ஒரு குழந்தைக்கு - இரண்டாவது தாய் - ஆசிரியர் ! இரண்டாவது தந்தை - பள்ளி நிர்வாகம் !!

Leave a Comment
மதிப்பிற்குரிய ஆசிரியர்களே , பள்ளிக்கூடங்களே...!




மாணவர்கள் செய்யாத தவறுக்கு மாணவர்களை தண்டித்து விட வேண்டாம்.

[ உண்மையில் தவறு எங்கே இருக்கிறது என்பதை பொறுமையாகவே கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு நேரம் செலவிடுவது தவறல்ல! ]

பள்ளிக்கு தாமதமாக வந்தது, கட்டணத்தை இன்னமும் கட்டாதது, யூனிபார்ம் அழுக்காக இருப்பது,... போன்ற பெற்றோரின் தவறுகளுக்கும் மாணவர்களை தண்டித்துவிடவேண்டாம்.

[ அதற்கு சிரமம் பார்க்காமல் - பெற்றோர்களைத்தான் கண்டிக்கவேண்டும். ]

சில நேரங்களில் குழந்தைகள் தவறுகளை செய்யும்போது, மற்றவர்கள் மத்தியில் அவமதிக்க வேண்டாம்.

[அந்த சூழ்நிலையில் , அந்த தவறினை செய்யாமல் எப்படி நடந்துகொள்வது, என்பதை கற்றுத்தரவேண்டும். ]

ஒரு குழந்தையின் இயலாமையை, குற்றம் என்ற கணக்கில் வைத்து கையாண்டுவிடவேண்டாம்.

[ அது தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணும். ஆனால், தெரிந்து செய்யும், அலட்சியத்தால் செய்யும், கவனக் குறைவால் செய்யும் தவறுகளிலிருந்து வெளிவர உதவலாம். ]

அப்படி, கூடாத தீர்வுகளை கையில் எடுக்கும்போது, நம்மை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்பதால் அவர்கள் அப்போதைக்கு தாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இது ஏன் இப்படியெல்லாம் தவறு நடக்கிறது, இதிலிருந்து நான் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி என்று மனது தீர்வினைத் தேடத்துவங்கும்.

நேர்மையாகத் தீர்க்க முடியாததால், குறுக்குவழியினை கண்டுபிடிக்கத் துவங்கும்.

இந்த சூழ்நிலையை அதிகம் சந்தித்தவர்கள்தான் எதிர் காலத்தில், சமூகத்தை எதிரியாகப் பார்க்கிறார்கள், அதன் விளைவு - சமூக குற்றங்களை பலமாக செய்கிறார்கள்.

அன்று அவனை ஊரே திட்டி என்ன பயன்? நாடே  திட்டி என்ன பயன்?

அதே சமயம், சரியான தீர்வுகளை கையில் எடுக்கும்போது, அவற்றை அனுபவித்த மாணவர்கள் நாளை - நல்ல பெற்றோர்கள், நல்ல குடிமக்கள், நல்ல ஊழியர்கள், நல்ல தொழிலாளிகள், நல்ல முதலாளிகள், நல்ல தலைவர்கள்... 

ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் - நாளைய சமுதாயத்தையும் , நாளைய தலைவர்களின் தகுதிகளையும் வடிவமைக்கும் சிற்பிகள்....


ஒரு குழந்தைக்கு  இரண்டாவது தாய்  - ஆசிரியர்கள் !

 ஒரு குழந்தைக்கு  இரண்டாவது தந்தை - பள்ளி நிர்வாகம் !!

ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் செலவு செய்யாமலே - நாட்டுக்கு ஒரு மிகப் பெரிய நன்மை செய்யமுடியும்... விசேஷ செலவு செய்யாமலேயே...

ஹோட்டல் சாப்பாடு கவனம்....

Leave a Comment
நமது ஆரோக்யத்தை அடமானம் வைத்து , முழுக வைக்கும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்காமல் இருப்பதே புத்திசாலித்தானம். 



வீட்ல இட்லி, தோசையை விட்டா வேற ஒண்ணுமே கிடையாதா?’ என அலுத்துக் கொள்கிறவர்கள், வெளியே ஓட்டலுக்கு சென்றால் முதலில் ஆர்டர் செய்வதும் அதே இட்லி, தோசையாகத்தான் இருக்கும்.

