காலை உணவு மிகவும் அவசியம்....

Leave a Comment
காலையில் சாப்பிட மறக்கவேண்டாம்... அது ‘ஹார்ட் அட்டாக்’ வரை கொண்டுவரலாம்!
எனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.
காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.
இது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை
ஹார்ட் அட்டாக்...
காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.
காரணிகள்...
பெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.
ராத்திரி சீக்கிரமா சாப்பிடுங்க...
அதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்
16 வருட ஆய்வு...
ஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.
குண்டாயிடுவீங்க...
அதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்

செவ்வாழைப்பழம்.

Leave a Comment
வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும்
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
தொற்றுநோய் தடுக்கப்படும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்

கொய்யாவின் சிறப்பு...

Leave a Comment
உலகின் மிக ஆராேக்கியமான அதிக ஊட்ட சத்துகளை காெண்ட பழம் எது தொியுமா என்று அனைவாிடமும் கேட்டால் அனைவரும் பதிலளிப்பது ஆப்பிள் ஆரஞ்சு என்று பதிலளிப்பாா்கள். 

ஆனால் உண்மையில் அதை விட ஆரேக்கியமான பழம் எது என்பதற்கு விடை இருக்கிறது. 

சமிபத்திய ஆய்வில் நமது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு காெய்யாதான் உலகின் அதிக சத்துக்களை உடைய பழம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு காெய்யா இரண்டாக வகைப்படுத்தலாம். 

ஒன்று சிகப்பு காெய்யா, மற்றொன்று வெள்ளை, 

கிட்ட தட்ட இரண்டுமே ஒரே சத்துக்களை உள்ளடக்கியது.

ஆனால் ஏனோ தொியவில்லை இக்காலத்தில் அது ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்கி உண்ணும் பழமாக பாவிக்கப்படுகிறது. 

ஆனால் அது அவ்வாறு இல்லை ஆராேக்கியம் பற்றி கவலைப்படும் ஓவ்வருவாேரும் வாங்கி உண்ண வேண்டும்.

 சாியாக சொல்லப்பாேனால் ஆப்பிளை விட காெய்யா விலை மிக மிக குறைவு. 

சத்துக்களாே ஆப்பிளை விட மிக அதிகம். 

ஆப்பிளை பாேன்று இதில் மெழுகுப் பூச்சு பூச படுவதில்லை. நேரடியாக நமது உழவா்களிடம் இருந்து சந்தைக்கு வருகிறது. 

நமது சீதாேசண நிலைக்கு மிகவும் ஏற்ற பழம். ஆகவே எனது கருத்து ஏது என்றால் காெய்யவை அனைவரும் வாங்கி உண்ண வேண்டும் அது மட்டுமல்லமால் உழவரும் பயன் பெறுவாா்கள்.

சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதவைகள்..

Leave a Comment

1. சாப்பிட்ட பின்பு ஒருவர்
சிகரெட் பிடித்தால் அது
சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சாப்பிட்டவுடனேயே
பழங்களைச் சாப்பிடும்
பழக்கம் நம்மில் பலருக்கு
உள்ளது அது கெடுதியானது காரணம் உடனே அது
காற்றினை வயிற்றுக்குள்
அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை
(Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு
மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது
சாப்பிட்டு ஒரு மணி அல்லது
2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர்
அருந்தாதீர் ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது
இது உணவில் உள்ள புரதச்
சத்தினை கடினமாக்கி
(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு
ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி
விடாதீர்கள்
(Don’t Loosen Your Belt)
ஏனெனில் அது குடலை
வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே
குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது
ஏனெனில் குளிக்கும் போது
உடல் மற்றும் கை, கால்களுக்கு
ரத்த ஓட்டம் அதிகரிக்கும் வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

ஓரிஜினல் சர்ட்பிகேட் தொலைந்தால் பெறுவது எப்படி?

Leave a Comment


கல்லூரி(College) மற்றும் பள்ளி(school) ஓரிஜினல் சர்ட்பிகேட் தொலைந்தால் எப்படி திரும்ப பெறமுடியும்.?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:-
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:-
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.
அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:-
தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:
பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

நெல்லிக்காயின் பெருமைகள் ....

