக்கு முடியாதது,...
பிறகு தேவை இல்லாத பகை உருவாகும்,....
அதனால் பெற்றோர்கள் அவசியம் இவைகளை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்தவேண்டும். சொல்லித்தர வேண்டும்.  இவைகள் ஒருவனை நல்ல குடும்ப உறுப்பினன் ஆக்கும்,...
நல்லவனாக வாழ்வதெல்லாம் பணத்தைத் தருமா? என்று ஒரு வாதம் வருகிறது.
நிச்சயம் தரும்.... அதுதான் நிம்மதியைத் தரும் பணத்தைத் தரும், மற்றதோ அழிவைத் தரும் பணத்தைத் தரும்...

எவ்வளவு பணம் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல, எவ்வளவு நிம்மதி என்பதே வாழ்கையின் நோக்கம்.... அதற்கு ஏற்ற பணம் போதும்...

அந்தப் பணமும் நல்லவனாக இருந்தால் வராதே ?
நிச்சயமாக வரும், இந்த உலகம் கேட்பார் அற்ற அனாமத்துக் கணக்கில் இயங்கவில்லை, இறைவனின் நியதிகலால்தான் நடத்தப்படுகிறது.
நிச்சயமாக பயப்பட ஒன்றும் இல்லை.

கவனம்: இந்தக் கருத்துக்களை இப்போதும் பெற்றோர்கள் அலட்சியப்படுத்தலாம், அது அவர்களது உரிமை. ஆனால், குழந்தைகள் வளர்ந்த பிறகு, நிறைய சம்பாதிக்கிறான், ஆனால், காட்டுத்தனமாக வாழ்கிறான், மனிதத் தன்மைகள் இல்லாமல் கொடுமை செய்கிறான்,... என்று என்று வருந்தக்கூடாது...


முன்பு விதைத்த விதை முளைத்து பலனைத் தருகிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்!  


எது நற்கல்வி, பாரதம் சொல்லும் தீர்வு என்ன....
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/02/blog-post_87.html











































0 comments:

Post a Comment