பஞ்சு போன்ற வெள்ளை வெளேர் இட்லிக்கும், முறுகலான, பொன்னிற தோசைக்கும், இன்னும் சுளை சுளையான பரோட்டாவுக்கும், மிருதுவான  சப்பாத்திக்கும் பின்னணியில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்....

இட்லிக்கு மாவரைக்கும்போது முந்தைய நாள் மீதி ஆன, கெட்டுப்போன பழைய சாதத்தையெல்லாம் கலந்து அரைக்கிறார்கள். பழைய சாதம் ஆரோக்கியமானது தானே என்று நினைக்கலாம். (அது நம்ம வீட்டில் என்றால் சுத்தமாக சுகாதாரமா வைத்திருப்பார்கள்) ஆனால், சர்க்கரை நோயாளி, வயதானவர்களுக்கு இந்த இட்லி நல்லதில்லை.

கோதுமையின் கழிவுப் பொருள்தான் மைதா, இதில் நார்சத்து இல்லவே இல்லை. அதனால் குடலை விரைவில் பலம் இழக்கை வைத்து, அல்சர் போன்ற நோய்களை  ஏற்படுத்தும். இந்த மைதாவில்தான் விதவிதமான பரோட்டா செய்கிறார்கள். 

குறிப்பாக, நாம் விரும்பி சாப்பிடும் தோசை முறுகலாக வர கடலை மாவையும்\ சர்க்கரையையும் சேர்க்கிறார்கள். 

நீளமாக, மெலிதாக வரக் காரணம்  தோசை மாவில் பாதிக்குப் பாதி சேர்க்கப்படுகிற மைதா! சப்பாத்தியிலும் இதே கதைதான்!



‘‘ஓட்டல் உணவுகளில் முக்கியமாக நான்கு ஆபத்துகள் இருக்கின்றன’’ 

இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுகள் மிகுதியான வண்ணங்களில், கவர்ச்சிகரமாக இருப்பதில்லை. 

ஓட்டல்களில் செயற்கையான நிறமிகளை (Colouring agents) சேர்க்கிறார்கள். 

இந்த நிறமிகள் தோல் அழற்சி, குடல் அழற்சி, ஆஸ்துமா, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது, எலும்புக் குறை பாடுகள் என பல பிரச்னை களை ஏற்படுத்துபவை. 

இரண்டாவது, வீட்டில் பயன்படுத்துவதைவிட உப்பு அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள். ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தேவைக்கு அதிகமாக உப்பு பயன்படுத்துவதாலேயே ஏற்படுகிறது.  

மூன்றாவது அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய். 

நல்ல  கொழுப்பை (Polyunsaturated fat) தரும் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில் சமைத்த  உணவில் பிரச்னையில்லை.   

ஆனால், கெட்ட கொழுப்பை உண்டாக்கும் (Saturated fat) டால்டா, நெய், திருப்பித் திருப்பி சூடாக்கப் பட்ட எண்ணெய், மிருகக் கொழுப்பில் இருந்து கிடைக்கும் வெண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் ஆபத்தானவை. உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு,   பக்கவாதம் என்று பல நோய்களை நிச்சயமாக ஏற்படுத்துபவை.  

இயல்பாகவே,  கார்போ ஹைட்ரேட் என்கிற மாவு உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்கிறோம். இதனால், கொழுப்போடு அதிகம் சேர்க்கிற மாவு  உணவுகளும் சேர்ந்து இரண்டு பக்கமும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

நான்காவதாக ஓட்டல் உணவுகளில் அதிகம் இருக்கும் இனிப்பு. ஸ்வீட் வகைகளில் மட்டும்தான் அதிக இனிப்பைச் சேர்க்கிறார்கள் என்று இல்லை.

சாதாரணமாக ஜூஸ் வகைகளில் கூட அதிக சர்க்கரை சேர்த்துத்தான் கொடுக்கிறார்கள். ஓட்டல் காபியில் டம்ளரின் அடியில் சர்க்கரை நிறைய இருப்பதைப் பார்க்க  முடியும். இந்த அதிகப்படியான சர்க்கரையும் கெட்ட கொழுப்பாகவே மாறுகிறது.  

இந்த காரணங்களோடு முக்கியமான இன்னொரு காரணம் சுகாதாரம்... 