Leave a Comment
நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்




1 இரத்த சோகை
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

2 இதயம் வலிமையடையும்
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

3 கண் பார்வை மேம்படும்
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

4 பசி தூண்டப்படும்
பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

5 சளி மற்றும் தொண்டைப்புண்
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

6 வெள்ளைப்படுதல்
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

7 சிறுநீரக பிரச்சனைகள்
முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

8 அசிடிட்டி
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9 பொலிவான சருமம்
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

10 முடி வளரும்
நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

கூப்பிடு தூரத்தில் மரண தேவன்....

Leave a Comment
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.

செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
என்ன ஆயிற்று எனக்கு?

நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது

என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.

நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.

அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். 

அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.

இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

நான் இவ்வளவு சீக்கிரமாக இறந்துபோவேன் என்று தெரிந்திருந்தால்... 
இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் விதத்தில் வாழ்ந்திருப்பேன்.

ஆனால் இவர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல்.....
தொழில் தொழில், பணம் பணம் .... என்றே ஓடிவிட்டேன். 

எல்லோரிடமும் ஓடி ஓடி மன்னிப்பு கேட்டேன். எனக்கு இப்போது ஒரு வாய்ப்பு கொடுங்கள் . நான் சரியாக வாழ்ந்து உங்களை சந்தோஷப்படுத்துவேன்.... என்று கதறுகிறேன்...

அவர்கள் அதையெல்லாம் ஏற்பதாக இல்லை. ஏன் குரலே அவர்களை எட்டுவதில்லை. 

ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

"ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

"கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். "கடவுளே, நீ கொடுத்த உறவுகளையும், கடமைகளையும் அலட்சியம் செய்துவிட்டேன். நான் கோடி ஆண்டுகள் நிலையாக வாழப்போகுபவனைப்போல ஆணவத்தில் வாழ்ந்துவிட்டேன்., 

தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்! 

திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன்...

என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " நீ மிகவும் அழகான பெண் தெரியுமா?  
இந்த பிரபஞ்சத்திலேயே என்னை புரிந்துகொண்ட, என்னை ஏற்றுக்கொண்ட, ஒரே ஜீவன் நீதான், என் மேல் உனக்குதான் எவ்வளவு அக்கறை, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்னேன். 

நண்பர்களே......

இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

நம் எல்லோருக்கும் ஒரு தலை எழுத்து தவிர்க்க முடியாதது.... அது....
கூப்பிடு தூரத்தில் மரண தேவன்....

வளமான கூந்தலுக்கு...

Leave a Comment
கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும்
வளர:-


* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.


* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.


* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.


* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...

'சர்க்கரைக் கொல்லி' மூலிகை

Leave a Comment
'சர்க்கரைக் கொல்லி' என்பது ஒரு மூலிகை இலை. அதன் பயன்கள்:

சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. 

இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். 

இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. 

இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

50 கிராம் கொடி இலையுடன் திரிகடுகு ( சுக்கு,மிளகு, திப்பிலி) வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காச்சி வடித்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மி.லி. வீதம் கொடுத்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் உள்ள சுரம் தணியும்.

கொடி இலையுடன் 10 கிராம் களா இலை, 20 கிராம் மையாய் அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்துவரத் தாமதித்து வரும் மாதவிடாய், உதிரச் சிக்கல், கற்பாயசக் கோளாறு தீரும்.

இலை ஒரு பங்கும் 2 பங்கு தென்னம்பூவும் மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை, மாலை ஒரு மாத்திரை வெந்நீரில் விழுங்க சிறுநீர்ச் சக்கரை தீரும். மருந்து சாப்பிடும் வரை நோய் விலகி இருக்கும்.

வேர் சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை வேந்நீரில் கொள்ள கபம் வெளியாகி ஆஸ்த்துமா, மூச்சுத்திணறல் தீரும்.

நன்கு நசுக்கிய வேர் 40 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடித்து 30 மி.லி.யாகக் காலை, மதியம், மாலை கொடுத்துவரக் காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும்.


NAKSHATHRA & TEMPLES !

Leave a Comment
NAKSHATHRA TEMPLES
BIRTH STAR TEMPLES
FOR A BIRTH STAR.
( A Collection of temples with the contact number from email)

 In this compilation for each star two temples are told. Introduction   Birth stars are as important as the celestial planets in Astrology.
Like it is important to visit the temples dedicated to the Navagrahas or celestial planets, it is also important to visit temples dedicated to ones Birth star or Janma Nakshatram.