ஓட்டலில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். உணவு தயாராவதில் பலரின் பங்கு ஈடுபடுகிறது. அனைவருமே சுத்தமாக இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை. வேலை பளுவால் சுத்தமாக இருக்க முயற்சிப்பதும் இல்லை. 

மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பலவியாதிகள் சுத்தமில்லாமல் உணவைக் கையாள்வதாலேயே வருகிறது. 

தவிர்க்க முடியாமல் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால், தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். ஆரோக்கியத் துக்காக கொஞ்சம் மெனக் கெடுவதோ, செலவு செய்வதிலோ தவறு இல்லை.

சூடான உணவுகளை சாப்பிடுவது ஓரளவு பாதுகாப்பானது. 

சாலட், ஜூஸ், சட்டினி மற்றும் ஆறிப்போன  உணவுகளில் நிறைய நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு அதிகம். 

பொரித்த உணவுகள், உப்பு அதிகமாக இருக்கிற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. 

முடிந்த வரை அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள் மிக மிக அதிகமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. 

தரமான இறைச்சியாக இருந்தால் கூட மாதக்கணக்கில் இறைச்சிகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் வசதி வந்துவிட்டது. இறைச்சி மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்பிரின், நோவால்ஜின், பாரசிட்டமால் போன்ற  மாத்திரைகளைச் சேர்த்து சமைக்கிற கொடுமையெல்லாம் நடக்கிறது. அதனால், வெளியிடங்களில் அசைவத்தை தவிர்ப்பதே சிறந்தது. 

‘‘உணவகங்கள் முற்றிலும் வணிகமயமானவை. பணமே அங்கு பிரதானம் என்பதால் உணவுப் பொருட்கள் மற்றும் உணவின் மூலப்பொருட்கள் என  அனைத்திலும் கலப்படம் செய்கிறார்கள். 

முழு சாப்பாடு வழங்கும் உணவகங்களை பலரும் விரும்பிச் செல்வதற்கான காரணம் வயிறார சாப்பிட முடியும் என்கிற எதிர் பார்ப்புதான். ஆனால், குறைவான அளவு சாப் பிட்டதுமே வயிறு நிறைந்துவிடுகிறது. 

காரணம், சாப்பாடு தயார் செய்யும்போது அதனுள் சுண்ணாம்புக் கட்டி, களிப்பாக்கு, சோடா உப்பு ஆகியவற்றை கலந்து விடுவதுதான். 

இனிப்பு பண்டங்களில் சேர்க்கப்படும் கேசரி பவுடர்  100 பி.பி.எம். (Parts Per Million) அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், 200 முதல் 400 பி.பி.எம். அளவு வரை நிறத்துக்காக  சேர்க்கின்றனர். கார உணவுப்பொருட்களில் நிறத்துக்காக ரசாயன பவுடரை சேர்க்கின்றனர். 

இன்று துரித உணவகங்கள் என்ற பெயரில் வேற்று நாட்டு உணவுகள் நிறைய கிடைக்கின்றன. இந்த உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கென மோனோ சோடியம் க்ளூட்டமைட் (MSG) பயன்படுத்து கிறார்கள். 

இதற்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எவ்விதத் தடையுமின்றி விற்கப்பட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தும் தேநீரின் மூலப்பொருளான டீத்தூளிலும்  கலப்படம் இருக்கிறது. 

பயன்படுத்தித் தூக்கிப் போடுகிற டீத்தூளை காய வைத்து, துணிக்குப் போடும் சாயத்தைக் கொண்டு நிறமேற்றி, புதிய டீத் தூள் போல் மீண்டும் சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.

உயர்தர உணவகங்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய், தயாரிப்பு  முடிந்த பின்னர் மலிவான விலைக்கு மற்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது. 

இட்லி மென்மையாக இருக்கக் கலக்கிற சோடா உப்பு உடலுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் பி ஊட்டச்சத்தை கிடைக்க விடாமல் தடை  செய்யும். அது மட்டுமில்லாமல், அசிடிட்டி, அல்ஸர் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். 

சுவைக்காகச் சேர்க்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோ  சோடியம் க்ளுட்டமைட் பசியின்மை, நரம்புத்தளர்ச்சி, அஜீரணம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இனிப்பு பண்டங்களில் கேசரிப் பவுடர்  கலப்பது வயிற்று வலியையும், புண்களையும் ஏற்படுத்தும். இந்தக் கலப்படம் புற்று நோயை உண்டாக்கவும் காரணியாக இருக்கிறது.  

மொத்தத்தில் நாம் குடிக்கிற தண்ணீரில் இருந்து கடைசியாக மெல்லும் சோம்பு வரையில் ஓட்டல் உணவுகளில் இருக்கும் ஆரோக்கியக் கேடுகள்  நிறைய. 

முடிந்தவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.  எப்போதாவது ஓட்டலில் சாப்பிடுவதே ஆரோக்கியக் கேடு என்றால், ஓட்டலில் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால்... கடவுளே!

ஹோட்டல் சாப்பாடு - வேண்டவே வேண்டாம்....
அன்புக்குரியவர்களுக்கும், அன்புக் குழந்தைகளுக்கும் தரவே  வேண்டாம்....

வீட்டு சாப்படை ருசிப்போம்.... வாழ்க்கையை என்றும் ரசிக்க
நம் குழந்தைகளும் நன்றாகத்தானே வாழவேண்டும்....





உதவலாமே..... 



To read Bhagavad Gita oneself-

Leave a Comment

The method to read Bhagavad Gita oneself, to understand more, better, easily, ...

Better to get a
Bhagavad Gita-
With Serial number 823
book of
GeetaPress, Gorakhpur 04223202521























Start reading the meaning of shlokas of Bhagavad Gita from chapter 12 onwards till 18

Afterwards chapter 7 onwards till 11

Afterwards chapter 2 onwards till 6

And finally chapter 1

While reading avoid explanations
Just go through translations of Sanskrit Shlokas

Draw a '✔ ' mark when you complete a Shloka

Draw a '✳' mark on inspiring Shlokas

Draw a '?' mark on the Shlokas where you need more clarity  &
Pray a moment for the solution

And just proceed....  :)

You can understand better in this way...
And you will get a GuruJi to teach you properly too...

Aishwarya Maharishi
RishiVedaJnaanaYogaPeetam
9042500500

Om.

சர்க்கரை வியாதி எச்சில் வைத்தியம்

Leave a Comment

உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி வியாதி
சர்க்கரை நோய்.

இந்த நோய் உண்மையில், ஒரு எச்சில் பற்றாக்குறை நோயே.

புரியவில்லையா?

ஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை. இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.அதற்கு சாப்பாட்டை தின்னவே கூடாது. மென்று எச்சிலில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

ஆனால், அவசர ஓட்டத்தில்,  தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .



உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும்

அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது

அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர், பித்தநீர், பலவகை என்சைம்கள் ,அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன .

 கிடைக்கும் எச்சில் அளவு, நீண்டகாலத்திற்கு குறைந்தே இருக்கின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது.

அதனால் உறிய நோய்கள் வருகின்றன.


எங்கேயோ கேட்ட ஞாபகம் ....
நொறுங்கத் தின்றால் நூறு வயது....!


வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்:

Leave a Comment


1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்
எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல,
தப்பித்தவறி கூட அதே தவறைஇன்னொருவருக்கு
செய்துவிடக்கூடாது.

2.யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய
விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

3.நமக்கு பிடிக்காதவாரகவே
இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.

4.'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று
எண்ணி வாழுங்கள்..

5.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற
எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது
தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.

6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால்
சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ
பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..

7.சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை
சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய
வாய்ப்புகள் தேடி வரும்..

8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..

9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல்
சிறு புன்னகை
உதித்தபடி கடந்து செல்லுங்கள்..

10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச்
செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்.

Chek your observing power....

Leave a Comment
Count - how many 'F's are there in the following text:

FINISHED  FILES ARE THE RESULT OF YEARS OF SCIENTIFIC STUDY COMBINED  WITH
THE EXPERIENCE OF YEARS...

(SEE  BELOW)


HOW MANY ?

3....4....






WRONG,  THERE ARE  6  --  no joke. really.

READ IT AGAIN !

Really, go Back and Try to find the  6 F's before you scroll down.





The reasoning behind is  further down.





The brain cannot  process "OF".

Incredible  or what? Go back and look again!!

Anyone who counts  all 6 "F's" on the first go, has got observing power of genius ones.


four is quite rare!

Three  is normal.

Send this to your  friends.

It will drive them crazy!!