  It is said that visiting the temple corresponding to your Birth star at least once a year removes obstacles and ensures happy life.
The full list is as follows. For each star two temples are told, the convenient one can be chosen..

  1. Ashwini or Aswathi or Ashwathi or Asvini  Piravi Marundeeswarar Koil Situated in Thiruthuraipoondi which is about 30 Kms from Tiruvarur.  04369-222392, 94438 85316  Dharbaranyeswarar  temple Situated at Thirunallar about 6 Kms from Karaikal

  2. Bharani or Apa Bharani  Agneeswarar Koil. This temple is at Nallaadai, situated  20 Kms from Mayavaram on Nagapattinam  Route.  It is about 3 Kms from Poraiyar.   04364-285341, 97159 60413, 94866 31196  Vadaranyeswarar Temple This temple is at Thiruvalangadu, 45 Kms from Chennai on the route to Arakkonam.

  3. Karthigai or Krithika  Gaathra Sundareswarar Koil This is at Kanjanagaram, at a distance of 8 Kms from Mayavaram on Poompuhar road.   04364-282853, 94874 43351  Naganathar Temple Nagapattinam

  4. Rohini  Pandava Dhootha Perumal Koil Situated in the lane opposite to Ekambareswarar Koil at Kanchipuram   044-27231899  Sivayoginathar Temple Thiruvisanallur

  5. Mirugaseerisham or Mrigashiras or Mrigasira or Mrigashirsha  Adi Narayana Koil at Enkan.  Enkan is very famour for the Murugan temple. Enkan is near Tiruvarur on the road to Thanjavur via Koradacheri.   04366-269965, 94433 51528  Vana Durga Devi Temple situated at Kathiramangalam at a distance of 5 Kms from Kuthalam & 16 Kms from Mayavaram.

  6. Thiruvadharai or Arudhra  Abhaya Varadeeswarar Koil located at Adhiramapattinam at a distance of 12 Kms from   Pattukottai in Tanjore District.   99440 82313, 94435 86451  Agneeswarar Temple Thirukollikkadu near Tiruvarur

  7. Punarpoosam or Punarvasu  Athitheeswarar Koil Vaniyambadi in North Arcot District.   04174-22652, 99941 07395  Abathsahayeswarar Temple Alangudi

  8. Poosam or Pushyami or Pushya  Akshayapureeswarar Koil. This temple is at Vilangulam.  Vilangulam is situated at 20 Kms from Peravurani,  in Tanjore District.  From Pattukottai on the ECR towards Rameswaram this is at a distance of 30 Kms.   97507 84944, 96266 85051  Karkadeswarar Temple Thirunandudevankudi is about 2 Kms from Thiruvisanallur and 8 Kms from Thiruvidaimarudhur

  9. Aayilyam or Ashlesha  Karkadeswarar Koil Thirunandudevankudi is about 2 Kms from Thiruvisanallur and 8 Kms from Thiruvidaimarudhur.   0435-2000240, 99940 15871.  Subramanya Swamy Temple Thirupurankundram

  10. Magham or Magha  Mahalingeswarar Koil This temple is at Thavasimadai 25 kms from Dindugal on the road to Nattam.   95782 11659, 93624 05382  Thillai Kali Temple Chidambaram

  11. Pooram or Poorva Phalguni or Purva or Purva Phalguni or Poorvaphalguni or Pubba  Hari Theertheswarar Koil Situated at Thiruvarangulam, which is 10 Kms from Pudukottai on the road to Pattukottai.   98651 56430, 99652 11768.  Sri Kalyanasundara Swamy Temple Thirumanacheri about 6 Kms from Kuthalam which is on Mayavaram-Kumbakonam route

  12. Uttiram or Uttara Phalguni  Mangalyeswarar Koil Edaiyathumangalam is on Trichy-Lalgudi route.  Just after Valadi you will find an arch to your right, take a right turn there and the road will lead you to this village.   0431-2544070, 98439 51363  Kucchiamman Temple At Poovalur situated at a distance of 20 kms from Trichy and 3 Kms North of Lalgudi on Trichy Ariyalur road.