Leave a Comment
பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் 
பிரசவ நேரம்....

உறவினர்கள் எல்லாம் 
சுற்றிக் காத்திருக்க
அந்த தாயோ வலியில் 
கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு 
வழக்கத்திற்கு மாறன சத்தம் 
ஏதேதோ கேட்டது
நமக்கு என்ன நடக்கப் போகிறதோ 
என்ற குழப்பம் 
குழந்தையின் மனதினைக்
குழப்பி எடுத்தது.

அமைதியாக ஆனந்தமாக 
மிதந்துக் கொண்டிருந்த 
நமக்கு என்ன ஆகப்போகிறதோ 
இப்போது என்று....

வழக்கமாக நாம் பேசும் 
கடவுளிடமே கேட்டு விடலாம் என்று 
குழந்தை கடவுளை 
அழைத்தது கேட்டது....

இறைவனே என்னை 
எங்கே அனுப்புகிறாய் 
வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் 
கேட்கிறேன் எனக்கு 
ஒன்றும் புரியலையே.....

கடவுளும் சொன்னார்....
குழந்தாய் இனி நீ 
மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

இனிய கடவுளே, இங்கு நான் 
சந்தோசமாகத் தானே இருக்கிறேன் 
அங்கு ஏன் நான் போக வேண்டுமோ

இல்லை குழந்தாய் 
நீ இங்கிருப்பது போலவே 
அங்கும் இருப்பாய் 
சென்று வா ஆசிகள்...

இனிய கடவுளே, 
என்னை நீ இங்கே 
பாத்துக் கொள்வது போல் 
யார் என்னை அங்கு 
பார்த்துக் கொள்வாரோ...

கவலைப் படாதே குழந்தாய் 
அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள 
ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், 
அந்த தேவதை உனக்காக பாடும் 
உன் மீது அன்பு  செலுத்தும் 
அந்த அன்பை நீ இன்பமாய் உணர்வாய்.


இனிய கடவுளே, 
மனிதர்களிடம் என்னை 
தனியாக அனுப்புகிறாய் 
நான் மிகச் சிறியவன் 
என்னால் நடக்கவும் முடியாது 
என்னால் பேசவும் முடியாது, 
அவர்கள் மொழியைக் கூட 
புரிந்துக் கொள்ளவும் முடியாதே...

அன்புக் குழந்தையே 
அது மிகவும் சுலபம் 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதை 
எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் 
உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், 
உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் 
நீ பயப்படத் தேவையில்லை.

இனிய கடவுளே, 
உன்னைப் பிரிவது எனக்குப் பிடிக்கவில்லை
பயமும் வருகிறது... 
நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் 
என்ன செய்வேன்.

அறிவுக் குழந்தையே....
பயம் எதுவும் வேண்டாம்
நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையே 
இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

இனிய கடவுளே, 
உலகில் 
கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று 
இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே 
அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

அன்புக் குழந்தையே..
உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதைதான்.... 
தன்னுயிர் போனாலும் உன்னைப் பாதுகாக்கும்.

இனிய கடவுளே, 
நான் சோகமாக இருக்கிறேன்
இனி நான் உன்னை 
பார்க்கவோ பேசவோ முடியாது ஆகுமே...

நல் அறிவுக் குழந்தையே, 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையிடம் நீ போனதுமே 
என் பெயரை உனக்கு சொல்லும் 
சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், 
என்னிடம் திருப்பி வரும் வழியையும் 
உனக்கு வழிபாடாய் சொல்லித் தரும்.

நான் உன்னோடு தான் இருப்பேன் 
ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்...


உலகின் சத்தங்கள் குழந்தைக்கு  
அதிகமாக கேட்க தொடங்கின


இனிய இறைவனே 
இன்னும் கொஞ்ச நேரத்தில் 
உன்னை விட்டு பிரியப் போகிறேன் 
நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையின் 
பெயரையாவது சொல்லேன்....



அன்புக் குழந்தாய் 
தைரியமாக சென்று வா 
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் 
அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை 
அவளை நீ 
அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு இரு அறிவுரைகள்

ஒன்று
நீ வளர்ந்து பெரியவனானதும் 
அந்த தேவதை உனக்கு கொடுத்த இதனையே 
நீயும் உன் குழந்தைக்குக் கொடு....
அது உன் நேர்மைக்கு அழகு...

இன்னொன்று,
அந்த தேவதையின் மனம் 
புண்படும் படி எதுவும் 
பேசி விடாதே. 
அது உன் அறிவுக்கு அழகு...

சரி தெய்வமே , உன் சொல் சரியே...
குழந்தை இறைவனின் 
கால்பிடித்து அழுதது 
தேவதை அம்மாவின் மடியில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்....

ஒரு தாயின் புலம்பல் கவிதை....

1 comment
(முதுமையில் ஓர் தாய் 
மகனிடம் சொல்லும் கண்ணீ்ர் கவிதை...)

எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..


முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும் நீ ...
கொஞ்சம் பொறுமை கொள்வாய் !
அதிகம் புரிந்து கொள்வாய் !


என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில் கைநடுங்கி 

சாதத்தை சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான், நீ தட்டி விட தட்டிவிட
சோறு ஊட்டிய நாட்களை நினைப்பாயா? 


ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
கொஞ்சம் 
நினைப்பாயா? 

ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை சொல்லச் சொல்லி
நீ உறங்கிய இரவுகளை 

எனக்காககொஞ்சம் நினைப்பாயா? 

நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக 
கொஞ்சம் நினைப்பாயா? 

புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேக அறிவு
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை !


கேவலப் படுத்தாதே....
அவை தெரியாததால், 

அவை புரியாததால்,
அவற்றை தெரியாதவள் வளர்த்து 
வளர்ந்தவன்தனே நீ, அதனை
எனக்காக கொஞ்சம் நினைப்பாயா? 

இனி, சில நேரங்களில் -
என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!

கோபப்படாதே....
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரக் கணக்கு பார்க்காதே.....


நான் ரொம்ப பிஸி என்று
சொல்லாமல்தானே உனக்கு நான்
நேரம் தந்தேன், அதனை, 
எனக்காக கொஞ்சம் நினைப்பாயா? 

என் அருகிருந்து கொஞ்சம் 

ஏன் இயலாமைகளை பொருத்துக்கொள்வாய்
ஆற்றாமை தேற்றுவாய் !
ஆசுவாசப் படுத்துவாய் !


என் கால்கள் இடறி
என்னை ஏமாற்றுகின்றன
நீ முதல் நடை பழக
என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்வாய் !


ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று !
வருத்தப் படாதே.....


சில வயது வரை 

வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...



காத்திருக்கிறேன்....
எமன் வரும் நாள் 
என் நாள் என்று....
அதன் பின் உனக்கு விடுதலைதானே...

காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை !


மீண்டும் மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....


என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..?


மருத்துவம்: வெந்தயத்தின் மகிமைகள்....

Leave a Comment


நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.

வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.

Check if your mind is cool....

Leave a Comment
Check ur presence of mind.............Take the test.




relax, cool down. clear your mind and begin,...

what's the 1st answer that comes to ur mind???...........


1. What do you put in a toaster?














Answer:
"bread." If you said "toast," give up now. Try not to hurt yourself. If you said bread, go to Question 2





2. Say "silk" five times. Now spell "silk." What do cows drink?











Answer:
If you said "milk," don't attempt the next question. Cows drink water.

Your brain is over -stressed and may even overheat. Content yourself by reading more appropriate literature such as Auto World. However, if you said "water", proceed to question 3...








3. If a red house is made from red bricks and a blue house is made from blue bricks and a pink house is made from pink bricks and a black house is made from black bricks, \
what is a green house made from?














Answer:
Greenhouses are made from glass. If you said "green bricks," quit this now....
If you said "glass," go on to Question 4.






4. It's twenty years ago, and a plane crashes from 20,000 feet over Germany (If you will recall, Germany at the time was politically divided into East and West Germany) Where would you bury the survivors? East Germany, West Germany, "no
man's land"?










Answer: You don't bury survivors!!!


If you said ANYTHING else, you must stop. If you said, "You don't bury survivors", proceed to the next question.






5. Without using a calculator - You are driving a bus from Kanyakumari to Chennai. 25 people got on, in Kanyakumari.  in Madurai 5 got down and 10 people got on, 10 got down and 5 got on in trichy, 15 got down and 20 got on in villupuram, every one  got down at chennai. what is the age of the driver.














Answer: :) its just your age....