  13. Hastham or Hastha or Hast or Hasta  Kripakupareswarar Koil This temple is at Komal, which is about 6 Kms from Kuttalam, which is on Kumbakonam Mayavaram Route.   95002 84866  Thyagarajaswamy Temple Tiruvarur

  14. Chitirai or Chitra  Chittirairatha Vallabha Perumal Koil Situated at Kuruvithurai about 23 Kms from Madurai and 8 Kms from Cholavandan.   94439 61948, 97902 95795  Thyagarajaswamy Temple Tiruvarur

  15. Swaathi  Prasanna Kundhalambika and Tantreeswarar Koil Sittukadu about 10 Kms from Poonamallee on Pattabiram route.   93643 48700, 93826 84485  Jambukeshwarar temple Thiruvanaikaval is on the outskirts of Trichy near Srirangam

  16. Vishaka or Vishaakha or Vishakam  Kumaraswamy Koil Thirumalai about 7 Kms from Shenkottai and 15 Kms from Thenkasi.   04633-237131, 237343  Pralayanathar Temple Cholavandhan, 26 Kms from Madurai

  17. Anusham or Anuradha  Lakhmsipureeswarar Koil. This temple is at Thiruninriyur about 6 Kms from Vaitheeswaran Koil on the road to Mayavaram.   04364-320 520  Mahalingaswamy temple Thiruvidaimarudhur

  18. Kettai or Jyeshtha  Varadaraja Koil Varadaraja Koil is at Pasupati Koil, 12 Kms from Tanjore on Kumbakonam route.   97903 42581, 94436 50920  Angalaparameswari Amman Temple Situated at Palladam, 35 Kms from Coimbatore

  19. Moolam or Moola  Singeeswarar Koil At Mappedu about 40 Kms from Chennai   044-27608065, 94447 70579, 94432 25093  Meenakshi Amman Temple Madurai

  20. Pooradam or Purva Ashadha or Poorva Shada or Poorvashaada  Akasapureeswarar Koil Kaduveli near Thiruvaiyar.   94434 47826, 96267 65472  Bhakthajaneswarar Temple Thirunavalur is on Ulundurpet – Panruti route at a distance of 16 Kms from Panruti.

  21. Uttiradam or Uttara Ashadha or Uttara Shada or Uthrashaada  Brahma Pureeswarar Koil Situated at Keezhapungudi in Madurai district on the on the Melur – Sivaganga Road.   99436 59071, 99466 59072 Dharmapuram Durga Temple Mayavaram

  22. Thiruvonam or Shravana  Prasanna Venkatesa Perumal Koil This temple at Thiruparkadal is 4 kms from Kaveripakkam on the Chennai – Vellore route.   04177-254929, 94868 77896  Rajakaliamman Temple Chetpet in Chennai

  23. Avittam or Shravishtha or Dhanista or Dhanishta  Brahma Gnana Pureeswarar Koil This temple at Korukkai is 5 Kms from   Kumbakonam on the Patteeswaram – Muzhaiyur road.   98658 04862, 94436 78579  Magudeshwarar Temple Kodumudi is situated on Erode Trichy Highway, it is 26 Kms from Karur and 38 Kms from Erode.

  24. Sadayam or Shatabhisha or Shatataraka  Agnipureeswarar Koil Thirupugalur about 10 Kms from Nannilam towards Nagapattinam.   04366-236 970  Ardhanareeswarar Temple Thiruchengode

  25. Pooratadhi or Purva Bhadrapada or Poorva Bhadra  Thiruvaneswarar Koil Ranganathapuram about 3 Kms from Thirukattupalli in Tanjore District.   94439 70397, 97150 37810  Adishesha Perumal Temple Kanchipuram

  26. Uttiratadhi or Uttara Bhadrapada or Uttara Bhadra or Uthrabhadra  Sahasra Lakshmeeswarar Koil Theeyathur about 15 Kms from Avudayar Kovil in Pudukkottai District on Thirupunavasal route.   04371-239212 99652 11768  Panchanatheswarar Temple Thiruvaiyaru

  27. Revathi  Kailasanathar Koil Karukudi about 2 Kms from Tattayangarpettai and 1.5 Kms from Mettuppalayam in Musiri Taluka of  Trichy District.   97518 94339, 94423 58146  Pranavavyaghrapureeswarar Temple Omampuliyur.